குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 1 ம் திகதி புதன் கிழமை .

காவல்துறை, இராணுவத்தினரைத் தவிர்ந்த வேறு எவருக்கும் ஆயுதமேந்த அனுமதியில்லை – கோத்தாபய--அவசரகாலச் சட்

27 .07.2011   அவசரகாலச் சட்டத்தை நீக்குவது குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவசரகாலச் சட்டத்தை நீக்குதல் அல்லது தேவையற்ற சரத்துக்களை நீக்குதல் ஆகியன தொடர்பில் அமைச்சரவை கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
அவசரகாலச் சட்டத்தை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டால் அடுத்த மாதம் அவசரகாலச் சட்டம் நீடிக்கப்பட வேண்டிய அவசியம் கிடையாது என அரசாங்க வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
எனினும், அவசரகாலச் சட்டத்தின் தேவையற்ற சரத்துக்கள் நீக்கப்பட்டால் பாராளுமன்றில் யோசனைத் திட்டமொன்று சமர்ப்பிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
 
அவரகாலச் சட்டத்தை நீக்குதல் மற்றும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் ஒத்தி வைப்பு தொடர்பில் சர்ச்சை நிலைமை ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
 
குறிப்பாக அவசரகாலச் சட்டத்தின் கீழ் நாட்டின் 23 உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ம் திகதி வரையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டால், குறித்த தேர்தல் ஒத்தி வைப்பு குறித்த தீர்மானம் வலுவற்றதாக மாறும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 
கொழும்பு மாநகரசபையை அதிகாரசபையாக மாற்றும் முனைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
 
மாநகரசபையை, அதிகாரசபையாக மாற்றுவதற்கு சட்டத் திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டும் எனவும், இந்த சட்டத் திருத்த யோசனைகளை சமர்ப்பிக்க சில மாத காலம் தேவைப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
 
அவசரகாலச் சட்டத்தை நீக்குமாறு சர்வதேச சமூகம் தொடர்ச்சியாக அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 
அவசரகாலச் சட்டம் நீக்கப்படாத காரணத்தினால் ஐரோப்பிய ஒன்றியம் ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைத் திட்டத்தை ரத்து செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
அவசரகாலச் சட்டம் நீக்கப்பட வேண்டுமென அமெரிக்காவும் வலிறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 
காவல்துறையினர் மற்றும் முப்படையைச் சேர்ந்தவர்களைத் தவிர்ந்த வேறு எந்தத் தரப்பினருக்கும் ஆயுதமேந்த அனுமதி அளிக்கப்படவில்லை என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
 
குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கிய தரப்பினரும் ஆயுதம் வைத்திருக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
அரசியல் பின்னணி மற்றும் ஏனைய காரணிகளை கருத்திற் கொள்ளாது சட்டவிரோதமான முறையில் ஆயுதங்களை வைத்திருப்போருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையினருக்கும், இராணுவத்தினருக்கும் தாம் உத்தரவு பிறப்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
 
சட்டவிரோத ஆயுத பாவனை தொடர்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலி உறுப்பினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
சட்டவிரோத ஆயுதங்களை பயன்படுத்துவோர் கைது செய்யப்படுவர் என அவர் தெரிவித்துள்ளார்.
 
வடக்கு தேர்தல்களின் போது இராணுவத்தினர் எவ்வித தலையீடுகளையும் செய்யவில்லை எனவும் சில வங்குரோத்து அடைந்த அரசியல்வாதிகள் இவ்வாறான போலிக் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இராணுவத்தினர் தலையீடு செய்திருந்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் பாரியளவில் வெற்றியீட்டியிருக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
 
தமிழீழ விடுதலைப் புலிகள் இயங்கிய காலத்தில் வடக்கு கிழக்கு தேர்தல்களின் போது எவ்வாறான தாக்கம் காணப்பட்டது என்பதனை நினைத்துப் பார்க்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
 
2004ம் ஆண்டு ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் எவ்வாறு தலையீடு செய்தனர் என்பது குறித்து ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
யுத்தக் குற்றச் செயல்கள் n;தாடர்பில் முதலைக் கண்ணீர் வடிக்கும் பலர் தமிழீழ விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பில் குரல் கொடுக்கத் தவறியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
செனல்4 ஊடகத்தின் ஆவணப்படத்தை அடிப்படையாகக் கொண்டு இலங்கையில் யுத்தக் குற்றச் செயல்கள் இடம்பெற்றதாக தீர்மானிப்பது முட்டாள்தனமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
யுத்தத்தின் பின்னரான அபிவிருத்திப் பணிகளை தடுத்து நிறுத்தும் நோக்கில் இவ்வாறான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
வெளிநாடுகளின் தலையீட்டினால் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் மேலும் நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிடலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
 
தமிழீழ விடுதலைப் புலிகள் எவ்வாறு சிறுவர் சிறுமியரை பலவந்தமாக படையில் இணைத்து கொண்டனர் என்பது தொடர்பில் யுனிசெப் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
தமிழீழ விடுதலைப் புலிகள் யுத்த ரீதியாக தோற்கடிக்கப்பட்டுள்ள காரணத்தினால் பாதுகாப்பு ஏற்பாடுகளை தளர்த்துவது புத்திசாதுரியமான தீர்மானமாக அமையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நோர்வேயில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் இதனையே பறைசாற்றி நிற்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
தனிப்பட்ட நபர் ஒருவரினால் எவ்வாறான ஓர் அழிவினை ஏற்படுத்த முடியும் என்பது நோர்வே தாக்குதலின் மூலம் வெளிப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
 
எனவே தொடர்ச்சியாக விழிப்புடன் செயற்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
யுத்தத்தின் பின்னரான இலங்கையில் சர்வதேச சமூகம் முக்கியமான பங்கினை ஆற்ற முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
 
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கு புலம்பெயர் தமிழர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
 
இலங்கைக்கு எதிரான பிரச்சாரங்களை புலம்பெயர் தமிழர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளார்.
 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.