குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 19 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

மைத்திரி,இரணில்,மகிந்த-இன்றைய இலங்கை நிலையை இந்தக்கோணத்திலும் பார்க்கலாம்.

இரணில் அன்றைய மகிந்தவாக 60 நாளில் மாறிவிட்டாரா!

இந்த இடுகையின் நோக்கம் எவரையும் நல்லவர் தமிழர்களுக்கு தானாக விரும்பித்தீர்வு தருவார் என்பதல்ல. நிகழ்ந்திருப்பது  நிகழ இருப்பது  என ஊகிக்கக்கூடியதானது. நாம் எதற்கு ஏற்ப செல்வது என்பதை பற்றி யோசிக்கத்தக்கதான ஒரு பார்வை.

இலங்கையில்  நிகழ்ந்திருப்பது  தமிழர்கள் பெருமூச்சு விடக்கூடிய  சூழல்மட்டுமே தான். பெருமூச்சு  ஆறுதல் எடுத்து எந்தப்பக்கம் எப்படி நகர்வது என்று யோசிக்க கூடியகாலம். இதற்கு முன் அப்படி ஏதும் இல்லை 09.01.2015 இற்கு முன் தமிழர்களை உயிருக்க கொல்லும் தந்திரம் மிகக்கெச்சிதமாக நடந்தது.

 

அதற்கான அரசியல் தலமைகளை வடக்கிலும் கிழக்கிலும் மலையகத்திலும் கொழும்பிலும் தயாரித்து திறமையாகக்  கையாண்டது அன்றைய அரசு.

 

இன்றைய அரசு அதே போன்ற ஒரு உறுதியான தலமைத்துவம் கொண்டதோ ஒருகட்சி  ஆட்சியோ கொண்டிராத போதும் வடகிழக்குப்பகுதிகளின். சில கோரிக்கைகள் மிக வேகமாகவும், பல கோரிக்கைகள் மெதுவாகவேனும் நிறைவேற்றப்பட்டு வருகிறது என்றே சொல்லக் கூடியதாக இருக்கிறது.

 

5 ஆண்டுகளாக மாற்றாத  ஆளுனர் மாற்றம், வட கிழக்கு தமிழ் அரசியல் தலமைகளை  நையாண்டி பண்ணுதல் தமிழ் மக்களைப்பொருட்படுத்தாமை இவை இன்று இல்லை. அன்று வடமாகாணசபை ஒருங்கிணைப்பு கூட்டம் கத்தல் குழறல் கூப்பாடு என்றுதான் நடந்தது இன்று மக்கள் பிரதிநிதிகள் என்ற மதிப்பு வழங்கப்பட்டு நடந்திருப்பதை முதலில் நாம் விளங்கிக் கொள்ளவேண்டும்.

 

சுண்ணாகம் கழிவுஎண்ணெய் தாங்கிகளில்தான் அன்று சேமிக்கப்பட்டது. அதனை திட்டமிட்ட நடவடிக்கைபோல் நிலத்தில் குழாயிட்டுநிலநீரில் கலக்கச்செய்தமை ஏன்? இதைத்தான் முன்னோர்கள் தமிழர்கள் சொன்னார்கள் தோலிருக்கச் சுளை எடுப்பதென்று, வாழைப்பழத்தில் ஊசிஏற்றின மாதிரி என்று. இலங்கையின் அனைத்து தொடருந்துக்கான தண்ணீர்வழங்கிய சுண்ணாகக்கிணறுகள் இன்று பாவிக்க முடியாத நிலைக்கு மாறின. சிங்கள மக்களே இப்பகுதி நீரின் சுவையைக்கூறுவார்கள். அதைத் திட்டமிட்டே கெடுத்துள்ளார்கள்.

 

விவசாய பூமியான  பூநகரியில் பல பகுதிகளில் 25 ஆண்டுகளில் குடிநீர் இல்லை

தற்போது இணையங்களில் வெளியாகியிருக்கும் கவிதைகளைப்பாருங்கள்.

 

“யாழ்ப்பாண எண்ணெய் மண்ணீர்”

 

காசில்லை… வெளிநாடு போனோம்….

 

நிலமில்லை… புலம்பெயர்ந்தோம்….

 

திரும்பி வருவோம் என்ற நம்பிக்கையில்,

 

உலகெங்கும் உறைந்தோம்…

 

இன்று நீரில்லை…..

