குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 2 ம் திகதி வியாழக் கிழமை .

இந்திய செய்திகள்

20.12.2014- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

மதவாத கொள்கையை முறியடிப்போம்: கருணாநிதி

சென்னை: மதம், கடவுள் பெயரால் நடைபெறும் மதவாத கொள்கையை முறியடிப்போம் என தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசினார். சென்னை சாந்தோமில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் பேசிய அவர், மதம், கடவுள் பெயரால் நடைபெறும் மதவாத கொள்கையை முறியடிப்போம்.

மேலும் வாசிக்க...
 
19.12.2014- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

அஞ்ஞாடிக்கு சாகித்ய அகாடமி விருது

திருநெல்வேலி: நெல்லையை சேர்ந்த எழுத்தாளர் பூமணியின் அஞ்ஞாடி புதினத்திற்கு இந்த ஆண்டுக்கான சாகித்யஅகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்தாளர் பூமணி எழுதிய அஞ்ஞாடி புதினம், 2012ல் க்ரியா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டதாகும்.

மேலும் வாசிக்க...
 
18.12.2014- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

வாய்பாய்க்கு பாரத ரத்னா விருது?

புதுடில்லி : முன்னாள் பிரதமர் வாய்பாய்க்கு அவரது பிறந்த நாளான டிசம்பர் 25ம் தேதி அன்று பாரத ரத்னா விருது வழங்கி கவுரவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பான அறிவிப்பு டிசம்பர் 25ம் தேதி வெளியிடப்படும் எனவும் கூறப்படுகிறது.

மேலும் வாசிக்க...
 
17.12.2014- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

கறுப்பு பண நாடுகள் பட்டியல்: இந்தியா 3ம் இடம்

புதுடில்லி: கறுப்பு பணம் அதிகமாக உள்ள நாடுகள் குறித்த பட்டியலில் இந்தியா மூன்றாம் இடத்தை வகிக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில், வௌிநாடுகளில் அதிக அளவு கறுப்பு பணத்தை பதுக்கியுள்ள நாடுகள் குறித்த பட்டியலில், ரசியா முதலிடமும், சீனா இரண்டாமிடமும் வகிக்கின்றன. இந்த பட்டியலில் இந்தியா 3ம் இடத்தை வகிக்கிறது.

மேலும் வாசிக்க...
 
16.12.2014- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

கருணை காட்டிய வருண பகவான்

சென்னை: கடந்த ஆண்டுகளில் ஏமாற்றிய பருவமழை இந்த ஆண்டு பெய்துள்ளது வானிலை ஆய்வு மைய அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. தமிழகத்தை பொறுத்த வரையில் வடகிழக்கு பருவமழை காலத்தில் தான் கூடுதல் மழை பொழிவு இருக்கும்.

மேலும் வாசிக்க...
 
15.12.2014- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

பா.ஜ., தலைவர்களுக்கு ஆம் ஆத்மி நோட்டீஸ்

புதுடில்லி: நிதி வசூலிப்பு சம்பந்தமாக ஆதாரமில்லாத குற்றச்சாட்டுக்களை பா.ஜ., தலைவர்கள் கூறி வருவதாக கூறி உள்ள ஆம் ஆத்மி,

மேலும் வாசிக்க...
 
14.12.2014- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

கணவரோடு சிதையில் எரிந்த மூதாட்டி

பாட்னா: பாட்னா, சகர்சா மாவட்டம், பர்மானியா கிராமத்தைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி கவஹாதேவி. இவரின் கணவர் உடல் நலக்குறைவு காரணமாக இறந்தார். அவரின் உடலை உறவினர்கள் மயானத்திற்கு கொண்டு சென்று, சிதையில் வைத்து நெருப்பு மூட்டினர்.

மேலும் வாசிக்க...
 
13.12.2014- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

மோடியை கைது செய்யலாமா? :மம்தா ஆவேசம்

கோல்கட்டா : கோல்கட்டாவில் கட்சி தொண்டர்களிடம் பேசிய மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சாரதா சிட்பண்ட் ஊழலில் என்னை தொடர்பு படுத்தி பேசும் பிரதமர் மோடி, சகாரா நிறுவன தலைவருடன் போட்டோ எடுத்துக் கொண்டுள்ளாரே.

மேலும் வாசிக்க...
 
12.12.2014- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

பொருளாதார சீர்திருத்தத்திற்கான நடவடிக்கைகள் எடுத்துள்ளோம்: ஜெட்லி

புதுடில்லி: தனியார் டிவிக்கு பேட்டியளித்த மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளுக்காக கடந்த 7 மாதங்களில் மிகப்பெரிய நடவடிக்கைகள் எடுத்துள்ளோம். ஜி.எஸ்.டி., வரும் என்ற நம்பிக்கை உள்ளது. இதற்கான தீர்வை எட்டும் நிலையில் உள்ளது.

