குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 27 ம் திகதி சனிக் கிழமை .

இந்திய பாராளுமன்றம் இன்று கூடுகிறது. இலங்கை பிரச்சனையை எழுப்பத் திட்டம்?லூயிஸ் ஆபர் கருத்து.

01 .08.2011சிறிலங்காவிலான நல்லிணக்கம் ஏற்பட உதவுவதற்குத் தென் ஆபிரிக்கா செய்யக்கூடியவை. - லூயிஸ் ஆபர் விடயம்கீழே... ஸ்பெக்ட்ரம், விலைவாசி உயர்வு, உள்ளிட்ட பல் வேறு பரபரப்புகளுக்கிடையில் மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று துவங்குகிறது.  பிஜேபி கட்சியின் சுஷ்மா ஸ்வராஜ் தமிழக மீனவர் பிரச்சனையை பாராளுமன்றத்தில் எழுப்ப நோட்டிஸ் கொடுத்துள்ளார். அதிமுக தலைவர் ஜெயலலிதா இலங்கைத் தமிழர் பிரச்சனை, கச்சத்தீவு, மீனவர் மீதான தாக்குதல் பிரச்சனைகளை எங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ரறத்தில் எழுப்புவார்கள் என்று தெரிவித்திருந்த நிலையில், நேற்று நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட திமுக எம்பி டி.ஆர். பாலு இலங்கையின் நடைபெற்ற இறுதிப்போரின் போது போர் விதிமீறல் நடந்திருப்பதாக ஐநா நிபுணர் குழு அறிக்கை அறிக்கை வெளியிட்டுருக்கும் நிலையில்,  இலங்கை மீது பொருளாதாரத் தடை கொண்டு வரும்படி பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பதோடு, தொடர்ந்து தாக்குதலுக்குள்ளாகும் மீனவர் பிரச்சனை தொடர்பாகவும் முடிவுகள் எடுக்க வேண்டும் இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் எங்கள் கட்சி உறுப்பினர்களும் கேள்வி எழுப்புவார்கள் என்று தெரிவித்தார் டி.ஆர்.பாலு.

 01.08.20111--சிறிலங்காவிலான நல்லிணக்கம் ஏற்பட உதவுவதற்குத் தென் ஆபிரிக்கா செய்யக்கூடியவை. - லூயிஸ் ஆபர்
 
நேர்மையாகச் சொல்வதானால், சிறிலங்காவின் LLRCI தென்ஆபிரிக்காவின் TRC க்கு ஒப்பிடுவது, TRC க்கு செய்யும் அவமரியாதையாகும்.
 
அநேக நாடுகளை விட அதிகமாக, தென்ஆபிரிக்கா அறிந்திருப்பது போல், ஒரு நாடு, அங்கே பல தசாப்த காலங்களாக நிலவி வந்த, உள்ளக முரண்பாடுகளை, கடந்த காலங்களின் உண்மைகளை வெளிப்படுத்துவதற்கான விடாப்பிடியான முயற்சிகளை எடுக்காமலும் நல்லிணக்கத்தை நோக்கிய அர்ப்பணிப்பான நகர்வுகளைச் செய்யாமலும் வெற்றிகொள்ள முடியாது. சிறிலங்கா இந்தப் பாடத்தைக்  கற்றுக் கொள்ளுமானால் எவ்வளவு நன்றாக இருக்கும்.
 
சிறிலங்கா படையினர் தமிழீழ விடுதலைப் புலிகளைப் போரில் தோற்கடித்து இரண்டு வருடங்கள் கடந்து விட்டன. இந்தப் போரானது, அதன் இறுதி மாதங்களில், பிரமாண்டமான அளவிலான தமிழ் பொது மக்களின் உயிர்கள் இழக்கப்;படுவதற்கு சிங்கள-பெரும்பான்மை அரசு மற்றும் கிளர்ச்சியாளர்கள் இரு தரப்பினருமே பங்களிப்பு செய்ததை கண்டது. இப்போதைய விட, அதிக சனநாயகமான, சமத்துவமான சமூகத்தை நோக்கிய, மெதுவான, வேதனை நிறைந்த பாதையில் பயணம் தொடங்குவதை விடுத்து, ஜனாதிபதி ராஜபக்ஷவினதும் அவரது சக்தி மிக்க சகோதரர்களதும் போருக்குப்  பிந்திய கொள்கைகள், இந்த நாட்டின் அரசியல் ரீதியான அமைப்புகளை மேலும் சீரழித்து, இனரீதியான பிளவை மேலும் ஆழமாக்கி விட்டிருக்கின்றன.
 
