குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, புரட்டாசி(கன்னி) 13 ம் திகதி வெள்ளிக் கிழமை .

25.02.2015- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

சோனியா முடிவு தான் இறுதி முடிவு-காங்.,

புதுடில்லி : கடந்த சில வாரங்களாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் மாயமானது தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதில் ஒன்றாக, காங்கிரசின் அடுத்த தலைவராக ராகுல் பொறுப்பேற்பதற்கு கட்சியில் மூத்த தலைவர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்ததால், ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாகவே ராகுல் எங்கோ சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இதற்கு பதிலளித்துள்ள காங்கிரஸ் தலைவர் ஒருவர், அது பற்றி முடிவு எடுக்க வேண்டியவர் சோனியா தான். ராகுலிடம் தலைமை பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என சோனியா முடிவு செய்து விட்டால் அதனை யாராலும் தடுக்க முடியாது. சோனியாவே இன்னும் பல காலம் கட்சியின் தலைவராக இருக்க வேண்டும் என கட்சியினர் விரும்புவது உண்மை தான். ஆனால், அதற்காக இவ்வாறு கூறுவது அர்த்தமற்றது என தெரிவித்துள்ளார்.

 

அ.தி.மு.க., பெண் கவுன்சிலர் தற்கொலை

ஆத்தூர்: ஆத்தூர் அடுத்த நரசிங்கபுரம் நகராட்சி 9வது வார்டு கவுன்சிலர் கலைவாணி, 35. (அ.தி.மு.க.,). கணவர் ஜோதி பிரசாத் உடன் குடும்ப பிரச்னை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதனால், மனமுடைந்த அவர் தனது வீடடில், இன்று காலை 11:00 மணியளவில் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார். தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் கலைவாணி உயிரிழந்தார். நரசிங்கபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

 

பெண் கிராம உதவியாளர் மீது தாக்குதல்

ஆத்தூர்: ஆத்தூர் அடுத்த மல்லிக்கரை கிராம உதவியாளர் நைடதம், 35. இன்று ஆத்தூர் கோர்ட்டில் ஒரு வழக்கில் சாட்சி கூற ஆஜராகி விட்டு, தனியார் பஸ்சில் மல்லிக்கரை திரும்பிக் கொண்டிருந்தார். அவரை நகை திருட்டு தொடர்பாக சந்தேகிப்பதாக கூறி ராஜேந்திரன், 58 மற்றும் விவேக், 38 ஆகியோர் தாக்கினர். காயமடைந்த நைடதம் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது தொடர்பாக விவேக் மற்றும் ராஜேந்திரனின் மகனிடம் போலீசார் விசாரிக்கின்றனர். ராஜேந்திரன் தப்பியோடிவிட்டார். ஆத்தூர் தாசில்தார் தேன்மொழி மற்றும் வருவாய் துறையினர் போலீசில் புகார் கூறி உள்ளனர்.

 

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி

திருநெல்வேலி: நெல்லையில் ஆட்டோ டிரைவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து, தச்சநல்லூரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். அரசு பஸ் மீது கல்வீச்சு, ஆட்டோவிற்கு தீ வைப்பு சம்பவங்கள் நடந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கடைகள் அடைக்கப்பட்டன.

 

மத்திய அரசுக்கு கோர்ட் உத்தரவு

மதுரை: தமிழக கேரள எல்லைப்பகுதியில், செண்பகவள்ளி அணையை சீரமைக்க கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதில், மத்திய நீர்வளத்துறை அமைச்சகம், மார்ச் 18ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும், தமிழக- கேரள பொதுப்பணித்துறை அதிகாரிகளும் பதிலளிக்க வேண்டும் எனவும் கோர்ட் கூறி உள்ளது.

 

370 சட்டப்பிரிவை நீக்கும் எண்ணமில்லை

புதுடில்லி : ராஜ்யசபாவில் மத்திய அரசு அளித்துள்ள எழுத்துப்பூர்வமான விளக்கத்தில், காஷ்மீருக்கு தனி அந்தஸ்து வழங்கும் 370 சட்டப்பிரிவை நீக்கும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என தெரிவித்துள்ளது.

