குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 2 ம் திகதி வியாழக் கிழமை .

02.03.2015- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

கேரளா:நடுவானில் சிதறி விழுந்தது எரிகற்கள் தான்:விஞ்ஞானிகள் தகவல்

திருவனந்தபுரம்:கேரள மாநிலத்தில் உள்ள திருச்சூர், எர்ணாகுளம், பாலக்காடு, கோழிக்கோடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் 2 நாட்களுக்கு முன்பு இரவில் திடீரென நடுவானில் தீ போன்ற பந்து தோன்றியதை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் பெரும் பீதி ஏற்பட்டது.இந்த தீ பந்துகள் எர்ணாகுளம் மாவட்டம் கரியமல்லூர் என்ற கிராமத்தின் திறந்தவெளி பகுதியில் விழுந்தது.

 

கேரளாவில் பலத்த சத்தத்துடன் வானில் இருந்து வெடித்து, தீப்பிழம்பாக கீழே விழுந்த மர்மப் பொருளை பொதுமக்கள் தொட வேண்டாம் என வானிலை இலாகா எச்சரித்தது.வானில் இருந்து விழுந்த தீப்பந்துகள் மின்னல் வேகத்தில் ராக்கெட் போல் பயணித்ததாகவும், பயங்கர சத்தத்துடன் பூமியில் விழுந்ததாகவும், அப்போது நில அதிர்வை உணர்ந்ததாகவும் சம்பவத்தை நேரில் பார்த்த மக்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் மாநில பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அங்கு கிடைத்த பொருட்களை கைப்பற்றி ஆய்வை மேற்கொண்டனர்.

இது குறித்து இந்த ஆணையத்தின் விஞ்ஞானி குரியகோஸ் கூறுகையில், எங்களது முதல் கட்ட ஆய்வில் கரியமல்லூர் கிராமத்தில் விழுந்தது, எரிகற்கள் என்பது தெரிய வந்துள்ளது. அந்த இடத்தில் நாங்கள் சேகரித்த பொருட்கள் மிகவும் சிறிய அளவில் இருந்தன. எனினும், இவை அதிக எடையைக் கொண்டிருந்தன. இவற்றில் இரும்பும், நிக்கலும் அதிக அளவில் கலந்து காணப்படுகிறது. இது அதிக ஈர்ப்பு விசையுடன் பூமியில் விழுந்ததால்தான் பலத்த அதிர்வு ஏற்பட்டு உள்ளது. இது அபூர்வ வகை எரிகற்கள் ரகத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என தெரிவித்துள்ளார்.

 

பார்லி., கேண்டீனுக்கு வந்த மோடி

புதுடில்லி: பார்லிமென்ட் வளாகத்தில், அறை எண் 70ல் எம்.பி.,களுக்கான கேண்டீன் உள்ளது. எம்.பி.,க்கள் அங்கு மதிய உணவருந்திக் கொண்டிருந்தபோது, பிரதமர் நரேந்திரமோடி திடீரென அந்த அறைக்குள் நுழைந்தார். அங்கிருந்த ஊழியரிடம் தனக்கு சைவ சாப்பாடு வேண்டும் என ஆர்டர் செய்தார். சாப்பாடு வந்ததும், அங்கிருந்த எம்.பி.,க்களிடம் அமர்ந்து, அவர்களுடன் உரையாடிக் கொண்டே சாப்பிட்டார். பின்னர், பில்லுக்கு பணம் கொடுத்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

 

தேர்வு அறைக்குள் யானை புகுந்தால்...!

பங்குரா: மேற்கு வங்க மாநிலம், பங்குரா மாவட்டம் வனங்கள் அடங்கிய ஒன்றாகும். இங்குள்ள வனப்பகுதிகளில் காட்டு யானைகள் அதிகம். இவை அவ்வப்போது ஊருக்குள் நுழைந்து, மக்களை பீதியடைச் செய்வது வழக்கம். இப்பகுதியில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள், சோனமுகி என்ற யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் இயங்கி வரும் பள்ளி ஒன்றில் தேர்வெழுதி வருகின்றனர். தேர்வு எழுதும் போது யானைகள் புகுந்துவிட்டால் பாதிப்பு ஏற்படும் என்று பயந்தனர். இதைத் தொடர்ந்து, யானைகளை தடுக்கும் வனத்துறை பாதுகாப்பு பிரிவு அங்கு பணியமர்த்தப்பட்டுள்ளது.

