குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 4 ம் திகதி சனிக் கிழமை .

60 ஆண்டுகளுக்கு முன்பு சிங்களவர்கள் 65 இலட்சம் தமிழர் 35இலச்சம் இப்போ?

 02 .08. 2011சமல் ராயபக்சவிடம் இந்தியா மன்னிப்புக் கேட்டது  திருச்சி சிவா பேசியது மிகமிகச்சரியே! 60  ஆண்டுகளுக்கு முன்பு சிங்களவர்கள் 65 இலட்ச மாகவும் தமிழர்35இலச்சமாகவும் இருந்தது.  இப்போ? இலங்கை விவாகரம் தொடர்பாக டில்லியில் அதிமுக, திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே போட்டா போட்டி நடந்து வருகிறது.  யார் இலங்கைத் தமிழர் உரிமைக்காக டில்லியில் குரல் கொடுத்தவர்கள் என்ற போட்டியில் அதிமுக தங்களை விஞ்சி நிற்பதான தோற்றத்தை ஈடுகட்ட திமுகவும் இலங்கைக்கு எதிராக ஏதாவது செய்தாக வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறது. இலங்கை சபாநாயகர் சமல் வருகையில் போது தன்னிச்சையாக அதிமுக உறுப்பினர்கள் அவையில் குரல் எழுப்பி கலகம் செய்த போது என்ன செய்வதென்று அறியாது திணறிப்போன திமுக எம்பிக்கள் அமைதியாக இருந்து விட்டனர். தங்கள் தலைமையிடம் கேட்காமல் எதையும் செய்ய முடியாத நிலையில் அதுவே தமிழகத்தில் சில கேள்விகளை எழுப்ப.அன்று மாலையே நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்ட திமுக உறுப்பினர் சிவா அதிருப்தியைத்  தெரிவித்து கூட்டத்தில் இருந்து வெளியேறினார். நேற்றைய நாடாளுமன்ற கூட்டம் முடிந்ததும் சபாநாயகர் மீராகுமார் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் தலைவர் தம்பிதுறையை அழைத்து இப்படி விருந்தினர்களைச் செய்யலாமா? என்று கேட்க நாங்கள் தமிழ் மக்களின் உணர்வுகளைப் பிரதிபலித்தோம் என்று சொல்லி விட்டாராம். அதிமுகவின் இந்த அதிரடி அரசியலை எதிர்கொள்ள முடியாத திமுக உடனே ஏதாவது செய்தாக வேண்டிய நிர்ப்பந்த்தில் திமுக நாடாளுமன்ற உறுபினர்களின் தலைவரக டி.ஆர்.பாலு உடனடியாக பிரதமர் மன்மோகன் சிங்கையும், ப்ரணாப்முகஜியையும் சந்தித்து இலங்கை பிரச்சனை தொடர்பாக பாராளுமன்ற விவாதம் தேவை என்று வலியுறுத்தியதோடு. பேரவைத் தலைவரையும் இது தொடர்பாக வலியுறுத்தினார். ஒரு விவாதத்திற்குண்டான அலுவல் நடைமுறைப்படி 193- ஆம் விதியின் கீழ் மக்களவையில் இலங்கையில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டது தொடர்பாக விவாதிக்க வேண்டும். என்று நோட்டீஸ் கொடுத்துள்ளார். திமுகவின் இந்த கோரிக்கைக்கு என்ன ரெஸ்பான்ஸ் இருக்கும் என்பது இன்னும் இரண்டொரு நாளில் தெரியும். எப்படியும் மழைக்கால கூட்டத் தொடரில் ஈழத் தமிழரின் பிரச்சனை இந்திய பாராளுமன்றத்தில் இடம் பெறலாம் இடம் பெறாமலும் போகலாம்.ஆனால்  அதிமுக திமுக போட்டியால் பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டிய விஷயம் மாறி தனி நபர் சண்டையாக மாறாமல் இருந்தால் சரி.

40000 தமிழர்கள் கொலை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் கோரும் தி.மு.க.
 
இலங்கையில் நடைபெற்ற போரில் அப்பாவித் தமிழர்கள் 40,000 பேர் இலங்கை ராணுவத்தினரால் கொல்லப்பட்டது குறித்து விதி எண் 193 கீழ் மக்களவையில் விவாதம் நடத்த வேண்டும் என்று கோரி மக்களவைத் தலைவர் மீரா குமாரிடம் திமுக நாடாளுமன்றத் தலைவர் டி.ஆர். பாலு நோட்டீஸ் கொடுத்துள்ளார்.

