குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 28 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

01.08.2011-இன்று சுவிசுநாட்டின் பிறந்ததினம்.குமரிநாட்டின் செய்தி

01.08..2011-இந்தச் சிறப்பிற்குரியநாள்  இவ்வாண்டு நாளையதினமான திங்கட்கிழமைவருவதால் சுவிசில்வாழும் மக்கள் அனைவரும் பெரும்மகிழ்ச்சியில் காணப்படுகின்றனர். உறவினர்நண்பர்களுடன் கூடிமகிழும் நிகழ்வுகள் வெடிகொழுத்தும் நிகழ்ச்சிகள் இடம்பெற ஆரம்பித்துவிட்டது. நாளைய இரவு 10.00 மணி முதல் 11.00 வரை சுவிசுநாட்டின் எல்லா இடங்களிலும் வானவேடிக்கை இடம்பெறும்  மலைச்சாரல் வெளிகள் நீர்த்தேக்கவெளிகள்  புற்தரைகள் இவற்றில் வானவேடிக்கைகள் அழகாக இருக்கம். இந்த இருநாட்கள்மட்டுமே இங்கு வெடிகொழுத்த முடியும்.

 சுவிசுநாட்டிற்கு முதலில் ஒசுறியாவைச் சேர்ந்த வேடுவஇனத்தவர்கள் குடியேறினார்கள் அவர்கள் போன்று சேர்மனியர்கள் மாடுவளர்ப்பதற்கு ஏற்றபகுதியாகக்கருதிக் குடியேறினார்கள்.அவர்கள் போன்று   பிரான்சுக்காரர்கள்          இத்தாலியர்கள் ரொமானியர் கூடியேறிக்கொண்டார்கள் என்றகதைகள் உண்டு.

மேலே காணப்படுகின்றவர்கள் தான் சுவிசுநாட்டின் சுழற்சிமுறை ஆட்சியில் இருப்பவர்கள் ஏழுபோர் கொண்டகுழு இருந்துதலைமை ஆட்சிப் பொறுப்பை நடத்துவார்கள்.























 இந்தச்சுவிசு நாடு எந்தநாட்டின்  ஆக்கிரமிப்பிற்கும் உள்ளாகவில்லை அதனால் சுவிசுநாடு  சுகந்திரதினமென்று ஒருநாளையும் கொண்டாடுவதில்லை.

 நிர்வாகஆரம்பதினத்தை கருத்தில்கொண்டோ என்னவோ 01.08. ஒவ்வோரு ஆண்டும் சுவிசு நாட்டின் பிறந்தநாளாகக் கொண்டாடுகின்றார்கள். விடுமுறையும் கொடுக்கின்றார்கள்.

சுவிசுநாட்டின்தலைநகர் பேணில் நாடாளுமன்றத்திற்கு பின்புறமாக ஓடிக்கொண்டிருக்கும் ஆற்றிற்கு அண்மியமாக அல்லது 800 மீற்றர் உயரமான மலைச் சமவெளியில் வெடிப் பெருநாளை பெரியளவில் ஏற்பாடுசெய்வார்கள்.

இது மிகவும் அழகாக இருக்கும். அதே போன்று சிறுநிவாகப்பிரிவுகளும்  கமாண்டேக்களும் (உள்ஊர்ஆட்சிசபைகள். நகரசபைகள் என்பன ஏற்பாட்டுகளைச் செய்துகொள்ளம்.)

பேணில் பீல் இன்ரர்லாகன் மூற்ரன்சே  துாண்சே  இவ்வாறு பலபகுதிகளில் பெரியளவில் நடக்கும். அரசியல் நகரமான யெனிவாவில் நீர்த்தேக்கத்தில் வண்ண ஒளிகள் மிளிர வெடிஓசை ஏற்ற இசை வானவேடிக்கை கணக் கண்கொள்ளாக்காட்சியாக இருக்கும்.

 இதேபோன்று பொருளாதாரநகரமான சூரிச்சிலும் மிகவும்அழகாக நிகழும். பாசல்நகரம் நீர்நிலைகள் உள்ள நகரம் அங்கும் அழகாக இருக்கும். அடுத்து 5 ஆம் மாநிலமாகத்திகழும் லுர்ச்சேன் மாநிலத்திலும் நீர்த்தேக்கக் கரையோரத்திலே நகரம் இருப்பதால் அதுவும் அழகே! அதேபோன்று மலைகளும் நீர்த்தேக்கங்களும் அதிகமுள்ள லவுசான் மாநிலஅழகும்குறைவில்லை.

சுவிசுநாட்டில் டொச்சுமொழி(சேர்மன்மொழி) பிரஞ்சுமொழி இத்தாலிமொழி ரோமானிசமொழி என்பனபேசப்படுகிறது. மிகக்குறைந்தளவினரே ரொமானிசமொழியைப் பேசுகின்றார்கள். மற்றைய மும்மொழிகளும் அந்தந்த நாட்டின் எல்லை மாநிலங்களிலும் அதை அண்டிய மாநிலங்களிலும்  பேசுவார்கள்.சுவிசுதொடர்பான சில சிறப்புப்படங்களை வெளியிட உள்ளோம்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.