குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 28 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

தாயக செய்திகள்

2005 இல் எடுத்த முடிவே இன்றைய தமிழரின் மோசமான நிலைக்கு காரணம் என்கிறார் இரா. சம்பந்தன்

இலங்கையில் 2005 ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ் மக்களின் சார்பில் விடுதலைப்புலிகளால் எடுக்கப்பட்ட முடிவுதான் இன்று தமிழ் மக்கள் எதிர்கொள்கின்ற மோசமான நிலைமைகளுக்கும், இன்றைய அழிவுகளுக்கும் காரணம் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க...
 

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக கூட்டமைப்பு சரியான முடிவை உரிய நேரத்தில் அறிவிக்கும் தமிழ் மக்களைக் குழப்பம் அடைய வேண்டாம் என்கிறார் சம்பந்தன்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உரிய நேரத்தில் சரியான முடிவை எடுக்கும். அந்த முடிவு தமிழ் மக்களின் நலன் கருதியதாகவே இருக்கும். அதற்கு முரணாக இருக்காது.எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உரிய நேரத்தில் சரியான முடிவை எடுக்கும். அந்த முடிவு தமிழ் மக்களின் நலன் கருதியதாகவே இருக்கும். அதற்கு முரணாக இருக்காது. எனவே, இந்த விடயம் குறித்துத் தமிழ் மக்கள் வீணாகக் குழப்பமடையவோ, சஞ்சலப் படவோ தேவையில்லை.

மேலும் வாசிக்க...
 

இந்தோனேஷியாவில் கப்பலில் தங்கியிருந்த தமிழ் அகதி ஒருவர் உயிரிழப்பு

ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முற்படுகையில் பிடிபட்டு இந்தோனேசியாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள படகில் இருந்த இலங்கைத் தமிழர் ஒருவர் இறந்துள்ளார்.

இந்தோனேஷியாவின் மராக் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகதிகளை ஏற்றிய படகில் தங்கியிருந்த கொழும்பை சேர்ந்த ஜேகப் என்ற 29 வயது நபர் வியாழன் இரவு 11 மணி அளவில் இறந்துள்ளார்.

மேலும் வாசிக்க...
 

குமரிகண்டம் பற்றி அமெரிக்க தொல்லியல் ஆய்வுக்கழகம் ஒரு வரைபடத்தையே உருவாக்கியது.

குமரிக்கண்டம்
இதுவரை நடந்திருக்கிற உலகத் தமிழ் மாநாடு எதிலுமே தமிழ்மான உரிமைப் பண்பாடு என்பதை எந்த ஈர வெங்காயமும் திட்டவட்டமாக தெளிவுபடுத்தவில்லை. அப்படி எந்த அக்கறையும் இல்லை. மதுரை மாநாட்டில் பாவலரேறு அய்யாவுக்குப் பதிலாக அனுமதிக்கப்பட்ட திரு.காளிமுத்து அவர்களின் உரை மட்டுமே சிறிது ஆறுதலாக இருந்தது.

மேலும் வாசிக்க...
 

இறுதிப் போரில் சரணடைந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர்கள் கொல்லப்பட்டமை தொடர்பில் ஐ.நா விளக்கம் கோரியுள்ளது

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப் போரின் போது சரணடைய முனைந்த அந்த அமைப்பின் தலைவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பில் எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து தம்மிடம் ஐக்கிய நாடுகள் அமைப்பு விளக்கம் கோரியுள்ளது என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

சட்டவிரோதமான கொலைகள் குறித்த ஐக்கிய நாடுகள் அமைப்பின் சிறப்பு பிரதிநிதி பிலிப் ஆல்ஸ்டன் முன்வைத்துள்ள வேண்டுகோள் குறித்து தாங்கள் ஆராய்ந்து வருவதாகக் கூறும் இலங்கை ஜனாதிபதியின் அலுவலகம், அது தொடர்பில் தேவைப்படும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க...
 

தமிழர் தாயகக் கோட்பாட்டை மஹிந்த ஏற்றுக்கொள்கிறாரா?

ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்குவதற்காக ஈ.பி.டி. பியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா.. முன்வைத்துள்ள 10 நிபந்தனைகளை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுவிட்டார் என ஈ.பி.டி.பி. சொல்கிறது. அப்படியாயின் அந்தக் கோரிக்கைகளில் ஒன்றான தமிழர் தாயகக் கோட்பாட்டை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்றுக்கொள்கிறாரா?  இவ்வாறு கேள்வி எழுப்பி உள்ளது ஜே.வி.பி.

மேலும் வாசிக்க...
 

2009 இல் இலங்கையை வழிநடத்தியது யார்?

28.12.2009 இல் பிரசுரிக்கபட்டது.
2009 இல் இலங்கையின் நிர்வாகியார்? இராணுவத்தீர்வு என்று நின்றது யார்?
சார்க்மாநாட்டை இலங்கையில் நடத்தி..    இதற்கு காவல்காக்க கப்பலில் வந்து நின்றது யார்?  இவர்கள் திரும்பிச்சென்றார்களா?   போரின்போது  எத்தனை பேர் நின்றார்கள்? இதிலிருந்து இந்த ஆண்டு (2009) யார் இலங்கையை  நிர்வகித்தது என்பதுபுரியும்.

மேலும் வாசிக்க...
 

இலங்கையில் இணக்கப்பாடு ஏற்படுவது மிகவும் முக்கியம் என்று பிரிட்டன் கூறுகிறது

இலங்கையில் அனைத்து சமூகங்களுக்கும் இடையே ஒரு உண்மையான இணக்கப்பாடு ஏற்படுவது மிகவும் முக்கியம் என்றும், அங்கு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் இடம் பெயர்ந்த மக்கள் அனைவரும் வாக்களிக்க வழி செய்யப்பட வேண்டும் என்றும் பிரிட்டிஷ் வெளியுறவுச் செயலர் டேவிட் மிலிபாண்ட் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க...
 

இலங்கை மீதான மனித உரிமைமீறல் விசாரணைக்கு உதவத் தயார் : அமெரிக்கா

ஐக்கிய நாடுகள் சபை மேற்கொள்ளும் இலங்கையின் மனித உரிமை மீறல்களுக்கான விசாரணைகளுக்கு தாம் ஒத்துழைக்கத் தயார் என அமெரிக்கா அறிவித்துள்ளது.

அதேவேளை, இலங்கை அரசாங்கமும், மனித உரிமை மீறல்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது. அத்துடன் தமிழர் பிரச்சினைக்கு உரிய தீர்வு காணப்படவேண்டும் என்றும் அமெரிக்க வேண்டுகோள் விடுத்துள்ளது.

மேலும் வாசிக்க...
 

இலங்கையில் தமிழர் சுட்டுக் கொல்லப்படும் வீடியோ உண்மை -பிரிட்டிஷ் பத்திரிக்கை

இலங்கையில் விடுதலைப் புலிகளுடனான போரின் இறுதிக் காலப்பகுதியில், இலங்கை இராணுவத்தினர் கைதிகளை சுட்டுக் கொல்லுவதாக குற்றஞ்சாட்டி அது தொடர்பில் வெளியான வீடியோப் படங்கள் ஆதாரமானவையே என்று பிரிட்டிஷ் நாளிதழ் ஒன்று கூறுகிறது.

ஜனவரியில் எடுக்கப்பட்டதாக கூறப்படும் இந்த வீடியோ ஐரோப்பாவை தளமாகக் கொண்டு இயங்கும் ஒரு மனித உரிமை அமைப்பு வெளியிட்டிருந்தது.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 1146 - மொத்தம் 1147 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.