குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 28 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

இலங்கை அரசியலின் கடந்த வார முக்கிய நிகழ்வுகளின் கண்ணோட்டம் - ஏ.எச்.சித்தீக் காரியப்பர் தமிழ்இணையம்.

01 ஆகஸ்ட் 2011-தேர்தல் தொடர்பானது மட்டுமல்ல  உலகமட்டத்தில் நிகழ்ந்தவை....  கடந்த வாரம் இலங்கை அரசியலின் முக்கிய பாடுபொருளாக நடந்து முடிந்த 65 உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களின் முடிவுகள் தொடர்பான வாதப் பிரதிவாதங்களே அமைந்திருந்தன. சுமார் 25 வருடங்களுக்குப் பின்னரானதும் வடபகுதித்  தமிழ் மக்கள் பாரிய அழிவுகளையும் இழப்புகளையும் எதிர்நோக்கிய பின்னரானதுமாக நடைபெற்ற இந்தத் தேர்தல் முடிவுகள் குறித்து சிறிலங்கா அரசு மட்டுமல்ல.  தமிழர் நலனில் அக்கறை கொண்ட சர்வதேசமே உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தன. தமிழ் மக்கள் சொல்லப் போகும் செய்தி என்ன என்ற அங்கலாய்ப்பே மேலோங்கிக் காணப்பட்டது.
 
தமிழர் பிரதேச தேர்தல் முடிவுகள் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவந்து கொண்டிருந்த போது அவை  சிறிலங்கா அரசுக்கும் சர்வதேசத்துக்கும் ஒவ்வொரு செய்தியினைக் தமிழ் மக்கள் கூறிக் கொண்டிருக்கிறார்கள் என்ற உணர்வையே ஏற்படுத்தியிருந்தது.
 
சிறிலங்கா அரசாங்கத்தைப் பொறுத்த வரை வடபகுதித் தமிழ் மக்கள் இன்னும் தங்களுடனேயே உள்ளனர் என்பதனையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் அல்லர் எனவும் நிரூபிப்பதற்குமான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டிருந்த ஒரு தேர்தலாகவே இது நோக்கப்பட்டது. அதற்காக எதனை எல்லாம் செய்ய வேண்டுமோ அதனையெல்லாம் செய்தும் இறுதியில் தோற்று போனதூன் கண்ட மிச்சமாக இருந்தது.
 
இருப்பினும் தனது தோல்வியை ஏற்றுக் கொள்ளாத நிலையில் அரசும் அதன் சார்புக் கட்சிகளும் குப்புற விழுந்தாலும் மீசையில் மண் விழாத கதையினையே தொடர்ந்தும் பேசிக் கொண்டிருப்பது நகைச்சுவையாகவும் வேடிக்கையாகவுமே தொடர்கிறது.
 
இந்தத் தேர்தல் தோல்வியின் பின்னர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருந்த சில கருத்துக்களை இங்கு சொல்லியாக வேண்டியுள்ளது.
 
'மொழிவாதம், இனங்களைத் தூண்டி தவறான பிரசாரங்களை முன்னெடுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் பிரசாரம் தொடர்பில் இங்குள்ள தமிழ் ஊடகங்களும் மக்களுக்கு சரியான வழிகளை எடுத்துக் காட்டவில்லை என்பதுடன் அரசின் கொள்கைத் திட்டங்களுக்கோ உணர்வுகளுக்கோ ஏற்ப சரியாக செயற்படவில்லை. தேர்தல் பிரச்சாரங்களின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பல்வேறு தவறான பிரசாரங்கள் ஊடாக மக்கள் பிழையாக வழிநடத்தப்பட்டுள்ளனர் என்பதுடன் இந்தத் தவறான பிரச்சாரங்களால் வழி நடாத்தப்பட்டதன் விளைவுகளை எமது மக்கள் விளங்கிக் கொள்ளக் கூடிய சந்தர்ப்பத்தையும் இத்தேர்தல் ஏற்படுத்தியுள்ளது' எனக் கூறி ஒட்டுமொத்தக் குற்றச்சாட்டுகளையும் ஊடகங்களின் தலையிலேயே போட்டுள்ளார்.
 
இதேவேளை, வடக்கின் உள்ளுராட்சித் தேர்தல் முடிவுகள் தொடர்பில் சிரேஷ்ட அமைச்சர்களான பஸில் ராஜபக்ஷவும் சம்பிக்க ரணவக்கவும் தெரிவித்துள்ள கருத்துக்கள் தமிழ் மக்கள் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் தோற்றுவித்துள்ளன.
 
