குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 4 ம் திகதி சனிக் கிழமை .

தமிழக முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கும் ஓய்வூதியம்!- யெயலலிதாஉத்தரவு மன்மோகன் வைகோ சந்திப்பு

03.08.2011-தமிழ்நாட்டில் உள்ள முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கும் ஓய்வூதியத் திட்டங்களை விரிவுபடுத்தி, தமிழக முதல்வர் செல்வி யெயலலிதா யெயராம் உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்தி இலங்கைத் தமிழர்கள் நலனில் தமிழக முதல்வர் யெயலலிதா எப்போதும் மிகுந்த அக்கறை கொண்டுள்ளார். .....பிரதமர் மன்மோகன் சிங்கை ம.தி.மு.க பொதுச்செயலர் வைகோ சந்தித்தார். ...எனவே தான், இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்கள் அனைவரும் தங்களது சொந்த இடங்களுக்கு திரும்பி, சிங்களவர்களுக்கு இணையாக கண்ணியமாக வாழ வகை செய்யும் வரையில், அனைத்து குடியுரிமைகளையும் தமிழர்கள் பெறும் வரையில், மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கை அரசின் மீது மத்திய அரசு பொருளாதார தடை விதிக்க வேண்டும் என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினார்.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கிலாரி கிளின்டன் உடனான சந்திப்பில், முகாம்களில் உள்ள தமிழர்கள் தங்கள் சொந்த இருப்பிடங்களுக்குச் செல்ல வழிவகை காணப்பட வேண்டியதன் அவசியம் குறித்து முதல்வர் யெயலலிதா பேசினார்.

தமிழர்களுக்கு அகதிகளாக வந்து, இங்குள்ள முகாம்களில் தங்கியுள்ள தமிழர்கள் நலனிலும் முதல்வர் யெயலலிதா அக்கறை கொண்டுள்ளார்.

எனவே தான், தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் அனைத்து நலத்திட்டங்களும் முகாம்களில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர்களுக்கும் நீட்டிக்கப்படும் என்று ஆளுனர் உரையில் அறிவிக்கப்பட்டது.

இதனைச் செயல்படுத்தும் விதமாக, சமூக நலத்துறையால் செயல்படுத்தப்படும் முதியோர் ஓய்வூதியத் திட்டம், ஆதரவற்ற விதவையர் ஓய்வூதியத் திட்டம், ஆதரவற்ற பெண்கள் ஓய்வூதியத் திட்டம் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியத் திட்டம் ஆகிய திட்டங்களை, தமிழ்நாட்டில் உள்ள முகாம்களில் வசித்து வரும் இலங்கைத் தமிழர்களுக்கும் விரிவுபடுத்தி தமிழக முதல்வர் ஆணையிட்டுள்ளார்.

முதல்வர் யெயலலிதா ஆணையிட்டுள்ள இந்த உத்தரவின் மூலம் முகாம்களில் வசிக்கும் 5,544 இலங்கைத் தமிழர்கள் மாதம்தோறும் ரூ.1000-ஐ ஓய்வூதியமாக பெறுவார்கள்.

இவ்வாறு அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பிரதமருடன் வைகோ நேரில் சந்திப்பு: மூன்று கோரிக்கைகளை விடுத்தார்

பிரதமர் மன்மோகன் சிங்கை ம.தி.மு.க பொதுச்செயலர் வைகோ இன்று நாடாளுமன்றக் கட்டடத்துக்கு உள்ளே இருக்கும் பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தார்.
இந்த சந்திப்பின்போது பிரதமரிடம் அவர் 3 கோரிக்கைகளை விடுத்ததாக அக்கட்சி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ இன்று நண்பகல் 12.20 மணி முதல் 12.40 மணி வரையிலும் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களை நாடாளுமன்றக் கட்டடத்துக்கு உள்ளே இருக்கின்ற பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தார்.

ம.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி உடன் இருந்தார். பிரதமரிடம் வைகோ மூன்று கோரிக்கைகள் விடுத்தார்.

முல்லைப் பெரியாறு: கேரள அரசு கட்டத் திட்டமிட்டு உள்ள புதிய அணையில் இருந்து ஒரு சொட்டுத்தண்ணீர் கூடத் தமிழகத்துக்குக் கொடுக்க மாட்டார்கள்.

தமிழகத்தின் ஐந்து மாவட்டங்கள் பாலைவனமாகி விடும். இரண்டு மாநிலங்களுக்கும் நல்லது அல்ல. இந்தியாவின் ஒற்றுமைக்கு எதிராகவே போகும். முல்லைப்பெரியாறு பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும்.

பேரறிவாளனின் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும்: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரரறிவாளனுக்கு விதிக்கப்பட்டு உள்ள தூக்குத் தண்டனையை ரத்துச் செய்ய வேண்டும்.

இரண்டு பற்றிரி செல்களை வாங்கிக் கொடுத்தார் என்பது தான் அவர் மீதான குற்றச்சாட்டு. ஏற்கனவே நளினிக்கு மரண தண்டனையை ரத்துச் செய்து உள்ளீர்கள். அதுபோல பேரறிவாளனுக்கு விதிக்கப்பட்டு உள்ள மரண தண்டனையையும் ரத்து செய்ய வேண்டும்.

ஈழத்தமிழர் பிரச்சினை: லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களைப் படுகொலை செய்த இலங்கை அரசோடு செய்து கொண்டு உள்ள அனைத்து பொருளாதார ஒப்பந்தங்களையும் இந்தியா ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு பிரதமரை வைகோ கேட்டுக்கொண்டதாக ம.தி.மு.க வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.