குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, சித்திரை(மேழம்) 1 ம் திகதி புதன் கிழமை .

தாயக செய்திகள்

நான் தமிழ், இந்து அல்ல!

23.10.2019 நான் சில மாதங்களுக்கு முன் ஒரு பெண்ணை தாய்லாந்தில் சந்தித்தேன். அது ஒரு Starbucks காபி நிலையம். கருப்பாய் இருந்தாள். ஆனால் தோற்றத்தில் இந்தியப் பெண் மாதிரி இருந்தாள். சினேகமாய்ச் சிரித்தேன். அவளும் பதிலுக்கு சிரித்தாள்.

மேலும் வாசிக்க...
 

தேசியக்கூட்டமைப்பு அன்றும் இன்றும்

'எய்தவர்களுடன் நல்லிணக்கம் அம்புகளுடன் பகைமுரண்' கூட்டமைப்பின் ராயதந்திரமோ? குமரன்-இன்றைய குமரிநாட்டிலிருந்து முகநுாலிற்காக...17.10.கி.ஆ2013-03.10.தி.ஆ2044-கார்த்திகேயன்.மகிந்த சம்பந்தர் மாவை டக்ளசு கூட்டு ஏனைய த.தே.கூ ஓர் அணியில். பலசெய்திகள் கீழே......கட்டுரையை வாசியுங்கள் தமது சுயநலங்களுக்காக கட்சியை உடைப்பது தமது நிலைப்பாட்டை உயர்த்துவதில் உருவானதே தே.கூ.அமைப்பு.

மேலும் வாசிக்க...
 

சங்க கால ஓடுகள் கண்டெடுக்கப்பட்ட குளம் ( உ.பாண்டி )

`புதைந்து கிடக்கும் சங்க கால நகரம்!' - ராமநாதபுரத்தில் இருந்து ஓர் அகழாய்வு கோரிக்கை சன்னாப் மேடு என்னுமிடத்தில் செங்கலால் கட்டப்பட்ட ஒரு கட்டடத்தின் அடிப்பக்கம் மட்டும் உள்ளது. இதில் உள்ள உடைந்த ஒரு செங்கலின் அகலம் 15 செ.மீ உயரம் 6 செ.மீ ஆகும். இது அழிந்துபோன ஒரு கோயிலாக இருக்கலாம்.

16.10.2019 இராமநாதபுரம் அருகே சோழந்தூரில் வைகையின் கிளை ஆறான நாயாற்றின் கரையில் சிதறிக் கிடக்கும் கறுப்பு சிவப்பு பானை ஓடுகள் மூலம் புதைந்த நிலையில் ஒரு சங்ககால நகரம் இருந்ததற்கான தடயங்கள் கிடைத்துள்ளன. இங்கு அகழாய்வு செய்ய அரசு முன்வர வேண்டும் எனக் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க...
 

சீன மொழியில் பேசி அதிபர் யி.யி யின்பிங்கை மிரளவைத்த தமிழன் இவர் தான்.

14.10.2019  இதுவெல்லாம் பெரியநிலையில்லை! சீன அதிபர் மற்றும் இந்தியப் பிரதமர் மோடிக்கு இடையே மொழிபெயர்ப்பு செய்தவர் ஒரு தமிழர் என்பதே நம்மில் பலருக்கு தெரிய வாய்ப்பில்லை, ஆனால் அவர் கோவை சேர்ந்தவர் என்பதும், மற்றும் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் மாணவர் ரவீந்திரன் என்பதும் தெரியவந்துள் ளது. இந்திய பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் யீ யின்பிங் நேற்று மாமல்லபுரத்தில் சந்தித்துக் கொண்டனர்.

 

மேலும் வாசிக்க...
 

சங்கரலிங்கனார் எழுதிய இறுதி மடல் காமராயரை புகழும் நாங்கள் இதனையும் காண்போம்.

12.0.2019 சங்கரலிங்கனார் சென்னை மாகாணதிற்கு “தமிழ்நாடு” என்று பெயர் சூட்ட வலியுறுத்தி 1956 சூலை 27ஆம் நாள் சாகும் வரை உண்ணாநிலைப் போரைத் தொடங்கினார். 64-வது நாளின் போது கம்யூனிசுட் கட்சி ஏடான ” சனசக்தி” துணையாசிரியர் ஐ.மாயாண்டி பாரதி அவர்களுக்கு வேதனையோடு முதல் கடிதம் எழுதினார். அது பின்வருமாறு .

மேலும் வாசிக்க...
 

சனாதிபதித் தேர்தல் தமிழ் மக்களின் தந்திரோபாயம் எது ? சிந்தித்து திட்டமிடவல்ல கட்சி எது? தலைவர் யார்?