உள்ளுராட்சி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கை அபிவிருத்தி செய்து காட்டட்டும் என்று அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க சவால் விடுத்திருந்த அதேவேளை, தெரு விளக்குகளை பொருத்துவதற்கும் தண்ணீர்க் குழாய்களை அமைப்பதற்கும் தான் அதிகாரம் கொண்டது. ஏன பஸில் ராஜபக்ஸ கூறியிருந்தமையுமே அதிர்ச்சி அலைகளைத் தோற்றுவித்துள்ளன.
 
இவ்வாறானதொரு நிலையிலேயே தமித்ழ் தேசியக் கூட்டமைப்பு தான் வெற்றிக் கொண்ட உள்ளுராட்சி சபைகளின் நிர்வாகத்தை நடத்திச் செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. உள்ளுராட்சி சபை மூலமான அபிவிருத்திக்காகத் தமிழத் தேசியக் கூட்டமைப்பு இன்று  சிறிலங்கா அரசு விரித்துள்ள முட்படுக்கையைத் தாண்டிச் செல்ல வேண்டியுள்ளது..
 
இலங்கைக்கான உதவிகளை நிறுத்துவது என முன்வைக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமெரிக்க செனட் மற்றும் காங்கிரஸ் தரப்பு அங்கீகாரமளித்துள்ளது என சர்வதேச ஊடகங்களில் கடந்த வாரம் செய்தி வெளியானதை அடுத்து சிறிலங்கா அரசுக்கு மேலும் ஒரு நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.
 
வாஷிங்டனால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு இலங்கை பொறுப்புக் கூறாத பட்சத்தில் அபிவிருத்திக்காக வழங்கும் 13 மில்லியன் அமெரிக்க டாலர்களை இழக்க நேரிடும். எனவும் அவசரகால நடமுறைகளை மீளப்பெறுதல், ஊடக சுதந்திரத்துக்கு உறுதியளித்தல் மற்றும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலங்கை அரசு பொறுப்பு கூறாதிருப்பதாலேயே இலங்கைக்கான உதவிகளை நிறுத்துவது தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தப்படும் என அமெரிக்க வெளிவிவகார செயற் குழு கடந்த வியாழக்கிழமை தீர்மானம் எடுத்திருந்தது.
இதில் முக்கிய விடயமாகக் கொள்ள வேண்டியது ஒபாமாவின் நிர்வாகக் குழுவின் உயரதிகாரியான அமெரிக்க காங்கிரஸின் கொவார்ட் பேர்மன் இலங்கைக்கு எதிராக தீர்மானத்தை முன்வைத்திருந்தமையே.
 
கடந்த காலங்களிலும் அமெரிக்கா பெரிதாக எந்த உதவியும் செய்யவில்லை இந்த நிலையில் எதிர்காலத்திலும் அதன் உதவிகள் நிறுத்தப்படுவதால் பாதிப்புகள் ஏற்படப் போவதில்லை என்ற தொனியில் சிறிலங்கா அரசு தரப்பு அமைச்சர்கள் இது தொடர்பில் கருத்துகளைத் தெரிவித்திருந்தாலும்.  உண்மை அதுவல்ல என்ற உண்மையை சிறிலங்கா அரசு உள்வாங்கியே உள்ளது.
 
இந்த விடயத்தில் வெறும் பொருளாதார உதவிகளை மட்டும்தான் அமெரிக்கா நிறுத்துகிறதென்று சிறிலங்கா அரசு நினைத்துக் கொண்டால் அது தப்பாகவே அமைந்து விடும். அமெரிக்காவின் இலங்கைக்கான பல தடைகளின் இது முதல் தடையாகவும் அதேவேளை, பல விடயங்களுக்கான அமெரிக்காவின் முதல் அழுத்தமாகவுமே இதனை நோக்க வேண்டும். காங்கிரஸ் அரங்கத்தில் இலங்கையின் கொலைக்களங்கள் ஆவணப்படம் ஒளிபரப்பப்பட்டதை அடுத்தே இவ்வாறான தீர்மானம் முன்வைக்கப்பட்டுள்ளமை சிறிலங்கா அரசு புரிந்து கொள்ள வேண்டும்.
 
விமல் வீரவன்சவோ அல்லது சம்பிக்க ரணவக்கவோ இந்த விடயத்தில் சர்வதேச சண்டித்தனக் கதைகளை விடுவதால் எதுவுமே நடக்கப் போவதில்லை.
 
