இந்தியாவின் மக்கள் தொகை 121 கோடி ஆகும். இதில் 83 கோடியே 30 லட்சம் பேர் (70 சதவிகிதம்) கிரா மப்புறங்களில் வசிக்கி றார்கள். நகரங்களில் 37 கோடியே 70 லட்சம் பேர் (30 சதவிகிதம்) நக ரங்களில் வசிக்கிறார்கள்.
கடந்த 2001-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஒப்பிடும் போது நகர்ப்புறங்களில் மக்கள் தொகை பெருக்கம் 27.81 சதவிகிதத்தில் இருந்து 31.16 சதவிகிதமாக அதி கரித்து உள்ளது. கிரா மப்புறங்களில் மக்கள் தொகை பெருக்கம் 72.19 சதவீதத்தில் இருந்து 68.84 சதவிகிதமாக குறைந்து இருக்கிறது.
ஒட்டு மொத்தத்தில் பார்க்கும் போது, நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து தற்போது மக்கள் தொகை வளர்ச்சி விகி தம் குறைந்து இருக் கிறது. நகர்ப்புறங்களை பொறுத்த மட்டில் மக் கள் தொகை வளர்ச்சி விகிதத்தில் குறிப்பிடத் தக்க மாற்றம் இல்லை என்ற போதிலும், கிரா மங்களில் வளர்ச்சி விகி தம் குறைந்து உள்ளது. என்றாலும் கடந்த 10 ஆண்டுகளில் கிராமப் புறங்களில் குழந்தைகள் பிறப்பு 9 கோடி அதி கரித்து இருக்கிறது.
கிராமப்புற மக்களை பொறுத்த மட்டில் உத்தரபிரதேசத்தில் மட்டும் கிராமங்களில் 15.5 கோடி பேர் வசிக் கிறார்கள். நாட்டில் உள்ள மொத்த கிராமப் புற மக்கள் தொகையில் 18.62 சதவிகிதம் பேர் உத் தரபிரதேசத்தில் உள்ள னர். நகர்ப்புற மக்கள் தொகையில் 13.48 சதவீ தம் பேர் மராட்டியத் தில் உள்ளனர். நகர்ப்புற மக்கள் தொகையில் மராட்டிய மாநில தலை நகரான மும்பை முதல் இடத்தில் உள்ளது.
நாட்டின் மக்கள் தொகை பெருக்கத்தில் மாநிலங்களை பொறுத் தமட்டில் மேகாலயா (27 சதவிகிதம்), பீகார் (24 சதவிகிதம்) ஆகியவை முன்னணியில் உள்ளன.
2001-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக் கெடுப்பின் போது நாட் டில் ஆயிரம் ஆண் களுக்கு 933 பெண்கள் என்ற விகிதம் இருந்தது. இப்போது ஆயிரம் ஆண்களுக்கு 940 பெண்கள் என்ற விகிதம் உள்ளது.
கிராமப்புறங்களை விட நகர்ப்புறங்களில் ஆண்-பெண் குழந்தை கள் விகிதம் குறைவாக உள்ளது.