குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 26 ம் திகதி வெள்ளிக் கிழமை .

என்ன மருந்து இருக்கிறது... கைது செய்யப்பட்ட திருத்தணிகாசலத்திடம் காவல்துறையினர் துருவி துருவி விசாரண

12.05.2020 ...திருத்தணிகாசலம் மத்திய மாநில அரசுகளால் அங்கீகாரம் பெறாத ஒரு போலி மருத்துவர் கொரோனா குறித்து தவறான தகவல்கைள பரப்பியதாக திருத்தணிகாசலம் மத்திய குற்றப்பிரிவு கா.துறை யினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த சனவரி 24ம் தேதி சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் தனது சமூகவலைதளத்தில் வெளியிட்ட முதல் காணொளியில், கொரோனா மட்டுமல்ல எந்த வைரசு(ஸ்) வந்தாலும் அதற்கு சித்த மருத்துவத்தில் தீர்வு உள்ளது என்று சொன்னார். இதையடுத்து சனவரி 27ம் தேதி, சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திருத்தணிகாசலம், தனது இரத்னா சித்த மருத்துவமனை சார்பில், கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக பிரகடனம் செய்தார்.

 

இதையடுத்து திருத்தணிகாசலத்தின் பேட்டிகள் தொடர்ந்து ஊடகங்களில் வெளிவந்த வண்ணம் இருந்தன. அதேநேரம் அவரும் தனது முகநுால் பக்கத்தில் நாள்தோறும் ஒருகெணொளி வீதம் வெளியிட்டு வந்தார். கொரோனா வைரசுக்கு, தான் கண்டுபிடித்த மருந்தைக் கொடுத்து சுவிட்சர்லாந்து, இலண்டன் உள்ளிட்ட வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் குணமடைந்து விட்டதாக அறிவித்த திருத்தணிகாசலம் அவர்களது வாக்குமூல காணொளிகளையும் தனது முகநுால் பக்கத்திலேயே வெளியிட்டு வந்தார்.

இதையடுத்து அவரது முகநுால் பக்கத்தில் அவரது ஒவ்வொரு பதிவிற்கும் நுாற்றுக்கணக்கில் பின்னுாட்டங்கள் குவியத் தொடங்கின. அவரை 2ம் போதி தர்மன் என பலர் பின்னுாட்டங்களில் பாராட்டத் தொடங்கினர். இடையில், தமிழக மற்றும் மத்திய அரசுகள் தனது குரலுக்கு செவிசாய்க்க வேண்டும் என்றும் அவர் பல காணொளிகளை வெளியிட்டார்

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களை 24 மணி நேரத்தில் குணமாக்கி காட்டுவேன் என்று முதலில் சொன்னவர், பின்னர் 5 நாட்களில் குணமாக்கித் தருவதாக சவால் விடுத்தார். இதற்கிடையே கொரோனா வைரசு(ஸ்) தொற்று ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கபசுரக் குடிநீர் கொடுக்கலாம் என்ற கருத்தை முகநுாலில் தொடங்கினார். அவர் பேசத் தொடங்கிய சில நாட்களில் தமிழக அரசு, கபசுரக் குடிநீரை நோய் எதிர்ப்பு சக்திக்காக பரிந்துரைத்தது.

ஒருபக்கம் முகநுாலில் திருத்தணிகாசலத்தின் முயற்சிகளைப் பாராட்டி பின்னூட்டங்கள் குவியத் தொடங்கினாலும் மற்றொரு பக்கம் அவர் ஒரு போலி மருத்துவர் என்றும் கருத்துக்கள் வரத் தொடங்கின. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி பெறப்பட்ட தகவலில் அவர் இந்திய சித்த மருத்துவ மன்றத்தில் சான்றிதழ் பெறவில்லை என்றும் தகவல்கள் பரவத்தொடங்கின.அதேநேரம் திருத்தணிகாசலம், தனது தந்தையிடம் சித்த மருத்துவத்தைக் கற்றார் என்றும், வழித்தோன்றல்வழியாக சித்த மருத்துவர் என்றும் கடலுார் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வருவாய் வட்டாட்சியரின் கையெழுத்துப் பெற்ற சான்றிதழ் ஒன்றும் சமூக வலைதளங்களில் பரவத் தொடங்கியது.