 

குடிக்க நீரில்லை….

 

குளிக்க நீரில்லை…

 

கழுவக் கூட நீர் இல்லை….

 

 

 

பேசாலையில் எண்ணைக் கிணறுகளாம்,

 

விற்று விட்டது சிங்களம். அது வேறு கதை…

 

யாழ்ப்பாணம், சுண்ணாகம், மல்லாகம்

 

அங்கேயும் எண்ணெய் கிணறுகளாம்

 

விற்று விட யாருக்கு ஒப்பந்த கோரல்…..?

 

 

 

நீரில்லாத நிலமும் , வேரில்லாத இனமுமா?

 

சந்ததிக்கான சிறந்த பரிசு….

 

பாலைவனமும், சுடுகாடுமா ?

 

சந்ததிக்காக நீ சேர்த்த சொத்து…..

 

 

 

யாழ்குடா நாடு , இன்று நீரில்லாத வீடு…

 

இப்பவும் கெட்டுப் போகவில்லை…

 

கூடுங்கள், சேருங்கள், சந்தோசமாக இருங்கள்…

 

சினிமா நடிகருக்காக ஆர்ப்பாட்டம் செய்யுங்கள்…

 

புதிய திரைப்பட நாயகர்களுக்கு பால் ஊற்றுங்கள்….

 

 

 

சாதிச் சண்டையா? கண்ட துண்டமாக வெட்டி விடுங்கள்…

 

மோட்டார் சைக்கிளேறி காதல் செய்யுங்கள்..

 

கடற்கரை மறைவுகளில் காமம் செய்யுங்கள்….

 

ஒன்றாக சேர்ந்து வீடுகளை கொள்ளை அடியுங்கள்…

 

வானொலிகளின் விளம்பரங்களில்

 

ஆடிப்பாடிக் கொண்டாடுங்கள்….

 

 

 

கோயில் திருவிழாக்களில் பக்திப் பரவசமாக

 

சப்பரத் தேர்கள் இழுத்து புண்ணியம் தேடுங்கள்….

 

பரவாயில்லை… தண்ணீர்தானே இல்லை….

 

புண்ணியங்களை வைத்துக் கொண்டு

 

தண்ணீரை தயாரிக்கலாம்…. அப்படித்தானே தமிழா?

 

தமிழா ! தமிழா !

 

தமிழர் பகுதிகளில் தமிழர்களின் இருப்பை இல்லாது செய்ய அவர்கள் செய்த சதிகள் இவை.

 

தமிழர்கள் இலங்கையின் விவசாயிகளக்கு முன்னோடிகள் என்று இன்றைய சனாதிபதி புகழாரம் சூடுகின்றார். இத்தகைய மக்களுக்கு வடபகுதி இராணுவம்  காய்பிஞ்சு உற்பத்தி செய்து விற்பனை செய்வது ஏன்.

 

இதில் இரண்டு நோக்கம் உண்டு ஒன்று தமிழரின் உழைக்கும் ஆர்வத்தைக் குன்றச்செய்வது. தமிழர்பொருளாதாரத்தைச்சுறண்டுவது. அவர்களின் உடலுக்கு வாழ்வுக்கு கேடான உற்பத் திகளை  விற்பனை செய்வது.

 

பூநகரியில் அரச புரம் போன்ற விவசாயம் செய்யக்கூடிய பகுதிகளில் இராணுவம் தோட்டம் செய்கின்றது. காட்டு மிருக இறைச்சிகளை விற்கின்றது

 

வறியமக்கள் இத்தொழிலை  அப்பகுதிகளில் செய்து வாழ்வது அங்குவழமை அவர்கள் என்ன செய்வது. இது  புலம்பெயர் தேச த்தமிழ் மக்களுக்கு விளங்குமா! ஐ.நா. சபைக்கு விளங்குமா! ஐ.நா.சபைக்கு  பேசப்போகும் தனவான்களுக்கு  இதுபுரியுமா!

 

எனவே கொன்றகுற்றம் மட்டும் விசாரிக்கப்பட வேண்டும் என்ற  கதைகளைவிடவும் நடைமுறையில் நடந்து கொண்டிருக்கும் மனித உருமைகள் மீறல் மெல்ல மெல்லக்கொலல்பற்றி  ஆரப்பா  கதைக்கிறியள்.