இலங்கையில் இறுதிக் கட்ட போரின்போது தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டபோது, உண்ணாவிரத நாடகம் போட்டார் அப்போதைய முதல்வர் கருணாநிதி. இந்தப் போருக்கு வேண்டிய ஆயுதங்களை இந்தியா தான் தருகிறது என்ற உண்மையை வெளியில் சொல்ல பயந்தார். காரணம், காங்கிரஸ் தலைவர் சோனியாவும், ராகுல் காந்தியும் கோபித்துக் கொள்வார்கள், கூட்டணியி்ல் சிக்கல் வரும் என்ற பயம்.

இப்போது தேர்தலில் தோற்று, கூட்டணியிலிருந்து திமுகவை கழற்றிவிட காங்கிரசும் தயாராகி வரும் நிலையில், இலங்கையில் நடந்த போர் குறித்தும், அப்பாவித் தமிழர்கள் பலியானது குறித்தும் திடீரென திமுகவுக்கு கவலை வந்துவிட்டது.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிக்கித் தவிக்கும் திமுக, அதை திசை திருப்ப மீண்டும் இலங்கைப் பிரச்சனையை கையில் எடுக்க முயல்கிறது.

அந்த வகையில் தான் நேற்று மக்களவைத் தலைவரிடம் டி.ஆர்.பாலு மூலம் நோட்டீஸ் கொடுத்துள்ளது திமுக. மேலும் கச்சத் தீவு பிரச்சனை, தமிழக மீனவர்கள் பிரச்சனை, மாநிலங்களுக்கு இடையேயான நதி நீர் பிரச்சனை உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்தும் மக்களவையில் விவாதிக்க வேண்டும் என்றும் திமுக சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து பிரதமர் மன்மோகன் சிங், மக்களவைத் தலைவர் மீரா குமார், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான பிரணாப் முகர்ஜி ஆகியோரை நேரில் சந்தித்து இலங்கை தமிழர் பிரச்சனை குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
 
சமல் ராஜபக்ஸவிடம் இந்தியா மன்னிப்புக் கேட்டது - தமிழகம் மூக்குடைத்தது.
 
மன்னிப்புக் கேட்டார் இந்தியசனாதிபதி.
....................................................................
 மழைக்கால கூட்டத் தொடரில் இந்திய அரசின் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட சமல்ராஜபக்ஸ தலைமையிலான இலங்கை எம்பிக்களுக்கு அதிமுக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட தமிழக எம்பிக்கள் நாடாளுமன்றத்திலேயே கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். அவர்களை வாழ்த்தி வரவேற்ற சபாநாயகர் மீராகுமாரின் அறிக்கையைக் கூட தொடர்ந்து வாசிக்க முடியாதபடி கூச்சல் நிலவியது. மீராகுமார் கண்டிப்புடன் கூறிய்தால் தமிழக எம்பிக்கள் அமைதியாகி விட்ட போதிலும், சமல் ராஜபக்ச்ஸ குழுவினர் இறுதிவரை உற்சாகமாக இல்லை. இந்நிலையில் இலங்கை குழுவினரிடம் சிலர் எம்பிக்கள் நடந்து கொண்ட விதத்துக்காக மன்னிப்புக் கேட்டுக் கொண்டார் சபாநாயகர் மீராகுமார்.
 
நாடாளுமன்ற சபாநாயகர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாராளுமன்ற அவை நடந்து கொண்டிருந்த போது சில எம்பிக்களின் நடவடிக்கையால் சபாநாகரின் மனம் புண்பட்டு விட்டது. விருந்தினர்களாக வந்த இலங்கை எம்பிக்களிடம் மனதார நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மூக்குடைப்பு
.......................
இந்தியாவின் துணை சனாதிபதி ஹமீத் அன்சாரி தலைமையில் இந்திய, இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்கு திமுகவைத் தவிர தமிழகத்தைச் சார்ந்த வேறு எந்த ஒரு கட்சியின் உறுப்பினர்களும் அழைக்கப்படவில்லை.
திமுக சார்பில் மூத்த பாராளுமன்ற உறுப்பினரும் சிறந்த திராவிட இயக்க சிந்தனையாளருமான திருச்சி சிவா கலந்து கொண்டார். ஆனால் அவர் சமல் ராஜபக்ஷே முன்பு தன் எதிர்ப்பை வெளியிட்டு கூட்டத்திலிருந்து வெளிநடப்பும் செய்தார். இது அக்கூட்டத்தில் கலந்து கொண்ட சமல்ராஜபக்ச்ஸ உள்ளிட்ட இலங்கை எம்பிக்களுக்கு பெருத்த அவமானமாக இருந்தது.
 
