குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, புரட்டாசி(கன்னி) 19 ம் திகதி சனிக் கிழமை .

11.03.2015- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

ஜெ., வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

பெங்களூரு:பெங்களூரு கோர்ட்டில் நடந்து வரும் ஜெயலலிதா உள்ளிட்டோரின் சொத்துக்குவிப்பு வழக்கில், வாத பிரதிவாதங்கள் அனைத்தும் இன்று முடிவடைந்தன. இதையடுத்து, இன்று மதியம், தீர்ப்பு தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.

இந்நிலையில், ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

 

யாரையும் வெங்காயம்ன்னு திட்டாதீங்க!

அப்ரகா: யாராவது மண்டுத்தனமான செயல்களை செய்தால், 'போடா வெங்காயம்' என்று திட்டுவது வழக்கம். ஆனால், வெங்காயம் நீங்கள் நினைப்பது போல சாதாரணமான ஒன்றில்லை. நைஜீரியாவின், அப்ரகா நகரில் உள்ள டெல்டா ஸ்டேட் பல்கலைக் கழகம் சமீபத்தில் வெங்காயத்தின் ரசாயன குணங்கள் குறித்து ஒரு ஆராய்ச்சியை மேற்கொண்டது. இதில் வெங்காயத்தின் அருமையான மருத்துவ குணங்கள் வௌிப்பட்டுள்ளன. வெங்காய சாறை குடித்தால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைகிறது. அதேபோல், கொழுப்பு சத்தும் கரைகிறது என்று அந்த ஆராய்ச்சியின் மூலம் தெரிய வந்துள்ளது. இது குறித்து ஆராய்ச்சியாளர் ஓஜே கூறுகையில், வெங்காயம் அதிக கலோரிகள் கொண்ட ஒரு உணவுப் பொருள் அல்ல. இருப்பினும், மனித உடலின் வளர்சிதை மாற்றத்தை வெங்காயம் ஒழுங்குபடுத்துகிறது. பசியை தூண்டுகிறது,' என்றார்.

 

மீனவ கிராமத்தின் மீதான தடை நீக்கம்

மயிலாடுதுறை: நாகை மாவட்டம், மயிலாடுதுறை பகுதியில், மீன் பிடிக்கும் எல்லை குறித்த விஷயத்தில் தரங்கபம்பாடி, வானகிரி மீனவ கிராமங்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இப்பிரச்னையில், தலைமை கிராமமான அக்கரைபேட்டை நடத்திய பஞ்சாயத்தில், வானகிரி கிராமத்தை விலக்கி வைத்து தடை விதித்தது. 64 கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் அவர்களிடம் மீன்வாங்கல், விற்பனை செய்யக்கூடாது. திருமணத்துக்கு பெண் எடுத்தல், பெண் கொடுத்தல் போன்றவை கூடாது என தடை விதிக்கப்பட்டது. இதுகுறித்து, மடத்துககுப்பம் பஞ்சாயத்தில், வானகிரி கிராம மக்கள் முறையிட்டனர். 16 கிராமங்களை உள்ளடக்கிய இந்த பஞ்சாயத்தில், வானகிரிக்கு விதித்த தடை விலக்கப்பட்டு 16 கிராமங்களில் வானகிரி கிராம மீனவ குடும்பங்கள் மீன் பிடிக்கவும், மீன் விற்கவும் திருமணம் செய்து கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டது.

 

ஆம்ஆத்மிக்கு மீண்டும் சறுக்கல்

புதுடில்லி : ஆம்ஆத்மி தலைவர் அஞ்சலி தமானியா கட்சியில் இருந்து விலகுவதாக தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். அதில் அவர், ஆம் ஆத்மியின் மோசமான செயல்பாடு எனக்கு பிடிக்கவில்லை. கெஜ்ரிவால் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தேன். அவரது கொள்கைகளுக்கு ஆதரவு தெரிவித்து வந்தேன். ஆனால் இது போன்ற குதிரை பேரங்களை நான் ஆதரிக்க மாட்டேன் என குறிப்பிட்டுள்ளார்.

 

சம்மன் அனுப்பினால் குற்றவாளியா?:காங்.,

புதுடில்லி : மாஜி பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில் டில்லி சிபிஐ சிறப்பு கோர்ட் சம்மன் அனுப்பி உள்ளது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ், கோர்ட் சம்மன் அனுப்பியதால் மட்டும் ஒருவர் குற்றவாளி ஆகி விடமாட்டார். மன்மோகனின் நேர்மை அனைவரும் அறிந்ததே. அவர் வெளிப்படையானவர் என தெரிவித்துள்ளது.