இந்தநிலையில்தான், திங்கட்கிழமை அன்று தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்கம் வெளியிட்ட அறிக்கையில், திருத்தணிகாசலம் மத்திய மாநில அரசுகளால் அங்கீகாரம் பெறாத ஒரு போலி மருத்துவர் என்றும் கொரோனா வைரசுக்குகு மருந்து கண்டுபிடித்து விட்டதாக தவறான செய்திகளைப் பரப்பி வருவதாக குறிப்பிடப்பட்டது.

மேலும் பெருநோய்க் காலத்தில் தவறான கருத்துக்களைப் பரப்புவது, பெருந்தொற்றுநோய்கள் சட்டத்தின் 4வது பிரிவின் படி குற்றச் செயல் என்றும், அதனால் திருத்தணிகாசலம் மீது நடவடிக்கை எடுக்கும்படி இந்திய மருத்துவத் துறை இயக்குநர் மூலம் சென்னை காவல்துறையிடம் புகாரளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த அறிவிப்பு வெளியான மறுநாள், செவ்வாய்க்கிழமை திருத்தணிகாசலம் வெளியிட்ட காணொளியில், கொரோனா (வைரசுஸ்) தொற்று குறித்து தான் ஆரம்பம் முதல் சொல்லி வந்த கருத்துக்களில் மாற்றமில்லை என்றும், சித்த மருத்துவ சங்கத்தினரே தனக்கு எதிராக அரசைத் துாண்டி விட்டதாகவும் குற்றம்சாட்டினார்

இந்நிலையில் திருத்தணிகாசலத்தை மத்திய குற்றப்பிரிவு கா.துறையினர் இன்று கைது செய்துள்ளனர். தொடர்ந்து அவரிடம் உங்களிடம் கொரோனாவுக்கு என்ன மருந்து இருக்கிறது. உண்மையிலேயே நீங்கள் சித்த மருத்துவர்தானா, உங்களிடம் என்ன ஆதாரங்கள் இருக்கின்றன. நீங்கள் தயாரித்த மருந்தை இங்கு யாருக்கெல்லாம் கொடுத்திருக்கிறீர்கள் என்று பல்வேறு கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர்.

திருத்தணிகாசலம் மீது , அரசு பிறப்பித்த உத்தரவை மீறி செயல்படுதல், தொற்றுநோய் தடுப்பு சட்டம், 505(1)(b)- உள்நோக்கத்தோடு தவறான தகவல்களை பரப்புத, 153 (A)- பொதுஅமைதிக்கு பங்கம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு சித்த மருந்து - வழக்கை முடித்து வைத்த நீதிமன்றம்தமிழக அரசு அமைத்துள்ள மருத்துவர்கள்

குழுவிடம் மனுதாரர் மனு அளிக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர். 12.05.2020 கொரோனாவுக்கு சித்த மருந்து - வழக்கை முடித்து வைத்த நீதிமன்றம்கொரோனா தீயநுண்மி (வைரசு(ஸ்.)

கொரொனோ தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ’வாதசுர குடிநீர்’ என்ற சித்த மருந்தை வழங்கக்கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது.

கொரோனா தொற்று தடுப்பு மருந்தாக ‘கபசுர குடிநீர்’பருக வேண்டும் சித்த மருத்துவர்கள் பரிந்துரைத்திருந்தனர். இதேபோல், வைரசு தொற்றினால் ஏற்படும் நுரையீரல் பாதிப்புகளுக்கு ‘வாதசுர குடிநீர்’ உம் என்ற...... சூரணம் உகந்த மருந்து என்றும் அந்த சித்த மருந்தை பாதிக்கப்பட்டவர்கள் எடுத்துக் கொண்டால் விரைவில் குணமடைவார்கள் என சித்த மருத்துவர் தணிக்காசலம் தொடர்ந்து சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகிறார்.

எனவே ‘வாதசுர குடிநீர்’ என்ற சித்த மருந்தை தாம்பரத்தில் உள்ள தேசிய சித்த ஆராய்ச்சி நிறுவனம் மூலம் கொரோனா நோய் தொற்றுக்கு உகந்த மருந்தா என பரிசோதனைகளை நடத்தி, அவ்வாறு உகந்தது என்றால் உடனடியாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க அரசுக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் கிருச்ணன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ‘வாதசுர குடிநீர்’ வழங்குவது தொடர்பாக தமிழக அரசு அமைத்துள்ள மருத்துவர்கள் குழுவிடம் மனுதாரர் மனு அளிக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.