குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 5 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

தாயக செய்திகள்

சுவிற்சர்லாந்தில் நத்தார்(கிறிசுமசு) காலத்தில் முழுஅடைப்பு ('லாக் டவுன்') இல்லை !

18.12.2020....இத்தாலியில் நத்தார்(கிறிசுதுமசு) காலத்தில் நாடாளவிய பூட்டுதலுக்கான கோரிக்கைகள் அதிகரிக்கின்றன !சுவிற்சர்லாந்தில் தீயநுண்மி (கொரோனா வைரசு) பரவுவதை எதிர்த்துப் போராடும் வகையில் நாடாளாவிய பூட்டுதலை மருத்துவத்துறை வலியுறுத்தியிருந்தது. இதனால் இன்று புதிய விதிகளின் கீழ் நாடாளவிய பூட்டுதல் அறிவிக்கப்படலாம் என பல தரப்பிலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சுவிசு மத்திய கூட்டாட்சி அரசு, நாடாளவிய பூட்டுதலைத் தவிர்த்துள்ளது.  செய்தி...... சுகன்யா கயேந்திரக்குருக்கள்.

மேலும் வாசிக்க...
 

சுவிற்சர்லாந்து ஊடகங்களிலும் அரசியலிலும் மீண்டும் இலங்கை !

15.12.2020....சுவிற்சர்லாந்து ஊடகங்களிலும், அரசியலிலும் 2009 ம் ஆண்டுக்குப் பின்னதாக இலங்கை 'Srilanka' எனும் பெயர் முக்கியத்துவமும் கவனமும் பெறத் தொடங்கியுள்ளது. இந்தக் கவனத்திற்கான காரணம் ஒரு பெரும் சோகம் நிரம்பியது. வாழ்வாதாரம் குன்றிய மக்களை வஞ்சித்திருக்கும் உண்மை பேசுவது.

மேலும் வாசிக்க...
 

தொல்காப்பியம் இந்திய மொழிகளின் வழிகாட்டி


27,04. 2018மக்களின் வாழ்க்கை முறைகளையும் உரிமைகளையும் கட்டுப்படுத்திக் காப்பதை அரசமைப் புச் சட்டம் என்கிறோம். மொழியின் ஒழுங்கு முறையைக்கட்டுப்படுத்திக் காப்பதை இலக்கணம் என்கி றோம். .....தமிழுக்கு மிக உயர்ந்த இலக்கணத்தை வகுத்துத் தந்தவர் தொல்காப்பியர். தொல்காப்பியர் காலத்தை வரையறுப்பதற்காகச் செம்மொழித் தமிழாய்வு நடுவண் நிறுவனம் ஒரு குழு அமைத்தது.

மேலும் வாசிக்க...
 

வேதங்கள் எல்லாம் சமசகிருதத்தில் ஆயின்

இராவணன் சமசுகிருதம் கற்றாரா? 08.12.2020....எழுதப்பட்டிருப்பதை காண்கின்றோம் அப்படியிருக்க  இராவணன் சமசுகிருதம் பேசியிருக்கவேண்டும் வேதங்களை எல்லாம் கற்று தெரிந்தவன் இராவணன் உண்மையிலேயே இலங்கைத்தீவு ஈழநாடு குமரிகண்டத்தின் ஒரு பிரிவுதான் இப்படிஇருக்கையில்

இலங்கை ஆண்ட மன்னர்கள் 20000 ஆண்டுகளுக்கு முன்னதாக தமிழர்களாக இருந்திருக்கவேண்டும்........

தற்போதைய இலங்கை இராவணனைப் பற்றி என்ன கூறுகிறது வாருங்கள்விரிவாகப்பார்ப்போம்

சிங்களவெகுசனமயப்படுத்தப்படும்_இராவணன்.

மேலும் வாசிக்க...
 

யாழில் திடீரென்று பூதங்கள்போல் திரண்டு திரண்டுவந்த கருமேகங்கள்; வரலாறு காணாத பதிவு!

