குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 26 ம் திகதி வெள்ளிக் கிழமை .

22.03.2015- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

சீன, இந்தியா இடையே பேச்சுவார்த்தை

புதுடில்லி: இந்திய, சீன எல்லை பிரச்னை குறித்து இருநாட்டு பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் பேச்சுவார்த்தை நாளை துவங்க உள்ளது. இது 18வது சுற்று பேச்சுவார்த்தையாகும். இரு தரப்பும், 'லைன் ஆப் ஆக்சுவல் கன்ட்ரோல்' குறித்து பேசுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

பார்லி.,: கட்டுக்குள் வந்தது தீ

புதுடில்லி: பார்லிமென்ட் வளாகத்தில் இன்று பெரும் தீ விபத்து ஏற்பட்டது. டில்லி நகரின் பல்வேறு இடங்களில் இருந்து வந்த 9 பிரிவு தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதையடுத்து, வேகமாக பரவிய தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

 

பார்லி., தீ விபத்து: புகை மண்டலம்

புதுடில்லி: பார்லிமென்ட் கட்டத்தில் ஏற்பட்டுள்ள பயங்கர தீ விபத்து காரணமாக அங்கு கடும் புகை மண்டலம் ஏற்பட்டுள்ளது. பல கி.மீ., தொலைவிற்கு இந்த புகை மண்டலம் தெரிவதாக கூறப்படுகிறது. முன்னதாக ரயில் பவனில் உள்ள துணை மின் நிலையத்தில் இருந்து தீ பரவியதாக கூறப்படுகிறது.

 

காஷ்மீர்: ஒமர் கட்சி வௌிநடப்பு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநில சட்டசபையில், எல்லை பகுதிகளில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் குறித்து ஒத்திவைப்பு தீர்மானத்தை எதிர்கட்சியான தேசிய மாநாட்டு கட்சி கொண்டு வந்தது. இந்த தீர்மானத்தை சபாநாயகர் ஏற்க மறுத்ததை கண்டித்து, அக்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் வௌிநடப்பு செய்தனர்.

 

இந்திய பொருளாதாரம் 8 % வளர்ச்சி பெறும் : ஆய்வறிக்கை

புதுடில்லி: இந்திய பொருளாதாரம் 8 % வளர்ச்சி பெறும் என இது தொடர்பான ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஹலோ போலீஸ்': டி.ஐ.ஜி.,நம்பிக்கை

திருநெல்வேலி: புகார்களை, பிரச்னைகளை வாட்ஸ்அப்பில் அனுப்பும் புதிய திட்டத்தை நெல்லை மாவட்ட எஸ்.பி.,வி.விக்ரமன் அறிமுகப்படுத்தினார். "9952740740' என்ற எண்ணுடைய வாட்ஸ்அப் மொபைலுக்கு குறுந்தகவலாகவோ, போட்டோ, வீடியோக்களாகவோ அனுப்பலாம். இதுகுறித்து நெல்லை சரக டி.ஐ.ஜி.,எஸ்.முருகன் கூறுகையில், 'விழுப்புரம் சரகத்தில் இந்த திட்டத்தை இதற்கு முன்பு பரிட்சார்த்த முறையில் செய்துபார்த்தோம். எங்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் அந்த கிராமத்திற்குள் சென்றனர். புகார் பெறப்பட்டது. குற்றவாளி கைது செய்யப்பட்டான். திருநெல்வேலியில் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்திய சில தினங்களில் ஏராளமான புகார்கள் வரத்துவங்கியுள்ளன. வாட்ஸ்அப் திட்டத்தை ஒரு உளவுப்பிரிவுப்போல பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம்,' என்றார்.

 

மதுரையில் பொன் ராதாகிருஷ்ணன் பேட்டி

மதுரை: மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், 'மீத்தேன் வாயு திட்டம் குறித்து எதிர்கட்சிகள் போலியான போராட்டங்களை நடத்தி வருகின்றன. நிலம் கையகப்படுத்தும் சட்ட திருத்த விஷயத்தில், விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கையை மோடி தலைமையிலான மத்திய அரசு ஒருபோதும் எடுக்காது,' என்றார்.

