குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, ஐப்பசி(துலை) 20 ம் திகதி செவ்வாய் கிழமை .

போர்வலய தமிழ்மக்கள் உரிமைக்காக வாக்களித்துள்ளனர் அபிவிருத்தியை விடவும் உரிமைக்குகூடுதல் முன்னுரிமை

 24 .07.2011  த.ஆ2042-- குமரிநாடு.நெற் தமது கருத்தாக  போரில் வென்றவர்கள்  தேர்தலில் தோற்று விட்டார்கள் .மகிந்தவின் தம்பட்டத்தடி மகிந்தவை அடிக்கிறது.--- போர் இடம்பெற்ற வலயத்தைச் சேர்ந்த தமிழ் மக்கள் உரிமைகளுக்காக வாக்களித்துள்ளனர். வடக்கு தமிழ் மக்கள் அபிவிருத்தியை விடவும், உரிமைகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்துள்ளனர். கூடுதலான சுயாட்சி அதிகாரங்களையும், உரிமைகளையுமே தமிழ் மக்கள் கோரி நிற்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களுக்கு வடக்கில் அதிகளவு ஆதரவு வழங்கப்பட்டுள்ளது.
 
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினால் பாரியளவு பொருட் செலவில் தீவிர பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அபிவிருத்தி இலக்குகளை முதனிலைப்படுத்தி ஆளும் கட்சியினர் பிரச்சாரங்களை முடுக்கி விட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
 
எனினும், வடக்கு அபிவிருத்தியை விடவும் உரிமைகளுக்கு வடக்குத் தமிழ் மக்கள் கூடுதல் முக்கியத்துவம் அளித்துள்ளனர்.
 
யாழ்ப்பாண குடாநாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அமோக ஆதரவு கிடைக்கப் பெற்றுள்ளது. வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு கிடைக்கப் பெற்ற ஆதரவு சுயநிர்ணய உரிமைகளை வலியுறுத்தி நிற்பதாகக் குறிப்பிடப்படுகிறது.
 
இதேவேளை, உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மொத்தமாக 45 உள்ளுராட்சி மன்றங்களின் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி மொத்தமாக 18 உள்ளுராட்சி மன்றங்களில் வெற்றியீட்டியுள்ளது.  தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சி இரண்டு உள்ளுராட்சி மன்றங்களை கைப்பற்றியுள்ளது.

இலங்கை விவகாரத்தில் தவறிழைக்கும் மேற்குலகம் - சர்வதேச நெருக்கடிக்கான குழு தெரிவிப்பு

24.07.2011--இலங்கையில் போர் இடம்பெற்ற காலத்தில் இழைத்த தவறுகளையே இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஏனைய நாடுகளும் மீண்டும் இழைத்து வருவதாக சர்வதேச நெருக்கடிகளுக்கான குழு தெரிவித்துள்ளது.

வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்களைத் தடுப்பதற்கான முயற்சிகளை இந்நாடுகள் சிறிதளவாகவே மேற்கொண்டதாக குறிப்பிட்டுள்ள இவ்வமைப்பு, போர் வெற்றியின் பின்னர் அரசியல் மறுசீரமைப்பு மற்றும் நல்லிணக்க கொள்கைகள் தொடர்பான இலங்கை அரசாங்கத்தின் வாக்குறுதிகளில் இந்நாடுகள் நம்பிக்கை கொண்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளது.

மனிதகுலத்திற்கு எதிரான கொடூரங்களுக்கான பொறுப்பில் விடுதலைப் புலிகளின் பங்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் தொடர்ந்தும் புறக்கணிக்கும் நிலைமை தொடர்வதாகக் காணப்படுகிறது. அரசாங்கம் தனது கொள்கைகளைத் தொடர்ந்தும் கடைப்பிடித்து வந்தால் நல்லிணக்கமானது மேலும் நழுவிச் செல்வதாகவே அமையும். அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் மேற்கொண்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் தேவைப்படுகிறது.

2011இன் இறுதிக்குள் தனது பதிலளிக்கும் கடப்பாட்டை உறுதிப்படுத்த அரசாங்கத்தினால் முடியும் என்பதை வெளிப்படுத்தாதுவிடின் சர்வதேச விசாரணைக்கான ஏற்பாட்டை ஐ.நா.உறுப்பு நாடுகள் ஸ்தாபிப்பதற்கான பணியில் சுறுசுறுப்பாக ஈடுபட வேண்டும் என்று சர்வதேச நெருக்கடிகளுக்கான குழு தெரிவித்துள்ளது.

சிறுபான்மையினரின் துன்பங்கள் அதிகரித்து செல்வது தொடர்பாக கொள்கைகளை உடனடியாக இலங்கை அரசாங்கம் மீளாய்வு செய்யவேண்டும்.
அவசரகால நிலைமையை முடிபுக்கு கொண்டுவந்து சர்வதேச சட்டத்திற்கு அமைவாக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை மீளாய்வு செய்ய வேண்டும். விடுதலைப் புலிகளுடன் சம்பந்தப்பட்டிருந்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருப்போரின் பெயர்கள், இடங்களை குடும்ப உறுப்பினர்களுக்கு கிடைக்கச் செய்தல் வேண்டும்.
மோதலில் கொல்லப்பட்ட அல்லது காணாமல் போனோர் தொடர்பாக மரணச் சான்றிதழ்கள் அல்லது காணாமல் போன சான்றிதழ்களை வழங்கவேண்டும்.
இறந்தவர்கள் தொடர்பாக பகிரங்கமாக துக்கத்தை அனுஷ்டிக்க பொதுமக்களுக்கு அனுமதியளிக்க வேண்டும்.
நினைவுச் சின்னங்களை அமைக்கவும் எஞ்சிய உடற்பாகங்களை கண்டுபிடிக்க உதவவேண்டும் போன்ற பரிந்துரைகளையும் அந்த அமைப்பு கேட்டுள்ளது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.