 

எனவே பகுப்பாய்வு செய்து எமது அரசியல் நடத்தப்படவேண்டும். இப்படித்தான் மீன்பிடிப்பிரச்சனை இந்திய மீனவர் பிரச்சனையை  பெரிதாக்கி வடபகுதியில் அனைத்து இடங்களிலும் மீன்பிடிக்க தடை இல்லையா அதற்கு பதில் சொல்லாது தமிழக மீனவர்களையும் இலங்கைத்தமிழர்களையும் அதன் மூலம் இந்திய  மத்திய அரசையும் பகமை நிலையில் வைத்திருந்து தமிழர் மீன்பிடிப்பதையும்  இல்லாது செய்யும் நரித்தனம் நடக்கின்றது.

 

இந்திய மீனவர்பிரச்சனையை இந்தியாவோடுவடபகுதி நிர்வாகம் பேசஅனுமதிகொடுங்கள். நீங்கள் வடபகுதி மீனவர்கள் வடபகுதியில் மீன்பிடிக்க அனுமதிகொடுங்கள். இருகோடுகள் படம் மாதிரி இந்திய மீனவர் பிரச்சனையை பெரிதாக்கி தாம் இலங்கைத்தமிழ் மீனவர்களுக்கு கொடுக்க மறுக்கும் உரிமை  மறுப்பை மறைப்பதே தந்திரம்.

 

இன்று வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு காணி,காவல்துறை  அதிகாரம் என்பதை விடவும். கிராமசபை அதிகரம் ஆசிரியர் இடமாற்றம் அரசாங்க  அதிபர் நியமனம் வடமாகாண செயலாளர் அதிகரம் ஆளுனர் அதிகாரம் முதலமைச்சர் அதிகாரம் வரம்புகள்பற்றியே  எந்த எல்லையுமில்லை அப்ப எப்படி காணிகள் மீள்ப்பது. யார் எவரிடம் எப்படிக்கோருவது. மக்கள் கூடிகோர முடியாது அதிகாரி மக்ளுக்குவிரோத மாகவும் அரசுக்கு சார்பாகவும் நடக்க்கூடிய சூழலே தற்போது.

 

எனவே முள்ளில் கொழுவிய சேலையை கழற்றிய மாதிரி தற்போது ஒரு சூழல் மெல்ல உருவாகியிருக்கு அதைப்பயன்படுத்தி அடுத்த தேர்தலிலும் இத்தகைய முடிவு வருமா! என்பதை அவதானித்து மெல்லச் செல்லல் சாதுரியமானது.

 

மைத்திரி -இரணில்-மகிந்த என்ற மூன்று புள்ளிகளில் இரண்டு புள்ளிகள் தமிழர்களுக்கு பாதகமானது என்ற முடிவில் தமிழர்கள் இருப்பது புலனாகின்றது நடைமுறையும் அதுதான். மைத்திரியின் செயற்பாட்டை பார்த்தே அடுத்து தேர்தலுக்குப்பின்னரே அவரிடம் உண்மையான முடிவுகளை எதிர்பார்க்கலாம். இன்று உருவாகும் சட்டங்கள் அடுத்த தேர்தலுக்குப் செல்லாது போகலாம் எனவே அவசரத்தில் எந்த நன்மையும் இருப்பதாகத் தெரியவில்லை.

 

1995 இல்  பூநகரியில் இராணுவத்தை பின்னுக்கு நகர்த்த மறுத்தவர் இரணில் இதனால்தான் மீண்டும் போர் மூண்டது. இராணுவத்தை பின்னுக்கு நகர்த்த உடன்படாதவர் இராணுவத்தை குறைப்பாரா என்பதை அவரிடம் எதிர்பார்த்த தமிழ் அரசியல் தலைவர் அல்லது பாராளமன்ற உறுப்பினர் என்றால்  அவர் இலங்கையின் வடபகுதியில் 1997க்குப்பின் பிறந்தவராக  இருக்கவேண்டும். இந்தநிலையில் கருணாவை உடைத்தார் சிதைத்தார் என்பது எம்மை நாமே ஏமாற்றும் அரசியல் ஆகும். இதுஎந்த தமிழனுக்கு தெரியாது இதைதிரும்பத்திரும்ப அவல்சப்புவது சரியான அரசியலா! இவர்களா  நேர்வழி செல்லும் ஒரு கட்சியின் துாண்களாம். என்று அதிக தமிழ்மக்கள்  எண்ணுகின்றனர்.

