குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 7 ம் திகதி செவ்வாய் கிழமை .

தமிழ் சமூகத்தின் ஆரோக்கியம் ஆபத்தான நிலையில்? சிவோன் சுரேசு- தமிழில் – மகேந்தி

05.03.2015-பரம்பரை அமைவுகளையும் சூழ்நிலகளையும் காரணிகளாகக் கொண்டு, வழக்கத்திற்கு அதிகமான அளவி ல் மிகவும் இலகுவாக ஆரோக்கியம் பாதிக்கப்படும் நிலை, தமிழ் சமூகத்தின் மத்தியில் பொதுவானதாகவுள்ளது. மரபு வழித் தோற்றங்கள் இருப்பினும், கலாச்சார வழிமுறைகளி ன் தரமும் நம் மத்தியில் பெருகிவரும் இந்த ஆபத்தான நிலைக்குப் பகுதிக்  காரணமெனக் குறை கூற வேண்டியுள்ளதென, சில ஆரோக்கியம் சம்பந்தமான நிபுணர் கருதுகின்றனர். தெற்கு ஆசிய மக்களை நீரழிவு நோயானது UK இன் மிகுதிப் பிரஜைகளிலும் பார்க்க ஆறு மடங்கு அதிகமாகப் பாதிப்பதும், இருதய நோய் நான்கு மடங்கு அதிகமாகத் தாக்குவதோடு, பத்திலிருந்து பதினைந்து வருடங்கள் முன்பாகவே ஏற்படுவதாகவும் உதாரணம் காட்டப்படுகிறது. கேடயச் சுரப்பி நோய், மார்பகப் புற்றுநோய், வைட்டமின் "D" குறைபாடு என்பனவும் அதிகளவில் காணப்படுகிறது. தெற்கு ஆசிய உணவில் உள்ள அதிகப்படியான காபோஹைடிரேட் (Carbohydrate மாப்பொருள் சக்கரை போன்றவை அடங்கிய) உணவு வகைகளோடு, மேற்கில் அதிகளவில் கிடைக்கும் மதிப்பற்ற உணவு வகைகளும்  (Junk) சேரும் நிலையில், உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதில் ஆச்சரியமில்லையென Kingston வைத்தியசாலை மருந்தாளரான Jane Jananee கூறுகிறார். தமிழ் சமூகத்தின் திறந்த மனப்பான்மையற்ற தன்மை, அவர்களின் ஆரோக்கியத்திற்கு ஆபத்தான நிலையை அதிகரிக்கச் செய்வதாக Great Western வைத்தியசாலையைச் சேர்ந்த வைத்தியர் Anthony Thayaparan கருதுகிறார். அத்தோடு, வெவ்வேறு விதமான உடற்பயிற்சிகளை முயற்சிப்பதில் அக்கறை குறைந்த நிலை, இளம் குழந்தைகள் பாடசாலைக்குப் பின் Clubs போவதை அதைரியப்படுத்தும் தன்மை என்பன தமிழ் குடும்பங்கள் கூடுதல் பாதுகாப்பை நோக்கி உள்ளது போல் இருப்பதாக அவர் கூறுகிறார்.

 

 

 

சிலர் தங்கள் வாழ்வியல் வழிகளில் சிக்கிக் கொண்டும், சிறந்ததாக இருக்கக் கூடுமான தாய் நாட்டின்  பரம்பரை வழக்கங்களைப் பின்பற்றித் தனியாகப் பிரிந்தும், உணவுக் கட்டுப்பாட்டையும், உடற் பயிற்சியையும் முயற்சித்துப்பார்க்க இஷ்டமில்லாமலும் உள்ளனரென Dr.தயாபரன் கூறுகிறார். உடல்நலப் பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கும் தமிழர்கள், தங்களை Bollywood Dance போன்ற உடற்பயிற்சிகளில் ஈடுபடுத்தும் வகையில் ஊக்குவிக்கப்படுகின்றனர் என்றும், ஒவ்வொரு கிழமையும் உடற்பயிற்சியோடு இணையும் பழக்கத்தை ஏற்படுத்த இது சரியான முறையாக அமையுமெனவும் அவர் கூறுகின்றார்.

 

குறிப்பாக இந்தியாவிலிருந்து அல்லது சிறீலங்காவிலிருந்து மேற்கு நாடுகளுக்குக் குடியேறிய தமிழர்களுக்கு உடற்பயிற்சி செய்து கொள்வது சிரமமான காரியமாக இருக்கக் கூடும். தாய் நாட்டில் மக்கள் கடுமையாக உழைக்க அதிகமாகப் பழகியவர்கள் என்றும், தின வாழ்வில் மிகவும் சுறு சுறுப்பாக இயங்கியவர்கள் என்றும், பிரத்தியேக உடற்பயிற்சிப் பழக்கம் கொண்டவர்கள் இல்லை எனவும் முன்னாள் ENT அறுவை சிகிச்சை வைத்தியரான Dr.Chandrapal கூறுகிறார். மேற்கில் வளர்ந்த  குழந்தைகளுக்கு உடற்பயிற்சி பற்றியும், ஆரோக்கியம் பற்றியும் இங்கு பாடசாலைகளில் கற்பிக்கப்படுவதால் அவர்கள் பெற்றோரிற்கு ஆரோக்கியம் பற்றிக் கற்றுக் கொள்ள உதவுவது மிகவும் இன்றியமையாத ஒன்றென அவர் மேலும் கூறுகிறார். ஆரோக்கியத்தின் முக்கிய பகுதியானது, ஆரோக்கிய உணவுப் பழக்கத்தைப் பின்பற்றுவதாகும். தமிழர் உணவு வகைகளில் அதிக கொழுப்பும், சக்கரையும் உள்ளடங்கியிருப்பதால் அவைகள் மிகவும் ஆரோக்கியமாக வழிகளில் சமைக்கப்படமுடியும்.