இதேவேளை, சர்வதே விவகாரங்களைக் கையாள்வதில் அமெரிக்காவும் பிரித்தானியாவும் பொதுவான கொள்கைகளையே கடைப்பிடித்து வருகின்றன. சிறிலங்கா தொடர்பில் அமெரிக்கா தற்போது எடுத்துள்ள தீர்மானத்தை நாளை பிரித்தானியாவும் எடுக்கக் கூடும்  என்ற ஓர் அச்ச உணர்வும் இன்று சிறிலங்கா அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இதற்காகத் தற்போது வெள்ளம் வரும் முன்பே அணைகட்டும் முயற்சிகளில் சிறிலங்கா அரச ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.
 
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் முன்னாள் அமைச்சர் மிலிந்த மொரகொடவும் பல சர்வதேச நாடுகளின் அரசுகளுடன் நெருக்கமிக்க உறவைக் கொண்டிருப்பவர்கள். இவர்கள் சொல்வதனைக் கூட அந்த அரசுகள் கேட்கக் கூடியவை. இதனை நன்கு அறிந்து கொண்ட சிறிலங்கா அரசானது இன்று இவர்கள் மூலம் இவ்வாறான சர்வதேச நாடுகளின் தடைகளிலிருந்து தன்னைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவம் நம்பகமான தகவல் வெளிவந்துள்ளன.
 
இதனை உறுதிப்படுத்தும் வகையில் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் சில கருத்துகளை வெனியிட்டிருந்தார். ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனை அவர் அண்மையில் சந்தித்த போது கூட அரசுக்காகப் பரிந்து பேசியிருந்தார் என்பதும் தெரிந்த விடயமே.
 
இந்த நிலையில்தான் முன்னாள் அமைச்சர் மிலிந்த மொரகொடவை அமெரிக்காவிடம் பரிந்து கேட்கும் ஒரு தூதுவராக சிறிலங்கா அரசு பயன்படுத்த முயற்சிப்பதாகதவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
 
கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் ஆளுங்கட்சி சார்பில் தன்னை மேயர் வேட்பாளராக நியமிக்க இணக்கம் தெரிவித்தால் அமெரிக்காவின் தடைகளைத் தான் தவிடு பொடியாக்கித் தருவேன் என்ற தொனியில் அவர் அரசுடன் பேரம் பேசலில் ஈடபட்டார் என்ற தகவல்களும் தற்போது வெளிவந்துள்ளன.
 
நடந்து முடிந்த உள்ளுராட்சித் தேர்தல்களில் பிரதான எதிர்க்;கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்கு வழமையான மண் கௌவுதல்தான் இம்முறையும் கிடைத்தது. அந்தக் கடசியால் ஓர் உள்ளுராட்சி  சபையைக் கூடப் பிடிக்க முடியாது போனது. கட்சித் தலைமைப் பொறுப்பை ரணில் ஏற்றுக் கொண்ட பின்னர் இது 18 ஐயும் தாண்டிய தோல்வியாகக் கருதப்படுகிறது. ஐக்கிய தேசியக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பிரான ரோஸி சேனநாயக்க இது தொடர்பில் கருத்துத் தொவித்திருந்த போது இந்தத் தேர்தலின் படுதோல்விக்குமான பொறுப்பையும் ரணிலே ஏற்க வேண்டுமெனப் பகிரங்கமாகவே கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
இதேவேளை, ரோஸி சேனநாயக்கவின் கருத்துக்குப் பதிலளிக்கும் வகையில் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர சில கருத்துகளைத் தெரிவித்தார்.  தேர்தல் ஒன்றில் ஐ.தே.க தோல்வியடைந்தால் கட்சியின் தலைமையை விமர்சிப்பதும் கட்சித் தலைமையை மாற்ற வேண்டும் என்பதும் கட்சி தொடர்பில் கடுமையான விமாசனங்களை முன்வைப்பதும் இன்று கட்சிக்குள்ள வாடிக்கையான ஒரு விடயமாகிவிட்டது. இவ்வாறெல்லாம் செயற்படுவதன் மூலம் நிச்சயமாகக் கட்சியை வளர்க்கவும் முடியாது ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது என ரணில் சார்புத் தன்மையுடன் மங்கள சமரவீர கருத்துகளைத் தெரிவித்திருந்தார். அவர் இவ்வாறு குறிவைத்து அடித்தது சஜித் பிரேமதாச அணியையே என்பதனை இலகுவாகப் புரிந்து கொள்ளக் கூடியதாகவிருந்தது.
 