 

பாகிஸ்தானுக்கு எதிராக தீர்மானம்

ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலம், சம்பா மற்றும் கதுவா ஆகிய எல்லை பகுதிகளில் சமீபத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களை கண்டித்து காஷ்மீர் சட்டசபையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில், இந்த தாக்குதல்கள் குறி்த்து இந்தியாவின் வலுவான கண்டனத்தை பாகிஸ்தானுக்கு மத்திய அரசு தெரிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

 

ஹசாரேவுக்கு கருணாநிதி கடிதம்

சென்னை: காந்தியவாதியும், சமூக ஆர்வலருமான அன்னா ஹசாரேவுக்கு, தி.மு.க., தலைவர் கருணாநிதி எழுதி உள்ள கடிதத்தில், 'சமூக நலனுக்கான, அமைதியான போராட்டங்களுக்கு தி.மு.க., எப்பொழுதும் ஆதரவு அளிக்கும்,' என்று குறிப்பிட்டுள்ளார்.

 

சிங்கப்பூர் நிறுவனர் நிலைமை மோசம்

சிங்கப்பூர்: சிங்கப்பூரை நிறுவியவரும், முன்னாள் பிரதமருமான லீ குன் யூவின் உடல் நிலை தொடர்ந்து மோசமாகி வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

எதிர்கட்சிகள் தவறான தகவல்: மோடி புகார்

புதுடில்லி: மன்கிபாத் நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கான வானெலி உரையை பிரதமர் நரேந்திரமோடி நிகழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது: விவசாயிகளின் பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என மாநில அரசுகளிடமும், சம்பந்தப்பட்ட துறைகளிடமும் கூறி, தேவையான நடவடிக்கைகளை எடுப்பேன் என விவசாயி சகோதரர்களுக்கு நான் உறுதி அளிக்கிறேன். விவசாயிகளின் குறைகளை தீர்க்க தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கும். விவசாயிகளின் நலனுக்காக 60 ஆண்டுகள் பழமையான சட்டங்களை மாற்ற வேண்டியதை நான் உணர்ந்துள்ளேன். நிலம் கையகப்படுத்தும் விஷயத்தில் எதிர்கட்சிகள் தவறான தகவல்களை கூறி வருகின்றன. கிராமங்கள் மற்றும் கிராம மக்கள் வளர்ச்சிக்காக நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் சில திருத்தங்களை செய்ய வேண்டும் என்று எங்கள் அரசு நினைக்கிறது. விவசாயிகளும், அவர்களது குழந்தைகளும் நல்வாழ்வு வாழ வேண்டும் என்று எங்கள் அரசு செயல்பட்டு வருகிறது. இவ்வாறு மோடி பேசினார்.

 

பாக்.மீது முப்தி குற்றச்சாட்டு

ஸ்ரீநகர்: ஜம்முவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை தொடர்ந்து, பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் ஆதரவாக செயல்படுவதாக கூறி, காஷ்மீர் சட்டசபையில் இன்று பா.ஜ., எதிர்ப்பு கோஷம் எழுப்பியது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முதல்வர் முப்தி முகம்மது சயீது, 'பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் ஆதரவு கொடுப்பது, இந்தியாவுடனான அமைதி பேச்சுவார்த்தைக்கு இடையூறை ஏற்படுத்தும்,' என்று கூறி உள்ளார்.

 

திரிணமுல் காங்., அலுவலகம் மீது தாக்குதல்

கோல்கட்டா: மேற்கு வங்கம், அசன்சோல் என்ற இடத்தில், திரிணமுல் காங்கிரஸ் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. பின்னர் தீ வைத்து அலுவலகம் கொளுத்தப்பட்டது. இதை கண்டித்து, திரிணமுல் காங்கிரஸ் தொண்டர்கள் தேசிய நெடுஞ்சாலை 60ல் மறியலில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 

ரவி வழக்கில் புதிய திருப்பம்

பெங்களூரு : கர்நாடக ஐ.ஏ.எஸ்., அதிகாரி ரவியின் வழக்கில் புதிய திருப்பமாக ரவியை எம்.எல்.ஏ., ஒருவர் மிரட்டிய ஆடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், பேசியுள்ள எம்.எல்.ஏ., ரவியை இடமாற்றம் செய்து விடுவதாக மிரட்டியது பதிவாகி உள்ளது.

