குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, புரட்டாசி(கன்னி) 13 ம் திகதி வெள்ளிக் கிழமை .

01.03.2015- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

ஸ்டாலினுக்கு கருணாநிதி முத்தம் கொடுத்து ஆசி

சென்னை: தனது 62வது பிறந்தநாளை முன்னிட்டு, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், தி.மு.க., தலைவரும், தந்தையுமான கருணாநிதியிடம் இன்று முத்தமும் ஆசியும் பெற்றார். பின்னர், தொண்டர்கள் மத்தியில் அவர் கேக் வெட்டி, தனது பிறந்தநாளை கொண்டாடினார்.

இலங்கை செல்கிறார் சுஷ்மா
கொழும்பு: இந்திய வௌியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், வரும் வௌ்ளியன்று கொழும்பு செல்கிறார். அவரின் இந்த இரண்டு நாள் பயணத்தில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கே உள்ளிட்ட பல தலைவர்களை சந்தித்து, இரு நாட்டு உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். அதிபர் மைத்ரிபால சிறிசேனாவையும் அவர் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பயணத்தின் போது, தமிழர்கள் அதிகமாக வசிக்கும் யாழ்பாணம், அனுராதபுரம் மற்றும் கண்டி ஆகிய இடங்களுக்கும் சுஷ்மா செல்கிறார்.
பூடான் சென்றார் ஜெய்சங்கர்
திம்பு: சார்க் யாத்ராவின் ஒரு கட்டமாக, வௌியுறவுத்துறை செயலர் ஜெய்சங்கர் பூடான் சென்றடைந்தார். நாளை வங்கதேசம் செல்லும் அவர், மார்ச் 3ம் தேதி பாகிஸ்தான் செல்கிறார்.
கெஜ்ரிவால் குறித்து முப்தி
புதுடில்லி: டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குறித்த கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த காஷ்மீர் முதல்வர் முப்தி முகம்மது சையது, 'லஞ்சத்தை ஒழிப்பதற்காக, மொபைல்போனை பாக்கெட்டில் வைத்து உளவு பாருங்கள் என கெஜ்ரிவால் போல நான் சொல்லமாட்டேன்,' என்றார்.
முப்திக்கு மோடி உறுதியளிப்பு
ஜம்மு: ஜம்முவில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய முதல்வர் முப்தி முகம்மது சையது, 'பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை குறித்த நடவடிக்கையில், முதல்கட்டமாக வௌியுறவுத்துறை செயலாளரை அங்கு அனுப்பி வைக்க உள்ளதாக பிரதமர் நரேந்திரமோடி என்னிடம் உறுதி அளித்துள்ளார்,' என்றார்.
சிறந்த ஆட்சியை தருவோம்: முப்தி
ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சிறந்த ஆட்சியை தருவோம், வௌிப்படையான ஆட்சி முறை இருக்கும் என முதல்வராக பொறுப்பேற்றுள்ள முப்தி முகம்மது சையது கூறி உள்ளார். மேலும், தற்போது ஏற்பட்டுள்ள கூட்டணி, மாநிலத்தின் ஒரு திருப்புமுனையாக இருக்கும் வகையில் செயலாற்றுவோம் என்றும், எங்களுக்கு கல்வியும், வேலை வாய்ப்பும் தான் மிகப் பெரிய சவாலாக இருக்கும் என்றும் முப்தி கூறினார்.
பி.சி.சி.ஐ., தேர்தல் நாளை நடத்த திட்டம் ?
சென்னை: இன்று நடப்பதாக இருந்த பி.சி.சி.ஐ., தேர்தல் கூட்டம் நாளை நடத்தப்படலாம் என கூறப்படுகிறது.
பதவி ஏற்பு விழா: ஆசாத் கிண்டல்
ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், பா.ஜ., பி.டி.பி., கட்சிகளின் கூட்டணி ஆட்சி இன்று பொறுப்பேற்றது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத், 'இந்த கூட்டணி ஆட்சி குறித்த முடிவை எடுத்தது ஆர்.எஸ்.எஸ்.,தான். இன்று நடந்தது ஒரு பதவி ஏற்பு விழா, பா.ஜ.,வின் தேசிய செயற்குழு கூட்டம் போல இருந்தது,' என்றார்.
