விடுதலைப் புலிகளின் தலைவராக இருந்த வேலுப்பிள்ளை பிரபாகரனின் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் புதன்கிழமை இரவு காலமானதாக இலங்கை இராணுவத்தின் பேச்சாளரான பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.
உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த 86 வயதான அவரது மரணம் இயற்கையாக ஏற்பட்டது என்றும் இராணுவப் பேச்சாளர் தெரிவிக்கிறார்.