குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 28 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

புயலடித்து ஓய்ந்தது போல இருக்கின்றது யாழ்ப்பாணம் - வைரவநாதர்:-

31.07.2011  புயலடித்து ஓய்ந்தது போல இருக்கின்றது யாழ்ப்பாணம். தங்கள் வீட்டு  மதில்களில் ஓட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளை பெரும்பாலானவர்கள் கிழித்துப்போட்டுவிட்டனர். ஜனாதிபதி சுவரொட்டிகளில் சிரிப்பதால், அவற்றை கிழித்துப்போட பலரும் அஞ்சியுள்ளனர். பின்னால் திரிந்த அரச அதிகாரிகள் பலரும் கூட இப்பொழுது சொந்த தொழிலுக்கு திரும்பிவிட்டனர். யாழ்ப்பாணம் இப்போது நிம்மதிப்பெருமூச்சு விடுகின்றது.
 
கடந்த வார இப்பந்தியில் எதிர்வு கூறப்பட்டது போன்று தீவகம் தவிர்ந்த ஏனைய உள்ளூராட்சி சபைகள் கூட்டமைப்பு வசமே சென்றுள்ளன. காரைநகர் ஐக்கிய தேசிய கட்சி வசம் செல்லலாமென எதிர்பார்க்கப்பட்டபோதும்,  அதுவும் கூட்டமைப்பிடம் சென்றுவிட்டது. அங்கு ஐக்கிய தேசியக்கட்சி 3 ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுவிட்டது. கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று உள்ளூராட்சி சபைகளும் கூட கூட்டமைப்பிற்கே சொந்தமாகிவிட்டது.
 
மீள்குடியமர்வு, அபிவிருத்தி பற்றியே தேர்தல் பிரச்சாரத்தில் கூறிவந்த அரச தரப்பு, இறுதி நாட்களில் வாக்காளர்களை அச்சுறுத்தி அடி பணிய வைக்கவும் முற்பட்டிருந்தது. அதற்கு இராணுவத் தரப்பினதும், துணைக்குழுக்களதும் துப்பாக்கி முனைகள் செயற்பட்டிருந்தன. மறுபுறத்தே வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கூட அச்சுறுத்தப்பட்டனர். பெரும்பாலும் அவர்களது குடும்பங்கள் கூட அசௌகரியங்களுக்குள்ளாகியிருந்தன. ஆனாலும் இவை அனைத்துமே எதிர்விளைவுகளையே அரசுக்குத் தந்துள்ளன.
 
நாய்கள் கொன்று வீசப்பட்டது முதல் வீடுகளுக்கு கல்கள், கழிவுகள் எறியப்படுவது வரை, அச்சுறுத்தல்கள்இறுதி நாள் வரை அதிகரித்திருந்தன. வாக்களிப்பு தினத்தன்று கூட அதிகாலை வேளை மிரட்டல் கடிதங்கள் வீடு தேடிச் சென்றன. வாக்களித்து வீடு திரும்பும் வேளையில் கூட ஆதரவாளர்கள் தாக்கப்பட்டனர். கழிவு ஓயிலும் வீசப்பட்டிருந்தது. இவை எல்லாவற்றையும், உரிய தரப்புக்கள் மேற்பார்வை செய்தவண்ணமேயிருந்தன.
 
கிளிநொச்சியில் மீண்டும் உச்சபட்டச அடக்குமுறைகள் அரங்கேற்றப்பட்டிருந்தன. அங்கு இராணுவ நிர்வாகமே அமுலில் உள்ளதென்பது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தலைகளில் துப்பாக்கிகள் வைக்கப்பட்டு, 'வீட்டிற்கு' வாக்களிக்க கூடாதென மிரட்டப்பட்டனர். வாக்காளர் அட்டைகளைப் பறிப்பதற்காக வீடுகளது கதவு, யன்னல் கூட உடைக்கப்பட்டன. பலாத்காரமாக வாகனங்களில் ஏற்றப்பட்டு மக்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இவை, இந்திய அமைதிப்படை காலத்தை நினைவுபடுத்துவதாக கூறினார் கிளிநொச்சி மூத்த பிரஜையொருவர்.
 
யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலும் வாக்களர்களை அச்சுறுத்தவென, வாக்களிப்பு மையங்களை அண்டி படையினர் நிறுத்தப்பட்டிருந்ததை காணக் கூடியதாகவிருந்தது.  வாக்களிப்பு நிலைய வாசல்களில் கூட வாக்களிப்பு தினத்தன்று அன்பளிப்புகள் பகிர்தளிக்கப்பட்டன. வெற்றிலைச்சின்னம் பொறிக்கப்பட்ட தீப்பெட்டி முதல், பணம் வரை அவை இருந்தன. வாக்கொன்று ஆயிரம்  முதல் ஆயிரத்து ஐநூறு வரை விலை போயிருந்தது.
 
வீட்டிற்கு வாக்குகள் கிடைக்கலாமென்ற எதிர்பார்ப்புள்ள பகுதிகள் அடையாளப்படுத்தப்பட்டு அரச தரப்பால் இலக்கு வைக்கப்பட்டன. அச்சுறுத்தப்பட்டு வாக்காளர்கள் வீடுகளுள் முடக்கப்பட்டனர். 'வீட்டுக்கு வாக்களித்தால் சித்திரைவதைகளுக்குள்ளாவீர்கள்' என அச்சுறுத்தும் நாடகங்களும் அரங்கேற்றப்பட்டன. இரவில் எழுப்பப்பட்ட அலறல் ஒலிகளால் மக்கள் அச்சம்கொள்ள வைக்கப்பட்டனர்.
 