தமிழர்கள் மாயம்:விசாரணை துவக்கம்
கொழும்பு: விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது, தமிழர்கள் பலர் மாயமாகினர். அவர்கள் என்ன ஆனார்கள் என்பது குறித்த விசாரணை இலங்கையில் துவங்கி உள்ளது. இது தொடர்பாக அரசுக்கு வந்த புகாரின் அடிப்படையில், இலங்கை கடற்படையைச் சேர்ந்த முக்கிய அதிகாரி ஒருவரிடம் விசாரணை நடந்து வருகிறது. கடந்த 2007ம் ஆண்டில் இருந்து 2009ம் ஆண்டு வரை நடந்த சம்பவங்கள் மீதான புகார்கள் அதிகமாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
சையதுக்கு ஒமர் வாழ்த்து
புதுடில்லி: காஷ்மீர் முதல்வராக முப்து முகம்மது சையது இன்று பதவி ஏற்றார். அவருடன் துணை முதல்வரும், அமைச்சர்களும் பதவி ஏற்றனர். முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா, புதிய அமைச்சரவைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து ஒமர் தனது டுவிட்டர் செய்தியில், 'புதிய அமைச்சரவைக்கும், அமைச்சர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். தாங்கள் அனைவரும் சிறப்பாக பணியாற்ற எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்,' என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரபல நடிகைக்கு பன்றிக்காய்ச்சல்
மும்பை: பாலிவுட் திரையுலகின் இளவரசியாக உள்ள சோனம் கபூருக்கு பன்றிக்காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.28 வயதான சோனம் கபூர், பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையாக உள்ளார். சல்மான் கான், அனுபம் கேர், சோனம் கபூர் நடிப்பில் உருவாகி வரும் பிரேம் ரத்தன் தான் பயோ படத்தின் சூட்டிங் குஜராத் மாநிலம் கோண்டல் பகுதியில் நடைபெற்று வந்தது. அப்போது, சோனம் கபூருக்கு, திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில், பன்றிக்காய்ச்சல் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டது. உடனடியாக ராஜ்கோட்டிற்கு அழைத்துவரப்பட்ட அவர், ஸ்டெர்லிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சோனம் கபூர், ஐ.சி.யூவில் வைக்கப்பட்டுள்ளார். படக்குழுவினருக்கு, பன்றிக்காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சோனம் கபூர் ,விரைவில், மும்பை கோகிலாபென் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீரில் புதிய அரசு பொறுப்பேற்பு
ஜம்மு: காஷ்மீரில் புதிய முதல்வராக மக்கள் ஜனநாயக கட்சியின் முப்து முகம்மது சையதும், துணை முதல்வராக பா.ஜ.,வின் நிர்மல்சிங்கும் பொறுப்பேற்றுக் கொண்டனர். தொடர்ந்து அமைச்சர்கள் பொறுப்பேற்றனர். கவர்னர் வோரா, பதவி பிரமாணம் செய்து வைத்தார். விழாவில் சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டார். காஷ்மீர் முதல்வர் முப்தி முகம்மது சையதுக்கு, பிரதமர் மோடி ஆரத்தழுவி வாழ்த்து தெரிவித்தார். பா.ஜ.,வின் மூத்த தலைவர் அத்வானி, அமித்ஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பதவி ஏற்பில் பா.ஜ., தலைவர்கள்
புதுடில்லி: காஷ்மீரில், பா.ஜ., பி.டி.பி., கூட்டணி ஆட்சி இன்று பொறுப்பேற்கிறது. முப்தி முகம்மது சையது முதல்வராக பொறுப்பேற்கிறார். இதற்கான பதவி ஏற்பு விழாவில் பா.ஜ., முக்கிய தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா, அரியானா முதல்வர் கட்டார் ஆகியோர் காஷ்மீர் சென்றுள்ளனர்.