அக்கூட்டத்தில் திருச்சி சிவா பேசியதாவது, 60  ஆண்டுகளுக்கு முன்பு சிங்களர்களின் எண்ணிக்கை 65 லட்சமாகவும், தமிழர்களின் எண்ணிக்கை 35 லட்சமாகவும் இருந்தது. 60 ஆண்டுகளுக்குப் பின்னர் சிங்களர்களின் எண்ணிக்கை ஒன்றரை கோடியாக உயர்ந்திருக்கிற போது தமிழர்களின் என்ணிக்கை அதே 35 லட்சத்ட்தில் இருக்கிறது. தமிழர்களின் எண்ணிக்கை இலங்கையில் அதிக்கரிக்கவில்லை என்பதல்ல காரணம். தொடர்ந்து ஆட்சியில் இருந்தவர்கள் தமிழர்களை திட்டமிட்டு கொன்று குவித்து வருவதுதான் காரணம். குறிப்பாக உள்நாட்டுப் போரை ஒடுக்குகிறேன் என்ற பெயரில் ராஜப்க்ஸ அரசு இராணுவத்தினரின் துணையுடம் இரக்கமின்றி மனிதாபிமானமற்ற முறையில் லட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்தும் தமிழ் பெண்களை பாலியல் வன்முறை செய்து சிதைத்த கொடுமைகளை யாரலும் மறக்க முடியாது.
 
ராசபக் அரசின் இரக்கமற்ற இந்த அணுகுமுறைகளால் இலட்சக்கணக்கான தமிழர்கள் குடியிருக்கிற இடங்களை, சொத்துக்களை இழந்து வேறிடத்திற்கு குடிபெயர வேண்டிய நிலைக்கு ஆளானார்கள். இன்னமும் லட்சக்கணக்கான தமிழர்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக அடைக்கப்பட்டிருக்கிறார்காள்.
 
இலங்கை அரசினால் தரப்பட்ட வாக்குறுதிகள் எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. ஐநா மன்றத்தின் பொதுச்செயலாளர் பான்கிமூன் நியமித்த குழுவும் இலங்கையில் மனித உரிமை மீறல்களும் போர்க்குற்றங்களும் நடந்திருக்கின்றன என்று உறுதிப்படுத்தியிருக்கிறது. இப்போது வந்துள்ள இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு தமிழினத்தை அழித்து விட கங்கணம் கட்டிக் கொண்டிருக்கும் ராஜபக்ஸ அரசின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் குழு.
 
இலங்கையில் நடைபெறுகின்ற வன்முறை மனித உரிமை மீறல்கள், அடக்குமுறை, தமிழர்களை அழிக்கும் முயர்ச்சி இவற்றைக் கண்டித்து தமிழினத்தின் மீது வெறுப்புணர்வு காட்டும் இவர்களோடு நடபு பாராட்ட முடியாது என்பதை வலியுறுத்தி நான் இக்கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்கிறேன்'' என்று திருச்சி சிவா சமல் ராஜபக்ஷே முன்பு பேசி விட்டு வெளிநடப்பு செய்தார்.
 
 
தமிழர்களின் உணர்வுகளைப் பிரதிபலித்தோம்-அதிமுக:

மத்திய அரசின் அழைப்பின் பேரில் இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவுக்கு மக்களவையில் ஆட்சேபத்தை தெரிவித்ததன் மூலம் தமிழர்களின் உணர்வுகளை அதிமுக எம்.பிக்கள் பிரதிபலித்துள்ளதாக அக்கட்சியின் மக்களவைத் தலைவர் தம்பிதுரை கூறினார்.

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு மக்களவை நிகழ்வுகளைக் காண வந்தபோது அவர்களுக்கு எதிராக அதிமுக எம்பிக்கள் குரல் கொடுத்தனர்.

இதையடுத்து சபாநாயகர் மீரா குமார் தலையிட்டு, இந்திய அரசின் அழைப்பின் பேரில் வந்துள்ள இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உரிய மரியாதை, கெளரவம் அளிக்க வேண்டியது நமது கடமை என்றார்.

கூட்டம் முடிந்தவுடன் தம்பிதுரையைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மீரா குமார் விளக்கம் கேட்டதாகத் தெரிகிறது. இதைத் தொடர்ந்து அதிமுக எம்.பிக்கள் மீரா குமாரைச் சந்தித்தனர்.

அப்போது, எம்பிக்கள் நடந்துகொண்ட விதம் தனக்கு ஏமாற்றம் அளிப்பதாக மீரா குமார் கூற, அதற்கு தம்பிதுரை, அதிமுக எம்பிக்கள் தமிழர்களின் உணர்வுகளைப் பிரதிபலித்துள்ளனர் என்று கூறிவிட்டுத் திரும்பி வந்துள்ளார்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.