 

பலாத்காரம்:ஐ.ஏ.எஸ்., அதிகாரி கைது

புனே : மகாராஷ்டிர வேளாண் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழக இயக்குனராக இருப்பவர் ஐ.ஏ.எஸ்., அதிகாரி மாருதி சவன்த்(58). இவர் பள்ளி மாணவிகள் 4 பேருக்கு பாட புத்தகங்கள் வாங்கித் தருவதாக கூறி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று, அவர்களிடம் கம்ப்யூட்டரில் ஆபாச படங்களை காட்டி உள்ளார். பின்னர், தனது விருப்பத்தை நிறைவேற்றாவிட்டால் அவர்களை கொலை செய்து விடுவதாக மிரட்டி 4 மாணவிகளையும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக மாணவிகளை மாருதி சவன்த் பலாத்காரம் செய்து வந்தது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவரும் 7ம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது. பள்ளி தலைமை ஆசிரியர் அளித்த புகாரின் பேரில் ஐ.ஏ.எஸ்., அதிகாரியை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

அதிகாரி ரவி மனைவி மருத்துவமனையில் அனுமதி

பெங்களூரு : கர்நாடகாவில் மர்மமான முறையில் மரணமடைந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி ரவியின் மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தங்கள் குறித்து வெளியிடப்பட்டு வரும் அறிக்கைகளை படித்ததால் மனஅழுத்தம் ஏற்பட்டு அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ரவியின் மரணத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் இரண்டு நாட்களுக்கு முன் ரவியின் அத்தை மரணமடைந்தது குறிப்பிடத்தக்கது.

 

இந்திய சுற்றுச்சூழல் ஆர்வலர் ராஜேந்திர சிங்கிற்கு ஸ்வீடன் விருது

ஸ்டாக்ஹோம்:புதுமையான நீர் சேகரிப்பு முயற்சிகளின் மூலம் இந்திய கிராமங்களை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டதற்காக, சுற்றுச்சூழல் ஆர்வலர் ராஜேந்திர சிங்குக்கு 2015ஆம் ஆண்டுக்கான ஸ்வீடன் நாட்டின் "ஸ்டாக்ஹோம் நீர் விருது' வழங்கப்படுகிறது.

இதுகுறித்து, ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஸ்டாக்ஹோம் நீர் விருதுக் குழு நேற்று வெளியிட்ட அறிக்கையில், கிராமப்புற இந்தியாவின் நீர் பாதுகாப்பை வலுப்படுத்தும் விதமாக, அங்குள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக ராஜேந்திர சிங் மேற்கொண்டு வரும் செயற்கரிய முயற்சிகளுக்காக இந்த விருது வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

 

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ராஜேந்திர சிங், கடந்த 1959ஆம் ஆண்டு பிறந்தவர். பல ஆண்டுகளாக வறட்சியை நீக்கி, மக்களை முன்னேற்றும் பணியில் ஈடுபட்டு வருவாதல்,அவர் "தண்ணீர் மனிதர்' என்று செல்லமாக அழைக்கப்பட்டு வருகிறார்.

 

ஸ்வீடன் நாட்டில் உள்ள ஸ்டாக்ஹோமில் ஆகஸ்ட் மாதம் 26ஆம் தேதி, நடைபெறவுள்ள உலக தண்ணீர் வார விழாவில், ஸ்வீடன் நாட்டு அரசரும், ஸ்டாக்ஹோம் நீர் விருதுக் குழுவின் புரவலருமான ஏழாவது காரல் கஸ்டாப், இந்த விருதை ராஜேந்திர சிங்குக்கு வழங்க இருக்கிறார்.

 

காரைக்குடியில் ஆவின் பாலகம் முற்றுகை

காரைக்குடி:காரைக்குடியில் ஆவில் பாலகத்தில் 10க்கும் மேற்பட்ட ஆவின் பால் விற்பனை மையங்கள் முற்றுகையிட்டன.ஆவின் பாலகத்தில் கெட்டுப்போன பால் விற்பனை செய்ததாக மக்கள் குற்றம் சாட்டியதை அடுத்து முற்றுகை நடந்தது.

