குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 27 ம் திகதி சனிக் கிழமை .

சர்க்கரை நோயா?

17.07.2011--சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு காலில் காயம் ஏற்பட்டால் காலை அகற்றுவதைத் தவிர பேறு வழியில்லை என்ற நிலை மாறி, காயத்தை விரைவில் குணப்படுத்துவதற் கான மருத்துவம், இப்போது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. குருதிக் குழாயை விரிவுபடுத்துதல் (ஆஞ்சியோபிளாஸ்டி) முறையில் இந்த மருத்துவம் செய்யப்படும். இதன்படி ஊசி மூலம் குருதிக் குழாய் விரிவுபடுத்தப்படும். இதையடுத்து காயம் அடைந்த காலுக்கு செல்லும் குருதிக் குழாய் விரிவடையும். இதனால் சர்க்கரை நோயர்களின் காலில் ஏற்பட்ட காயம் விரைவாக குணமடையும்.

இந்த வழிமுறையானது சுருங்கிய இதயக்குழாயை விரிவுபடுத்துவதற்கான மருத்துவ முறையைப் போன்றதாகும். இதயக்குழாய் சுருங்கினால் குருதி ஓட்டம் பாதிக்கப்பட்டு அதனால், பல்வேறு சிக்கல்கள் ஏற்படலாம். இதை சரிப்படுத்துவதற்காக சுருங்கிய குருதிக் குழாய் பகுதி பலூன் மூலம்  விரிவுபடுத்தப்பட்டு குருதி ஓட்டம் அதிகப்படுத்தப்படும். இதே முறையை பயன்படுத்தி சர்க்கரை நோயர்களுக்கு காலை சரிப்படுத்தலாம். வழக்கமாக சர்க்கரை நோய்களுக்கு காலில் காயம் ஏற்பட்டால் போதிய குருதி பாதிக்கப் பட்ட பகுதிக்கு செல்லாது. இதனால், காலை வெட்டி எடுப்பதை தவிர வேறு மாற்று இல்லை என்ற நிலை இருந்து வருகிறது. இதற்கு மாற்றாக மேற்கண்ட மருத்துவம் உள்ளது என்று தம்பிரான் இதய மருத்துவமனை இயக்குநர் மருத்துவர் இரவிக்குமார் தெரிவித்தார்.

இவ்வாறு குருதிக் குழாய் விரிவடைந்தால் காலில் ஏற்படும் காயம் விரைவாக குணமடையும். சர்க்கரை நோயர்களுக்கு மருத்துவம் அளிக்கும் போது குருதியின் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டுடன் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவேண்டும். வயதானவர்களுக்குக்கூட மேற்கண்ட மருத்துவத்தை அளித்து காயம் அடைந்த கால் பகுதியை நீக்குவதைத் தவிர்க்கலாம். இந்த மருத்துவம் குறுகிய காலத்தில் முடிந்துவிடும். வயதான வர்களை பொறுத்தவரை கால்களை நீக்கினால், அவர்களின் வாழ்வுக் காலமும் குறைந்துவிடும். ஆனால் புதிய முறை மருத்துவம் காரணமாக அவர் களது வாழ்நாள்களை நீட்டிக்க முடியும் என்று ஜெர்மனியைச் சேர்ந்த மருத்துவர் மத்தியாஸ் உல்ரிச் தெரிவித்தார்.

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு உடலில் ஏற்படும் காயங்கள் மிகவும் மெதுவாகத்தான் குணமடை யும். எனவே, அவர்கள் உடலில் காயம் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். மேற்கண்ட மருத்துவம் பெற்றவர்கள் ஒரு சில மணி நேரத் திலேயே வழக்கம் போல் நடக்க முடியும் என்று மருத்துவர் இரவிக்குமார் தெரிவித்தார்.