பார்லிமென்ட் வந்த பாக்., எம்.பி.,க்கள் புறக்கணிப்பு

புதுடில்லி: பாகிஸ்தானை சேர்ந்த எம்.பி.,க்கள் குழுவினர், இன்று பார்லிமென்ட் வந்தனர். அவர்களை அறிமுகப்படுத்த சபாநாயகர் சுமித்ரா மகாஜன் மறுத்து விட்டார். இது தொடர்பாக அவர்கள் கூறியதாவது: நேற்று வந்த போது பார்லிமென்டிற்குள் எங்களை நுழைய அனுமதிக்கவில்லை. இன்று எங்களை அறிமுகப்படுத்த மறுத்துவிட்டனர். நாங்கள் பார்லிமென்ட் கேலரியில் அமர்ந்திருந்தோம். மற்ற நாட்டு பார்லிமென்ட்களில் விருந்தினராக வந்தவர்களை வரவேற்று கவுரவிப்பார்கள். ஆனால் 20 நிமிடங்களாக அமர்ந்திருந்தும் எங்களை யாரும்வரவேற்கவில்லை. அறிமுகப்படுத்தவும் இல்லை. இது எங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது என கூறினார்.

ஐஎஸ்., அமைப்பின் ட்வீட்டர் அக்கவுண்டை இயக்கிய நபருக்கு போலீசார் வலை

பெங்களூரு: பெங்களூருவில் ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பின் ட்வீட்டர் இணையதளத்தை இயக்கி வந்த நபரை போலீசார் தேடி வருகின்றனர். அந்த நபர் பெங்களூருவை விட்டு தப்பி சென்று விட்டதாகவும், சைபர் செல் போலீசார் அந்த பக்கத்தை ஆய்வு செய்து வருவதாகவும் பெங்களூரு போலீஸ் கமிஷனர் கூறினார். மேலும் அவர், இந்த வழக்கை குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருவதாகவும் கூறினார்.

காரைக்காலில் 15,16ல் விடுமுறை அறிவிப்பு

காரைக்கால்: திருநள்ளாரில் சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுவதை முன்னிட்டு, வரும் 15 மற்றும் 16ம் தேதிகளில் விடுமுறை அளிக்கப்படுவதாக காரைக்கால் கலெக்டர் கூறியுள்ளார்.

மதுவிலக்கு என்பது அரசின் கொள்ளை: சென்னை ஐகோர்ட்

சென்னை: மதுவிலக்கு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கை தலைமை நீதிபதி கவுல் தாமாகவே முன்வந்து எடுத்து விசாரித்தார். அப்போது அவர், மதுவிலக்கு அமல்படுத்துவது தொடர்பாக ஐகோர்ட் தலையிட விரும்பவில்லை. தமிழகத்தில் மதுவிலக்கு என்பது தமிழக அரசின் கொள்கை முடிவு. மது அருந்திவிட்டு வாகனம் ஒட்டுவதை தடுக்க புதியவிதிமுறை உருவாக்க வேண்டும். புதிய விதிமுறை உருவாக்குவது தொடர்பாக வரும் பிப்ரவரி 12ம் தேதிக்குள் மத்திய மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கூறினார்.

கறுப்பு பண விவகாரம்: சுவிஸ் வங்கியில் ரூ.4,479 கோடி பதுக்கல்

புதுடில்லி: கறுப்பு பணம் குறித்து விசாரணை நடத்தி வரும் சிறப்பு புலனாய்வு குழுவிடம் உள்ள பட்டியலை ஆராய்ந்ததில், சுவிட்சர்லாந்தில் உள்ள எச்எஸ்பிசி வங்கியில், ரூ.4,479 கோடி பதுக்கப்பட்டுள்ளது. இந்த வங்கியிலிருந்து பெறப்பட்ட பட்டியலில் உள்ள 628 வங்கிக்கணக்கில், 289 கணக்குகளில் பணம் ஏதுமில்லை.79 பேரின் கணக்குகள் தொடர்பாக வருமான வரித்துறை இறுதி முடிவெடுத்துள்ளது. ரூ.2,926 கோடி பதுக்கல் தொடர்பாக வருமான வரித்துறையினர் விரைவில் நோட்டீஸ் அனுப்ப உள்ளனர் என மத்திய அரசு கூறியுள்ளது.

பா.ஜ., எம்.பி.,க்களுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை!

புதுடில்லி: பா.ஜ., எம்.பி.,க்கள் மத ரீதியாக பேசி வருவது பிரதமர் மோடிக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர் எம்.பி.,க்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும், இது வளர்ச்சி பணிகளை பாதிக்கும் என எம்.பி.,க்களிடம் கூறியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

என்னை கைது செய்ய யாரும் உள்ளனரா? மம்தா கேள்வி

கோல்கட்டா: சாரதா சிட்பண்டுமோசடி வழக்கில் அமைச்சர் மதன் மித்ரா கைது செய்யப்பட்டது அரசியல் பழிவாங்கும் செயல் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: பா.ஜ., அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறது. இது சட்டவிரோதம், அரசியல் சாசன சட்டத்திற்கு எதிரானது. பா.ஜ.,வின் பழிவாங்கும் செயல் இது. நாங்கள் மத்திய அமைச்சரை கைது செய்தால் பா.ஜ.,வினர் என்ன செய்வார்கள். ஜனநாயக அமைப்புகளை சீர்குலைக்க பா.ஜ., முயற்சி செய்கிறது. ஊழல் நிறைந்த சி.பி.ஐ., மூலம் எங்கள் அமைச்சரை கைது செய்து எங்களை மிரட்ட பார்க்கிறது. சாரதா சிட் பண்டு மோசடி வழக்கில் இதுவரை ஏன் இடதுசாரி கட்சியனர் ஒருவரை கூட கைது செய்யவில்லை? என்னை கைது செய்ய யாரேனும் உள்ளனரா. இன்று இரவு மதன் மித்ராவை சந்திப்பேன் என கூறினார்.

