குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 28 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

இலங்கை உட்பட்ட நாடுகளை அழிக்க மேற்குலகம் எடுக்கும் முயற்சிகளை நிறுத்த ஈரான் தலைமை ஏற்க வேண்டும்பசில்

 31.07. 2011  பொருளாதார ரீதியில் வளர்ந்துவரும் இலங்கை உட்பட்ட நாடுகளை அழிக்க மேற்குலக நாடுகள் எடுக்கும்; முயற்சிகளை நிறுத்த ஈரான் தலைமை ஏற்க வேண்டும் என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராயபக்ச கோரிக்கை விடுத்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள காங்கேயனோடை கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்ட வீட்டு திட்டம் இன்று உத்தியோகபூர்வமாக  திறந்துவைக்கப்பட்டது.இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே இதனைக் குறிப்பிட்டார்.
 
இந்த வீட்டுத்திட்டமானது முழுமையாக ஈரான் அரசாங்கத்தின் நிதியுதவியுடன் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிகழ்வில் ஈரான் பிரதி வெளிவிவகார அமைச்சர் செய்த் அமீர் மன்சூர் பேர்காய், பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராசபச, பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.கிசுபுல்லா, கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், இலங்கைக்கான ஈரான் தூதுவர் மஹ்மூத் ரஹ்மி ஜோர்ஜி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 
இதன்போது வீடுகளின் சாவிகளை ஈரான் பிரதி வெளிவிவகார அமைச்சரினால் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.
 
170 மில்லியன் ரூபா நிதியுதவில் அமைக்கப்பட்டுள்ள இந்த வீட்டு திட்டதில் 70 வீடுகள், பள்ளிவாசல், சிறுவர் விளையாட்டு மைதானதம் மற்றும் சுகாதார நிலையம் என்பன உள்ளடங்குகின்றன.
 
இசவ்வாறு நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த வீடுகளில் 50 வீடுகள் முஸ்லிகளுக்கும் 20 வீடுகள் தமிழ் மக்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த 20 வீடுகளும் சில ஆண்டுகளில் எவரகைக்கு போகும்?

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.