 

ஆரோக்கியமற்ற உணவு வகைகளுக்குப் பதிலாக ஆரோக்கியமானவற்றை மாற்றாக உபயோகிக்க சிபாரிசு செய்யும் Dr.தயாபரன் உதாரணமாக, சூரியகாந்தி எண்ணைக்கு அல்லது தாவர எண்ணை வகைகளுக்குப் பதில் தேங்காய் எண்ணையை உபயோகிக்கும்படியும், தவிடு தட்டாத அரிசியை(Brown) பச்சை அரிசிக்குப் பதில் உபயோகிக்கும்படியும் கூறும் வேளை, Dr.Chandrapal என்பவர் நெய்யைக் கணிசமான அளவு குறைக்கும் படியும் ஊக்கப்படுத்துகிறார். மத்திய தரைக் கடல் நாடுகளின் உணவு வழமையை கிழக்கிற்குரிய ஆகார வகைகளில் புகுத்தும் முறைமையைக் கூட Dr.தயாபரன் சிபாரிசு செய்கிறார். அத்தோடு, மத்திய தரைக் கடல் நாடுகளின் (Mediterranean) உணவு வழமையில் மீன், Omega-3 எண்ணை வகைகள், வாட்டிய காய் கறி வகைகள் அடங்கி இருப்பதாகவும், அவை இருதயத்திற்கு மிகவும் உகந்ததாக அமைந்துள்ளதாகவும், அவை கறி வகைகளோடு இலகுவில் இணையக் கூடியவை எனவும் Dr.தயாபரன் மேலும் கூறுகிறார்.

 

உயிர் வேதியல் சம்பந்தமானதும், உடலியல் சம்பந்தமானவற்றினதும்  இயல்பு நிலைக்கு மாறான பலவிதமான செயல் நிலையால், வளர்சிதை மாற்ற  அறிகுறிகள் எனப்படும் நீரழிவு நோய், இருதய நோய் என்பன ஏற்படுவதும், இது தமிழர்கள் மத்தியில் அதிகமாகக் காணப்படுவதும், இது வைட்டமின் "D" குறைபாட்டோடும் தொடர்புடையதுமாக உள்ளது. வைட்டமின் "D" ஊட்டச்சத்து முக்கியமாகக் காணப்படும் சூரிய ஒளியை வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் பெற்றுக் கொள்வதில்லை. அத்தோடு வெண்மையான தோலின் அழகு சூரிய ஒளியால் பழுப்பு நிறமாக மாறி அழகிழந்து விடுமென்பதால் சூரிய ஒளியை ஆசிய நாட்டவர் தவிர்ப்பதும், இன்னும் வெள்ளைத் தோல் அழகோடு பெருமளவில் இணைக்கப்பட்ட நிலை காணவும் படுகிறது. இதற்கு மாற்றாகக் குறைந்த பட்சம் பத்து நிமிடங்களேனும் வெயிற் காலங்களில் சூரிய ஒளியில் வெளியில் சென்று வருமாறும், அல்லது வைட்டமின் "D" குளிசைகளை உபயோகிக்குமாறும் இரு வைத்தியர்களும் பரிந்துரைக்கின்றனர்.

 

எங்கள் சொந்த நாடுகளில் நாம் அதிகளவு சூரிய ஒளியில் வாழப் பழகிக் கொண்டவர்களென்றும், வைட்டமின் "D" குறைபாடு வளர்சிதை மாற்ற அறிகுறிகளோடு தொடர்புடையதெனவும், வெளித்தோற்றம் காரணமாக சூரிய ஒளியைத் தவிர்த்துக் கொள்ளுவது துன்பம் உண்டாகும் செயலென்றும், இப்போக்கு பெரிய பிரச்சனையென்றும் Dr.தயாபரன் கூறுகிறார்.

 

மதுபான வகைகளை அருந்தும் பழக்கம் கட்டுப்படுத்தப்படல் வேண்டுமென்றும், புகைப்பழக்கம் முழுமையாகத் தவிர்க்கப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிடுகிறார். பழக வேண்டியவற்றை பழகாது விலத்திப் போகும் பிரச்சனையை மீண்டும் விவரிக்கையில், உதவி தேவைப்படுபவர்கள் அதிலிருந்து விலத்துவதும், அல்லது இருக்க வேண்டிய இடத்தில் இல்லாது போவதும் NHS சேவைகள் தரும் உதவிகளை ஏற்றுக் கொள்ள பின் நிற்பவர்களாவர். உதவி பெறுவது களங்கமென தமிழ் சமூகம் கருதுவது அதன் அடையாளமான குணாதிசயமென்றும், அது அழிக்கப்பட வேண்டுமென்றும், தாம் மெதுவான முன்னேற்றமே காண்பதாகவும், ஆனால் இன்னும் நீண்ட தூரம் போகவேண்டி உள்ளதெனவும் Dr.தயாபரன் கூறுகிறார்.

 

சிவோன் சுரேஸ்  (Shivonne Surace) புலம் பெயர்ந்த யாழ்ப்பாண பெற்றோரின் மகள்... பிரித்தானியாவில் ஊடகவியல் துறையில் பட்டப் படிப்பை மேற்கொள்ளும் மாணவி... இவர் எமது ஆங்கில இணையத்திற்கு எழுதிய கட்டுரையின் தமிழ் ஆக்கமே இந்த பதிவு:-