கைது செய்யப்பட்ட மேற்கு வங்க அமைச்சருக்கு நெஞ்சுவலி

கோல்கட்டா: சாரதா சிட் பண்டுமோசடி வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள மேற்கு வங்க அமைச்சர் மதன் மித்ராவுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அவர், தனக்கு நெஞ்சுவலி உள்ளதாக கூறியுள்ளார்.

மானபங்கம் செய்த நபர் விமான நிலையத்தில் கைது

புதுடில்லி: துபாயிலிருந்து வந்த பயணிக்கு பாலியல் பலாத்காரம் செய்த விமான ஊழியர், டில்லி விமான நிலையத்தில் கைது செய்தனர். இது குறித்து பெண் கூறுகையில், ஊழியர் குடிபோதையில் இருந்ததாகவும், என்னை காருக்குள் இழுக்க முயற்சி செய்யப்பட்டதாகவும் கூறினார்.

கர்நாடக எம்.எல்.ஏ., சஸ்பெண்ட்

பெங்களூரு: கர்நாடகா சட்டசபையில், மொபைல்போனில் புகைப்படம் பார்த்த, பா.ஜ.,- எம்.எல்.ஏ., பிரபு சவுஹான், "ஒரு நாள் தகுதி நீக்க' தண்டனைக்கு ஆளாகியுள்ளார். கர்நாடகா சட்டசபை வரலாற்றில், முதன் முறையாக, எம்.எல்.ஏ., சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இனிமேல், சட்டசபையில், மொபைல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, குற்றச்சாட்டுக்குள்ளான அமைச்சர் அம்பரிஷ், காங்.,- எம்.எல்.ஏ., மல்லிகார்ஜூனாவுக்கு எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.

மதன்மித்ரா கைது: பா.ஜ., கருத்து

கோல்கட்டா: சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கில், மம்தாவின் போக்குவரத்து அமைச்சரான மதன்மி்த்ராவை சி.பி.ஐ., கைது செய்துள்ளது. இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என திரிணமூல் காங்கிரஸ் கருத்து தெரிவித்துள்ள நிலையில், மதன்மித்ரா கைது மம்தாவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது என, பா.ஜ., கருத்து தெரிவித்துள்ளது. மேலும், சி.பி.ஐ., விசாரணையில் சிக்காமல் தப்பிவந்த மதன்மித்ரா தற்போது சிக்கி உள்ளார் எனவும் பா.ஜ., தரப்பில் கூறப்பட்டுள்ளது.

லஞ்சம்: கலால் உதவி ஆணையர் கைது

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 34 கடைகளில், மாவட்ட கலால் உதவி ஆணையர் பழனியப்பன் ஆய்வு நடத்தி, அவற்றில் குறைகளை கண்டுபிடித்தார். இது குறித்து நடவடிக்கை எடுக்காமல் இருக்க தலா ஒவ்வொரு கடையிலும் ஆயிரம் ரூபாய் பணம் கேட்டார். இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் கொடுத்த புகாரின் பேரில், லஞ்ச பணத்தை வாங்கும் போது பழனியப்பனும், அவரது உதவியாளர் சீனிவாசனும் கைது செய்யப்பட்டனர்.

ரூ.54 லட்சம் மோசடி: வக்கீல் தலைமறைவு

கோவை: கோவை, போத்தனூரைச் சேர்ந்தனர் சாந்தாமணி, 52. இவரின் பூர்வீக சொத்துக்களை மீட்டு தருவதாக கூறி, கோவை, ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்த வக்கீல் அருள்பிரகாஷ் 54 லட்சம் ரூபாயை பெற்றுக் கொண்டார். இந்நிலையில், அருள்பிரகாஷ் அப்பணத்தை மோசடி செய்தது தெரிய வந்தது. இதையடுத்து, கோவை போலீஸ் கமிஷனரிடம் சாந்தாமணி புகார் கொடுத்தார். இதையடுத்து, தலைமறைவாகி உள்ள வக்கீலை போலீசார் தேடி வருகின்றனர்.