 

உங்கள் அன்பு என்னை கவர்ந்தது:மோடி

மகி : சிஷெல் தீவுக்கு சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கு இந்தியர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் பேசினார். அப்போது, உங்களின் அன்பு என்னை கவர்ந்துள்ளது. இது எனக்கு மீண்டும் இங்கு வர வேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்தி உள்ளது. நாங்கள் திறமையை வளர்க்க வேண்டுன்பதில் கவனம் செலுத்துகிறோம். எங்கள் இளைஞர்கள் தொழில் முனைவோர்களாகவும், வேலைவாய்ப்பை ஏற்படுத்துபவர்களாகவும் உள்ளனர். இந்தியாவில் ரயில் போக்குவரத்தை நவீனப்படுத்தி வருகிறோம். இதனால், உலக வெப்பம் குறையும். இதன் மூலம் சிசெல்ஸ் தீவும் பயனடையும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். முன்னதாக கூட்டத்தில் மோடி, மோடி என கூக்குரலிட்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

 

முப்தி பிரிவினைவாதிகளின் வழிகாட்டி:சிவசேனா

மும்பை : மஸரத் ஆலம் விடுதலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சிவசேனா கட்சி, காஷ்மீர் முதல்வர் முப்தி சயீது பிரிவினைவாதிகளின் வழிகாட்டி என தெரிவித்துள்ளது.

 

நீதிபதி சந்துரு மருத்துவமனையில் அனுமதி

சென்னை : மக்கள் நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு இருதய கோளாறு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

ரஜினிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

சென்னை : நடிகர் ரஜினி மீது எப்.ஐ.ஆர்., பதிவு செய்யக்கோரிய வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.எஸ்.ராமநாதன், வழக்கை நாளை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.

 

காங்., தவறு தான் காரணம்: பா.ஜ.,

புதுடில்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதற்கு முந்தைய காங்கிரஸ் அரசின் தவறான செயல்பாடுகள் தான் காரணம் என பா.ஜ., கருத்து தெரிவித்துள்ளது.

 

கட்ஜூ பேச்சுக்கு ஜெட்லி கண்டனம்

புதுடில்லி: பிரிட்டிஷாரின் ஏஜண்டாக காந்தி செயல்பட்டார் என சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி மார்கண்டேய கட்ஜூ கூறியிருந்தார். இதற்கு, இன்று ராஜ்யசபாவில் பதில் அளித்த மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி, 'நாட்டின் மூத்த தலைவர்களில் ஒருவரான காந்தி குறித்து கட்ஜூ கூறி உள்ள கருத்து கண்டனத்திற்குரியது,' என்றார். எதிர்கட்சிகளும் இதே கருத்தை பிரதிபலித்தன. இதைத் தொடர்ந்து, காந்தி குறித்த கட்ஜூவின் பேச்சுக்கு ராஜ்யசபா கடும் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியது.

 

பன்றிக்காய்ச்சலுக்கு இலவச தடுப்பூசி

சென்னை : சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், பன்றிக்காய்ச்சல் அதிகமுள்ள வெளிமாநிலங்களுக்கு சென்று வருவோருக்கு இலவச தடுப்பூசி போடப்படும். பன்றிக்காய்ச்சலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார்.

 

கருத்து சொல்ல முடியாது : பரக்

புதுடில்லி : நிலக்கரி ஊழல் வழக்கில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி உள்ளது குறித்து முன்னாள் நிலக்கரித்துறை செயலாளர் பிசி பரக் கூறுகையில், கோர்ட் உத்தரவை நான் முழுவதுமாக படிக்க வேண்டும். அதனை படிக்காமல் எனது கருத்தை சொல்ல முடியாது என தெரிவித்துள்ளார்.

 

மன்மோகனுக்கு சம்மன்:தலைவர்கள் கருத்து

புதுடில்லி : மாஜி பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு சிபிஐ கோர்ட் சம்மன் அனுப்பி உள்ளது, நீதித்துறை ஆரோக்கியமாக செயல்படுவதை காட்டும் ஒரு அறிகுறி.என மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தெரிவித்துள்ளார். நிலக்கரி ஊழல் காங்கிரசின் ஊழல். அதனால் தான் அவர்களின் மனநிலையும் அப்படியே உள்ளது என மத்திய அமைச்சர் பிரகாஷ் சவடேகர் தெரிவித்துள்ளார். பா.ஜ.,வின் நரேந்திர சிங் தோமர் கூறுகையில், சட்டத்தின் முன் அனைவரும் சமம். தேவைப்பட்டால் யாரை வேண்டுமானாலும் விசாரணைக்கு வர சொல்லி சம்மன் அனுப்பலாம் என தெரிவித்துள்ளார்.