 

ஸ்ரீவைகுண்டத்தில் தடை உத்தரவு அமல்

தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டத்தில், புதிய தமிழகம் கட்சி பிரமுகரான பாஸ்கர் கொலை செய்யப்பட்டதையடுத்து, அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. அசம்பாவிதங்களை தவிர்க்க தற்போது அங்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

விவசாயிகளுடன் கைகோர்க்கும் காங்.,

புதுடில்லி : மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டத்திற்கு எதிராக விவசாயிகள் நடத்தும் போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர்களும் கலந்து கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளனர். இந்த பேரணி, டில்லி ஜந்தர் மந்திரில் துவங்கி பார்லி., வளாகம் வரை நடைபெற உள்ளது.

 

அரசின் சர்வாதிகார போக்கு:மொய்லி

புதுடில்லி : மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் வீரப்ப மொய்லி, தேசிய நலனை அரசு முற்றிலுமாக மறந்து விட்டது. கூட்டணி கட்சிகளின் கருத்துக்களையும் அரசு எடுத்துக் கொள்ளவில்லை. இது அரசு நடத்துவதற்கு சரியான முறையல்ல. இது சர்வாதிகார போக்கு என கூறி உள்ளார்.

 

துப்பாக்கி குண்டுகளுடன் வந்த அமெரிக்க பெண் கைது

புதுடில்லி : அமிர்தசரசில் இருந்து டில்லி வரும் ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் பயணம் செய்தவற்காக வந்த அமெரிக்க பெண் ஒருவரிடம், வழக்கமான பாதுகாப்பு சோதனை நடத்தப்பட்டது. அப்போது அவரிடம் 25 துப்பாக்கிக் குண்டுகள் இருந்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

சல்மான் கான் வழக்கு ஒத்திவைப்பு

புதுடில்லி : பாலிவுட் நடிகர் சல்மான் கான் மீதான சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்த வழக்கில், நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்குமாறு கோரி, மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை முடிந்துள்ள நிலையில், தீர்ப்பு மார்ச் 3ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

கர்நாடகாவில் நில நடுக்கம்

பெங்களூரு: கர்நாடகா மாநிலம் சிக்மகளூர், ஹாசன் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று அதிகாலை நில நடுக்கம் ஏற்பட்டது. நில நடுக்கத்தால் பீதியடைந்த மக்கள் வீடுகளிலிருந்து வெளியேறி, சாலையில் தஞ்சம் அடைந்தனர். நில நடுக்கத்தின் திறன் ரிக்டரில் 2.1 ஆக பதிவாகி உள்ளது.

 

மாநிலங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு: நிதிக்குழு பரிந்துரையை ஏற்றார் மோடி

புதுடில்லி: மாநிலங்களுக்கு, மத்திய அரசின் வருவாயில் இருந்து கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும் என்ற நிதிக்குழுவின் பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. இதன் மூலம், மாநிலங்கள் வளர்ந்தால் தான் இந்தியா வளரும், எனவே, மாநிலங்களின் வளர்ச்சிக்கு கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்ற பிரதமர் மோடியின் வாக்குறுதி, மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் திட்டக்குழு, ஒவ்வொரு மாநிலத்தின் வளர்ச்சி திட்டங்களுக்கு தேவையான நிதி ஒதுக்கும் பணியை செய்து வந்தது. கடந்த காலங்களில், நிதி ஒதுக்குவதில் திட்டக்குழு பாரபட்சம் காட்டுவதாக தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் குற்றம் சாட்டி வந்தன. மத்தியில் ஆளும் கட்சிக்கு சாதகமாக உள்ள மாநிலங்களுக்கு கூடுதல் நிதியும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு குறைவான நிதியும் ஒதுக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன. குஜராத் மாநிலத்தின் முதல்வராக இருந்தபோது, மோடி கூட இந்த குற்றச்சாட்டை முன்வைத்து, விமர்சனம் செய்தார்.

 

அமைச்சர்களுடன் மோடி ஆலோசனை

புதுடில்லி: நிலம் கையகப்படுத்தும் சட்ட மசோதா குறித்து பார்லியில் எதிர்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. பா.ஜ., கூட்டணி கட்சிகள் கூட, இந்த மசோதா விவகாரத்தில் மாறுபட்ட கருத்துக்களை கொண்டுள்ளன. இந்நிலையில், நிலம் கையகப்படுத்தும் சட்ட மசோதாவை நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகள் குறித்து மத்திய அமைச்சர்கள் அருண்ஜெட்லி, வெங்கையநாயுடு உள்ளிட்ட பலருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

 