கிரானைட் விவகாரம்: வழக்கு தாக்கல்

மேலூர்: கீழையூர், கீழவளவு உள்ளிட்ட கிராமங்களில், பட்டா இடங்களில் வைக்கப்பட்டுள்ள கிரானைட் கற்களை அரசுடமையாக்க கோரி மதுரை மாவட்ட கலெக்டர் சுப்ரமணியம், இன்று மேலூர் கோர்ட்டில் 10 வழக்குகளை பதிவு செய்துள்ளார். இவற்றுடன் இதுவரை இது சம்பந்தமாக 87 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன

திருமணத்திற்கு மறுத்த பெண் கொலை

உசிலம்பட்டி: உசிலம்பட்டி, கரக்கட்டான்பட்டி ரோட்டில் வசிப்பவர் சொக்கர். இவரது மகள் ரேவதி. இவரும், இவரது அத்தை மகன் ஈஸ்வரனும் கடந்த இரு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்நிலையில், திருமணம் செய்து கொள்ள ஈஸ்வரன் வலியுறுத்தினார். ஈஸ்வரனுக்கு வேலை இல்லாததால் ரேவதி திருமணத்திற்கு மறுத்து வந்தார். இதனால் ஆத்திரமடைந்த ஈஸ்வரன், வீட்டில் இருந்த ரேவதியை கத்தியால் குத்தி கொலை செய்தார். உசிலம்பட்டி போலீசார் அவரை கைது செய்து, விசாரிக்கின்றனர்.

சாரதா மோசடி: மம்தா அமைச்சர் கைது

கோல்கட்டா: சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கில் ஏராளமான திரிணாமூல் காங்கிரஸ் பிரமுகர்கள் சிக்கி வருகின்றனர். இந்நிலையில், மம்தா அமைச்சரவையில் உள்ள அமைச்சர் ஒருவரே தற்போது சிக்கி உள்ளார். போக்குவரத்து துறை அமைச்சரான மதன்மித்ராவிடம், சி.பி.ஐ., அதிகாரிகள் 5 மணி நேரம் துருவித் துருவி விசாரணை நடத்தினர். இதில், சாரதா சிட்பண்ட் மோசடியில் அவருக்கு பங்கு உள்ளது தெரிய வந்ததை தொடர்ந்து, சி,.பி.ஐ., அதிகாரிகள் மதன் மித்ராவை கைது செய்தனர். இதன் மூலம், மம்தாவிடம் சாரதா சிட்பண்ட் மோசடி விவகாரம் நெருங்கி வருவதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பாம்பன் பாலத்தை கடந்தன கப்பல்கள்

ராமேஸ்வரம்: குஜராத் பிகா துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட கே.ஜி. 5 என்ற இழுவை கப்பல், ஓடிசாவில் உள்ள பாரதீப் துறைமுகம் செல்லவும், கர்நாடகா, மங்களூர் துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட பாய்மர கப்பல், அந்தமான் போர்ட்பிளேயர் துறைமுகம் செல்லவும், நேற்று பாம்பன் கடற்கரைக்கு வந்தன. பாம்பன் ரயில் தூக்கு பாலத்தை கடந்து செல்ல அனுமதி கேட்டு துறைமுக அலுவலகத்தில், இரு கப்பல் கேப்டன்களும் கடிதம் கொடுத்தனர். அதை ஏற்று இன்று மதியம் ரயில் தூக்கு பாலம் திறந்தவுடன், இரு கப்பல்களும் கடந்து சென்றன.

நிலக்கரி சுரங்க மசோதா நிறைவேற்றம்

புதுடில்லி: நிலக்கரி சுரங்க மசோதா 2014, இன்று லோக்சபாவில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

டில்லி ஏர்போர்ட்டில் பெண்ணிடம் சில்மிஷம்

புதுடில்லி: டில்லி ஏர்போர்ட்டில் பெண்ணிடம் சில்மிஷம் செய்த ஒருவர் கைது செய்யப்பட்டார். துபாயில் இருந்து டில்லி வந்தபோது அவர் அத்துமீறி நடக்க முயற்சித்துள்ளார். போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

ஜன்தன் திட்டத்தில் 8.80 கோடி கணக்குகள்

புதுடில்லி: ஜன்தன் திட்டத்தில் 8.80 கோடி வங்கி கணக்குகள் துவங்கப்பட்டுள்ளன என, மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி கூறினார். மேலும் அவர் கூறுகையில், அடுத்த ஆண்டில் வளர்ச்சி விகிதம் 6 முதல் 6.5 சதவீதமாக இருக்கும். அதேவேளையில், 2015ம் ஆண்டை தொடர்ந்து வரும் ஆண்டுகளில் வளர்ச்சி விகிதம் 7 சதவீதமாக இருக்கும் என்று தெரிவித்தார்.

அருவருப்பான பேச்சு:எம்.எல், ஏ., சஸ்பெண்ட்

மும்பை: மகாராஷ்ட்ரா சட்டசபையின் குளிர்கால கூட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில், இக்கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சரும், தற்போதைய (தேசியவாத காங்.,) எம்.எல். ஏ.,வுமான ஜிதேந்திர அவ்ஹாத் அருவருப்பான வார்த்தைகளை அவையில் பேசியதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, அவரை குளிர்கால கூட்டத் தொடர் முழுவதில் இருந்தும் சஸ்பெண்ட் செய்து, சபாநாயகர் இன்று உத்தரவிட்டுள்ளார்.