 

கெஜ்ரி தப்பிக்க முயலக்கூடாது: காங்.,

புதுடில்லி: டில்லி மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அஜய்மக்கான், செய்தியாளர்களிடம் பேசுகையில், 'கட்சியை பலப்படுத்துவது முதல் வேலை. அடுத்ததாக, நல்ல எதிர்கட்சியாக செயல்படுவோம்,' என்றார். மேலும், 'ஊழலை தேசிய அளவிலும், மாநில அளவிலும் எதிர்ப்பதால் அரவிந்த் கெஜ்ரிவால் மீது எனக்கு அளவு கடந்த மதிப்பு உண்டு. இருப்பினும், அவர் மக்களுக்கு அளித்த வாக்குறுதியில் இருந்து தப்பிச் செல்ல முயற்சி செய்ய கூடாது,' என்றார்.

 

சயீது பேச்சு: வெங்கையா கருத்து

புதுடில்லி: காஷ்மீர் முதல்வர் சயீதின் சர்ச்சை பேச்சை கண்டித்து, லோக்சபாவில் எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. பிரதமர் பதில் அளிக்க வேண்டும் என்று கோரி வௌிநடப்பிலும் ஈடுபட்டன. இது குறித்து பார்லி., விவகாரத்துறை அமைச்சர் வெங்கையநாயுடு கூறுகையில், 'வௌிநடப்பு செய்வது எதிர்கட்சிகளின் உரிமை. ஆனால், எந்த காரணத்தை முன்னிட்டும் முப்தி முகம்மது சயீதின் கருத்தை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளாது,' என்றார்.

 

சாந்தி தியேட்டர் இடிக்கப்பட்டு புதிய வளாகம் - பிரபு

சென்னை : சென்னையில் உள்ள பழமையான தியேட்டர்களில் ஒன்றான சாந்தி தியேட்டர் இடிக்கப்படுவதாகவும், அக்ஷ்யா நிறுவனத்துடன் சேர்ந்து புதிய வணிக வளாகம் அமைக்கப்பட இருப்பதாகவும், இதிலேயே நவீன தரத்துடன் கூடிய சாந்தி தியேட்டர் புதுப்பொலிவுடன் அமைக்கப்பட இருப்பதாகவும், நடிகர் பிரபு அறிவித்துள்ளார். சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த போது இந்த தகவலை தெரிவித்தார் நடிகர் பிரபு.

 

பிரியங்கா பராக் பராக்...?: சோனியா மறுப்பு

புதுடில்லி: காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் ஓய்வெடுத்து வரும் நிலையில், அவர் திரும்பி வந்ததும் கட்சி தலைமையை ஏற்பார் என்று கருத்து நிலவி வருகிறது. இதற்கு கட்சிக்குள் எதிர்ப்பும், ஆதரவும் இருந்து வரும் நிலையில், பிரியங்கா கட்சியின் பொதுச் செயலாளர் பொறுப்பை ஏற்க உள்ளதாக மற்றொரு தகவல் வந்து, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, காங்., தலைவர் சோனியா பதில் அளிக்க மறுத்துவிட்டார்.

 

மோடி பதில் அளிக்க காங்., கோரிக்கை

புதுடில்லி: காஷ்மீரில் அமைதியாக தேர்தல் நடக்க பாகிஸ்தானும், பயங்கரவாதிகளும் தான் காரணம் என்று முப்தி முகம்மது சயீது பேசியுள்ளது குறித்து, பிரதமர் நரேந்திரமோடி லோக்சபாவில் விளக்கம் அளிக்க வேண்டும் என, காங்கிரஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

 

சயீது பேச்சு: லோக்சபாவில் சர்ச்சை

புதுடில்லி: ஜம்மு காஷ்மீர் முதல்வராக பொறுப்பேற்ற முப்தி முகம்மது சயீது, 'காஷ்மீரில் தேர்தல் அமைதியாக நடக்க, பாகிஸ்தானும், பயங்கரவாதிகளும், பிரிவினைவாதிகளும் நல்ல ஒத்துழைப்பு கொடுத்தனர்,' என்றார். இது குறித்து எதிர்கட்சிகள் லோக்சபாவில் பிரச்னையை கிளப்பின. இதற்கு பதில் அளித்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், 'இது சம்பந்தமாக பிரதமர் நரேந்திரமோடியுடன் ஆலோசனை நடத்தி உள்ளேன். அவரது அனுமதிக்கு பின்னர் அவையில் அதற்கான பதிலை அளிக்கிறேன்,' என்றார்.