 

எபோலா அச்சுறுத்தல்:3 நாட்கள் மக்கள் வீட்டிலேயே இருக்க சியாரா லியோன் அதிபர் உத்தரவு

ப்ரீடவுன்:காட்டுத்தீ போல் பரவி வரும் எபோலாவை கட்டுப்படுத்தும் வகையில், சியாரா லியோன் அதிபர் எர்னெஸ்ட் கொரோமா 3 நாட்களுக்கு நாட்டிலுள்ள அனைத்து மக்களும் தங்களின் வீடுகளில் இருக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.வருகிற 27-ம் தேதி காலை 6 மணி முதல் 29-ம் தேதி மாலை 6 மணி வரை இந்த தேசிய அளவிலான முடக்கம் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 3 நாட்களும் வர்த்தகம், வழிபாடு என்று அன்றாட நிகழ்வு எதுவும் நடக்காது.

 

பன்னாட்டு நிறுவனங்களுக்கு உகந்த சூழலை ஏற்படுத்துவது அவசியம்: அருண் ஜெட்லி

குர்கான்:பெரும் பொருளாதார சக்தியாக இந்தியா உருவெடுக்க வேண்டுமெனில், நாட்டில் பன்னாட்டு நிறுவனங்கள் தொழில் தொடங்குவதற்கான உகந்த சூழலை ஏற்படுத்த வேண்டியது அவசியம் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறினார்.அரியானா மாநிலம், குர்கானில் நேற்று நடந்த மேலாண்மை வளர்ச்சிக் கல்வி நிறுவனத்தின் 12வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு ஜெட்லி பேசியதாவது:பொருளாதார மந்த நிலையால் வறுமையை என்றும் ஒழிக்க முடியாது.நாட்டில் வறுமையை ஒழிக்க, வளர்ச்சி விகிதத்தை அதிகரிக்க வேண்டியது கட்டாயம். உயர் வளர்ச்சி விகிதத்தால் மட்டுமே ஏழை மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது சாத்தியமாகும்.

இந்தியாவில் பன்னாட்டு நிறுவனங்கள் அதிக அளவில் தொழில் தொடங்கினால், வளர்ச்சி விகிதத்தில் ஓர் புதிய உச்சத்தை நாம் அடைய முடியும். பெரும் பொருளாதார சக்தியாக இந்தியா உருவெடுக்க வேண்டுமெனில், நாட்டில் பன்னாட்டு நிறுவனங்கள் தொழில் தொடங்குவதற்கான உகந்த சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது அவசியம்.

 

பர்த்வான் குண்டுவெடிப்பு: மேலும் ஒருவர் கைது

புதுடில்லி:மேற்கு வங்க மாநிலம், பர்த்வான் குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக மேலும் ஒருவரை தேசிய புலனாய்வுப் படையினர் நேற்று கைது செய்தனர்.இதுதொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் கூறுகையில், இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக மஜீத் மோமீன் என்பவரை தேடி வந்தோம். இதையறிந்த அவர், கடந்த ஒராண்டாக தலைமறைவாகி விட்டார்.இந்நிலையில், கோல்கட்டாவின் மத்தியப் பகுதியான சீல்டாவில் பதுங்கியிருந்த மோமீனை நேற்று கைது செய்ததாக தெரிவித்தனர்.பர்துவானில் உள்ள வீடு ஒன்றில், கடந்த ஆண்டு(2014) அக்டோபர் மாதம் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 2 பேர் பலியானார்கள். இந்த சம்பவத்தில், சர்வதேச தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியானதையடுத்து, இதுதொடர்பான விசாரணை மேற்கு வங்க போலீசாரிடம் இருந்து என்.ஐ.ஏ.,க்கு மாற்றப்பட்டது.பர்துவான் குண்டுவெடிப்பு சம்பவத்தில், மோமீனையும் சேர்த்து, இதுவரை 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

விவசாயிகள் பிரச்னைக்கு தீர்வு:ராஜ்நாத் சிங்

புதுடில்லி: மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில். பருவம் தவறி பெய்த மழையால், பாதிக்கப்பட்ட விவசாயிகளின் பிரச்னைகளைத் தீர்க்க, அனைத்து மாநில முதல்வர்களும், தங்களால் இயன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். விவசாயிகளுக்கு தேவையான உதவிகளை வழங்குவதில், மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு தேவையான உதவியை செய்யும் என்றார்.

 

இந்தியாவில் உணவு தானிய உற்பத்தி எவ்வளவு?