பட்ஜெட் தயாரிப்பில் ஜெட்லியின் நாட்டுப்பற்று
புதுடில்லி : பழங்கால நடைமுறைகள் பலவற்றை முடிவுக்கு கொண்டு வந்துள்ள பா.ஜ., அரசின் அடுத்த கட்ட நடவடிக்கையாக பட்ஜெட் அச்சிடப்பட்ட காகிதங்களில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தனது நாட்டுப்பற்றை காட்டி உள்ளார். பொதுவாக பட்ஜெட் உரை அடங்கிய கோப்புக்கள் ஊதா நிறத்திலேயே இருக்கும். ஆனால் ஜெட்லி நேற்று தாக்கல் செய்த பட்ஜெட் உரை, காவி-வெள்ளை-பச்சை என மூவர்ணத்தினால் அமைக்கப்பட்டிருந்தது.
பூஷண்,யோகேந்திரா கட்சியிலிருந்து விலகல்?
புதுடில்லி : கட்சி தலைமையுடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக ஆம்ஆத்மி கட்சியில் இருந்து விலக பிரசாந்த் பூஷணும், யோகேந்திர யாதவும் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சமீபத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர்கள் இதனை சூசகமாக தெரிவித்துள்ளனர். ஆனால் கட்சி ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவால் இது பற்றி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
கல்விதுறை புரட்சி செய்தவர் ஸ்டாலின்:கனிமொழி
சென்னை : சென்னையில் நடைபெற்ற திமுக பொருளாளர் ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவில் பேசிய திமுக எம்.பி., கனிமொழி, ஸ்டாலின் பிறந்தநாளை திமுக.,வினர் இளைஞர் எழுச்சி தினமாக கொண்டாடுகின்றனர். தனது பிறந்த நாளுக்கு பதாகைகள் வைப்பதை விட பெண் கல்விக்கு உதவி செய்ய வேண்டும் அண்ணன் ஸ்டாலின் தனது அறிக்கையில் கூறி இருந்தார். பெண் கல்வியின் அவசியத்தை அனைவரும் உணர வேண்டும் என்பதற்காக பெண்களுக்கான திருமண உதவித் திட்டத்தை கலைஞர் கொண்டு வந்தார். அந்த வகையில், அண்ணன் ஸ்டாலினும், தனது அறிக்கையில் பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளித்துள்ளார். சென்னை மேயராக இருந்த போது கல்வி துறையிலும் புரட்சியை கொண்டு வந்தவர் ஸ்டாலின் என தெரிவித்துள்ளார்.
புதுக்கட்சி துவங்கினார் மஞ்ஜி
பாட்னா : கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு, பின் நெருக்கடி காரணமாக பீகார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த ஜிதன் ராம் மஞ்ஜி புதிய அரசியல் கட்சியை துவக்கி உள்ளார். தனது கட்சிக்கு இந்துஸ்தானி ஆவம் மோர்சா என மஞ்ஜி பெயரிட்டுள்ளார்.