நல்லிணக்கத்தை நோக்கிய முன்னேற்றம் எப்போதுமே கடினமானதாகத்தான் இருக்கப் போகிறது. பலதசாப்தங்களாக நீடித்த, அரசியல் வன்முறை மற்றும் உள்நாட்டுப்போர் முதலியவை சிறிலங்காவினுடைய இனரீதியான சமூகங்கள், அரசியல் மயப்படுத்தப்பட்ட அமைப்புகள், சிறப்பாக, சட்டம் ஒழுங்கை நடைமுறைப்படுத்தலோடு தொடர்புபட்ட அமைப்புகளை,  இரு வேறு துருவங்களாக ஆக்கிவிட்டிருக்கின்றன. இந்த முரண்பாடுகளால் நூறாயிரக் கணக்கானவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள், காயப்படுத்தப்பட்டிருக்கிறார்கள், அல்லது இடம் பெயரச் செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பதுடன் ஒவ்வொரு சமூகத்திலும் பயங்கள் மற்றும் தவறான புரிந்து கொள்ளுதல்களை ஆழமாக விதைத்து விட்டிருக்கின்றன. இந்தச் சவால்களுக்குப் முகம் கொடுப்பதற்குப் பதிலாக, அரசானது, இந்தப் போர் 'பயங்கரவாதத்துக்கு'எதிரானதுதான்.
 
இது இனமுரண்பாடு அல்ல என்ற தனது வாதத்தில் பிடித்துக் கொண்டு தொங்கியபடி, சிறுபான்மையினரது பொருண்மிய மற்றும் அரசியல் எதிர்காலங்கள் தொடர்பான முடிவுகளை எடுப்பதிலிருந்து, அதிகரித்துச் செல்லும் அளவில், அரசு அவர்களை புறமொதுக்கி வருகிறது. நாட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் கூறப்படும் கதைகளை அது கட்டுப்படுத்துவதோடு உத்தியோகபூர்வ மாற்றுருக்களுக்குச் சவால் விடும் எதற்கும் எதிரான ஆக்ரோஷமான பதில் வினையையும் வெளிப்படுத்தி வருகின்றது.
 
ஒரு மில்லியனுக்கு அதிகமான எண்ணிக்கையிலுள்ள, புலம் பெயர்ந்தவர்களில் அனேகமானோர் த.வி, புலிகளின் கொடூரத்தன்மையையும் தமிழ் சமூகம் அடைந்திருக்கும் பெரும் சேதத்துக்கான பொறுப்பில் அதன் பங்கையும் ஏற்க விருப்பமின்றி இருப்பதானது, அரசின் கரத்தை வலுப்படுத்தி இருக்கிறது.
 
ராஜபக்ஷக்கள் வேறு ஒரு கதையைச் சொல்கிறார்கள். ஒரு வருட காலத்துக்கும் அதிகமான காலத்துக்கு முன், ஜனாதிபதியால் நிறுவப்பட்ட, கற்றுக் கொள்ளப்பட்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு (LLRCI)வின் ஊடாகவும், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறும் கடப்பாடு முதலியவற்றை நோக்கி உழைப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் இந்தச் செயல் முறையானது தென்ஆபிரிக்காவினுடைய யஸ்மின் சூக்கா உள்ளிட்ட ஐநா நிபுணர் குழுவால், அண்மையில் நிர்ணயம் செய்யப்பட்டிருப்பது போல், குறைபாடுகளைக் கொண்டதாகும். இந்த நிபுணர் குழுவின் அறிக்கையானது, சிறிலங்கா அரசு LLRCI இன் செயற்பாடுகள் தொடர்பாக தென்ஆபிரிக்காவின் உண்மைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு (TRC) ஐ முன்னுதாரணமாகக் கொண்டிருப்பதாக கோருவதை, குறிப்பான முறையில் ஆராய்ந்திருப்பதோடு, இந்த முக்கியமான முன்னுதாரணத்திலிருந்து சிறிலங்காவின் LLRCI வெகு தொலைவில் இருப்பதாகவும்  குறிப்பிட்டுள்ளது.
 