வாக்களிப்பு தினத்தன்று காலையில் கூட கள நிலவரம், கவலைக்கிடமாகவே இருந்தது. ஆளுந்தரப்பு வேட்பாளர்கள் வாக்களிப்பு நிலையங்களுள் சரளமாகவே நடமாடினார். பல இடங்களில் மாதிரி வாக்குச் சீட்டுக்கள் கூட அச்சிட்டு வழங்கப்பட்டன. வாக்களிப்பு நிலைய சூழலில் சரளமாகவே ஆளும் தரப்பின் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுமிருந்தன. 'போத்தல்'களும் பகிர்ந்தளிக்கப்பட்டன.எனினும் இவை பற்றி பொலிஸ் தரப்பு கண்டுகொள்ளவில்லை. வெறுமனனே வேடிக்கை பார்க்கவே அவர்களால் முடிந்தது.
 
கூட்டமைப்பின் கணிசமான பெருப்புள்ளிகள் ஒதுங்கியிருந்து வேடிக்கை பார்க்க முழு அளவினில் இளஞ்சமூகமே வெற்றிக்காக இம்முறையும் பாடுபட்டுள்ளது. கணிசமான சபைகளில் அதிகூடிய விருப்புவாக்குகளை இளம் சமூகமே பெற்றுமுள்ளது. உச்சபட்ச கெடுபிடிகள் மத்தியிலும் வாக்காளர்களை வாக்களிப்பு நிலையங்களுக்கு அழைத்துச் சென்றிருந்த பெருமையும் இந்த இளம் ஆதரவாளர்களையே சாரும்.
 
ஈழமக்கள் ஜனநாயக் கட்சி இணைந்துகொண்டிருந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வழமை போன்று தனக்கென தக்கவைத்துள்ள வாக்குகளையே இத்தேர்தலிலும் பெற்றுள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல் காலப்பகுதிகளில் கிட்டிய வாக்குகள் எந்தவொரு மாற்றமுமின்றி அவர்களுக்கு கிட்டியிருக்கின்றது. படையெடுத்து வந்த  ஜனாதிபதி மற்றும் அமைச்சர்களாலோ, அவர்களது ஆசைவார்த்தைகளாலோ குடாநாட்டில் புதிய வாக்காளர்கள் எவரையும் கவர்ந்திழுக்க முடியாது போய்விட்டது. அபிவிருத்தி பற்றியும், தொழில்வாய்ப்புக்கள் பற்றியும்  மீள்குடியமர்வு பற்றியும் கூட வாய்கிழிய கத்தியதற்கு ஏதுமே கிட்டியிருக்கவில்லை.
 
மூன்று தசாப்தங்களுக்கு மேலாக நீடித்த யுத்தத்தின் வடுக்கள் நீங்கிப்போவதென்பது சாதாரணமானதொன்றல்ல. யுத்தத்தின் அவலங்களை ஒவ்வொரு தமிழ்க் குடும்பங்களும் ஏதோவோரு வகையில் எதிர்கொடேயுள்ளனர். அவை உயிர்களாகவோ உடமைகளாகவோ அல்லது சிலவேளைகளில் உளவியல் ரீதியாகவோ இருக்கலாம். அவற்றுக்கு உரிய நிவாரணங்கள் எங்கிருந்தும் இதுவரை கிடைத்திருக்கவேயில்லை. காணாமல் போனவர்கள் சொந்த ஊர் திரும்பவில்லை. இவ்வாறு தமிழார்களின் வாழ்வில் எல்லாமே வெறுமையாகவே இருக்கின்றது.
 
நாள்தோறும் சடலங்கள் சிதறிக்கிடந்த வீதிகளுக்கு எவருமே கார்பெற் போட்டுத் தருமாறு கேட்டிருக்கவில்லை.  இடித்தொதுக்கப்பட்ட மண்ணில் அடிக்கல் நாட்டுவதை அவர்கள் விரும்பவில்லை. மாறி மாறி ஆட்சிபீடமேறும் அரசுகள் அற்ப சலுகைகள் மூலம்  தமிழ் சமூகத்தை வாய்மூட வைக்க நிர்ப்பந்திக்கின்றன. சில வேளைகளில் அவர்களது பங்காளிகளுக்கு அவை பொருத்தமாகவும் இருக்கலாம். ஆனால் மக்களுக்கு அவ்வாறானதோர் நிலை இருக்கவில்லை.
 
உள்ளூராட்சி சபைத் தேர்தல் வாக்களிப்பு சில விடயங்களை உறுதியாகச்  சொல்லியிருக்கின்றது. அற்ப சலுகைகளுக்கு விலைபோக தமிழர்கள் தயாராகவில்லை.  தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் கூட்டமைப்பினரே. அவர்களுடன் பேசியே அரசாங்கம் தீர்வொன்றை முன்வைக்க வேண்டும் சர்வதேசத்திற்கு தமிழ் மக்களின் செய்தி இது தான் என்பவையே அவையாகும்.
 
மறபுறத்தே கூட்டமைப்பு தொடர்ந்தும் முதியவர்கள் இல்லமாக இருக்கமுடியாதென்பதும் புதிய செய்திகளில் ஒன்றாகும். கூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றவர்களுள் கணிசமானோர் இளஞ்சமூகத்தினராவர். பெரும்பாலான உள்ளூராட்சி சபைகளுக்கு அவர்களே தலைமை தாங்கப் போகின்றனர். அவர்களுள் தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈ.பி.ஆர். எல். எவ், ரெலோ, புளொட் மற்றும் தமிழரசுக்கட்சி என பலரும் உருவாக்கி வந்துள்ளார்கள். அவர்களூடாக கிராம மாவட்டங்களிலிருந்து கட்டமைப்புக்களை கட்டி யெழுப்புவதே கூட்டமைப்பிற்கு நீண்டகால நோக்கில் சிறந்த அடித்தளமாகும்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.