10.10.2019அரசியல் கட்டுரை- 2013இல் இலங்கைத் தீவிலிருந்து மூன்று இனங்களையும் சேர்ந்த மூவரை தெரிந்தெடுத்து அமெரிக்க உள்துறை அமைச்சு தந்திரோபாய கற்கைகள் தொடர்பாக ஒரு வதிவிடப் பயிற்சியை வழங்கியது. இப்பயிற்சியில் கலந்து கொண்ட ஒரிளம் தமிழ்ப் புலமையாளர் தன் அனுபவத்தை பின்வருமாறு சொன்னார்……

மேலும் வாசிக்க...
 

தமிழோடு கிரந்த எழுத்துக்கள் கலந்தது எப்படி? ஐ ய (ஜ) என்னும் தமிழர்கள் 29.10. 2016 இடுகை 07.10.201 0

07.10.2019 தமிழ் எழுத்துக்கள் 247 என்றுதான் பள்ளியிலே படிக்கிறோம். ஆனாலும், எழுதும்போது வடமொழி எழுத்துக்களான ஸ, ஷ, ஜ, ஹ, க்ஷ, ஸ்ரீ எனப்படும் கிரந்த எழுத்துக்களையும் சேர்த்தே எழுதவேண்டிய சூழலுக்கு ஆளாகிறோம். இந்த வடமொழி கிரந்த எழுத்துக்கள் எந்தக் காலகட்டத்தில், எப்படி தமிழ் எழுத்துகளுக்குள் நுழைந்தன? என்பது பற்றி தமிழ் மொழி ஆராய்ச்சியாளரும், தமிழ்ப் பண்பாட்டு தொல்லியல் ஆய்வாளருமான முனைவர் மு.இளங்கோவனிடம் பேசினோம். அவர் தந்த கருத்தினை இங்கு தருகிறோம்.

மேலும் வாசிக்க...
 

உலகம் தமிழனின் தொன்மையை ஒட்டு மொத்தமாக ஒப்புக்கொள்ளும் காலம் நெருங்கி வருகிறது கீழடி

09.10.209-ஒருவாறு தமிழி எனும் தமிழ் அசோகர்பிரா ம்மியில் இருந்து புத்தமத சமணமத துறவிகள் மூலம் தமிழகத்தில் பரவியது என்ற கூற்று தவறு என கீழடி நான்காம்கட்ட ஆய்வின் அறிக்கை மூலம் உறுதியாக நிறுவப்பட்டுவிட்டது .புத்தரின் பிறப்பு ஆனகி.மு 483க்கும் முன்பே தமிழ் நாட்டில் சமானியர்களால் தமிழி பேசப்பட்டு இருந்தது என்பது உறுதி ஆகிவிட்டது .கரிம சோதனைகள் மூலம் கிழடியில் கிடைத்த பானை ஓட்டில் வரையப்பட்டிருந்த பல்வேறு வகையான எழுத்து ஒழுங்கில் தமிழி பலராலும் 2600 ஆண்டுகளுக்கு முன்பே வழக்கில் இருந்தது உறுதி ஆகிவிட்டது .

மேலும் வாசிக்க...
 

அழிந்த மொழியான சமசுகிருதம் தமிழில் சவாரி செய்து தமிழை அழிப்பதா தமிழர்களே எண்ணுங்கள்!

02.10.2019 சமற்கிருதம் தமிழின் மீது ஏறி குதிரை ஓட்டுவதின் வாயிலாகத் தமிழைச் சிதைக்கப் பயன்படுத்தப்படும் மொழியாகும். பேச்சு வழக்கற்ற ஒரு மொழியாகவும் இறந்து பட்ட மொழியாகவும் விளங்கும் சமற்கிருதத்தைப் பயன்படுத்தி தமிழை அழிக்க முனைகிறார்கள் என்றால் அதனை என் போன்ற தமிழுணர்வாளர்கள் எப்படி வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்க முடியும்?

மேலும் வாசிக்க...
 

நம்மைத் தோண்டி எடுத்துத் திட்டக்கூட எந்தத் தலைமுறையும் மிஞ்சாது. சுபதராதேவி கீழடி அகழ்வாராய்ச்சி:

30.09.2019 2600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நம் முன்னோர்கள் வாழ்ந்த இடத்தை ஆய்வு செய்ததில் எங்கும் கடவுள் சிலையோ கோயிலோ வழிபாட்டுத் தலமோ இதுவரை கிடைக்கவில்லை! நல்லது.வேறென்ன கிடைத்திருக்கிறது? அது என்ன சொல்கிறது?

மேலும் வாசிக்க...
 
பக்கம் 8 - மொத்தம் 1117 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.