குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, ஐப்பசி(துலை) 11 ம் திகதி வெள்ளிக் கிழமை .

கல்வி - அறிவியல்

300 ஆண்டுகள் பிழையான தகவல்: மனித விந்தணுக்கள் பாம்பை போல் நீந்துவதில்லை

02.08.2020...மனித விந்து கருமுட்டையை நோக்கி பாம்பைப் போல நீந்துகிறது என்ற 300 ஆண்டுகளுக்கும்மேலா ன கருத்து தவறானது என ஆய்வில் தெரியவந்துள்ளது. மனித விந்தணுக்கள் (Human sperm) கருமுட்டையை நோக் கி பாம்பைப் போல நீந்துகிறது என்ற 300 ஆண்டுகளுக்கும் மேலாக நாம் நம்பிய கருத்து தவறானது எனவும், அவை நீர்நாயை போல் சுழன்று சுழன்று கருமுட்டையை அடைகிறது எனவும் ஒரு புதிய ஆய்வு தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க...
 

கி.மு 7ம் நூற்றாண்டு முதலாக தமிழ் பேச்சுவழக்கு மொழியாக இருந்துவந்துள்ளது!

21.07.2020....புராதனகால இலங்கை வரலாறு பற்றி போதிக்கப்படும் சிந்தனைகளை மறுபரிசீலனை செய்து மாற்றங்களை ஏற்படுத்தவேண்டிய அவசியம் என்பதை அண்மைக்காலமாக அறியப்பட்டுவரும் கி.மு கால தமிழ் பிராமி கல்வெட்டுகள் வெளிப்படுத்தும் செய்திகள் உணர்த்தி நிற்பதாக போராசிரியர் சி.பத்மநாதன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வாசிக்க...
 

நம் உடலைப் பற்றி அறிவோம்...

28.05.2020....பூரண ஆயுள் என்பது 120 ஆண்டுகள் நலமாக வாழ்வது.

ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகளைக் குறிக்கும்.

மனித முகத்தில் 14 எலும்புகள் உள்ளன.

மனித மூளையில் 6 கிராம் அளவிற்கு தாமிரம் உள்ளது.

மேலும் வாசிக்க...
 

கற்பித்தலும் கற்க வைத்தலும்…

05.05.2020...‘இயற்கையோடும் புறச்சூழலோடும் இணையாத கல்விமுறையும், கற்பித்தலும் மாணவர்களை ஆளுமையும் அறிவுத் தேடலுள்ளமுள்ளவர்களாக உருவாக்காது. மாறாக சிந்தனையின் எல்லைகள் வரையறுக்கப்பட்ட சொன்னதை மட்டும் செய்யும் மனித இயந்திரங்களைத்தான் அது உருவாக்கும்.’

மேலும் வாசிக்க...
 

பேராசிரியர் க.கணபதிப்பிள்ளையின் தமிழ்ப்பணிகள்

1. அறிமுகம்

19.04.2020 ..தமிழ் கூறும் நல்லுலகில் போற்றப்படும் பேராசிரியர்களுள் க.கணபதிப்பிள்ளை முதன்மையானவர். யாழ்ப்பாண மாவட்டம் பருத்தித்துறை புலோலி கிழக்கில் 1902 ஆம் ஆண்டு பிறந்த இவர், ஆரம்பக்கல்வியை வேலாயுதம் மகா வித்தியாலயம், ஹார்ட்லி கல்லூரி ஆகியவற்றில் கற்றார். பண்டிதர் பிரம்ம சிறி முத்துக்குமாரசுவாமிக் குருக்களிடம் தமிழையும், இசையையும் கற்றுக்கொண்டார்.

மேலும் வாசிக்க...
 

சோழர் காலத்தில் தமிழ்நாடு தான் உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு.

உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு.*

சோழர் காலத்தில் தமிழ்நாடு தான் உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு.

*சுமார் 40,000 கோயில்களை சோழர்கள் தங்கள் ஆட்சிக் காலத்தில் கட்டினார்கள். அன்று உலகிலேயே உயர்ந்த கட்டிடம் தஞ்சை பெரிய கோவிலும், கங்கை கொண்ட சோழபுரமும்தான்.*

மேலும் வாசிக்க...
 