வரிச்சூர் செல்வம் மீது என்.எஸ்.ஏ., பாய்ந்தது

மதுரை: பல்வேறு குற்றச் செயல்களில் சம்பந்தப்பட்டுள்ள, பிரபல ரவுடி வரிச்சூர் செல்வம் உள்ளிட்ட 5 பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளது. இதற்கான உத்தரவை மதுரை மாநகர காவல்துறை ஆணையர் சஞ்சய் மாத்தூர் இன்று பிறப்பித்தார். இதையடுத்து, அனைரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

விவசாயிகள் சாலை மறியல்

மேலூர்: மேலூர் அடுத்துள்ள வௌ்ளலூர் நாடு என்றழைக்கப்படும் 60 கிராமங்களைச் சேர்ந்த, ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள், கையில் கருகிய பயிர்களுடன் மதுரை-சென்னை நான்கு வழிச்சாலையில் மறியல் போராட்டம் செய்தனர். பல ஆயிரம் ஏக்கரில் நடப்பட்டுள்ள நெற்பயிர்களை காக்க, பெரியாறு அணையில் இருந்து நீர் திறந்துவிடப்பட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர். இந்த போராட்டம் காரணமாக, போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மேயர் மகனுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

சென்னை: சென்னையைச் சேர்ந்த ராகேஷ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், எனது மனைவி மற்றும் குழந்தையை, சென்னை மேயரின் மகனான வெற்றி துறைசாமி சட்டவிரோதமாக மறைத்து வைத்துள்ளார். அவர்களை கோர்ட்டில் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தமிழ் வாணன், மதிவாணன் ஆகியோர், இது சம்பந்தமாக வெற்றி துரைசாமிக்கு, வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். பின்னர் இந்த வழக்கு விசாரணையை வரும் 22-ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

எதிர்கட்சிகள் அமளி: சபாநாயகர் அதிருப்தி

புதுடில்லி: பா.ஜ., எம்,.பி., சாக்ஷி மகராஜ், கோட்சே பற்றி கூறிய கருத்துக்களை வாபஸ் பெற்றுக் கொள்வதாக அறிவித்தார். இருப்பினும், எதிர்கட்சிகள் தொடர்ந்து கூச்சலிட்டன. இதனால் அதிருப்தியடைந்த லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன், அவர் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துள்ள நிலையில், எதிர்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபடுவது சரியல்லை. சாக்ஷி மகராஜ் சாஷ்டாங்களாக நமஸ்காரம் செய்ய வேண்டும் என எதிர்கட்சிகள் நினைக்கின்றனவா?' என்று கோபமாக கேட்டார். இதையடுத்து, அவையில் அமைதி திரும்பியது.

வருத்தம் தெரிவித்தார் மகராஜ்

புதுடில்லி: பா.ஜ., எம்,.பி., சாக்ஷி மகராஜ், கோட்சே பற்றி கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து லோக்சபாவில் எதிர்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. இதைத் தொடர்ந்து தனது பேச்சை சாக்ஷி மகராஜ் வாபஸ் பெற்றுக் கொள்வதாக அறிவித்தார்.

மதுகோடா மீது குற்றப்பத்திரிகை

புதுடில்லி: நிலக்கரி சுரங்க ஊழல் குறித்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டள்ள ஜார்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மதுகோடா மீது, சி.பி.ஐ. இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

ராமர் கோவிலை தடுக்க முடியாது:மகராஜ்

புதுடில்லி: கோட்சேயும் தேசபக்தி கொண்டவர் தான் என்று கூறி, சர்ச்சையில் சிக்கியிருக்கும் பா.ஜ., எம்.பி,.யான சாக்ஷி மகராஜ் இன்று கூறுகையில், 'ராமர்கோவில் கட்டுவது குறித்த ராம்நாயக்கின் கருத்தை நான் ஆதரிக்கிறேன். பாபர் மசூதி இருக்கும் இடத்தில் ராமர் கோவில் கட்டுவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது,' என்று கூறி உள்ளார்.

சிக்கிம் முதல்வருக்கு மோடி பாராட்டு

புதுடில்லி: சிக்கிம் முதல்வருக்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திரமோடி, அதில், 'சிக்கிம் முதல்வராக கடந்த 20 ஆண்டுகளாக பதவி வகித்து வரும் பவன்குமார் சம்லிங்கிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். உண்மையில் இது வியக்க வைக்கும் ஒரு செயலாகும்,' என்று குறிப்பிட்டுள்ளார்.

கோட்சே பிரச்னை: பார்லி.,யில் அமளி

புதுடில்லி: பா.ஜ., எம்.பி,.யான சக்ஷி மகராஜ், கோட்சே குறித்து கூறிய கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ராஜ்யசபாவிலும், லோக்சபாவிலும் எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால், அவை நடவடிக்கைகளில் பாதிப்பு ஏற்பட்டது.