 

"ஆம்' போட வேண்டுமா ஆம் ஆத்மியில்! "பவர்' கிடைத்ததும் வருகிறது பிளவு?

புதுடில்லி: "ஊழல் ஒழிப்பே பிரதானம். நாங்கள் வித்தியாசமான அரசியல்வாதிகள்'' என்ற கோஷத்துடன் இளைஞர்களைக் கவர்ந்து, அரசியலில் புயலைக் கிளப்பிய அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி கட்சியில் கடும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. டில்லியில் மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் ஆட்சியைப் பிடித்த அக்கட்சியின் "கொள்கை வீரர்களுக்குள்' ஏற்பட்டுள்ள சச்சரவு, டில்லி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.அக்கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் பிப்.6ம் தேதி நடந்தது. இக்கூட்டத்தில் தான் கட்சிக்குள் இருந்த கருத்து வேறுபாடு வெளிச்சத்துக்கு வந்தது. கட்சிக்குள் நண்பர்களாக பழகியவர்களே ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டனர்.

 

நேரில் வர சொல்லி ஓய்வூதியர்களை படுத்தாதீங்க: வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவு

புதுடில்லி: 'ஓய்வூதியர்கள், தங்கள் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க, நேரில் வருமாறு வங்கிகள் கட்டாயப்படுத்தக் கூடாது' என, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.

அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு, மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகை ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது. இந்த தொகையை பெற, ஆண்டுதோறும் ஓய்வூதியர்கள் தாங்கள் உயிருடன் இருப்பதற்கான ஆயுள் சான்றிதழை, சம்பந்தப்பட்ட வங்கிகளில் சமர்ப்பிக்க வேண்டும். வயது முதிர்வின் காரணமாக, ஓய்வூதியர்களில் சிலரால், வங்கிகளுக்கு நேரடியாக சென்று ஆயுள் சான்றிதழை வழங்க முடிவதில்லை. எனினும், அவர்களை கட்டாயம் நேரில் வருமாறு, வங்கி அதிகாரிகள் கட்டாயப்படுத்துவதாக, ஓய்வூதியர்கள் சங்கத்தினர் புகார் தெரிவித்தனர்.

 

விமர்சனத்தால் ஏலம் போன 'கோட்': மோடியை சீண்டினார் தாக்கரே

மும்பை: பல்வேறு தரப்பினரின் ஆட்சேபனைக்கு ஆளானதாலேயே மோடியின் விலை உயர்ந்த, 'கோட்' ஏலம் விடப்பட்டதாக, எம்.என்.எஸ்., தலைவர் ராஜ் தாக்கரே கருத்து தெரிவித்து உள்ளார்.

மும்பை புறநகரில் நடந்த கட்சிக் கூட்டத்தில்,மகாராஷ்டிரா நவ நிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே பேசியதாவது:அமெரிக்க அதிபர் ஒபாமா வருகையின் போது, தன் பெயர் இடம் பெற்ற பிரத்யேகமாக வடிமைக்கப்பட்ட விலை உயர்ந்த, 'கோட்'டை பிரதமர் மோடி அணிந்திருந்தார். மோடியின் இந்த செயல், பல்வேறு தரப்பினரின் கண்டனத்திற்கு உள்ளானது. அதன் பிறகே அந்த கோட், ஏலம் விடப்பட்டது. இதன் மூலம் கிடைத்த தொகையை, கங்கையை சுத்தம் செய்யும் திட்டத்திற்கு வழங்குவதாக அறிவித்துள்ளனர். இந்த தொகையின் மூலம் கங்கை முழுவதையும் சுத்தம் செய்துவிட முடியுமா?மாநிலத்தில், சுங்கச் சாவடிகளை அகற்றுவது குறித்து எந்தக் கட்சியும் குரல் கொடுக்க முன்வரவில்லை. தேர்தல் நேரத்தில், சுங்கச் சாவடி களை அகற்றுவோம் எனக் கூறிய பா.ஜ., தற்போது அதைப் பற்றி பேசவே தயங்குகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

 