ஓர் இனம், ஓரே இரத்தம் : ஸ்டாலின் அறிக்கை
சென்னை : பிறந்த நாளை முன்னிட்டு டுவிட்டரில் திமுக பொருளாளர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், மார்ச் 1, மானுட சமூகத்தில் பாகுபாடு ஒழிப்புதினமான இந்நாளே என் பிறந்த நாளாகவும் இருப்பதில் நான் இரட்டிப்பு மகிழ்ச்சி கொள்கிறேன். இந்த உன்னத நோக்கத்திற்காக, தமிழக மக்கள், குறிப்பாக இளைஞர்கள் தங்களை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என்பதே என் பேரவா. ஆணோ, பெண்ணே, திருநங்கையோ, கற்றவரோ கல்லாதவரோ, மாற்றுத்திறனாளியோ, ஏழையோ, பணக்காரரோ, யாராக இருப்பினும் எல்லோருக்கும் கண்ணியமான வாழ்வுக்கு உரிமை உண்டு. நிறம், மதம், மொழி, நம்பிக்கை, விருப்பம்...எதுவாக இருப்பினும் நமக்குள் பிரிவினையோ, பேதமோ இல்லை! எனவே உறவுகளைப் பேதப்படுத்தும் தடைச்சுவர்கள் தகர்ந்து போகட்டும் ! பெரியாரால் விதைக்கப்பட்டு, அண்ணாதுரை, கருணாநிதி ஆகியோரால் வளர்க்கப்பட்ட சமத்துவமும், சகோதரத்துவமும் இந்த மண்ணில் நிலைக்கட்டும் என தெரிவித்துள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கு: மாஜி அமைச்சர் நேருவுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
புதுடில்லி:வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, ஊழல் தடுப்பு பிரிவினரால் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது தொடரப்பட்ட வழக்கில், விரிவான விசாரணை நடத்துமாறு திருச்சி தனிக்கோர்ட் உத்தரவிட்டது. இதை எதிர்த்து நேரு தாக்கல் செய்த மனுவை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு கிளை, இந்த வழக்கில் இருந்து அவரையும் சம்பந்தப்பட்ட மற்றவர்களையும் விடுவித்து உத்தரவிட்டது. ஐகோர்ட்டின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசின் ஊழல் தடுப்பு பிரிவின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், ஆர்.கே.அகர்வால் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் சார்பில் ஆஜரான வக்கீல் யோகேஷ் கன்னா வாதாடுகையில், திருச்சி தனிக்கோர்ட்டில் தாக்கல் செய்த விவரங்களை ஐகோர்ட்டு கவனத்தில் கொள்ள தவறி விட்டதாகவும், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை வலுவான முகாந்திரங்கள் இருப்பதாகவும் கூறினார். இதைத்தொடர்ந்து நீதிபதிகள், தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவுக்கு நேருவும், அவரது மனைவியும் 4 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு கோரி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
பாக் சிறையிலிருந்து இருவர் தப்பி ஓட்டம்
இஸ்லாமாபாத்:சர்வதேச சுற்றுலாப் பயணிகளை சேர்ந்த 10 சுற்றுலாப் பயணிகளை சுட்டுக் கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த மிக பயங்கரமான தீவிரவாதிகள் 2 பேர் சிறையில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர்.நேற்று முன்தினம் காலை, கில்கிட் சிறையில் இருந்து 4 தீவிரவாதிகள் தப்பிச் சென்றனர். காவல்துறையினர் எடுத்த அதிரடி நடவடிக்கையில், ஒரு கைதி சுட்டுக் கொல்லப்பட்டார். ஒருவர் காயத்துடன் பிடிபட்டார். மற்ற இருவரும் தப்பியோடிவிட்டனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக திருவாரூர் முத்தரசன் தேர்வு
திருநெல்வேலி/கோவை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக திருவாரூரை சேர்ந்த முத்தரசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு கோவையில் கடந்த நான்கு நாட்களக நடந்தது. தற்போது மாநில செயலாளராக இருந்து வரும் தா.பாண்டியன் 9 ஆண்டுகளாக பதவியில் உள்ளதால், புதிய மாநிலசெயலாளர் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. புதிய மாநில செயலாளராக துணை செயலாளர், மகேந்திரன் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், மாநாட்டின் கடைசி நாளான இன்று புதிய மாநில செயலாளரை தேர்வு செய்ய தேர்தல் நடந்தது, இதில் மாநில விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் திருவாரூர் முத்தரசனும், மகேந்திரனும் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் முத்தரசன் 63 ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றார். மகேந்திரனுக்கு 61 ஓட்டுக்கள் கிடைத்தது. மற்ற பதவிகளுக்கு தேர்தல் நடத்துவது குறித்து, புதுச்சேரியில் நடைபெறும் அகில இந்திய மாநாட்டிற்கு பின் முடிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.