குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 26 ம் திகதி வெள்ளிக் கிழமை .

வடக்கு முசுலீம்களை மீள்குடியேற்ற அரசு நடவடிக்கை எடுக்கவில்லை – ரிசாட் பதியூதீன்

   14.07. 2011தமிழ்முசுலீம் மக்கள் தங்கள் வாழ்விடங்களை காப்பாற்றிக் கொள்ள கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டும்!:வடக்கு முசுலிம்களை மீள் குடியேற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை – ரிசாட் பதியூதீன்  இது கவனிக்கப்படவேண்டியவிடயம்.தமிழர்களும் சோனகர்களும்(முசுலீம்களும்) பிட்டில் மாவும்பூவும் (தேங்காய்த்துருவலும் ) போன்றவர்கள். தமிர்களும் முசுலீம்களும் இதைஉணரவேண்டும். சிங்களவர்களின் பிரதான உணவான பாண் பருப்பில் பாண் தமிழர்கள் சிங்களவர்களால் உண்ணப்படும் போது பருப்பு கூட்டாக(கறியாக) முசுலீம்கள் பயன்படுத்தப் படுகின்றார்கள். 2 உம் சிங்களவர்களால் உண்ணப்படுவதை உணர்க. இது குமரிநாடு ஆசிரியரின் கருத்து. வடக்கு முசுலிம் மக்களை மீள் குடியேற்றுவதற்கு அரசாங்கம் இன்மும் நடவடிக்கை எடுக்கவில்லை என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிசாட் பதியூதீன் தெரிவித்துள்ளார்.
 
20 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளினால் வெளியேற்றப்பட்ட வடக்கு முஸ்லிம்கள் இன்னமும் மீள் குடியேற்றப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் தாமும் வெளியேற்றப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இன்னமும் 10,000 இடம்பெயர் மக்களே மனிக்பாம் முகாமில் தங்கியிருப்பதாக பிரதி மீள் குடியேற்ற அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் எனப்படும் கருணா தெரிவித்துள்ளார்.
 
வடக்கு கிழக்கைச் சேர்ந்த 650,000 இடம்பெயர் மக்கள் இதுவரையில் மீள் குடியேற்றியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். நிலக்கண்ணி வெடி அகற்றப்படாத பிரதேசங்களில் உள்ள மக்கள் மட்டுமே இன்னமும் மீள் குடியேற்றப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

 


தமிழ்முசுலீம் மக்கள் தங்கள் வாழ்விடங்களை காப்பாற்றிக் கொள்ள கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டும்!
 
சிறிலங்கா முசுலிம் காங்கிரசு வேட்பாளர்கள் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சின்னத்தில் போட்டியிடுகின்றார்கள் என்பதற்காக முஸ்லிம் மக்கள் ஆளும் கட்சியின் வெற்றிலைச்சின்னத்திற்கு வாக்களிக்கக்கூடாது. அது ஆளும் கட்சியின் கொள்கைகளை ஏற்று வாக்களித்ததாகக் கருதப்படும் நிலை ஏற்படும் என்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்டப் பாராளுமன்றப் பிரதிநிதியுமான இரா. சம்பந்தன் புல்மோட்டை முஸ்லிம் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் பேசும்போது தெரிவித்தார்.

எமது மாகாணத்தில் தமிழர்களும் முசுலிம்களும் ஒருவரில் ஒருவர் தங்கி வாழும் நிலைதான் இருக்கின்றது. தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் வாழ்வும் தாழ்வும் ஒருவரில் ஒருவர் தங்கியதாகத்தான் அமைந்துள்ளது. அவர்களின் எதிர்காலம் அவர்கள் ஒற்றுமையாகச் செயல்படுவதில் தான் நிச்சயிக்கப்படும். இதனை உணர்ந்து இரு இன மக்களும் ஒற்றுமையாக செயற்பட வேண்டியது அவசியமாகின்றது என்றும் சம்பந்தன் தெரிவித்தார்.

தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கும் சுலங்கா முஸ்லிம் காங்கிரஸூக்கும் நல்ல புரிந்துணர்வும் தெளிவான விளக்கமும் உள்ளது. இரு இனங்கள் பற்றிய முக்கிய விடயங்களில் இரு கட்சியினருக்கும் முக்கிய புரிந்துணர்வு உள்ளது. என்றாலும் முஸ்லிம் காங்கிரஸ் குச்சவெளி பிரதேச சபைக்கான தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சின்னத்திலேயே போட்டியிடுகின்றது. முஸ்லிம் காங்கிரஸ் தனது ‘மரம்’ சின்னத்தில் போட்டியிடவில்லை. எனவே முஸ்லிம் மக்கள் ஆளும் கட்சியின் வெற்றிலைச் சின்னத்திற்கு வாக்களிக்கக்கூடாது. தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்கே வாக்களிக்க வேண்டும். அதன்மூலமே  தமிழர்களும் முஸ்லிம்களும் தங்களின் வாழ்விடங்களை மற்றும் பிறப்புரிமைகளை காப்பாற்றிக்கொள்ளலாம் என்றும் சம்பந்தன் தெரிவித்தார்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.