05.11.2017-மக்கள் நெரிசல் மிகுந்த இந்தியாவின் மும்பை நகரத்திலுள்ள பெட்டி போன்ற அடுக்குமாடி கட்டடத்தின் மொட்டை மாடியில் விமானம் ஒன்றை தயாரிக்க போவதாக 7 ஆண்டுகளுக்கு முன்னரே அமோல் யாதவ் தன்னுடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் தெரிவித்தார்.விமானத்தை தயாரித்த பிறகு கீழே கொண்டு வருவதற்கு எப்படி திட்டமிட்டிருக்கிறாய் என்று அவரது கூற்றை நம்பாத நண்பர்களும், குடும்ப உறுப்பினர்களும் இந்த இளம் விமானியிடம் கேட்டனர்.