ராஜினாமாவா? துரைமுருகன் விளக்கம்

சென்னை: தி.மு.க.,வின் முன்னணி தலைவர்களில் ஒருவரும், துணை பொது செயலருமான துரைமுருகன், நேற்று மாலை அக்கட்சியில் இருந்து ராஜினாமா செய்துவிட்டதாக தகவல்கள் பரவின. இந்நிலையில், இது குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர், 'மரணம் மட்டுமே என்னை தி.மு.க.,வில் இருந்து பிரிக்கும். இதை யாரோ கிளப்பி விட்டுள்ளனர்,' என்று கூறினார்.

ராமர் கோவில் பேச்சு: சிவசேனா ஆதரவு

மும்பை: உத்தரபிரதேச கவர்னராக இருக்கும் ராம்நாயக், அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தார். அவரின் இந்த பேச்சு பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வருகிறது. சமாஜ்வாடி கட்சியின் அகர்வால் கூறுகையில், 'ராமர் கோவில் பிரச்னையில் இது அவரது தனிப்பட்ட கருத்து என்றாலும், அதை அவர் தவிர்த்திருக்கலாம்,' என்று தெரிவித்துள்ளார். ஐக்கிய ஜனதா தளத்தின் கே.சி.தியாகி கூறுகையில், 'அரசியலமைப்பு சட்டத்தை மீறிய ராம்நாயக்கை, ஜனாதிபதி கவர்னர் பதவியில் இருந்து அகற்ற வேண்டும்,' என்று கோரி உள்ளார். பா.ஜ.,வின் எஸ்.என்.., சிங்,,'ராம்நாயக் ராமரின் பக்தராக இருப்பது தவறா? ராமர் கோவிலை கட்ட வேண்டும் என்று அவர் கூறுவதில் என்ன தவறு இருக்கிறது' என்று கேட்டுள்ளார். இந்நிலையில், ராமர் கோவிலை கட்ட வேண்டும் என்ற ராம்நாயக்கின் கோரிக்கையில் எந்த முரண்பாடும் இல்லை,' எனறு சிவசேனா கூறி உள்ளது.

மதமாற்றம்: அமித்ஷா கருத்து

புதுடில்லி: மதமாற்றம் என்பது எந்த வகையில் வந்தாலும் அதை ஏற்றுக் கொள்ள முடியாது. மதமாற்றம் குறித்து பிரச்னையை கிளப்பி வரும் எதிர்கட்சிகள், இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண ஒரு சட்டத்தை உருவாக்க வேண்டும். ஆனால், எந்த கட்சியும் அதற்கு முன்வருவதில்லை,' என்றார். மேலும், விவகாரமாக விஷயங்களில், பா.ஜ., எம்,பி.,க்கள் பேசும் போது மிகவும் எச்சரிக்கையாக, கவனமாக பேச வேண்டும் என்று அமித்ஷா கூறி உள்ளார்.

வைகோ கண்டன பிரசாரம் துவக்கம்

தஞ்சாவூர்: மேகதாது என்ற இடத்தில் கர்நாடக அரசு தடுப்பணை கட்டுவதை கண்டித்து, ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ கண்டன பிரசாரத்தை நடத்துகிறார். இன்று, தஞ்சையில் தனது பிரசாரத்தை அவர் துவக்கி உள்ளார்.

அமைச்சர் ராஜினாமா செய்ய கோரிக்கை

திருவனந்தபுரம்: பார் மோசடி வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படும் நிதி அமைச்சர் மணி, தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரி, கேரள சட்டசபையில், மார்க்சிஸ்ட் தலைமையிலான எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இன்று காலை அவை துவங்கியவுடன், கைகளில் பதாகைகளை ஏந்தி, எதிர்கட்சி உறுப்பினர்கள் தங்கள் கோரிக்கைகளை எழுப்பினர். இந்நிலையில், ராஜினாமா கோரிக்கையை மணி ஏற்க மறுத்துள்ளார். தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.

அமைச்சர்களின் சுற்றுலாவிற்கு ரூ.12 லட்சம்

புதுடில்லி : பிரேசிலில் நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்களை பார்ப்பதற்காக கோவா அமைச்சர்களும், எம்.எல்.ஏ.,க்கள் சிலரும் சென்றனர். இவர்களின் இந்த சுற்றுலா பயணத்திற்காக தலா ரூ.12 லட்சம் வீதம் செலவு செய்யப்பட்டுள்ளது.

நைஜீரியா குண்டுவெடிப்பு:40 பேர் பலி

ஜோஸ் : நைஜீரியாவின் ஜோஸ் நகரில் பஸ் நிலையம் அருகே நடைபெற்ற இரட்டை குண்டுவெடிப்பில் 40 பேர் பலியாகி உள்ளனர். இதே பகுதியில் கடந்த மே மாதம் நடைபெற்ற குண்டுவெடிப்பில் 118 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

பீகாரில் ரயில் விபத்து

பாட்னா : பீகாரின் பரக் பகுதியில் இரண்டு பயணிகள் ரயில்கள் ஒன்றுடன் ஒன்று பாக்கவாட்டில் இடித்து விபத்துக்குள்ளாகின. இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வங்கிகள் மீது எஸ்பிஐ தலைவர் குற்றச்சாட்டு

