குடியரசு தின விழா துளிகள்
1. வரலாற்றில் முதல் முறையாக அணிவகுப்பில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. முப்படை உள்ளிட்ட பல்வேறு இதர துறைகளில் பணியாற்றும் பெண்கள் தனி அணிகளாக வீரநடை போட்டு பங்கேற்றது பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது.
2. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி, ஜக்கி வாசுதேவ், கிரண்பேடி உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் விழாவில் பங்கேற்றனர்.