'முத்ரா'வுக்கு ரூ.20,000 கோடி ஒதுக்கீடு: சிறு,குறு தொழில்கள் மேம்படும்

புதுடில்லி : நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக திகழும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களை கைகொடுத்து தூக்கி விடுவதற்காக, "முத்ரா" (மைக்ரோ யூனிட்ஸ் டெவலப்மென்ட் ரீபைனான்ஸ் ஏஜன்சி) வங்கியை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக மத்திய பொது பட்ஜெட்டில், சுமார் ரூ.20,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

முத்ரா வங்கி : இந்தியாவில் சுமார் 5.77 கோடி சிறுதொழில் மையங்கள் இயங்கி வருகின்றன. பெரும்பாலும் தனிநபர்களாலேயே நடத்தப்பட்டு வரும் இந்த சிறு தொழில்கள், சிறிய உற்பத்தி மையங்களாகவோ, பயிற்சி நிறுவனங்களாகவோ செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 62 சதவீதம் தொழில்கள் பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்களாலேயே நடைபெறுகிறது. இதனால் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள முத்ரா வங்கியின் மூலம் படித்த இளைஞர்களிடம் நம்பிக்கையையும், தொழில் திறனையும் வளர்க்க முடியும் என பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

மேலும், நாங்கள் வங்கிகள் அல்லாதவற்றை வங்கி மையமாக்கி உள்ளோம். நிதி இல்லாதவற்றிற்கு நிதி அளித்துள்ளோம். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் செய்பவர்களுக்கு எளிதில் கடன் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் துவங்கப்படும் இந்த முத்ரா வங்கி மூலம், புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கு உதவ ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிறு நிதி நிறுவனங்களின் மறு நிதியகமாக பிரதமரின் முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் இது செயல்படும். இதன் மூலம் சிறு,குறு தொழில்களில் மேலும் பலர் ஈடுபட வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சிறு,குறு தொழிலாளர்கள் பாராட்டு : இந்திய சிறு தொழில்கள் சங்க தென்னிந்திய இணைச் பொருளாளரும், வேலூர் மாவட்ட சிறு, குறுந்தொழில் முனைவோர் சங்கத் தலைவருமான எம்.வி. சுவாமிநாதன் கூறுகையில், சிறு, குறு தொழில் முனைவோருக்கு கடனுதவி அளிக்க முத்ரா வங்கிகள் உருவாக்கப்படுவதாகவும், அதற்காக ரூ.20 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்வதாகவும் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கு உதவ ரூபாய் ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்வதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது வரவேற்கத்தக்கதாகும். இந்த அறிவிப்பு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. மத்திய அரசுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.

 

பட்ஜெட் உரை: புறக்கணித்த ஆல் இந்தியா ரேடியோ?

புது டில்லி:மத்திய பட்ஜெட் உரை நேரலை ஒலிபரப்புக்கு மத்திய அரசின் கீழ் இயங்கும் ஆல் இந்தியா ரேடியோ போதிய முக்கியத்துவம் கொடுக்காதது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்ந்தது

புதுடில்லி: பெட்ரோல் விலை லிட்டருக்கு, 3.18 ரூபாயும்; டீசல் விலை, 3.09 ரூபாயும் நேற்று நள்ளிரவு முதல் உயர்ந்தது. உள்ளூர் வரிகள் சேர்த்து, சென்னையில், இந்த விலை உயர்வு, 3.46 மற்றும், 3.34 ரூபாயாக உள்ளது.

சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரங்களுக்கு ஏற்ற வகையில், பெட்ரோல், டீசல் விலைகள் அவ்வப் போது மாற்றி அமைக்கப்படுகின்றன. இதன்படி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குப் பின், பெட்ரோல் விலை, 10 முறையும், அக்டோபர் மாதத்திற்குப் பின், டீசல் விலை, 6 முறையும் குறைந்தது. ஆனால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, தற்போது உயர்ந்து வருவதால், கடந்த மாதம் மத்தியில், பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது.

இந்நிலையில், ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக நேற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து உள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு, 3.18 ரூபாயும்; டீசல் விலை லிட்டருக்கு, 3.09 ரூபாயும், நள்ளிரவு முதல் உயர்ந்தது. உள்ளூர் வரிகள் சேர்த்து, சென்னையில், பெட்ரோல் விலை, 3.46 ரூபாய் அதிகரித்து, 63.31 ரூபாயாகி உள்ளது; முந்தைய விலை, 59.85. டீசல் விலை, 3.34 உயர்ந்து, 52.92 ரூபாயாகி உள்ளது; முந்தைய விலை, 49.58 ரூபாய்.

