குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 27 ம் திகதி சனிக் கிழமை .

கட்டுரைகள்

பூம்புகார்_உண்மைகள்(Poompuhar) கு இராமகிருட்டினன் பேராசிரியர்

22.10.2021.....பெங்களூர் மிதிக் சொசைடியில் 2015ல் நடைபெற்ற 9500 ஆண்டுகளுக்கு முன்னர் கடலில் மூழ்கிய நகரம் என்ற கண்காட்சியில் கடலில் மூழ்கிய நகரங்கள் பற்றிய வீடியோ படம் காண்பிக்கப்பட்டது. இது தொடர்பான வீடியோ படத்தை எடுத்த கிரகாம் குக் கூறியதாவது:- கிறித்து பிறப்பதற்கு 7500 ஆண்டு முந்தைய நகரம் இதுவாகும். அதாவது 9500 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பில் இந்த நகரங்கள் மூழ்கின.

மேலும் வாசிக்க...
 

பொலநறுவையில்உள்ள கற்சிலை யாருடையது?பராக்கிரமபாகு மன்னனுடையதா? இராவணனின் பாட்டன் புலத்தியருடையதா?

06.10.2021....பொலநறுவையில் உள்ள பராக்கிரம சமுத்திரத்தின் அருகில் ஓர் கற்சிலை உள்ளது. பாடசாலையில் படிக்கும் காலத்தில் ஒரு தடவை சுற்றுலா செல்லும் போது முதன் முதலாக அச்சிலையைப் பார்த்தேன். அது மன்னன் பராக்கிரமபாகுவின் சிலை என்று புத்தகங்களில் கூறப்பட்டிருந்தது. அன்றைய காலகட்டத்தில் இருந்த ரூபாய்த் தாள்களிலும் இந்த சிலையின் படம் அச்சிடப்பட்டிருந்தது. அது மட்டுமல்லாது அக்காலப்பகுதியில் புழக்கத்தில் இருந்த முத்திரையிலும் பராக்கிரமபாகு மன்னன் எனப் பெயரிடப்பட்டு இந்த சிலையின் படம் போடப்பட்டிருந்தது.அப்போது எனக்குள் ஓர் சந்தேகம் எழுந்தது. 

மேலும் வாசிக்க...
 

இந்து மதமும் தமிழரும் : அறிஞர் அண்ணா அளித்த விளக்கம் ...இரவிக்குமார்

05.10.2021....இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு 1942 ஆம் ஆண்டில் திராவிடநாடு இதழில் அறிஞர் அண்ணா  எழுதிய கட்டுரைகள் இன்று தமிழ்த் தேசியம் என்ற பெயரில் சிலர் முன்வைக்கும் சனாதன ஆதரவுக் கருத்துகளுக்கான பதில்களாக அமைந்துள்ளன.‘கிந்து கிட்லரிசம்’ என்ற தலைப்பில் 28.03.1942 இல் அண்ணா கட்டுரையொன்றை எழுதியிருக்கிறார்.

மேலும் வாசிக்க...
 

கீழடிச் சான்றுகள்: தமிழ்ப் பழைமையின் அறிவியல் ஆதாரங்கள்!

04.10.2021....நவீன மனிதனாக வாழ்ந்து கொண்டே பழைமையின் மீதான பற்றை வெளிப்படுத்துவது மனித இயல்பு. இது ஒருவித பாவனையாகக்கூட இருக்கலாம். தனிமனிதர்களுக்குள்ள இந்த இயல்பு குழுவாகவும் கூட்டமாகவும் அடையாளப்படுத்தப்படும் போதும் வெளிப்படுகிறது. என் தாத்தா 100 வயதைத் தாண்டியவர் என்பதைச் சொல்லும்போது இருக்கும் பெருமிதத்தின் தொடர்ச்சிகளே ஊரின் பழைமை; மொழியின் பழைமை இனத்தின் பழைமை என நீள்கிறது.

மேலும் வாசிக்க...
 

இலக்கியம் அறிவோம்!நந்தா விளக்கு=தீண்டா விளக்கு= அணையா விளக்கு சோழர்காலத்தில் துாண்டாமணி விளக்கானது!

02.10.2021...16.கன்னி.தி.ஆ2052 நந்தா விளக்கு என்றால் விளக்கின் திரி தூண்டாமல் இரவும் பகலும் அணை யாமல் எரியும் விளக்கு என்று பொருள். நந்தா விளக்குகள் குறித்த பல செய்திகள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன. சோழர்கள் காலத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகளில் இவ்வகை விளக்குகள் நுந்தா விளக்கு என்றும் திருநுந்தா விளக்கு என்றும் நொந்தா விளக்கு என்றும் தூண்டாமணி விளக்கு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன. 

மேலும் வாசிக்க...
 
பக்கம் 10 - மொத்தம் 166 இல்