குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 29 ம் திகதி திங்கட் கிழமை .

உடல் நலம்

மருந்தில்லா மருத்துவம் - இய‌ற்கை வைத்தியம்

1.வெறும் வயிற்றில் இஞ்சி சாறில் தேன் கலந்து பருகினால் சோர்வு நீங்கும், மார்புச் சளி அகலும்.

சளிக் காய்ச்சல்.

2.புதினா கீரையை நீரில் போட்டு கொதிக்க வைத்து டீ டிகாஷன் போல் செய்து சாப்பிட்டால் சளியால் வரும் காய்ச்சல் குணமாகும்.

மேலும் வாசிக்க...
 

குடற்புண்களை ஆற்றும் சக்தி இதற்குண்டு :-

வாழைத் தண்டில் அதிக நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கும். இரத்தத்தைச் சுத்தப்படுத்தி சீரான இரத்த ஓட்டத்திற்கு உதவும். உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் வாழைத்தண்டு சூப் செய்து தினமும் அருந்தி வந்தால் உடல் பருமன் குறையும். பெண்களுக்கு மாத விலக்குக் காலங்களில் ஏற்படும் உபாதைகளைம், வெள்ளைப் படுதலையும் குணப்படுத்தும். இரத்த அழத்தத்தைக் குறைக்கும். வயிற்றில் உள்ள கீரி பூச்சிகளை அகற்றும். தோல் நோய்களைக் குணப்படுத்தும். உடலில் நச்சுப் பொருட்கள் கலந்திருந்தால் விரைவில் குணமாக்கும். நீர்ச்சுருக்கம், நீர் எரிச்சல் இவற்றை போக்கும்.பச்சிலை சாறும் அதன் பயன்பாடுகளும்:-

மேலும் வாசிக்க...
 

தொப்பை வயிறு, சப்பை மூளை, குப்பை உணவு

சமீபத்தில் நண்பர் ஒருவரின் ஏழு வயதுப் பெண் திடீரென சுகவீனமடைந்தாள். நன்றாக விளையாடிக் கொண்டிருந்த போது சுருண்டு விழுந்தவள் ”வயிறு வலிக்கிறது” என்று அழுதிருக்கிறாள்.

மேலும் வாசிக்க...
 

நீண்ட ஆயுளுடன் வாழ தேரையர் சித்தரின் அறிவுரைகள்.

காடு, மலைகளில் வாழ்ந்த சித்தர்கள் நூற்றாண்டுகளை கடந்தும் வாழ்தார்கள். நோய்கள் அவர்கள் அருகே வர அஞ்சியது. தங்கள் ஆயுள் ரகசியத்தை அவர்கள் சொல்லி இருந்தாலும், நாம் தான் அதன்படி வாழ மறுக்கிறோம். 18 சித்தர்களில் ஒருவரான தேரையார் எப்படி வாழ வேண்டும் என்பதை ஒரு பட்டியலே இடுகிறார்.

மேலும் வாசிக்க...
 

சளி இருமல் போக்கும் இயற்கை மருந்துகள் :-

மிளகையும் வெல்லத்தையும் வெறும் வயிற்றில் உட்கொண்டால் இருமல் நீர்க்கோவை ஆகியவை குணமாகும். சீரகத்தையும் கற்கண்டையும் மென்று தின்றால் இருமல் குணமாகும். நான்கு மிளகையும், இரு கிராம்பையும் நெய்யில் வறுத்து பொடி செய்து ஒரு வெற்றிலையில் மடித்து மென்று விழுங்கினால் இருமல் குணமாகும். நான்கு வால் மிளகைச் சிறிதளவு புழுங்கலரிசியுடன் வாயில் போட்டு மென்று அதன் ரசத்தை பருகினால் இருமல் குணமாகும்.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 15 - மொத்தம் 23 இல்