பாஸ்புக்கை அடையாள சான்றாக்கலாம்

புதுடில்லி : பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிப்போர் தனியார் அல்லது ஊரக வங்கிகளைச் சேர்ந்த புகைப்படத்துடனான பாஸ்புக்கை தங்களின் அடையாள சான்றாக அளிக்கலாம் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. பாஸ்புக் அல்லது வங்கி கணக்கு சான்றும் பாஸ்போர்டபெற விண்ணப்பிக்கும் போது ஏற்றுக் கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்தியாவிற்கு ஆப்கன் உறுதி

கோல்கட்டா: எந்த காரணத்தை முன்னிட்டும், இந்தியாவிற்கு எதிராக செயல்படும் சக்திகளை எங்கள் மண்ணில் அனுமதிக்க மாட்டோம் என, ஆப்கானிஸ்தான் உறுதி அளித்துள்ளது. இது குறித்து இந்தியாவிற்கான ஆப்கன் தூதர் ஷைதா முகம்மது அப்தாலி கூறுகையில், 'ஆப்கானிஸ்தான் தலிபான்கள் பிடியில் இருந்த காலம் கறுப்பு சகாப்தமாகும். அது மறுபடி தோன்ற விடமாட்டோம். இந்தியாவிற்கு எதிராக எந்த சக்திகளும் எங்கள் மண்ணில் இருந்து இயங்குவதற்கு அனுமதிக்கமாட்டோம்,' என்று கூறி உள்ளார்.

 

ராகுல் உத்தரகாண்டில் உள்ளார்:காங்.,

புதுடில்லி : காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் உத்தரகாண்டில் இருப்பதாக காங்கிரஸ் தலைவர் ஜெகதீஷ் சர்மா தனது டுவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளார். மேலும் ராகுல் உத்தரகாண்டில் இருப்பது போன்ற போட்டோக்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.

 

நக்சலைட்களை பிடிக்க போலீசார் தீவிரம்

நீலகிரி : நீலகிரி மாவட்டம் பந்நூர் அருகே உள்ள கண்ணிக்கடவில் நேற்று இரவு நக்சலைட்கள் வந்து சென்றதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் 8 கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு, போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

 

பா.ஜ.,-பிடிபி கூட்டணி கொள்கையற்றது:திக்விஜய்

புதுடில்லி : காஷ்மீரில் பிடிபி- பா.ஜ., கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க உள்ளன. இது அரசியல் வசதிக்காக ஏற்படுத்தப்பட்ட கூட்டணி. இதில் கொள்கைகள் எல்லால் குப்பைத் தொட்டியில் வீசப்பட்டுள்ளன என காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

 

அமைதிபடைகளில் ஆளில்லா விமானம் :ஐநா

நியூயார்க்: ஐநாசபை சார்பில் செயல்பட்டு வரும் அமைதிப்படையில் ஆளில்லா விமானங்களை பயன்படுத்த வேண்டும் என சிறப்பு குழு பரிந்துரைத்துள்ளது. அமைதிப்படையை மேம்படுத்தும் விதமாக சிறப்பு குழு ஒன்று நியமனம் செய்யப்பட்டது. இக்குழு ஆளில்லா விமானங்களை பயன்படுத்துவதன் மூலம் உயரிழப்புகளை தடுக்க முடியும் என்பன உட்பட 119 பரிந்துரைகளை அளித்துள்ளது. இதனையடுத்து ஆளில்லா விமானங்களை அதிகளவில் கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

 

காஷ்மீர்: குறைந்த பட்ச செயல் திட்டம் (சி.எம்.பி.,) எப்படி இருக்கும்?

ஜம்மு: முற்றிலும் மாறுபட்ட, எதிரெதிர் கருத்துக்களை, கொள்கைகளைக் கொண்ட கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்க நேரிட்டால், சி.எம்.பி., எனப்படும், குறைந்தபட்ச பொது செயல் திட்டம் வகுக்கப்பட்டு, அதன் அடிப்படையில் தான் அரசு செயல்படும். அப்படித் தான், மத்தியில், சமீபகாலமாக கூட்டணி அரசுகள் செயல்படுகின்றன. இப்போது, பி.டி.பி., - பா.ஜ., இடையேயான கூட்டணி அரசுக்கான குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தில் கீழ்கண்ட அம்சங்கள் இருக்கும்.

