குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 19 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

கட்டுரைகள்

முனைவர் ராயம் சொன்னார்: “முதலில் தமிழை ஒழுங்காகப் பலுக்க/உச்சரிக்க/ஒலிக்கச் சொல்லிக் கொடுக்கவேண்டும்

முனைவர் ராயம் சொன்னார்: “முதலில் தமிழை ஒழுங்காகப் பலுக்க/உச்சரிக்க/ஒலிக்கச் சொல்லிக் கொடுக்கவேண்டும். ஏனென்றால் ஒலிப்பு வேறுபாடு பொருள் வேறுபாட்டை உண்டாக்கும்.”

மேலும் வாசிக்க...
 

பழந்தமிழர்களின் தொழில் மேன்மை

25.03.2015-பண்டையத்தமிழ் மக்கள் வணிகத்திலும், தொழில் நுட்பத்திலும் சிறந்து விளங்கினர் என்பதை அண்மைக்காலத் தொல்லியல், கல்வெட்டியல், நாணய இயல் சான்றுகள் உணர்த்துகின்றன. இதனைச் சங்க இலக்கியங்கள் முழுமையாக வெளிப்படுத்தவில்லை” என்கிறார் முனைவர் கா.இராசன் அவர்கள்(தொல்லியல் நோக்கில் சங்ககாலம், பக்: 79). தமிழர்கள் இரோம் நாட்டிற்கும், தாய்லாந்திற்கும் சென்று தங்கி வணிகம் புரிந்ததையோ, அவர்களின் பரவலான கல்வியறிவையோ சங்க இலக்கியம் குறிப்பிட வில்லை என்கிறார் அவர்(பக்: 80) சங்க காலத்தில் “எஃகும், வார்ப்பு இரும்பும் மேலை நாடுகளுக்கு மிகுதியாக ஏற்றுமதி செய்யப்பட்டு அந்நியச் செலவாணி ஈட்டப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க...
 

தமிழினத்தின் வரலாறு வரிவடிவமாகச்சுருக்கமாக ஒருமுறைபாருங்கள்.

உலகத்தின் முதலில் வாழ்ந்த இனம் என் தமிழ் இனம்

கி.மு 14 பில்லியன் : பெரும் வெடியில் உலகம் தோன்றியது.

கி.மு 6 - 4 பில்லியன்: பூமியின் தோற்றம்.

கி.மு. 2.5 பில்லியன் : நிலத்தில் பாறைகள் தோன்றிய காலம். முதன் முதலில் தமிழ் நாட்டில் மனித இனம் தோன்றியது. தென் குமரிக்குத் தெற்கே இலெமூரியா கண்டத்தில் முதலில் மனித இனம் தோன்றியது.

கி.மு. 6087 : கடல் கொந்தளிப்பில் குமரிக் கண்டம் மூழ்கியது.

மேலும் வாசிக்க...
 

மறக்கப்பட்ட மற்றும் மறுக்கப்படும் வரலாறு (History forgotten and denied) தழனின் வரலாறு

19.03.2015-திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் வழியில் 17 கி.மீ. தொலைவில் தாமிரபரணி ஆற்றின் கரையில் ஆதிச்சநல்லூர் என்ற ஊர் உள்ளது. இது ஓர் இடுகாடு. இறந்தவர்களைப் புதைத்த இடம். இதன் பரப்பளவு 114 ஏக்கர். இங்கு 4 அடிக்கு ஒருவர் வீதம் தாழிகளில் இறந்தவர்களை வைத்துப் புதைத்துள்ளனர். தாழி என்றால் பானை என்பது பொருள்.

மேலும் வாசிக்க...
 

மெய்யுடை ஒருவன் சொலமாட்டாமையால் பொய் போலும்மே.

சமயச் சார்பற்ற மொழியும்- துாய்மையான மொழியும்!-மறைமலை இலக்குவனார்

புராணங்களின் அடிப்படையை மட் டுமே கொண்டு சமற்கிருதத்தை மொழி களுள் தலைமைவாய்ந்த மொழியாகக் கூறப்படுவதும் இந்தியப் பண்பாட்டில் ஆரியப்பண்பாடே தலைமைச்சிறப்புடைய தாகப் பேசப்படுவதும், சமயச்சார்பற்ற ஆய்வாளர்களாலும், அறிஞர்களாலும் மறுத்துரைக்கப்படுவதில்லை. மேலும் இத்தகைய கிளிப்பிள்ளை வாதங்கள் முற்போக்குப் பார்வையுடைய அறிஞர்கள் உள்ளத்திலும் செல்வாக்குப் பெற்றுவிட் டதோ என்னும் அய்யம் ஏற்படுகிறது.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 109 - மொத்தம் 166 இல்