புதுடில்லி: இந்தியாவின் உணவு தானிய உற்பத்தி, 2014 - 15ம் வேளாண் பருவத்தில் (ஜூலை முதல் ஜூன் வரை), 3.2 சதவீதம் குறைந்து, 25.70 கோடி டன்னாக இருக்கும். முந்தைய வேளாண் பருவத்தில், உணவு தானிய உற்பத்தி, 26.56 கோடி டன்னாக இருந்தது.

* மகாராஷ்டிரா அரசு, விதர்பா மற்றும் மரத்வாடாவைச் சேர்ந்த, 2 - 2.30 லட்சம் விவசாயிகள், தனியார் நிதி நிறுவனங்களிடம் பெற்ற, 156 கோடி ரூபாய் கடன் மற்றும் 15 கோடி ரூபாய் வட்டியை தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது. மேலும் பல மாநில அரசுகளும், மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதாக தெரிவித்துள்ளன.

 

ரயிலில் சில்மிஷ தொல்லை: கீழே குதித்தார் நேபாள பெண்

பாட்னா: ரவுடிகளின் பாலியல் தொந்தரவால், ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்த நேபாள பெண்ணை, ரயில்வே போலீசார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். நேபாளத்தைச் சேர்ந்த, 25 வயது இளம் பெண், டில்லியில் உள்ள தன் உறவினர்களை பார்ப்பதற்காக, பீகார் மாநில எல்லையில் உள்ள ரக்சுவா ரயில் நிலையத்தில் இருந்து, சத்யாகிரக் எக்ஸ்பிரஸ் ரயிலின் பொதுப் பெட்டியில் ஏறி பயணித்தார். இந்த ரயில், சுங்கவுலி ரயில் நிலையத்தை அடைந்ததும், அதே பெட்டியில் மூன்று ஆண்கள் ஏறினர். ரயில் அங்கிருந்து கிளம்பியதும், ரயில் பெட்டியில் தனியாக இருந்த நேபாள பெண்ணிடம், மூவரும் சில்மிஷத்தில் ஈடுபட்டனர்; அவரை பலாத்காரம் செய்யவும் முயன்றனர். இதனால், அதிர்ச்சி அடைந்த இளம் பெண், பெட்டையா ரயில் நிலையத்தை நெருங்கும் முன், ஓடும் ரயிலிலிருந்து கீழே குதித்தார். அப்பகுதியில், பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே போலீசார், அவரை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர்; பின், மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட மூவரும், போலீசாரின் பார்வையில் சிக்காமல் தப்பிச் சென்று விட்டனர். ஓடும் ரயிலில் பெண்ணை பலாத்காரம் செய்ய முற்பட்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

அடுத்தாண்டு ஓய்வு பெறுகிறது ஐ.என்.எஸ்., விராட் போர் கப்பல்

புதுடில்லி: விமானம் தாங்கி போர்க்கப்பலான, ஐ.என்.எஸ்., விராட், 57 ஆண்டுகள் சேவைக்கு பின், அடுத்த ஆண்டுடன் ஓய்வு பெறுகிறது. விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐ.என்.எஸ்., விராட், 1957ல், பிரிட்டனில் இருந்து வாங்கப்பட்டது. கடந்த, 57 ஆண்டுகளாக நாட்டின் கடல் பகுதி பாதுகாப்பை உறுதி செய்வதில், ஐ.என்.எஸ்., விராட், முக்கிய பங்கு வகிக்கிறது. இதுவரை, ஐந்து முறை, இந்த கப்பல் புதுப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, மீண்டும் கப்பலை புதுப்பித்து, புதிய தொழில்நுட்ப வசதிகளை புகுத்துவது சிரமமான காரியம் என்பதால், அடுத்த ஆண்டுடன் இந்த கப்பலுக்கு ஓய்வு கொடுக்க, இந்திய கடற்படை முடிவு செய்துள்ளது.இதையடுத்து, இந்திய கடல் பாதுகாப்பை கண்காணிக்க வேண்டிய பொறுப்பு, ஐ.என்.எஸ்., விக்ரமாதித்யா என்ற ஒரே போர்க் கப்பலையே சார்ந்துள்ளது.முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, விமானம் தாங்கி போர்க் கப்பலான விக்ராந்த், 2018 - 19ல் தான் இந்திய கடற்படையில் சேரவுள்ளது.

 

 

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.