குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 26 ம் திகதி வெள்ளிக் கிழமை .

கட்டுரைகள்

அபிவிருத்தியா? அரசியலா? நிராகரிப்பும் – தடுமாற்றமும்

07.11.2014-கடந்த முப்பதாண்டு காலமாக எதிர்ப்பு அரசியல் சக்தியாக விளங்கிய விடுதலைப் புலிகள் சிறிலங்கா அரசாங்கத்தினால் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர், ஈழத் தமிழர்களின் அரசியல் கோரிக்கை ஒரு நிலையற்ற நிலைக்கு இடம்மாறியது.

மேலும் வாசிக்க...
 

மீண்டும் அயல் நாடுகளுடனான உறவில் அரசியல் நாடகங்களா?

06.11.2014-கடந்த சில மாதங்களில் பெறப்பட்ட சமிக்ஞைகள், தரவுகளின் அடிப்படையில் இந்தியா குறித்த புதிய பார்வையை ஏற்கனவே ஒருசில ஆய்வாளர்கள் குறிப்பிட்டு காட்டி உள்ளனர். அவை மோடி அவர்களின் சொந்த அரசியல் நம்பிக்கைகளின் அடிப்படையிலும், எதிர்கால நோக்கு அறிக்கைகளையும் மையமாக கொண்டு பார்க்கப்பட்டவையே.

மேலும் வாசிக்க...
 

சங்கத்தமிழரின் உணவுமரபு

31.10.2014-தி.ஆ 2045-அவர்களுக்கு அப்போதுதான் திருமணமாகியிருந்தது. மிக இளவயது. இருவரும் தனிக்கு டித்தனம்போவதாக முடிவாகிவிட்டது. ஊரார் ஆசியுடன் குடித்தனத்தைத் தொடங்கியுமம் விட்டனர். துடித்துப்போ னா ள் மணப்பெண்ணின் தாய். தனிக்குடித்தனம் எப்படிச் சாத்தியம்? பொறுப்பேதுமின்றி துடுக்குத்தனத்துடன் உலா வித் திரிந்தவளால் தனக்குடித்தனம் நடத்த முடியுமா? அடுப்பங்கரையே தெரியாதவள் எப்படி ஆக்கிப் போடுவாள்? 

மேலும் வாசிக்க...
 

ராக் மீண்டும்போர்ப் பூமியாகிவிட்டது.. அமெரிக்காவால் வீழ்த்தப்பட்ட முன்னாள் சனாதிபதி சதாம் உசேனின்

29.10.2014-ஆதரவுப் படையினர் உண்மைவடிவமெடுத்து பல முக்கிய நகரங்களைக் கைப்பற்றி எண்ணெய் வள பூமி எரிந்து கொண்டிருக்கிறது!! இதனால் பதட்டம் அடைந்த ஈரான் தனது படைகளை ஈராக்கின் பாதுகாப்புக்காக அனுப்பி வைத்துள்ளது. எல்லை களில் ஈரான் ராணுவத்தை குவித்து வருகிறது. ஈராக்கில் பெரும்பான்மையினராக இருப்பவர்கள் சியா முசுலிம்கள். அதற்கு அடுத்தது சன்னி முஸ்லிம்கள். ஈராக் சனாதிபதியாக இருந்த சதாம் உசேன் சன்னி பிரிவைச் சேர்ந்தவர். 2003ஆம் ஆண்டு ஈராக் மீது அமெரிக்கா யுத்தத்தைத் தொடுத்தது. அமெரிக்கா வின் இந்த போருக்கு சியா பிரிவி னர் ஆதரவு கொடுக்க சதாம் உசேனும் சன்னி பிரிவினரும் ஒடுக்கப்பட்டனர்.

மேலும் வாசிக்க...
 

பழந்தமிழரின் பண்பாட்டு அடையாளம் பனம்பழம்

19.10.2014-தி.ஆ-2045-தமிழகத்தின் தேசிய மரம் எதுவென்று எத்தனை பேர் அறிந்திருப்பீர்கள்? பனைமரத்துக் குத்தான் அந்தப் பெருமை என்பது பலருக்கும் ஆச்சரியமூட்டும் தகவலாக இருக்கும்.  வளமிக்க தமிழ் பூமியில் எண்ணற்ற மரங்கள் விளைந்து செழிக்க, அப்படி என்ன உசத்தி இந்த பனைமரத்துக்கு என்ற கேள்வி எல்லோ ருக்குள்ளும் எழும். பசேலென்றுதழைத்திருக்கும் வாழையின் அத்தனை பாகங்களையும் பயன்படுத்தத் தெரிந்த தமிழ் இனம் வாழையை விடவும் கூடுதலாக பயன்படுத்திய மற்றொரு தாவரம் பனை தான். அதுமட்டுமின்றி இந்தியாவில் விளையும் மொத்த பனை மரங்களில் 80 சதவிகிதம் தமிழகத் தில் தான் இருக்கின்றன. தமிழின் மதிப்புமிக்க சொத்துக்களான இலக் கியங்களை தனது பழுத்த இலைகளில் (ஓலை) பல தலைமுறைகள் கடந்து தாங்கி வந்ததால் ஒரு வேளை பனைக்கு இந்த அங்கீகாரமாக இருக்குமோ?

மேலும் வாசிக்க...
 
பக்கம் 125 - மொத்தம் 166 இல்