குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 27 ம் திகதி சனிக் கிழமை .

கட்டுரைகள்

தமிழ்ச் சமூக வரலாறுஆ. சிவசுப்பிரமணியன்சங்க காலம்வடமொழிகலப்பதைப்பாருங்கள்.நாடகங்களால்பண்பாடும்மாறியது

28.06.2011த.ஆ.2042--சங்க காலம் தமிழக வரலாற்றின் தொடக்க காலமான சங்ககாலம் இனக்குழு வாழ்க்கையிலிருந்து நிலமானிய முறையை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இதனால் இக்காலத்தை மாறுதல் நிகழும் காலம் (TRANSITION PERIOD) என்பர். உணவு தேடி வாழும் இனக்குழு வாழ்க்கை,

மேலும் வாசிக்க...
 

கைக்கூவும் வெகுசனப் பண்பாடும் பெருமாள் முருகன்

28.06.2011.த.ஆ.2042--புதுக்கவிதையில் தனி இயக்கமாகக் குறிப்பிடப்படும் வானம்பாடிகளின் பங்களிப்புகள் எனப் புதுக்கவிதைக்குப் பரவலாகக் களம் ஏற்படுத்தியதையும் கவிதையை சனநாயகப்படுத்தியதையும் முக்கியமாகக் கருதலாம்.

மேலும் வாசிக்க...
 

மொரிசியசு கோயில்களில் தமிழில் மந்திரம்அருணாசலம் புட்பரதம்

மொரீசியசு தீவில் வாழும் தமிழர்களுக்குக் கோயில்கள் இருக்கின்றன. இந்தக் கோயில்களில் பல மாரியம்மன், முருகன் கோயில்கள். ஒரு சில காளியம்மன் அல்லது துர்க்கை அம்மன் கோயில்கள். முருகன் கோயில்களில் எல்லாம் சிவலிங்கமும் இருக்கும். திருமாலும் உண்டு. இந்தக் கோயில்களை 300 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலிருந்து ஒப்பந்தக் கூலிகளாக ஆயிரக்கணக்கில் வரவழைக்கப்பட்டவர்கள் கட்டி வைத்தார்கள்

மேலும் வாசிக்க...
 

தமிழர் பண்பாடு சமற்கிருத மயமாக்கப்பட்டமை

ஓர் இனத்தின்  உயிர்மை அதன் பண்பாட்டினால்  புலனாகின்றது. அதன் உண்மையான வெளிப்பாட்டினை இலக்கியத்தால் அறிய முடிகிறது. இலக்கியம் மொழியாலாகிறது மொழியால் இலக்கியமும் இலக்கிய வாயிலகப் பண்பாடும்.. பண்பாட்டினால் இனமும் வாழ்கிறது.. வளருகிறது.

மேலும் வாசிக்க...
 

தமிழர் வீழ்ச்சி ஏன்?

நம் குமுகாய வீழ்ச்சிக்குத் காரணங்களாக இருப்பவை யாவை?

1.பொருளியல் தாக்கமும் அதனைத் தேடும் போராட்டத்தில் மன உழைச்சல்.

2.வேலைப்பளு மற்றும் குடும்பச் சிக்கல்கள் காரணியமாக மொழி.இனம்பற்றிச் சிந்திக்காமை.

3.மனக்குழப்பங்கள்..தெளிவான சிந்தனைப் போக்கின்மை.

4.தமிழரிடையே கூட்டுறவு மனப்பான்மை சிதைவினால்.. தன்னலப் போக்கும் நானுணர்வும் மலிந்துவிட்டது.

5.புறத்தாக்கங்கள் அரசியல் கேடுகள் திரைப்படத்தீமையினால் பண்பாட்டுதச் சீர்ழிவுகள்.

6.எல்லாத்துறையிலும் ஒழுங்கற்ற தமிழுணர்வற்ற தலைமைத்துவம் சந்தர்ப்பவாதம்.

7.திட்டமிடாதவாழ்வு வீண்செலவுகள் கட்டொழுங்கு கிடையாது.

8.தொலைக்காட்சி வானொலி காணொளி போன்றவை பரப்பும்.. மூடத்தனங்கள் பண்பாட்டிலன்றி
கலாச்சார உணர்ச்சியில் மிதமிஞ்சிய பற்று.

9.தமிழுக்கு அரசுரிமையில்லாத நிலை அதனால் மொழியைப் புரக்க எண்ணுவதில்லை.

10.பிறமொழிகளின் ஆதிக்கமும் அதன் மீதுதான் மோகம்கொண்டு அலைதல்.

11.அக்கம்பக்கம் நடக்கும்நிகழ்வுகளால் மனச்சீர்ழிவுகள்.

12.பல கடவுள் நம்பிக்கையால் ஏற்பட்டமனவேறுபாடுகள் சகோதரத்துவ அண்ணன் தம்பி
மனப்பான்மைகிடையாது.மதவியல் கோளாறுகள் மனதுகளை வேறுபடுத்தியுள்ளது.

13.இந்தியன் என்ற போலி உணர்வில் தமிழன் நலன் கருதாமை.

14.தாய்மொழி கற்காததால் சிறு அகவை முதல் தளர்ச்சியான மனவியல் கேடுகள் நலிவுகள்.

15.பண்பாடுற்றபெற்றோர்களால் பண்பாடற்றபுல்லறிவு மக்கள் உருவாக்கப்படுதல்.

16.அறிவும் செறிவும் இல்லாது சாதியக் குடும்பங்களாக தமிழர் பிரிந்து கிடப்பது.

17.தமிழியம் காக்க முன்வராது அரசியலோடும் சினிமாவோடும் ஒதுங்கியிருப்பது.

18.தமிழிய வாழ்வுக்குப்புறம்பான வேலைகளில் அமர்ந்து பதவியு உதவியும் பெறத் தம்மை
அடகுவைத்து குமுகாயத்தை மறந்துவிடுவது அல்லது காட்டிக்கொடுப்பது.

19.அஞ்சாமை துணிவுடைமை கொண்டோர் நம் குமுகாயத்தில் மிகக்குறைவு.

20.தமிழர் வரலாறு  படிப்பதில்லை தமிழறம் போற்றும் திருக்குறளைக்கற்பது இல்லை
தமிழிய நூல்களை வாங்கிப்படிப்பதில்லை.

21.தமிழரைத்தமிழர் மதித்து நடப்பதில்லை; சான்றோர் வாய் மொழி போற்றுவதில்லை.

22.கல்வியில்விழிப்பற்ற மனத்தினராக வாழும் குடும்பச்சுழல்.

23.சொதிடத்தை நம்பி தன்னம்பிக்கை இழந்து சோம்பேறிகளாக இருப்பது.

24.மகிடி மாயையில் மிகுதியான மருள்கொண்டு முடத்தனமான வீண் செலவுகளைச் செய்தல்.

25.மொழி இன வரலாற்றுப் பெருமையினை நிலைநிறுத்த நாடமைத்து வாழமுற்படாத அடிமைச்சிந்தை.

26பகுத்தறிவு இல்லாது எல்லாம் தலைவிதியென்று  இருந்துவிடல்.

27. சிலரைத்தவிர பேசுவதையும் எழுதுவதையும் வயிற்றுப் பிழைப்பாக்குதல் துணிவின்றி அடங்கல்.

 

 
பக்கம் 165 - மொத்தம் 166 இல்