 

எந்த விசாரணைக்கும் தயார்: மன்மோகன்

புதுடில்லி : நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கில் தனக்கு அனுப்பப்பட்டுள்ள சம்மன் குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், இந்த சம்மன் எனக்கு அதிருப்தி அளிக்கிறது. இருப்பினும், சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்கு நான் மதிப்பளிக்கிறேன். என் தரப்பு நியாயங்களை தெளிவுபடுத்த நான் கடமைப்பட்டுள்ளேன். எவ்வித விசாரணைக்கும் வெளிப்படையாக பதிலளிக்க நான் தயாராக உள்ளேன். வாய்மையே வெல்லும் என தெரிவித்துள்ளார்.

 

பெங்களூரு கோர்ட்டில் சுப்ரமணியசாமி

பெங்களூரு: ஜெ., சொத்துக்குவிப்பு வழக்கில் பா.ஜ., தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியசாமி இன்று தனது எழுத்துபூர்வமான வாதத்தை தாக்கல் செய்ய கூறி, சிறப்பு அமர்வு உத்தரவிட்டிருந்தது. இதன்படி,. இன்று காலை 10:45 மணிக்கு பெங்களூரு கோர்ட்டிற்கு நேரில் வந்த சுப்ரமணியசாமி, தனது வாதத்தை எழுத்துபூர்வமாக, 14 பக்கங்களில் தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து, சாமி கோர்ட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றார். சுப்ரமணியசாமி தாக்கல் செய்துள்ள எழுத்துபூர்வமான வாதத்திற்கு மதியம் ஜெ., வக்கீல்கள் பதில் அளிக்க உள்ளனர். இதைத் தொடர்ந்து, இந்த வழக்கின் தீர்ப்பு தேதி அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

மதுரை பல்கலை துணைவேந்தர் வழக்கு

மதுரை: மதுரை துணைவேந்தராக கல்யாணி மதிவாணனை நியமித்தது செல்லும் என சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பளித்துள்ளது. கல்யாணி மதிவாணன் நியமிக்கப்பட்டது செல்லாது என மதுரை ஐகோர்ட் கிளை அளித்த தீர்ப்பையும் சுப்ரீம் கோர்ட் ரத்து செய்துள்ளது.

 

ஆலம் விடுதலை:2வது அறிக்கை தாக்கல்

ஜம்மு : மஸரத் ஆலம் விடுதலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக 2வது அறிக்கையை காஷ்மீர் அரசு, மத்திய உள்துறை அமைச்சகத்திடம் தாக்கல் செய்தது. இதில், பயங்கரவாதிகள் யாரையும் காஷ்மீர் அரசு விடுவிக்கவில்லை. மஸரத் மீது பொது பாதுகாப்பு சட்டம் ஏதும் பாயவில்லை. அப்படி இருக்கும் போது அவரை விடுதலை செய்ததில் என்ன தவறு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் காஷ்மீர் அரசின் இந்த அறிக்கையும் தங்களுக்கு திருப்தி தருவதாக இல்லை என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

தேசியகீதத்தை அவமதித்த கவர்னர்

பெங்களூரு : கர்நாடக ஐகோர்ட் நீதிபதி பதவியேற்பு விழா கர்நாடக கவர்னர் வஜூபாய் வாலா தலைமையில் கவர்னர் மாளிகையில் நடைபெற்றது. இதில், தேசியகீதம் இசைத்துக் கொண்டிருக்கும் பொழுது, மேடையில் இருந்து இறங்கி வந்த கவர்னர், வாசல் வரை சென்று விழாவிற்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்களை வரவேற்று விட்டு பின் மீண்டும் மேடைக்கு வந்தார். இது கர்நாடகா டிவி சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. இதனால் தேசிய கீதத்தை அவமதித்த சர்ச்சையில் கர்நாடக கவர்னர் சிக்கி உள்ளார்.

 

பா.ஜ.,-பிடிபி கூட்டணி தொடருமா?

ஸ்ரீநகர் : மசரத் ஆலம் விடுதலை செய்யப்பட்டது விவகாரம் தொடர்பாக காஷ்மீரில் பா.ஜ.,- பிடிபி கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கூட்டணி குறித்து முடிவு செய்வதற்காக காலை 11 மணிக்கு முதல்வர் முப்தி முகம்மது சயீது தலைமையிலான அமைச்சரவை கூட உள்ளது.

