குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2054

இன்று 2023, புரட்டாசி(கன்னி) 30 ம் திகதி சனிக் கிழமை .

மரண அறிவித்தல்

கனடாவில் மட்டுமல்ல உலகெங்கும் உள்ள தமிழ் வாசகர்கள் அனைவர்களுக்கும் நன்கு அறிமுகமானவரும், கனடா உதய்ன் பத்திரிகையில் கடந்த பதினைந்து வருடங்களுக்கு மேலாக “பூநகரான் பார்வையில்” என்னும் தொடரை எழுதியதன் மூலம் ஆயிரக்கணக்கானவர்களை தனது கருத்துக்களால் கவர்ந்தவரும், கனடா தமிழ் விசன்”  ( TVi) தொலைக்காட்சியிலும் அரசியல் கலந்துரையாடல்களில் தொடர்ச்சியாக பங்கெடுத்தவருமான திரு பூநகரான் குகதாசன் காலமான செய்தியை அறிந்திருப்பார்கள்.

யாழ்ப்பாணம் இந்து கல்லூரி பழைய மாணவர்கள், இலங்கை தபால் திணைக்கள முன்னாள் உத்தியோகத்தர்கள்,கனடா வாழ் கலை இலக்கிய அன்பர்கள் மற்றும் அரசியல் ஆர்வலர்கள் வர்த்தக அன்பர்கள் ஆகியோர் பெருமளவில் அமைதியாக வந்து திரு பூநகரான் குகதாசன் அவர்களுக்கு தமது இறுதி அஞ்சலியை செலுத்தினர்.

 

அவரது துணைவியார் தனலட்சுமி மற்றும் இரண்டு பிள்ளைகள் அபிராமி, தர்மினி ஆகியோர் மற்றும் உற்றார் உறவினர்கள் பலர் அங்குகண்ணீர் சிந்தியவண்ணம் காணப்பட்டார்கள்.

இரங்கல் உரை பகுதியை எழுத்தாளர் திரு குயின்றஸ் துரைசிங்கம் தொகுத்து வழங்கினார். முதலாவது இரங்கலுரையை கனடா உதயன் திரு ஆர்,என். லோகேந்திரலிங்கம் ஆற்றினார்.

இங்கே காணப்படும் படங்கள் அங்கு எடுக்கப்பட்டவை ஆகும்.