சஜித் பிரேமதாச முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் மகன் அல்லவா? அவரும் சும்மாவிடவில்லை. மங்கள கருத்துத் தெரிவித்து மறு நாளே அவசர அவசரமாக ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்து கட்சியின் பிரதித் தலைவரான கரு ஜயசூரியவை கட்சியின் தலைவராக நியமிக்கப் போவதாகவும் அதற்கு அவர் இணக்கம் தெரிவித்துள்ளார் எனவும் அதிரடி அறிவிப்புச் செய்தார். இதனால் மாற்று அணி திக்கு முக்காடிப் போனது. இந்த ஊடகவியலாளர் மகாநாட்டின் போது ரணிலுக்கு எதிரான சஜித்துக்கு ஆதரவான அனைவரும் கலந்து கொண்டிருந்தனர்.
 
ஆனால் இவ்வளவு எல்லாம் நடந்து கொண்டிருக்க ரணில் விக்கிரமசிங்க லண்டனிலிருந்து முக்கிய அறிவிப்பு ஒன்றைச் செய்திருந்தார்.
 
ஐக்கிய தேசிய கட்சியில் உள்ளவர்கள் கட்சிக்குள் ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதற்கு பலவாறான கருத்துக்களை கொண்டுள்ள போதும் கட்சியின் ஒருமைப்பாட்டை பாதுகாக்கவும் அதனை கட்டியெழுப்பவும் பிரதித் தலைவர் கரு ஜயசூரியவுக்கு தான் விசேட பொறுப்புக்களை வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்திருந்ததன் மூலம் தான் நாடு திரும்பும் வரையிலான உட்கட்சிச் சூட்டை ஆற்றியுள்ளார்.
 
எது எப்படி இருப்பினும் சிறிலங்கா ஆளுந்தரப்பைப் பொறுத்த வரையில் ரணில் விக்கிரமசிங்கவே கட்சியினதும் எதிர்க்கட்சியினதும் தலைவராகவும் இருக்க வேண்டும் என்பதே உள்ளார்த்தமான விருப்பத்தைக் கொண்டுள்ளது. ஏனெனில் அவர் தலைவராக இருக்கும் வரை எந்தத் தேர்தலிலும் இலகுவாக வெற்றி பெற முடியும் என்ற யதார்த்தத்தை நடைமுறையிலேயே ஆளுந்தரப்பு புரிந்து வைத்துள்ளது. இலங்கையில் பலமான எதிர்க்கட்சி இல்லை என்ற கருத்தை ஆளுந்தரப்பு அடிக்கடி கூறி வருவதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அண்மைக் காலமாக ரணில் விக்கிரமசிங்க ஆளுந்தரப்புக்காக அதன் குரல் தரவல்ல அதிகாரியாக மாறி சர்வதேசத்திடம் குரல் கொடுத்து வருவதும் தெரிந்ததே.
 
வேதாளம் மீண்டும் பனை மரத்தில் ஏறியதான இன்னொரு கதையும் சிறிலங்கா அரசியலில் இடம்பெற்றுள்ளது. பிரித்தானிய தொலைக்காட்சியான செனல்-4 மீண்டும் திடீரென ஒரு காணொளியை ஒளிபரப்பி சிறிலங்கா அரசை சிக்கலுக்கு உள்ளாக்கியுள்ளது. விசேடமாக, பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ, ஐ.நாவுக்கான இலங்கையின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா ஆகியோர் தொடர்பிலேயே இந்தப் புதிய காணொளியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.  இறுதிக் கட்ட யுத்தத்தின் போது தமிழ் மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாயவின் உத்தரவின் பேரில் சுட்டுக் கொல்லப்பட்டனர் என சவேந்திர சில்வா தெரிவித்தார் என இந்தக் காணொளியில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதனை சிறிலங்கா அரசு, பாதுகாப்பு அமைச்சு, சவேந்திர சில்வா ஆகிய மூன்று தரப்புகளும் உடனடியாகவே நிராகரித்திருந்தன.
 
இதேவேளை, செனல்-4 தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ விடுத்திருந்த கோரிக்கையை பிரித்தானியா உடனடியாகவே நிராகரித்திருந்தது. ஊடக சுதந்திரத்தில் தலையீடு செய்யப் போவதில்லை என அறிவித்துள்ளது.
 
சனல் 4 ஊடக சுதந்திரம் கொண்டது. ஒவ்வொரு ஜனநாயக அரசாங்கமும் ஊடக சுதந்திரத்திற்கு மதிப்பளிக்க வேண்டும் என்பதே பிரித்தானியாவின் நிலைப்பாடாகும் என பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.