ஆனால், தென்ஆபிரிக்காவின் ஆணைக்குழுவுடன் அனேக விடயங்களில் ஒற்றுமையை LLRCI கொண்டிருந்தாலும் நல்லிணக்கத்துக்கு பங்களிப்பதற்கான, அதன் உள்ளாந்த திறன் ஆகக் குறைந்த அளவினதாகவே இருக்கும். தோல்வி அடைந்தவைகளும் அலட்சியப்படுத்தப் பட்டவைகளுமான ஜனாதிபதி விசாரணைகளைக் கொண்ட, சிறிலங்காவின் நீண்ட வரலாறு எடுத்துக் காட்டுவது போல், இந்த பொறிமுறைகள் இறுதியில் அதிகாரமெதுவும் இல்லாதவையாக ஆகிவிடும். இந்த நாட்டினுடைய போருக்கு பிந்திய செல்வழியானது, அது மாறவேண்டும் என ராஜபக்ஷக்கள் முடிவெடுத்தால் ஒழிய, மாறப் போவதில்லை. தாங்கள் அதிகாரத்தில் இருப்பதற்கானதும் அதுதான் இறுதி முடிவென்று ஆக்குவதற்கானதுமான வழியாக அவர்கள் முழுமையாக கட்டியணைத்திருக்கும் சிங்களதேசிய தொலை நோக்கிலிருந்து விலகுவதற்கான எதிலும் அவர்கள் எந்த விதமான ஆர்வத்தையம் காட்டவில்லை.
 
அதற்குப் பதிலாக, அவர்கள், வன்போக்கான முறையிலே, ஊடகத் துறையினரையம் அரசியல் எதிராளிகளையும் தொடர்ந்தும் ஒடுக்கி வருகிறார்கள.; இதே வேளை தங்களுக்கு சார்பான முறையில் தேர்தல்களை கையாள்வதோடு, சிவில் சமூகத்தை மௌனிக்கச் செய்தும் வருகிறார்கள். பெரும்பான்மை பலத்தின் மூலம் நாடாளுமன்றத்தில் வலிந்து நிறைவேற்றப்படும் அரசியலமைப்பு சட்ட திருத்தங்கள், ஜனாதிபதி பதவிக்கால வரையறைகளை நீக்கி விட்டிருப்பதோடு, சட்டமா அதிபர், நீதித்துறை மற்றும் பலவேறு 'சுயாதீனமான'ஆணைக்குழுக்கள் மீதான ஜனாதிபதியின் அதிகாரத்தை மேலும் வலுப்படுத்தி விட்டிருக்கின்றன.
 
முன்பு புலிகளால் ஆளப்பட்ட வடபுலப்பகுதிகளில் இப்போது படைத்துறையினர் மேலாண்மை கொண்டுள்ளனர். இவர்கள் சிவில் நிர்வாகத்தை தங்கள் கையில் எடுத்திருப்பதோடு நாளாந்த வாழ்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் கட்டுப்படுத்துகிறார்கள்.
 
போரின் இறுதிக் கட்டங்களிலே இருதரப்பினராலும் நிகழ்த்தப்பட்டதாக கூறப்படும் போர்குற்றங்கள் மற்றும் மனித இனத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு ஆதரவானவையும் அதிகரித்துக் கொண்டிருப்பவையுமான சான்றுகளை அரசு விடாப்பிடியாக நிராகரித்து இருக்கிறது. இந்தச் சான்றுகளில் ஐநா நிபுணர்குழு அறிக்கையும்,; ஐக்கிய இராச்சியத்தின் சனல் 4 இனால் யூன் 14ம் திகதி முதன்முதலில் வெளியிடப்பட்டதும் தற்போது சர்வதேச ரீதியாகவும் online  இலும் காட்சிப்படுத்துவதுமான 'சிறிலங்காவின் கொலைக்களங்கள்' என்ற அண்மைய தொலைக் காட்சி ஆவணப்படம் என்பனவும் அடங்குகின்றன. சிறிலங்கா படைகள் தவறான எதையும் செய்தார்கள் என்பதை சிறிலங்கா அதிகாரிகள் தொடர்ந்து மறுத்து வருவதோடு, மேலும் மேலும் சான்றுகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், மேற்படி குற்றங்களுக்கு வெள்ளையடிக்கும் அவர்களது முயற்சி, முன்னையவற்றைவிட அதிக அபத்தமானதாகவும் தோன்றுகிறது.
 
