குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 26 ம் திகதி வெள்ளிக் கிழமை .

அமெரிக்காவின் மாற்றமும் மகிக்தவின் தடுமாற்றமும் இந்தியாவிற்கு பேதிகொடுத்து இரசுசியாவிற்கு

17.07.2011-அமெரிக்காவின் மாற்றமும் மகிக்தவின் தடுமாற்றமும் இந்தியாவிற்கு பேதிகொடுத்து இரசுசியாவிற்கு வயிற்றுப் போக்கை ஏற்படுத்தவேண்டும். அமெரிக்க நாடாளுமன்ற  உறுப்பினர்கள் இலங்கைக்கு எதிராகத் திரும்பினர் என்பது தவறு உண்மைகளை புரியத்தொடங்கியுள்ளனர் நீதியின் பக்கம் யோசிக்கின்றனர் பாதிக்கப்பட்ட மக்களின் துயர்களை அறிய ஆரம்பித்து விட்டனர் என்பதே உண்மையானது.

இவர்களில், குடியரசுக் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் றொபேட் அடெனோல்ற் 2004இல் சுனாமிக்குப் பின்னர் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தவர்.

குடியரசுக் கட்சியின் மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினராக பிராங் வூல்பீ விடுதலைப் புலிகளை மிகமோசமாக எதிர்த்து வந்தவர் என்பதுடன் சிறிலங்காவுக்கு அமெரிக்காகவின் ஆயுத உதவிகள் கிடைப்பதற்கும் காரணமாக இருந்தவர்.

மேலும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ஜோய் பிற்ஸ், ஹெல்லி பேர்கெலி, சூமைரிக், ஜோன் கோஸ்ரெலோ, ஸ்கொட் கரெற், இலியானா றொய்ஸ்-லெரினென், பில் யூங், ஜிம் மோறன், டனா றொபாக்கர் மற்றும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னர சிறிலங்காவுக்கு ஆதரவு வழங்கி வந்தனர்.

இவர்கள் அனைவரும் தற்போது சிறிலங்காவுக்கு எதிராகத் திரும்பியுள்ளனர்.

அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறிலங்காவுக்கு எதிராகத் திரும்பியுள்ளது குறித்து சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு அதிர்ச்சியடைந்துள்ளதுடன் இதற்கான காரணங்கள் என்ன என்று ஆராயும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே அமெரிக்காவில் சிறிலங்காவுக்கு ஆதரவான பரப்புரைகளை மேற்கொள்வதற்கு பல மில்லியன் டொலர்களைக் கொடுத்து பொதுமக்கள் உறவுக்கான நிலையம் ஒன்றுடன் உடன்பாடு செய்து கொள்ளப்பட்டிருந்தது.

சிறிலங்கா அரசின் இந்த பரப்புரைகளும் பிசுபிசுத்துப் போயுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக சனல்4 காணொலி தொடர்பாக, சிறிலங்கா அரசு பணிக்கு அமர்த்திய பொதுமக்கள் உறவு நிலையம் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் மேற்கொண்ட பரப்புரைகளும் எடுபடவில்லை என்றும் தெரியவந்துள்ளது.
 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.