குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2050

இன்று 2019, கார்த்திகை(நளி) 20 ம் திகதி புதன் கிழமை .

தாயக செய்திகள்

சனாதிபதித்தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது?

05.01.2010 இல் பிரசுரிக்கபட்டது.
"தை பிறந்தால் வழிபிறக்கும்." இதனடிப்படையில் போரில் பாதிக்கப்பட்ட மக்கள் சற்று நிம்மதிக் காற்றை சுவாசிக்க முன்னர் இத்தேர்தல் வந்து குழப்புகின்றது. தமிழராகிய நாம் யாரை ஆதரிப்பது என்பதே அந்தக்குழப்பம். அதற்கான மேல்வாரியான ஒரு ஆய்வாகவே இது அமைகின்றது. காரணம் நுணுக்கமாக ஆய்வுசெய்தால் தமிழரின் அரசியல் நகர்வு எதிரிக்கு வாய்ப்பாகிவிடும் எனவே தமிழராகிய நாம் ஆழமாக அடுத்தகட்ட நகர்வுகளை கருத்தின் மூலம் அறிந்து கொள்ள வேண்டும்.

மேலும் வாசிக்க...
 

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முடிவும் இன்றைய நிலையும்.

இக்கட்சியின் முடிவு காலத்தின் தேவைகருதியதாக அமைந்துள்ளது. அதாவது தனித்தோ அல்லது மகிந்தாவிற்கோ களத்தில் நிற்பதில் எதுவிதபயனுமில்லை என்பது கட்சியின் முடிவாகும். இதன்முடிவில் தமிழ் மக்களின் பங்களிப்பு மிகஅவசியமாகும். இக்கட்சியிடம் அரசியல் நகர்வை எமது தலைவர் முற்கூட்டியே ஒப்படைத்தமை தீர்க்கதர்சன சிந்தனையில் இதுவும் ஒன்று என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. எனவே தான் கட்சியின் முடிவை தமிழ் மக்களாகிய நாம் ஆதரிக்கவேண்டிய காலமாகும். இல்லையேன் நாம் உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் எங்கள் இலட்சியத்தை அடையமுடியாமல் போய்விடும். கூட்டமைப்புக்குள் குழப்பத்தை ஏற்படுத்துபவர்களிற்கு அடுத்துவரும் தேர்தலில் நாம் அவர்களிற்கான தண்டனையை வழங்க முடியும் எனவே அதுபற்றி இப்போது நாம் கவலைப்படாமலும், விமர்சனம் செய்யாமலும் இருப்பதே காலத்தின் கட்டாயமாகும்.

மேலும் வாசிக்க...
 

அமைச்சர் சந்திரசேகரன் அவர்களுக்கு எமது அஞ்சலிகள்..

மலையகத்தின் தனியுரிமை அரசியலை மாற்றியவர். மலையக இளைஞர் இடையே எழுச்சியை ஏற்படுத்தியவர்.
2006..2007 களில் தமிழ் இளைஞர்கள் மலேசியாவில் பல துன்பங்களை அனுபவித்தவேளையில் உலகதமிழ்ப்பண்பாட்டு இயக்க மாநாட்டிற்கு சென்றபோது அதை நேரடியாக உணர்ந்து மலேசிய அரசு மட்டத்தில் பேச்சுக்களை நடத்தினர்.2005 இல் வடக்கு கிழக்கு மக்கள் ரணில் விக்கிரமசிங்கவிற்கு வாக்களிக்கும்படி பல முறை கோரினார் .. கிளிநொச்சிக்கும் சென்றிருந்தார். தமது கொழும்பு செயலாளர் விக்கிரமசிங்க மூலம் பல தமிழ் இளைஞர்களுக்கு உதவிகள் புரிந்தார்.இதனால் அக்காலகட்டத்தி்ல் பல நெருக்கடிகளை எதிர் கொண்டார்.. அவரின் எளிமையான அரசியல் நடவடிக்கைகளை எண்ணி குமரிநாடு இணையத்தளம் தமது அஞ்சலிகளை தெரிவித்துக்கொள்கின்றது..
குமரிநாடு குழுமம் www.kumarinadu.net 

 

மலையக மக்கள் முன்னணியின் தலைவியாக திருமதி சந்திரசேகரன் நியமனம்

மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் சமூக அபிவிருத்தி மற்றும் அநீதியொழிப்பு அமைச்சருமான பெரியசாமி சந்திரசேகரனின் மறைவைத்தொடர்ந்து மலையக மக்கள் முன்னணியின் தலைவியாக திருமதி சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மலையக மக்கள் முன்னணியின் உயர்மட்ட அரசியல் குழு இன்று கொழும்பில் கூடி ஏகமனதாக இந்தத்தீர்மானத்தினை எடுத்துள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க...
 

