குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, புரட்டாசி(கன்னி) 13 ம் திகதி வெள்ளிக் கிழமை .

இந்திய செய்திகள்

23.11.2014- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

கிரீன்கார்டு சலுகை:இந்தியர்கள் மகிழ்ச்சி

வாஷிங்டன்:அமெரிக்க அதிபர் ஒபாமா, அறிவித்துள்ள குடியுரிமை சட்டத்திருத்தங்கள்,கிரீன்கார் விண்ணப்பித்தும் கிடைக்காத இந்தியர்களுக்கு புதிய சலுகைகள் கொடுத்துள்ளதால், கிரீன்கார்டுக்கு காத்திருந்த அமெரிக்க வாழ் இந்தியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

மேலும் வாசிக்க...
 

22.11.2014- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

முத்த போராட்ட அழைப்பு:கோவையில் பரபரப்பு

கோவை : கோவையில் உள்ள முன்னணி மால்களில் நாளை முத்த போராட்டம் நடத்தப்பட உள்ளதாகவும், இதில் கலந்து கொள்ள வருமாறும் பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருகிறது.

மேலும் வாசிக்க...
 

21.11.2014- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

சொல்வது எளிது;செய்வது கடினம்:சோனியா

புதுடில்லி : காங்கிரஸ் மீது குற்றம்சாட்டி வரும் பா.ஜ.,விற்கு பதிலளித்த காங்கிரஸ் தலைவர் சோனியா, மக்களுக்கு வாக்குறுதி அளிப்பது எளிது. ஆனால் யதார்த்தத்தை புரிந்து கொண்டு, மக்களின் கனவுகளை நிஜமாக்குவது கடினம் என தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க...
 

20.11.2014- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

ஊட்டியில் இறந்ததாக கருதப்பட்ட மாணவன் காபி குடித்த வினோதம்

ஊட்டி: ஊட்டியில் இறந்ததாக கருதப்பட்ட மாணவன் காபி குடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஊட்டியைச் சேர்ந்த மாணவன் ஒருவன், கடந்த 12ம் தேதி விஷமருந்திய நிலையில் ஊட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். அவனது உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து, மாணவன் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டான். அங்கு அவன் இறந்து விட்டதாகக் கருதிய பெற்றோர், தனது மகன் விரும்பி சுவைக்கும் காபியை மாணவன் வாயில் ஊற்றியுள்ளனர். தொடர்ந்து 2 கோப்பை காபி காலியானதால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அவனது பல்சை பரிசோதித்துள்ளனர். அவனுக்கு பல்ஸ் இருந்ததையடுத்து, மீண்டும் ஊட்டி அரசு மருத்துவமனையில் மாணவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் வாசிக்க...
 

19.11.2014- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

சாருக்கான் வீடு மீது தாக்குதல் நடத்த சதி

மும்பை : பாலிவுட் இயக்குனர் மகேஷ் பட் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்த முயற்சி செய்ததாக மும்பை போலீசார் சிலரை கைது செய்தள்ளனர். தாக்குதலில் ஈடுபட முயன்ற 13 பேரில் 3 பேரை கைது செய்துள்ள போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி உள்ளனர். இதில், மகேஷ் பட் குடும்பத்தார் மீது தாக்குதல் நடத்த முயன்ற கும்பல் தங்களின் கும்பலை சேர்ந்தவர்களிடம் நடிகர் ஷாருக்கானின் வீடு மற்றும் அலுவலகம் மீதும், டைரக்டர் பரக் கானின் வீடு மீதும் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்த அறிவுறுத்தி இருப்பது தெரிய வந்துள்ளது.

மேலும் வாசிக்க...
 

18.11.2014- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

காங்., கொள்கை: சோனியா விளக்கம்

புதுடில்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா கூறுகையில், 'நாங்கள் நேருவின் கொள்கைகளை மட்டும் கடைப்பிடிக்கவில்லை. ஜனநாயகத்தையும், மதச்சார்பின்மையையும் பலப்படுத்துவதற்காகவும் போராடி வருகிறோம்,' என்றார்.

மேலும் வாசிக்க...
 

17.11.2014- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

மோடியை தமிழில் வரவேற்ற இந்திய மாணவி

பிரிஸ்பேன் : ஜி20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ள பிரதமர் மோடி, முதலில் மியான்மர் சென்று, பிறகு அங்கிருந்து பிரிஸ்பேனுக்கு நவம்பர் 14ம் தேதி சென்றார். நவம்பர் 14 குழந்தைகள் தினம் என்பதால், அதனை கொண்டாட எண்ணிய மோடி, தனது நிகழ்ச்சி நிரலில் திட்டமிடாத போதும் தன்னுடன் வந்த அதிகாரிகள் குழுவிடம், தான் பிரிஸ்பேனில் வாழும் இந்திய பள்ளி குழந்தைகளை சந்திக்க வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் வாசிக்க...
 

16.11.2014- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

கடிதம் எழுதி விட்டால் போதுமா? பன்னீருக்கு கருணாநிதி கேள்வி

சென்னை: தி.மு.க., தலைவர் கருணாநிதியின், அறிக்கை: முல்லைப் பெரியாறு அணை பிரச்னையில், தமிழக அமைச்சரவை கூட்டத்தை நடத்தி, உச்ச நீதிமன்றத்தில், 'கேவியட்' மனு தாக்கல் செய்வது பற்றி, முதல்வர் பன்னீர்செல்வம் முடிவு செய்யவில்லை.ஆனால், கேரள சட்டசபை கூட்டத்தொடரில், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தும் நடவடிக்கையை தடுக்க, சட்ட மசோதா கொண்டு வர, அம்மாநில அரசு திட்டமிட்டு உள்ளது.

மேலும் வாசிக்க...
 

15.11.2014- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

தி.மு.க.,-அ.தி.மு.க.,வுடன் கூட்டணி கிடையாது:வைகோ
கரூர்: கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் பத்திரிகையாளர்களிடம் பேசிய ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ, வரும் தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க.,வுடன் கூட்டணி கிடையாது. பாம்பாற்றின் குறுக்கே அணை கட்ட முயலும் கேரளாவை தடுக்க வேண்டும். கொங்கு மண்டல இளைஞர்களை ஒருங்கிணைத்து கேரளாவுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும். தமிழகத்திலிருந்து ஒரு பொருள் கூட கேரளாவுக்கு செல்லவிட மாட்டோம் என கூறினார்.
மேலும் வாசிக்க...
 

14.11.2014- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

நள்ளிரவில் மலர்ந்த கிருஷ்ணர் கமலப்பூ

திண்டுக்கல்: குறிஞ்சி பூவினை போன்று 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நள்ளிரவில் மட்டுமே பூக்கும் "கிருஷ்ணர் கமலப்பூ' திண்டுக்கல்லில் பூத்துள்ளது. இது குறித்து லிஜி என்பவர் கூறுகையில்,"செடியிலிருந்து தண்டு தனியாக பிரிந்த பின் மொட்டு உருவாகி பூவாக மலரும் என இதை எனக்கு தந்தவர்கள் தெரிவித்திருந்தனர். அந்த தருணத்திற்காக காத்திருந்தேன். அந்த அற்புத காட்சியை நேற்று அனைவரும் ரசித்து பார்த்தோம். பரவசத்தில் என்ன செய்வது என தெரியவில்லை. கிருஷ்ணரே நேரில் வந்திருப்பதாக உணர்ந்து பூவுக்கு தீபாராதனை காட்டி வணங்கினோம்,'' என்றார்.

 

மேலும் வாசிக்க...
 
பக்கம் 20 - மொத்தம் 36 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.