புதுடில்லி : இந்தியாவில் உள்ள வங்கிகளில் குறிப்பாக பொதுப்பணித்துறை வங்கிகளில் முறையாக சம்பளம் வழங்கப்படுவதில் என எஸ்.பி.ஐ., வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சாரியா குற்றம்சாட்டி உள்ளார். மேலும், மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் வங்கி ஊழியர்களுக்கு குறைவான சம்பளம் வழங்கப்படுவதாலேயே திறமையானவர்களை கவர முடியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

காபூலில் தற்கொலைப்படை தாக்குதல்

காபூல் : காபூலில் தாலிபன்கள் நடத்திய இரண்டு தற்கொலைப்படை தாக்குதல்களில் 7 பேர் பலியாகி உள்ளனர். அப்பகுதியில் இயங்கும் பிரெஞ்ச் நிதியுதவி பெற்று இயங்கும் பள்ளியை குறிவைத்து இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் காயமடைந்த மேலும் 7 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாறன் சகோதரர்கள் சொத்தை முடக்க நடவடிக்கை?

புதுடில்லி : ஏர்செல்-மாக்சிஸ் ஒப்பந்த விவகாரம் தொடர்பான வழக்கில் ரூ.550 கோடி பண மோசடி நடைபெற்றுள்ளதாகவும், அதில் மாறன் சகோதரர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும் அமலாக்க பிரிவு விசாரணையில் தெரிய வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இவ்வழக்கில் மாறன் சகோதரர்களுக்கு ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதால், அவர்களுக்கு சொந்தமான ரூ.550 கோடி சொத்தை முடக்கவும், அவர்கள் மீது பணமோசடி வழக்கு பதிவு செய்யவும் அமலாக்கப்பிரிவு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

ராமர் கோயில்:உ.பி., அரசு கோரிக்கை

அயோத்யா : பட்டமளிப்பு விழா ஒன்றில் பேசிய உத்திர பிரதேச கவர்னர் ராம் நாயக், அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்பது கோடான கோடி இந்தியர்களின் விருப்பம் எனவும், அதற்கு பிரதமர் மோடி தலைமையிலான அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார். இதே போன்ற கோரிக்கை கருத்தை கடந்த மாதமும் ராம் நாயக் முன்வைத்து பேசியது சர்ச்சையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.

ஐ.நா.,விற்கு மோடி நன்றி

புதுடில்லி : தனது கோரிக்கையை ஏற்று ஜூன் 21ம் தேதியை சர்வதேச யோகா தினமாக அறிவித்ததற்கு ஐ.நா.,விற்கு பிரதமர் மோடி நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், எனது மகிழ்ச்சியை சொல்ல வார்த்தைகளே இல்லை. ஐ.நா.,வின் இந்த அறிவிப்பை முழுமனதுடன் வரவேற்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

ரஜினிக்கு மோடி பிறந்தநாள் வாழ்த்து

புதுடில்லி : இன்று தனது 64 வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் ரஜினிகாந்திற்கு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர், ரஜினிக்கு எனது பிறந்தநாள் வாழ்த்து. அவர் நலமுடன் நீண்டநாள் வாழ வாழ்த்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

தேசியகீத விவகாரம்: அரசுக்கு ஐகோர்ட் கேள்வி

புதுடில்லி : பள்ளி பாட புத்தகங்களில் உள்ள தேசிய கீதத்தில் சிந்து என்ற வார்த்தைக்கு பதிலாக சிந் என்ற வார்த்தையை பயன்படுத்த மத்திய அரசு அனுப்பிய சுற்றறிக்கை தொடர்பாக தொடரப்பட்ட பொதுநல வழக்கில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் எனவும், சிந் என்ற வார்த்தை சரியானதா எனவும் மகாராஷ்டிர ஐகோர்ட் மத்திய அரசிற்கு கேள்வி எழுப்பி உள்ளது. இந்த வழக்கில் நேற்று மகாராஷ்டிர அரசு அளித்த பதிலில், தேசிய கீதத்தில் சிந் என்ற வார்த்தையை பயன்படுத்துமாறு 1953ம் ஆண்டு மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியதாக கூறியது. இந்த வழக்கில் ஜனவரி மாதத்திற்குள் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது

கேரளாவில் பெண்கள் மட்டும் டாக்ஸி

திருவனந்தபுரம் : சமீபத்தில் டில்லியில் டாக்ஸி டிரைவரால் பெண் ஒருவர் பாலியல் பாலத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்காக, பெண்களுக்காக பெண்களால் நடத்தப்படும் டாக்ஸி சேவையை கேரள அரசு கொண்டு வந்துள்ளது. இதற்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

ஜாதி வாரி கணக்கெடுப்பு நான்கு மாதங்களில் நிறைவு

புதுடில்லி: மத்திய அரசு நடத்தி வரும் ஜாதி வாரி கணக்கெடுப்பு நான்கு மாதங்களில் நிறைவு பெறும் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். இது குறித்து மத்திய ஊரக வளர்ச்சத்துறை அமைச்சர் வீரேந்திரசிங் எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது: கடந்த 2011-ல் துவங்கப்பட்ட இத்திட்டத்தின் படி தற்போது வரையில் 412 மாவட்டங்களில் வரைவுப்பட்டியல் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டு்ள்ளது. மேலும் 91 மாவட்டங்களில் இறுதி பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக இதுவரையில் 3 ஆயிரத்து 543 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