 

பூஷன், யாதவுக்கு எதிராக நடவடிக்கை வருமா?

புதுடில்லி : பிரசாந்த் பூஷன் மற்றும் யோகேந்திர யாதவ்விற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என டில்லி முதல்வரும் ஆம்ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் கடிதம் எழுதி உள்ளனர். கட்சி தலைமை எடுக்கும் எந்த நடவடிக்கைக்கும் ஆதரவு தர தயாராக இருப்பதாக 60 எம்.எல்.ஏ.,க்கள் கையெழுத்திட்டு கடிதம் அனுப்பி உள்ளனர்.

 

அதிகம் கவர்ந்தவர்களில் சோனியா,மோடி

லண்டன் : யூகவ் நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ள உலகில் அதிகம் கவர்ந்த பெண்கள் பட்டியலில் காங்கிரஸ் தலைவர் சோனியா 13வது இடத்தில் உள்ளார். சோனியாவை தொடர்ந்து அதிகம் கவரப்பட்ட இந்திய பெண்ணாக கிரண்பேடி உள்ளார். இதே போன்று உலகில் அதிகமானவர்களால் கவரப்பட்ட ஆண்கள் பட்டியலில் பிரதமர் மோடி 5வது இடத்தில் உள்ளார்

 

பாக்., புதிய தூதர் நியமனம்

வாஷிங்டன் : பாகிஸ்தானிற்கான புதிய அமெரிக்க தூதராக வேடிட் ஹாலேவை நியமித்துள்ளதாக அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்துள்ளார். இவர் தற்போது லெபனான் நாட்டு தூதராக இருந்து வருகிறார்.

 

இன்று மொரீசியஸ் செல்கிறார் மோடி

புதுடில்லி : மூன்று நாடுகளின் பயணத்தை நேற்று இரவு துவக்கிய பிரதமர் நரேந்திர மோடி, முதல் கட்டமாக நேற்று இரவு சிசெல்ஸ் தீவிற்கு சென்றார். பின்னர், இன்று பிற்பகலில் மொரீசியஸ் புறப்பட்டு செல்கிறார்.

 

ஆயுத இறக்குமதி : இந்தி்யாவை முந்தியது சவுதி

வாஷிங்டன்: உலகளவில் ஆயதங்கள் இறக்குமதி செய்யும் நாடுகளின் வரிசையில் இந்தியா முதலிடத்தை பெற்று வந்தது. இந்நிலையில் 20140ம் ஆண்டு இந்தியாவை பின்னுக்கு தள்ளி சவுதி அரேபியா முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த புலனாய்வு நிறுவனம் ஐ.எச்.எஸ் வெளியிட்டுள்ள அறி்க்கையில் தெரிவித்துள்ளது. மேலும் ஆயுத இறக்குமதியில் 5-வது இடத்தில் இருந்த சீனா மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அதே நேரத்தி்ல் உலகளவில் ஆயுதங்கள் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் வரிசையில் அமெரிக்கா முதல் இடத்திலும் தொடர்ந்து ரஷ்யா, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகள் உள்ளன. மத்திய மற்றும் கிழக்கு ஆசிய நாடுகள் வளர்ந்து வரும் பொருளாதார நிலை காரணமாக ராணுவ விமானங்களுக்கான தேவை அதிகரிப்பு காரணமாக வியாபார அதிகரிப்புக்கு முக்கிய காரணம் என கூறப்பட்டுள்ளது.

 

மது இல்லா கிராமங்களுக்கு லட்சம் ரூபாய் : முதல்வர்

ராஞ்சி:ஜார்கண்ட் மாநிலத்தில் மது இல்லா கிராமங்களுக்கு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என மாநில முதல்வர் ரகுவர் தாஸ் தெரிவித்துள்ளார். ஜார்கண்ட் மாநிலத்தில் தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இக் கூட்டத்தொடரில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் தரும் வகையில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி மாநிலத்தில் செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவிக்குழுவினர் தங்களின் கிராம பகுதிகளில் மது இல்லாத கிராமமாக மாற்றும் முயற்சி மேற்கொள்ள வேண்டும். அதனபடி அவர்களின் முயற்சியில் வெற்றி பெறும் பட்சத்தில் அவர்களின் கிராமங்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படு்ம் என மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.