நிகழ்த்தப் பட்டதாகக் கூறப்படும் குற்றங்களுக்கு எந்த பொறுப்பையும் ஏற்க அரசு மறுப்பது, உருவாக்கி விட்டிருக்கும் விரக்தி மற்றும் போருக்கு பிந்தியதான அதனது நிகழ்சி நிரல்களும் சேர்ந்து, புதிதாக வன்செயல்கள் உருவாகும் ஆபத்தை அதிகமாக்கி விட்டிருக்கின்றன. அரசின் செல்வழியில் அடிப்படை மாற்றத்தை ஏற்படுத்த, சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டு;ம். இந்த செயல் முறையில் தென்ஆபிரிக்கா ஒரு முக்கிய பாத்திரத்தை வகிக்க முடியும். அது அதனுடைய செல்வாக்கோடு, புதிதாக உருவாகிவரும் வேறு சக்திகள் மற்றும் அணிசேரா நாடுகளின் உறுப்பினர்களுடைய செல்வாக்கையும் இணைத்து இரு தரப்பினராலும் புரியப்பட்டதாகக் கூறப்படும் கொடூரங்கள் தொடர்பாக, சர்வதேச விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டும் என்ற பரிந்துரை உள்ளிட்டதாக ஐநா நிபுணர்குழு பரிந்துரைகளை முன்னெடுக்கப் பயன்படுத்த வேண்டும்.
 
அத்துடன் சிறிலங்காவினுடைய போர்க்கால மற்றும் போருக்கு பிந்திய கொள்கைகளை, சர்வதேச ரீதியான ஆய்வுக்குட்படுத்துவதை, அதனுடைய இறைமையின் மீதான நவ காலனித்துவவாத தாக்குதல் எனக்கூறி நிராகரிக்க, சிறிலங்கா எடுக்கும் முயற்சிகளை நிராகரிக்க, மற்றைய நாடுகளை அது ஊக்கப்படுத்த வேண்டும்
 
பொறுப்புக்கூறும் கடப்பாட்டை உறுதிப்படுத்தவும் மரபு ரீதியாக தமிழ் பேசும், வடக்கு, கிழக்குக்கு  அதிகாரப் பரவலாக்கம் செய்தல் முதலான வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றினால் இந்த ஆய்வுகளுக்கான தேவை இல்லாமல் போய்விடும.;
 
இறுதியாக தென்ஆபிரிக்காவின் TRC உடன் தனது LLRCI ஐ ஒப்பிடுவதன் மூலம், அதற்குத் தகுதியில்லாத அங்கீகாரத்தை சிறிலங்கா அரசு பெற முயல்வதை தென்ஆபிரிக்கா எதிர்க்க வேண்டும். இவ்வாறான ஒரு ஒப்பீடானது, நேர்மையான முறையில் சொல்வதானால், ஒரு அவமதிப்பாகும். 
 
சிறிலங்கா தனது வன்போக்கான வரலாற்றை மீள நிகழ்த்துவதை தவிர்ப்பதானால், அதனை நேர்மையான முறையில் பதிவு செய்ய வேண்டியது மிகவும் அவசியமாகும். இதற்கு குறைவான எதையும் சிறிலங்கா குடிமக்கள் ஏற்க முடியாது.
 
(நன்றி: சர்வதேச நெருக்கடிகள் குழு)
லூயிஸ் ஆபர், சர்வதேச நெருக்கடிகள் குழுவின் தலைவராக இருக்கிறார்.
 

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.