 

ஐ.டி., நிறுவன ஊழியர்களுக்கு இணையாக எம்.எல்.ஏ., ஊதியம்?

பெங்களூரு: கர்நாடகா எம்.எல்.ஏ.,க்கள் வாங்கும் ஊதியத்தை உயர்த்தும் மசோதா, வரும் சட்டசபை கூட்டத்தொடரின் போது தாக்கல் செய்யப்படவுள்ளது. இதன்படி, ஒவ்வொரு எம்.எல்.ஏ.,க்களும், ஐ.டி., நிறுவன ஊழியர்களுக்கு இணையாக, மாதம், 1.23 லட்சம் ரூபாய் ஊதியம் பெற வாய்ப்புள்ளது. தற்போது, எம்.எல்.ஏ.,க்கள், மாதத்திற்கு, மற்ற படிகள் உட்பட, 65 ஆயிரம் ரூபாய் பெறுகின்றனர். மாநிலத்துக்குள் நடக்கும் சட்டசபை கூட்டத் தொடருக்கு, தினமும், 1,000 ரூபாயும், மாநிலத்துக்கு வெளியே கூட்டம் எனில், 1,500 ரூபாய் வழங்கப்படும்.

 

யார் இந்த முப்தி?

ஸ்ரீநகர்: முதல்வராக பதவியேற்ற முப்தி முகமது சயீத், துவக்க காலத்தில் காங்கிரசில் இருந்தவர். பின், அந்த கட்சியிலிருந்து வெளியேறி, ஜன்மோர்ச்சா என்ற கட்சியில் இணைந்தார். வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது, உள்துறை அமைச்சர் பதவி, முப்திக்கு கிடைத்தது. இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சராக பதவி வகித்த, முதல் முஸ்லிம் என்ற பெருமை இவருக்கு கிடைத்தது. நரசிம்ம ராவ் பிரதமராக இருந்தபோது, மீண்டும் காங்., கட்சியில் முப்தி இணைந்தார்; பின்,வெளியேறினார். இதையடுத்து, தன் மகள் மெகபூபா உதவியுடன், 1999ல், மக்கள் ஜனநாயக கட்சியை துவக்கினார். முப்தி முகமது சயீத் உள்துறை அமைச்சராக இருந்தபோது, அவர் மகள் ரூபியாவை, பயங்கரவாதிகள் கடத்திச் சென்றனர். சிறையில் இருந்த ஐந்து பயங்கரவாதிகள் விடுவிக்கப்பட்டதை அடுத்து, ரூபியா விடுவிக்கப்பட்டார். இந்த விவகாரம், அப்போது, சர்ச்சையை ஏற்படுத்தியது.

 

ஆம் ஆத்மியில் மோதல் முற்றுகிறது: கெஜ்ரிவாலை விமர்சித்த பிரசாந்த் பூஷணுக்கு பதிலடி

புதுடில்லி: ஆம் ஆத்மியில் உள்கட்சி மோதல் உச்சகட்டத்தில் உள்ளது. யோகேந்திர யாதவ் உள்ளிட்ட சிலர் அதிருப்தியில் உள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன. இந்நிலையில், கட்சியில் மோதல் ஏதுமில்லை என யோகேந்திர யாதவ் கூறியுள்ளார். இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சி ஒரு நபரை மையமாக வைத்து செயல்படுவதாக பிரசாந்த் பூஷண் கூறியுள்ளார். இந்நிலையில், பிரசாந்த் பூஷண் கூறுகையில், கெஜ்ரிவாலுக்கு எதிராக சதிச்செயல் நடைபெறுகிறது. கெஜ்ரிவாலுக்கு எதிராக உள்ளார்கள் என்பதை நான் இப்போது கூற மாட்டேன் என ஆம் ஆத்மி மூத்த தலைவர் சஞ்சய் சிங் கூறியுள்ளார்.

 

தலைமைச்செயலாளர் குறித்த டில்லி அரசின் கோரிக்கையை நிராகரித்தது மத்திய அரசு

புதுடில்லி: டில்லி தலைமைச்செயலாளராக ஆர்எஸ் நெகி என்பவரை நியமிக்க வேண்டும் என்ற டில்லி அரசின் கோரிக்கையை மத்திய உள்துறை அமைச்சகம் நிராகரித்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து கேகே சர்மாவை தலைமைச்செயலாளராக நியமிக்க வேண்டும் என ஆம் ஆத்மி அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

 

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.