 

இந்தியாவிற்கு வந்தது சோலார் இம்பல்ஸ்-2 விமானம்

அகமதாபாத்: சூரிய ஒளி மூலம் இயக்கப்படும் சோலார் இம்பல்ஸ்-2 விமானம் குஜராத் மாநிலத்தில் உள்ள சர்தார் வல்லபாய்படேல் சர்வதேச விமானநிலையத்தில் தரையிறங்கியது. ஓமன் நாட்டில் இருந்து புறப்பட்ட விமானம் சுமார் ஆயிரத்து 465 கி.மீ., தூரம் கடந்து இந்தியாவிற்கு வருகை தந்துள்ளது. நான்கு நாட்கள் அகமதாபாத்தில் நிறுத்தி வைக்கப்படும் இவ்விமானம் தொடர்ந்து வாரனாசிக்கு புறப்படு்கிறது. அங்கிருந்து 16-ம் தேதி மியான்மர் நாட்டிற்கு பயணத்தை துவக்குகிறது. இந்தவிமானம் ஒரு துளி விமான எரிபொருளைகட பயன்படுத்தாமல் முழுக்க முழுக்க சூரிய ஒளி மூலமாக இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

நாரிசக்தி புரஸ்கார் விருது: தமிழக பெண்கள் தேர்வு

புதுடில்லி: குறிப்பிட்ட துறையில் சிறந்த விளங்கும் பெண்களுக்காக வழங்கப்படும் நாரிசக்தி புரஸ்கார் விருதை தமிழக பெண்கள் மூன்று பேர் பெற்றுள்ளனர்.இதன்படி பாசிட்டிவ் உமன் நெட்வொர்க் அமைப்பின் தலைவர்கவுசல்யா, சுற்றுச்சூழல் நிபுணர் மற்றும் எழுத்தாளரான நந்திதாகிருஷ்ணா, .கிராம சேவையை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் ஏகம் நிறுவனத்தின் இயக்குனர் சாய்லட்சுமி பலிஜப்பள்ளி ஆகியோருக்கு நாரி சக்தி புரஸ்கார் விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தேவிஅகல்யா பாய் ஓல்கர், கண்ணகி, மாதா ஜிஜாபாய், கைதின்லியு, சிலியாங், ராணிலட்சுமிபாய், ராணி ருத்ரமாதேவி ஆகியோர் பெயரில் மத்திய அரசு பெண்களுக்கான விருதுகளை வழங்கி வருகிறதுஎன்பது குறிப்பிடத்தக்கது.

 

விடுமுறையை நீட்டித்தார் ராகுல்

புதுடில்லி:விடுமுறை தினத்தை நீடித்த ராகுல் இந்த வார இறுதியில் புது டில்லி திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. காங்., துணை தலைவர் ராகுல் இரண்டு வார கால விடுமுறையில் பாங்காங் சென்றதாக கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ராகுல் உத்தரகண்ட் மாநில மலைப்பகுதியில் இருப்பதாக புகைப்படம் வெளியானது. இருப்பினும் காங்., கட்சி மறுப்பு தெரிவித்தது. விடுமுறை முடிந்து ராகுல் விரைவில் திரும்புவார் என கூறப்பட்டு வந்தநிலையில் மீண்டும் ஒரு வார காலத்திற்கு விடுமுறை நீட்டிக்கப்பட்டு இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதன்படி இந்த வார இறுதிக்குள் விடுமுறை முடித்து தலைநகர் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது

 

லாலு மகள் செயல் தவறு: ஹார்வர்டு பல்கலை நெத்தியடி

பாட்னா: அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில், இந்தியா மாநாடு என்ற பெயரில், சில நாட்களுக்கு முன் கருத்தரங்கம் நடைபெற்றது. அதில், நாட்டின் பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர். 'அதில், நானும் கலந்து கொண்டு உரையாற்றினேன்' என கூறிய, மிசா பாரதி, சில படங்களை வெளியிட்டார். இதை அறிந்த ஹார்வர்டு பல்கலைக்கழகம், வெளியிட்டுள்ள அறிக்கையில், 'டிக்கெட் எடுத்து, பார்வையாளராகத் தான் மிசா பாரதி, அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்; அவர் அதில் பேசவில்லை. அவ்வாறு பேசியதாக அவர் தெரிவித்துள்ள கருத்துக்கள் தவறு' என, தெரிவித்துள்ளது. மேலும், 'நிகழ்ச்சி முடிந்த பின், பிரபலங்களுடன் சேர்ந்து நின்று, படம் எடுத்துக் கொண்ட மிசா பாரதி, அந்தப் படங்களை வெளியிட்டு, ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் உரையாற்றினேன் என செய்தி வெளியிட்டுள்ளது போலியான செயல்' எனவும், அந்த பல்கலைக்கழகம் கண்டித்துள்ளது.

 

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.