பிரதமருக்கு எதிராக கறுப்பு கொடி : வைகோ

சென்னை:பிரதமர் நரேந்திரமோடியை எதிர்த்து ம.தி.மு.க., சார்பி்ல் கறுப்பு கொடி ஆர்பாட்டம் நடைபெறும் என வைகோ தெரிவித்துள்ளார் . இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: தமிழினத்திற்கு எதிராக பிரதமர் நரேந்திரமோடி செயல்பட்டு வருகிறார். எனவே மோடி எப்பொழுதெல்லாம் தமிழகத்திற்கு வருகிறாரோ அப்போதெல்லாம் அவருக்கு எதிராக கறுப்பு கொடி ஆர்பாட்டம் நடத்தப்படும் என தெரிவி்த்தார்.

4 ஆயிரத்து 458 மெட்ரிக்டன் யுரேனியம் இறக்குமதி

புதுடில்லி: கடந்த 2008-ம் ஆண்டு முதல் நாட்டின் அணுமின்ச க்தி உலைகள் எரிபொருளாக சுமார் 4 ஆயிரத்து 458 மெட்ரிக்டன் யுரேனியம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய எரிசக்தி துறை இணை அமைச்சர் ஜிதேந்திராசிங் ராஜ்யசபாவில் கூறியிருப்பதாவது: கடந்த 2008-ம் ஆண்டில் இருந்துகஜகஸ்தான் நாட்டில் இருந்து 2100 மெட்ரிக் டன் யுரேனியமும், ரஷயாவிடமிருந்து 2ஆயிரத்து 58 மெட்ரிக் டன் மற்றும் பிரான்ஸ் நாட்டிடமிருந்து 2008-09 .2009-10-ம் ஆண்டுகள் வரையில் சுமார் 300 மெட்ரி்க் டன் யுரேனியமும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. என தெரிவித்துள்ளார்.

ஜுன் 21- சர்வதேச யோகா தினம் : மோடிக்கு கிடைத்த வெற்றி

ஐ.நா.: பிரதமர் மோடி வலியுறுத்தியதையடுத்து ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐ.நா. அறிவித்து அதற்கான தீர்மானம் பொதுச்சபையில் நிறைவேற்றியுள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்றிருந்தார். பின்னர் ஐ.நா.பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அப்போது , மனதையும், உடலையும் ஒருமுகப்படுத்தி மனக்கட்டுப்பாட்டை உருவாக்கும் என யோகா கலையின் முக்கியத்தும் குறித்து பேசினார். இதற்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் அளித்திட ஐ.நா. நடவடிக்கை எடுக்க வேணடும் என வலியுறுத்தினார்.

இந்நிலையில் ஐ.நா. பொதுச்சபைகூட்டம் நடந்தது. பொதுச்சபையில் 193 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இதில் உலக சுகாதாரம் மற்றும் வெளியுறவு கொள்கையின் கீழ் யோகாவின் முக்கியத்துவம் குறித்து விவாதிக்கப்பட்டு அதற்கு சர்வதேச அங்கீகாரம் வழங்கிடும் முறையில் வரைவு திட்டம் தயாரிக்கப்பட்டது.

இந்த வரைவ திட்டத்தினை, ஐ.நா.விற்கான இந்திய தூதர் அசோக் முகர்ஜி ,பொதுச் சபையில் அறிமுகப்படுத்தினார். பின்னர் விவாதிக்கப்பட்டு ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இதற்கு 175 நாடுகள் ஆதரவளித்தன.இதையடுத்து ஒவ்வொரு ஆண்டும் ஜுன் மாதம் 21-ம் தேதியை சர்வதேச யோகா ஆண்டாக ஐ.நா. கொண்டாடுகிறது. இதற்கான தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது ஐ.நா. ஐ.நா. பொதுச்சபை வரலாற்றில் இது போன்று 175 நாடுகள் ஆதரவாக ஒட்டளித்தது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது.இதன் மூலம் பிரதமரின் கோரிக்கையை ஐ.நா. நிறைவேற்றியுள்ளது மட்டுமல்லாது. யோகாவிற்கும் சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 5 பேர் கைது

சென்னை: தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மதுரை வரிச்சூர் செல்வம், செந்தில், பார்த்திபன், சுப்பிரமணி ரூபேஸ்தீன் பாவா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பாண்டித்துரை என்பவர் மீது குண்டர் தடுப்புப சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள காவல் ஆணயைர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.மாநில பாதுகாப்பிற்கு ஊறு விளைவிக்கும் வகையி்ல் செயல்பட்டதால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக காவல் ஆணையர் நடவடிக்கை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.தற்போது மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவர்கள் அனைவரும் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பக்கம் 17 - மொத்தம் 36 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.