குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 26 ம் திகதி வெள்ளிக் கிழமை .

தென்னாபிரிக்காவிடம் பாடம் கற்க வேண்டிய இலங்கை!

 29.07.2011-  இலங்கையானது தென்னாபிரிக்காவிடமிருந்து மாத்திரமே பாடத்தைக் கற்றுக்கொள்ள முடியும் என்று சர்வதேச நெருக்கடிக் குழுவின் தலைவரான லூயிசு ஆர்பர் தெரிவித்துள்ளார் இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு தென்னாபிரிக்க செய்யவேண்டியது என்ன என்ற தலைப்பில் பிரித்தானியாவின் த சன்டே டைம்சு பத்திரிகைக்கு லூயிசு ஆர்பர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

கடந்தகால உண்மையை வெளிப்படுத்துவதற்கான முயற்சி மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான அர்ப்பணிப்பு என்பன இல்லாமல் பல தசாப்தகால உள்நாட்டுப் போரில் இருந்து மீளமுடியாது என்பதனை ஏனைய நாடுகளைவிட தென்னாபிரிக்கா நன்கறிந்துள்ளது.

இந்தப் பாடத்தை இலங்கை தென்னாபிரிக்காவிடமிருந்து மாத்திரமே கற்றுக்கொள்ள முடியும். யுத்தத்தின் இறுதி மாதங்களின்போது பெரும்பான்மை சிங்கள அரசாங்கத்திற்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் இடம்பெற்ற யுத்தத்தில் தமிழ் பொதுமக்களுக்கு பாரிய இழப்புக்கள் ஏற்பட்டன. தமிழீழ விடுதலைப்புலிகளுடனான யுத்தம் நிறைவுற்று இரண்டு வருடங்கள் நிறைவுற்றுள்ளது.

வலி நிறைந்த பாதையிலிருந்து மெதுவாகவிடுபட்டு ஜனநாயத்தையும் மற்றும் சமத்துவமான சமுதாயத்தையும் நோக்கி நகர்வதற்கு மாறாக போருக்குப் பின்னரான ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவினதும் அவருடைய பலம் வாய்ந்த சகோதரர்களும் கொள்கைகள் நாட்டின் அரசியல் நிறுவனங்களை பாதிக்கச் செய்வதாகவும், இனப்பிளவுகளை ஆழமாக்குவதாகவும் காணப்படுகிறது. நல்லிணக்கத்தை நோக்கிய முயற்சிகள் எப்போதும் நெருக்கடியாகவே இருக்கப்போகின்றது.

தசாப்த காலமாக நீடித்த அரசியல் வன்முறையும் உள்நாட்டு யுத்தமும் இலங்கையின் இன சமூகங்களை துருவமயப்படுத்தியிருப்பதுடன் நிறுவனங்களையும் அரசியல்மயமாக்கியுள்ளன. குறிப்பாக சட்டம் ஒழுங்கில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அரசியல் மயமாக்கப்பட்டுள்ளன. யுத்தத்தினால் பல்லாயிரக்கணக்கானோர் இறந்தும், காயமடைந்தும் அல்லது இடம்பெயர்ந்தும், பீதி மற்றும் புரிந்துணர்வின்மை என்பனவற்றுடன் இருக்கின்றனர்.

இந்த சவால்களுக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக அரசாங்கமானது சிறுபான்மையினர் தொடர்பாக அவர்களின் பொருளாதார அரசியல் எதிர்காலத்தைத் துண்டிக்கும் நடவடிக்கைகளை அதிகரித்துக்கொண்டிருக்கின்றன. யுத்தமானது பயங்கரவாதத்தைப் பற்றியதே என்றும் இன நெருக்கடியால் ஏற்பட்டதல்ல எனவும் கூறுவதிலேயே அரசாங்கம் ஒட்டிக்கொண்டுள்ளது.

அதேவேளை அதிகமான புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் விடுதலைப் புலிகளின் கொடூரத்தை அங்கீகரிப்பதற்கு விருப்பமற்ற தன்மை காணப்படுவதுடன், தமிழ் சமூகத்தை அதிகளவு பிளவுபடுத்தியதற்கான புலிகளின் பங்கானது அரசாங்கத்தின் கரத்தை வலுப்படுத்தியுள்ளது. எந்தவொரு பொறுப்பையும் எடுப்பதற்கு அரசாங்கம் மறுப்பதானது வன்முறைகளை மீளப்புதுப்பிப்பதற்கான அபாயத்தை மேலும் அதிகரித்து வருகின்றன. இந்த விடயத்தில் அடிப்படை மாற்றத்திற்கு சர்வதேச சமூகம் முன்தள்ளிவிட வேண்டிய தேவை காணப்படுகிறது.

இந்த நடவடிக்கைகளில் தென்னாபிரிக்கா முக்கியமான பங்களிப்பை ஆற்ற முடியும். ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையின் சிபாரிசுகளை முன்கூட்டியே அமுல்படுத்துமாறு அணிசேரா அமையத்தின் உறுப்பினர்கள் மத்தியில் தென்னாபிரிக்கா தனது செல்வாக்கைப் பயன்படுத்த முடியும்.

போர்க்கால மற்றும் போருக்குப் பின்னரான தனது கொள்கைகள் தொடர்பான ஏதாவது சர்வதேச மட்ட பரிசீலனைகளை தனது இறைமையின் மீதான நவ காலனித்துவத் தாக்குதல்களென நிராகரிக்கும் இலங்கையின் முயற்சிகளை நிராகரிக்கச் செய்வதற்கு ஏனைய அரசாங்கங்களை தென்னாபிரிக்கா ஊக்குவிக்க வேண்டும் என்று சர்வதேச நெருக்கடிக் குழுவின் தலைவரான லூயிஸ் ஆர்பர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.