குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, ஆனி(இரட்டை) 22 ம் திகதி சனிக் கிழமை .

சமயல் குறிப்புகள்

விபத்துகளின் தாக்கம் தமிழினத்தின் இருப்பிற்கே அச்சம்!

இந்த  கட்டுரை  எழுதக்காரணம்  தமிழர்கள் விபத்தில் அதிகளவில் இறக்கின்றார்கள் என்ற செய்திகள்-தற்கொலை செய்துகொள்ளும் செய்திகள் -கடன்தொலை்லைகளின் வறுமையின் தாக்கம் காமவெறியர்களால் ஏமாற்றப்படும் பெண்கள் இறந்துபோகும் நிகழ்வுகள்   பாதித்தது இதனை  தவிர்க்க  தமிழினத்தில் எந்தவிதமான  முகந்தர  நடவடிக்கைகளும் இல்லை  அரசியல்  பிரச்சனைகளை மட்டும்  துாக்கிப்பிடிக்கின்றார்கள்  நடைமுறையில் தீர்க்கக்கூடிய  நிலையில்  உள்ள இத்தகைய  மக்கள் பிரச்சனைகளை  கண்டுகொள்ளாதுள்ளனர் என்பதனை உணர்ததால்.  இக்கட்டுரை வெளியான பின்பும் நாளொன்றுக்கு அங்கொன்று  இங்கொன்றாக  இத்தகைய இழப்புக்கள் நிகழ்ந்துகொண்டிருப்பதை முடிந்தளவு சேகரிக்கும் நோக்கில்  முயற்சிக்கின்றேன்.

 

நாம் சமையலில் செய்யக்கூடாதவை.26.06.2016

* இரசம் அதிகமாக கொதிக்ககூடாது.

* காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது.

* மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது.

* கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது.

* காய்பிஞ்சுகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது.

மேலும் வாசிக்க...
 

சுவையான மட்டன் கடாய்

விடுமுறை நாட்களில் அசைவ உணவுகளை வீட்டில் சமைத்து நன்கு மூக்குமுட்ட சாப்பிட நினைப்போம். அப்படி சாப்பிட நினைக்கும் போது மட்டன் கடாய் செய்து சாப்பிட்டால் உண்மையிலேயே சுவையாக இருக்கும்.

மேலும் வாசிக்க...
 

பருப்பு அடை தோசை

பருப்பு அடை தோசை தயார் செய்ய தேவையான பொருட்கள் வருமாறு:-
பச்சை பயறு-1 கப்,துவரம் பருப்பு-1 கப்,உளுந்தம் பருப்பு-1 கப்,பெருங்காயம்- சிறிதளவு, தேங்காய் எண்ணெய்- சிறிதளவு,பச்சை மிளகாய்- 4 எண்ணிக்கை, கொத்தமல்லி இலை- ½ கட்டு, உப்பு தேவையான அளவு.

மேலும் வாசிக்க...
 

தானிய லட்டு

தானிய லட்டு தயார் செய்ய தேவையான பொருட்கள் வருமாறு:-
பச்சைப்பயறு, வெள்ளை காராமணி, கொள்ளு, முழு உளுந்து, கோதுமை, பொட்டுக்கடலை, கேழ்வரகு, கம்பு, பச்சரிசி ஆகிய தானியங்கள் ஒவ்வொன்றும் தலா 50 கிராம்.
மேலும் வாசிக்க...
 

கஞ்சியில் இருக்கு ஆரோக்கிய ரகசியம்!

இன்றைய தலைமுறைக்கு கஞ்சி என்றால் என்ன என்றே தெரியாது. இட்லி, பொங்கல், பூரி, தோசை எனக் காலை உணவு மாறிவிட்டது. இந்த ஞாயிற்றுக்கிழமை அரைத்த மாவில், அடுத்த ஞாயிற்றுக்கிழமை வரை இட்லி, தோசை சாப்பிட ஆரம்பித்துவிட்டோம். நாம் சாப்பிடும் உணவு ஆரோக்கியமானதா என்கிற கவலை இல்லாமல், வயிற்றை நிரப்புவது என்றாகிவிட்டது. இது மிக மிகத் தவறு. எந்த நோயும் இன்றி ஆரோக்கியமாக வாழ்ந்த நம் முன்னோர்களின் முக்கிய உணவே பாரம்பரிய தானியங்களில் செய்த கஞ்சியும் கூழும்தான். அது எல்லாம் நோயாளிகளுக்கு என்று ஒதுக்கிவிட்டு ஜங்க் ஃபுட் தேடிப்போவது நாகரிகமாகத் தெரியலாம். ஆனால் ஆரோக்கியமாக இருக்காது.

மேலும் வாசிக்க...
 

சிறு தானியங்களின் சிறப்பு

பல காலமாக ஏழைகளின் உணவாகவே பார்க்கப்பட்ட கம்புக்கும் கேழ்வரகுக்கும், இப்போது நட்சத்திர அந்தஸ்து கிடைத்திருக்கிறது. ஆமாம்... நட்சத்திர ஓட்டல்களின் மெனு பட்டியலில் இடம்பெறுகிற அளவுக்கு இவற்றின் அந்தஸ்து உயர்ந்திருக்கிறது இன்று. கையேந்தி பவன்களில் தொடங்கி கார்பரேட் கம்பெனிகளின் உணவுத் தயாரிப்புகள் வரை எல்லா இடங்களிலும் சிறுதானியங்களைப் பற்றிய விழிப்புணர்வைப் பார்க்க முடிகிறது. நோயற்ற வாழ்க்கைக்கும் நீடித்த இளமைக்கும் சிறுதானியங்களில் தீர்வு இருப்பது நிரூபிக்கப்பட்ட உண்மை!

மேலும் வாசிக்க...
 

சமையல்....டிப்ஸ்.... டிப்ஸ்..! & சமையலில் செய்யக்கூடாதவை!

சமையலில் செய்யக்கூடாதவை!

காபிக்கு பால் நன்றாகக் காயக்கூடாது.

மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது.

கீரைகளை மூடிபோட்டு சமைக்ககூடாது.

மேலும் வாசிக்க...
 

உணவுவகைகளும் சமயல்வகைகளும்.

சைவ சிற்றுண்டி வகைகள்

இட்லி இடியாப்பம்

உப்புமா சர்க்கரை பொங்கல் 

மேலும் வாசிக்க...
 

தயிர் வாழைக்காய்

தேவையானவை: வாழைக்காய் - 4, தேங்காய் துருவல் - ஒரு கப், பச்சைமிளகாய் - 5, சீரகம் - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, கடுகு - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, தயிர் - ஒன்றரை கப், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: தேங்காய் துருவல், பச்சை மிளகாய், கால் டீஸ்பூன் சீரகத்தை சிறிது தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, காய்ந்த மிளகாய், மீதமுள்ள சீரகம், கறிவேப்பிலையை போட்டு வறுக்கவும்.

பிறகு இதில் அரைத்த விழுது, மஞ்சள்தூள், உப்பு, தோல் சீவி நறுக்கிய வாழைக்காயைப் போடவும். காய் வெந்ததும், தயிரைக் கடைந்து சேர்க்கவும். இதனுடன் சிறிது தண்ணீர் கலந்து, பெருங் காயத்தூள் சேர்த்துக் கிளறினால் தயிர் வாழைக்காய் தயார்!

இதை சாதத்துடன் கலந்தும் சாப்பிடலாம்.. பருப்பு சாதம், சப்பாத்தி மற்றும் டிபன் வகைகளுக்கு 'சைட் டிஷ்' ஆகவும் தொட்டுக் கொள்ளலாம்.