இடம்பெயர்ந்த சிறார்களை பராமரிப்பதற்கான ஏற்பாடு

பராமரிப்புத் தேவைப்படும் சிறார்கள்இலங்கையின் வடக்கே இடம்பெயர்ந்தவர்களுக்கான வவுனியா மனிக்பாம் இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள குடும்பங்களில் உள்ள வலது குறைந்த மற்றும் பராமரிப்பு தேவைப்படுகின்ற குழந்தைகள் 500 பேரை யாழ்ப்பாணத்தில் உள்ள சிறுவர் இல்லம் ஒன்றிற்கு அனுப்பி பராமரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

மேலும் வாசிக்க...
 

யோகராஜனும் சச்சிதானந்தமும் ஐ.தே.கவில் இணைகின்றனர்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மூத்த உப தலைவரான ஆர். யோகராஜன் அவர்கள், அந்தக் கட்சியில் இருந்து விலகி ஐக்கிய தேசியக் கட்சியில் சேர்வதாக அறிவித்துள்ளார்.

தற்போது துணை அமைச்சராக இருக்கும் எம். சச்சிதானந்தமும் அவருடன் ஐக்கிய தேசியக் கட்சியில் சேர்ந்திருக்கிறார்.

மேலும் வாசிக்க...
 

இடம்பெயர்ந்த மக்கள் வாக்களிக்க வசதியாக கிளிநொச்சி மைதானத்தில் 68 கொத்தணி நிலையங்கள்

போரினால்  இடம்பெயர்ந்த மக்கள் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க வசதியாக, கிளிநொச்சி, றொட்றிக்கோ விளையாட்டு மைதானத்தில் 68 கொத்தணி வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படும்.
இடம்பெயர்ந்த மக்களின் வாக்களிப்புத் தொடர்பாக ஆராய்வதற்காக நேற்றுக் கிளிநொச்சி செயலகத்தில் நடைபெற்ற உயர் அதிகாரிகளின் கூட்டத்தில் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது. 

மேலதிக தேர்தல் ஆணையாளர் எஸ். சிறிவர்த்தன, இடம்பெயர்ந்தவர்களின் வாக்களிப்பு தொடர்பான பிரதி ஆணையாளர் எஸ்.சண்முகம், யாழ். அரச அதிபர் கே.கணேஷ், யாழ்.பிரதித் தேர்தல் ஆணையாளர் பி.குகநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் வாசிக்க...
 

முல்லைத்தீவு மாவட்டத்தில் மறுவாழ்வு பணிகளில் தொண்டு நிறுவனங்களுக்கும் அனுமதி

இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தில் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள மக்களின் மறுவாழ்வுக்கான பணிகளில் ஈடுபடுவதற்கு இப்போது தொண்டு நிறுவனங்களும் அனுமதிக்கப்பட்டிருக்கின்றன.

மேலும் வாசிக்க...
 

தஞ்சம் கோரிய இலங்கையர்கள் ஆஸ்திரேலியாவுக்கும் ருமேனியாவுக்கும் அனுப்பப்பட்டனர்

ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரிச்சென்ற வழியில் இந்தோனேஷிய கடற்பரப்பில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை தமிழர்களில் 47 பேர் மறுவாழ்வுக்காக ஆஸ்திரேலியாவுக்கும் ருமேனியாவுக்கும் விமானம் மூலம் அழைத்துச் செல்லப்பட்டதாக இந்தோனேஷிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க...
 

ஈழம் உள்ளிட்ட தமிழர் வாழும் நாடுகளில் உள்ள நெருக்கடிகளும் தீர்வுகளும்

உலகில் எந்தெந்த நாடுகளில் தமிழர்கள் வாழ்கின்றார்கள் என்பது இன்று எல்லோரும் அறிந்த விடயம்.ஆனால் அவர்களின் நெருக்கடிகள் என்ன என்பது எல்லோருக்கும் அறியப்படாத விடயம் அந்தந்த நாடுகளில் வாழ்வோர் தமது நெருக்கடிகளை வெளிக்கொணரும்போது அவற்றை வெளிப்படுத்த முடியும்.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 1109 - மொத்தம் 1112 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.