பேராசிரியர் கைலாசபதி மாதம் பதிவு 17 பேராசிரியர்.சி.மெளனகுருஅவர்களின் முகநூல் பதிவொன்றிலிருந்து

பேராசிரியர் கைலாசபதி மாதம்   பதிவு 17 ..பேராசிரியர்.சி.மெளனகுரு அவர்களின் முகநூல் பதிவொன்றிலிருந்து

கருத்துக்களின் களம் என்ன?அக் காலத்தில் மறைந்த பேராசிரியர். கைலாசபதியின் கட்டுரை ஒன்று பலரிடம் ஒரு பலத்த பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.1962ஆம்ஆண்டு நாங்கள் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்த பல்கலைக் கழகத் தமிழ் மன்ற வெளியீடான இளங்கதிரில் அக்கட்டுரை பிரசுரமாகி இருந்தது. ஆணிவேரே அசைந்து விட்டது போல் பலர் அந்தரப்பட்டனர்.

மேலும் வாசிக்க...
 

நரகத்தீ கணவாய் ( Hell fire pass )(மரண இரயில் பாதையில் தமிழர் கண்ணீர், மறைந்து போன மரணங்கள்)

நரகத்தீ கணவாய் ( Hell fire pass )

(மரண இரயில் பாதையில் தமிழர் கண்ணீர், மறைந்து போன மரணங்கள்)

மனித வரலாற்றில் ஒரு கொடிய முயற்சியாக ஜப்பானியரின் Burma - Siam Railway திட்டம் கருதப்படுகிறது .இதுவே பின்னர் மரண தொடருந்துப்பாதை(இரயில் பாதை) என வர்ணிக்கப்பட்டது .

இரண்டாம் உலகப்போர் காலத்தில் யப்பானியர் தாய்லாந்தில் இருந்து பர்மாவுக்கு தொடருந்துப் பாதை அமைக்கும் திட்டத்தை முன்வைத்தனர். இதில் தாய்லாந்தின் காஞ்சனாபுரி மாநிலத்தில் பெருங்காடுகளின் நடுவே பெரும் மலைக்குன்றுதான் நரகத் தீ கணவாய் என அழைக்கப்படுகிறது .

மேலும் வாசிக்க...
 

வடசொல் = தமிழ் அகரவரிசை - 06 நல்ல தமிழ் அறிவோம் நடைமுறையில் அவற்றை பேச்சிலும் எழுத்திலும்

பயன்படுதுவோம்  தமிழ் மொழியை அழியவிடாது காப்போம்.16.04.2020

சகசம் = இயற்கை, ஒற்றுமை

சகடம், சகடு = வண்டி

சகலம் = எல்லாம்

சகலர் = மும்மலக்கட்டினர்

சகவாசம் = கூடவிருத்தல், உடனுறைதல், பழக்கம், சேர்க்கை, நட்பு

மேலும் வாசிக்க...
 

சொற்புணர்ச்சி விதிகள்

உயிரீற்று புணர்ச்சி _

உயிர் முன் உயிர் புணர்தல், உயிர் முன் மெய் புணர்தல்

சொற்புணர்ச்சியில் நிலைமொழி வருமொழி என்பன பிரதான பிரிவுகளாகும். இரு சொற்கள் புணரும்போது அதில் முதலாவதாக வரும் சொல் நிலைமொழி என்றும் அதனைத் தொடர்ந்து வரும் சொல் வருமொழி என்றும் அழைக்கப்படும்( நிலைமொழி வருமொழி தொடர்பான விளக்கம் சொற்புணர்ச்சி வகைப்பாடு் ஒன்றில் வழங்கப்பட்டுள்ளது). நிலைமொழியின் இறுதியிலும் வருமொழியின் முதலிலும் வரும் சொற்களை அடிப்படையாகக் கொண்டு சொற்புணர்ச்சியை இன்னுமொரு வகையாக வகைப்படுத்தலாம் அவற்றை சற்று விரிவாக நோக்குவோம்.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 2 - மொத்தம் 12 இல்