குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2053

இன்று 2022, வைகாசி(விடை) 19 ம் திகதி வியாழக் கிழமை .

கட்டுரைகள்

மொழிஞாயிறு' தேவநேயப் பாவாணர் பிறந்த நாள்...07.02.1902 மிழர்விடுதலை என்றதான் சொன்னார்

16.04.2021...03.04.(மேழம்) திருவள்ளுவராண்டு 2052 !

பாவாணர் அவர்கள் எப்போதும் பிறந்தநாள் கொண்டாடுவதில்லை. அவரிடம் தமிழன்பர்கள் சிலர் பிறந்தநாள் செய்தி கூறுமாறு வேண்டிய போது "நான் பிறந்தநாள் கொண்டாடுவதும் இல்லை; அதற்குச் செய்தியும் இல்லை" என்று கூறிவிட்டார். விழாக் கொண்டாடா விட்டாலும் உங்கள் பிறந்தநாளையொட்டித் தமிழ் மக்களுக்குச் சொல்ல விரும்பும் அறிவுரையைக் கூறலாமே!... என்று வேண்டவே, பாவாணர் தம் பிறந்தநாள் செய்தியாக விடுத்தது வருமாறு:

மேலும் வாசிக்க...
 

தமிழுக்கு வாழ்வதே வாழ்வு தமிழ்ப்பேரறிஞர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்!

16.04.2021 03.03.(மேழம்..திருவள்ளுவராண்டு 2052

தமிழே உனக்கு வணக்கம்

தாயுன் புகழ்இந்த உலகில் மணக்கும்

தமிழே உனக்கு வணக்கம்.

இமை நேரமும் உனைமறக்க மாட்டோம்!

எம் கடன் ஆற்றாமல் இறக்க மாட்டோம்

அமுதத் தமிழைத் துறக்க மாட்டோம்

அடிமையை ஒப்பினால் சிறக்க மாட்டோம்.

மேலும் வாசிக்க...
 

இலங்கையில் தமிழர்களின் பூர்வீகம் என்பது பெருங்கற்கால பண்பாட்டுடன் தொடர்புடையது” (நேர்காணல்)-பேராசிரி

யர் சி.பத்மநாதன். 10.04.2021.....யாழ்ப்பாணம் அராலியை பிறப்பிடமாக கொண்ட பேராசிரியர் சி.பத்மநாதன் இலங்கையின் வரலாற்றுப் பேராசிரியரும் கல்விமானும் ஆவார். இலண்டன் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை முனைவரான (Ph.D. in South Asian History, University of London) இவர், இலங்கையில் பல்வேறு பல்கலைக்கழகங்களில் பணியாற்றியவர். வரலாறு, சமயம் தொடர்பிலான பல நூல்களை எழுதியவர். இவற்றில் ‘இலங்கை தமிழ் சாசனங்கள்’, ‘இலங்கைத் தமிழர் வரலாறு’, ‘கிழக்கிலங்கையில் நாகரும் தமிழும்’ (கி.மு 250- கி.பி 300), ‘The Kingdom of Jaffna’, ‘வன்னியர் யாழ்ப்பாணம்’ போன்ற வரலாற்று நூல்கள் குறிப்பிடத்தக்கவை.

மேலும் வாசிக்க...
 

யாழ்ப்பாண ஆட்சிக்காலம்! ஆரியச் சக்கரவர்த்திகள் காலம் (கி.பி.1216-1621)

09.04.2021....கி.பி. 13ஆம் நூற்றாண்டின் முற்பகுதி தொடக்கம் தமிழ் மன்னர்களான ஆரியச்சக்கரவர்த்திகள் யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு பெரியதொரு இராட்கியத்தை நிறுவி கட்டிக்காத்தனர். வடக்கே நிலைமை இவ்வாறிருக்க சமகாலத்தில் நாட்டின் திசையெங்கும் தமிழர் செறிந்து வாழ்ந்தனர். மன்னர்களான செயவீரசிங்கனும் எதிர்மன்னசிங்கனும் புலவர்களாக விளங்கியதுடன் தமிழையும் தமிழ்ப் புலவர்களையும் கட்டிக் காத்தனர்.

மேலும் வாசிக்க...
 

சீமான் எனும் தமிழ் சாவர்க்கர்

05.04.2021......எனக்கு சீமானின் மேடை உடல் மொழி, பேச்சுத்திறன், அவருடைய சூழலியல், மாநில தன்னுரிமை குறித்த கருத்துக்கள் பிடிக்கும் என்பதை முதலிலேயே சொல்லி விடுகிறேன். திமுக எதிர்ப்பை அவர் கூவிக்கூவி விற்பதாலும் எனக்கு அவர் மீது கோபமில்லை. திமுக ஒழிப்பை அவர் தன் இலக்காகவும் வைக்கலாம். ஒரு கட்சியின் இலக்கு என்கிற விதத்தில் தப்பில்லை. ஆனால் இந்த மேற்பூச்சுகளை சுரண்டி எடுத்து விட்டால் சீமானிடம் ஒன்றுமில்லை என்பதே பிரச்சனை. இந்த புரட்சிகர கருத்துக்களும் சீமானுடைய சொந்த கருத்துக்கள் அல்ல என்பதே பிரச்சனை.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 9 - மொத்தம் 160 இல்