குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 26 ம் திகதி வெள்ளிக் கிழமை .

போர்க்குற்றவிசாரணை வேண்டாம் – புலம்பெயர் மக்களுக்கு சுமந்திரன் புத்திமதி!

26.07.2011-- லண்டனில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரித்தானியக் கிளை ஒழுங்கு செய்திருந்த கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் தேசியப் பட்டியல் மூலம் நுழைந்த சுமந்திரன் உரையாற்றினார். புலம்பெயர் தமிழ் மக்களின் செயற்பாடுகளை தான் பிரித்தானியாவிலும் வேறு இடங்களிலும் சந்தித்த இராஜதந்திரிகள் விமர்சித்ததாகவும், புலம்பெயர் தமிழ் மக்களின் செயற்பாடுகளை தாம் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை என இராஜதந்திரிகள் தெரிவித்ததாக சுமந்திரன் தெரிவித்தார்.சுமந்திரன் உரையாற்றினார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், இலங்கையில் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் போது, அது பெரும்பான்மை சிங்கள மக்களால் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வாக அமைய வேண்டும். இலங்கை அரசுடனான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இறுதி மூன்று பேச்சுவார்த்தைகளிலும் குறிப்பிட்ட முன்னேற்றம் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

போர்க்குற்ற விசாரணை தொடர்பில் கருத்துத் தெரிவித்து உரையாற்றிய அவர்,

போர்க்குற்றம் இரண்டு பகுதியினருக்கும் எதிராக இருப்பதால் அதை விசாரணைக்குட்படுத்தி, எமக்கான தீர்வினைப் பெற்றுக்கொள்ளப் போகின்றோமா? என கேள்வி எழுப்பிய சுமந்திரனின் உரையின் தொனி, புலம்பெயர் மக்களின் எழுச்சியையும் அவர்களின் செயல்பாடுகளையும் கொச்சைப்படுத்தும் வகையில் அமைந்திருந்து.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைப் பதிவு செய்வதற்கு தமிழரசுக்கட்சி முட்டுக்கட்டையாக இருக்கின்றதே? எனக் கேள்வி எழுப்பிய போது நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய இரத்தினசிங்கம் என்பவர் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த விடயத்திற்கு பதில் வழங்க முடியாது என்று சுமந்திரன் நழுவியிருக்கின்றார்.

 

புலம்பெயர் தமிழ் மக்கள் தமது செயற்பாடுகளில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என மீண்டும் வலியுறுத்திய அவர், சிங்கள மக்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வு ஒன்றை நோக்கியே தாம் செல்லப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் மக்கள் எதுவும் அறியாதவர்கள், அவர்கள் அரசியல் ஞானம் அற்றவர்கள் என்ற தொனியில் அவர் உரையாற்றியமை புலம்பெயர் மக்கள் மத்தியில் மிகுந்த கவலையினைத் தோற்றுவித்துள்ளன.

புலம்பெயர் தமிழ் மக்களின் செயற்பாடுகளை பிரித்தானிய தமிழர் பேரவை, உலகத் தமிழர் பேரவை, நாடு கடந்த அரசு மற்றும் பல அமைப்புக்கள் வழிநடத்திச் செல்கின்றன.

புலம் பெயர் தமிழ் மக்கள் மற்றும் அமைப்புக்களின் செயற்பாடுகளே இன்று தமிழினப் படுகொலை போர்க்குற்றம் வரை சென்றுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்; இதை சுமந்திரன் அறிந்திருப்பாரா என்பது கேள்விக்குறியே என்றார் நிகழ்வில் கலந்து கொண்ட முதியவர் ஒருவர். இக் கூட்டத்தில் நூற்றிற்கும் குறைவானவர்களே கலந்து கொண்டனர்.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.