06.12.2020....யாழ்ப்பாணத்தில் கடந்த ஆறு மணித்தியாலங்களில் கடுமையான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக விசம்பு நிலை அவதான நிலையத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி யாழ்ப்பாணம் நகர், வலிகாமம், தென்மராட்சி உள்ளிட்ட பிரதேசங்களில் இன்று மாலை 2.30 மணி முதல் இரவு 8 மணிவரையில் 150 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

மேலும் வாசிக்க...
 

யாழ்ப்பாணத்து வெள்ளமும் சூழலியல் காரணிகளும்

05.12.2020.....ஊருக்கு ஒரு குளம், கோவில், கேணி என்பதில் எல்லாம் வெள்ளத்தடுப்பு திட்டமிடல் இருந்தது என்று சொன்னால் அப்படியா என்று கேட்கும் அளவில்தான் நாம் இருக்கிறோம். கோவில் என்று சொல்லப்படும் சிதம்பரத்திற்குள்ளும் வெள்ளம்! யாழ்ப்பாணத்து நல்லூருக்குள்ளும் வெள்ளம்! 

மேலும் வாசிக்க...
 

பூநகரியில் மழையுடன்கூடியகாற்றும் வீசுகின்றது:இரணைமடு வெள்ள அபாய எச்சரிக்கை!

02....03.12.2020.... பூநகரியில் மழையுடன்கூடியகாற்று வீசுகிறது  கனதியான  மழைபெய்து வருகின்றது கடந்த வாரமும் அதிக  மழையினைப்பெற்ற பூநகரிப்பகுதியிலும். மழையுடன் காற்றும் வீசுகின்றது. இதனால் இப்பகு தியில் அதிகவெள்ளபாதிப்புகள் ஏற்படராம் என மக்கள் பீதியில் உள்ளார்கள். மரங்களுக்கு அருகாகவுள் வீடுகளில் மக்கள் விழித்திருந்து தற்பாதுகாப்பு நோக்குடுன் இருப்பது நன்று.

மேலும் வாசிக்க...
 

கீழடிச் சான்றுகள்: தமிழ்ப் பழைமையின் அறிவியல் ஆதாரங்கள் 03,10.2019

20.11.2020......நவீன மனிதனாக வாழ்ந்து கொண்டே பழைமையின் மீதான பற்றை வெளிப்படுத்துவது மனித இயல்பு. இது ஒருவித பாவனையாகக்கூட இருக்கலாம். தனிமனிதர்களுக்குள்ள இந்த இயல்பு குழுவாகவும் கூட்டமாகவும் அடையாளப்படுத்தப்படும் போதும் வெளிப்படுகிறது. என் தாத்தா 100 வயதைத் தாண்டியவர் என்பதைச் சொல்லும்போது இருக்கும் பெருமிதத்தின் தொடர்ச்சிகளே ஊரின் பழைமை; மொழியின் பழைமை இனத்தின் பழைமை என நீள்கிறது.

மேலும் வாசிக்க...
 

எரிமலை சாம்பலில் இருந்த 2000 ஆண்டுகள் பழமையான இரு சடலங்கள்! ..23.11.2020

23.11.2020....ஏறக்குறைய 2,000 ஆண்டுகளுக்கு முன்பு பண்டைய ரோமப் பேரரசின் பாம்பேய் நகரத்தை அழித்த, எரிமலைச் சீற்றத்தில் இறந்த, இரண்டு மனிதர்களின் எச்சங்களை இத்தாலியிலுள்ள தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும் வாசிக்க...
 

இந்தோனேசியாவில் கூரையை பிய்த்துக் கொண்டு விழுந்த விண்கல் மூலம் நபர் ஒருவர் இப்போது மில்லியனராக மாறி

22.11.2020.....இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ராவின் Kolang-ல் Josua Hutagalung என்ற 33 வயது நபர் குடும்பத் துடன் வசித்து வருகிறார். இவர் சவப்பெட்டி தயாரிக்கும் தொழிலில் வேலை செய்து வருகிறார்.இவரின் வீட்டின் கூரைப் பகுதியை ஏதோ பொருள் ஒன்று உடைத்து கீழே விழுவது போன்று இருந்தது. அதனை பார்க்க சென்ற போது, அது ஒரு விண்கல் போன்று இருந்துள்ளது. அதை தொட முயற்சித்த போது சூடாக இருந்துள்ளது.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 12 - மொத்தம் 1147 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.