 

இந்த தேர்தலுக்கு மறுநாள் நடந்த நாடகம் உண்மையில்  அதுதான்  இன்றைய அரசியல் பூடகம்.

மைத்திரிக்கும் சிறிலங்கா கட்சியினருக்கும் அது புரிந்து விட்டது.

 

மாம்பழத்திற்கு முருகன் மயில்மீது ஏறி உலகத்தைச் சுற்றியது போல் மைத்திரி  உயிரைப்பணயம் வைத்து தேர்தலில் நின்று வெற்றி பெற கள்ளர் கூட்டம் இரசியமாக  ஒரு மறைவுத் தொடர்வில்  இருந்து  அலரிமாளிகையில் பேசி முடித்து பிள்ளையார் சிவபெரமானையும் உமாதேவியாரையும் சுற்றி மாம்பழத்தை  பெற்றுக் கொண்டது போல் இரணில் மகிந்த இரணில் இரவரும் தேர்ந்து வென்றவருக்கு அதிகாரம் இல்லாது செய்வோம்.

 

நான் பிரதமர் ஆகின்றேன் உங்களுக்க ஆபத்து இல்லை அப்படி  ஆபத்துஎன்றால் அந்தவேளை  கொத்தா-நான்(இரணில்) நீங்கள் மகிந்த பார்த்தக் கொள்ளலாம். இது இன்றைய  அரசியல் உண்மை இது வெளிப்படையில்லை.

 

அடுத்ததேர்தலில் இரணில் குறைந்த ஆசனங்களை எடுத்தாலும் மகிந்த ஆதரவுக்கட்சிகளின் பிரதிநிதிகள் இத்தேர்தலில் இன்னும் பல பிக்குகள் பாராளுமன்ற உறுப்பினர்களாக   மகிந்த-கொத்த பின்னணியில் தெரிவாகலாம். இதனால் சிங்கள மக்களுக்கு எந்தப்பாதிப்பும் இல்லை.  இசுலாமிய தமிழ் சிறபான்மை இனமக்களுக்கே அதுபாதகம்.

 

அடுத்த தேர்தலில் மைத்திரி தலைமையில் ஒரு அணி பாராளுமன்றத்திற்கு தெரிவாகும் நிலையும், இரணில் தலமையில் ஒரு குழு பாராளுமன்றத்திற்கு தெரிவாகும் மூன்றவது அணியொன்றும் தெரிவாகும்  மறைமுகமாக மகிந்த ஆதரவுக்குழு வெற்றிபெறும் இது மூன்றாவது நிலையில் அல்லது வடக்கு மலையக  முசுலீம்பாராளுமன்ற உறுப்பினர்களைவிடக் குறைவாக இருக்கலாம் இவர்களே அடுத்த பாராளுமன்றத்தை  தீர்மானிக்கும் குழுவாக இருப்பார்கள் இதில் இரணில் மகிந்த இணைவு வெளிப்படையாகும். அலரிமாளிகையை விட்டுவெளியேற்றி மைத்திரி-இரணில் கூட்டு நாடகம்மாறிஇரணில் மகிந்தகூட்டு அரங்கேறலாம்.

 

அல்லது மறைமுகமாக  தனது காரியங்களைச்சாதிக்கக்கூடிய சத்தியாக மகிந்தா உருவெடுக்கலாம் இதனை  இரணில்  விரும்புகின்றார். சிறிலங்கா கட்சியை மகிந்தவின் தோல்வியைப்பாவித்து இரண்டாக்குவது அல்லது மகிந்த ஆதரவுக்கட்சிகளை இசுலாமியக்கட்சிகளைப்பயன்படுத்தி பிரதமிர் பதவியை கைப்பற்றுவது என்பதில் இரணில்குறி என்பதை தமிழர்கள் உணரவேண்டியகட்டாயத்தில் உள்ளோம். மிகிந்தவைவிட ஆபத்தன நபர் இவர்.

 

குமரிநாடு.நெற் இணையத்தின் ஆசிரியர்பீடம்.