* அந்த மாநிலத்திற்கு சிறப்பு அதிகாரம் அளிக்க வகை செய்யும், அரசியல் அமைப்புச் சட்டத்தின், 370வது பிரிவு குறித்து, எவ்வித உறுதிமொழிகளும், திட்டங்களும் இருக்காது.

* நீண்டகால விவாதமாக இருக்கும், ராணுவத்தினரின் சிறப்பு அதிகாரம், வன்முறை, கலவரம்

இல்லாத அமைதியான இடங்களில், அந்த சட்டம், முதற்கட்டமாக வாபஸ் பெறப்படலாம்.

* பாகிஸ்தானின் மேற்கு பகுதியில் இருந்து, ஜம்மு - காஷ்மீரில் குடிபுகுந்துள்ள, 25 ஆயிரம் குடும்பத்தினருக்கு மனிதாபிமான உதவிகள் கிடைக்கச் செய்வது.

* உள்துறை, நிதி போன்ற முக்கிய துறைகள், பி.டி.பி.,யிடம் இருக்கும்.

* பா.ஜ.,வுக்கு, சுற்றுலா, நீர்வளம், பொது சுகாதாரம், திட்டமிடல் போன்ற துறைகள் ஒதுக்கப்படலாம்.

 

பா.ஜ.,வுடன் கூட்டணி ஏன்? முப்தி பேட்டி

ஸ்ரீநகர்: ஜம்முவில் முப்தி முகமது சயீத் அளித்த பேட்டி: தேர்தல் முடிந்த உடன், எங்களுடன் கூட்டணி சேர, ஒமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சி, காங்கிரஸ் கட்சிகள் முன்வந்தன. அந்த அழைப்புகளை நாங்கள் நிராகரித்து விட்டோம். ஜம்மு - காஷ்மீரில், வித்தியாசமான ஒரு அரசை, வேற்றுமைக்கு இடமில்லாத ஒரு அரசை ஏற்படுத்த விரும்பி, அதற்கான முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டோம். இந்த கூட்டணி, ஜம்முவுக்கும், காஷ்மீருக்கும் இடையே இருக்கும் வேற்றுமையை போக்குவதற்கான வரலாற்று வாய்ப்பாக அமையும். மத்தியில், பா.ஜ., அரசு அமைந்துள்ள நிலையில், மாநிலத்தில் அந்த கட்சியுடன் கூட்டு சேர்ந்தால், அது மாநில வளர்ச்சிக்கு மிகவும் வாய்ப்பாக அமையும் என்பதால் தான், இந்த கூட்டணியை ஏற்படுத்தியுள்ளோம். இதன் மூலம், எங்கள் மாநிலத்தில் அமைதியும், வளர்ச்சியும் ஏற்படும் என நம்புகிறோம். அரசியல் அமைப்புச் சட்டத்தின், 370வது பிரிவு, ராணுவத்தினருக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரம் போன்ற முட்டுக்கட்டைகள் விலக்கப்பட்டு விட்டன. எனக்கு, பிரதமர் மோடியை தனிப்பட்ட முறையில் தெரியாது. எனினும், எங்கள் மாநிலத்தில் நடைபெற்ற சில மனித உரிமை மீறல்கள் விவகாரத்தில் அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள், அவர், மனித உரிமைகளை ஆதரிப்பவர் என்பது தெரிய வருகிறது. இவ்வாறு, முப்தி முகமது சயீத் கூறினார். இவர், 2002 - 2005ல், அந்த மாநிலத்தின் முதல்வராக இருந்துள்ளார். அப்போது, காங்கிரசுடன் இணைந்து, இவரின், பி.டி.பி., கட்சி ஆட்சி அமைத்திருந்தது.

 

பள்ளி மாணவியை கடத்தி மொட்டையடித்த ஆசாமிகள்: கோவை அருகே பரபரப்பு

கோவை:கோவை அருகே, பள்ளிச்சிறுமியை கடத்திச் சென்று, மொட்டையடித்த ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.கோவை, பேரூர் படித்துறையில் நேற்று, மொட்டை அடிக்கப்பட்ட, 16 வயது பள்ளிச்சிறுமி, கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிடப்பதை, ஆற்றில் மீன் பிடிக்கச்சென்ற சிறுவர்கள் பார்த்தனர். கட்டுக்களை அவிழ்த்து விட்ட அவர்கள், சிறுமியை பேரூர் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.கோவை, சிறுவாணி ரோட்டில் இருக்கும் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவரின் மகளான அந்தச்சிறுமி, தான் அரசு பள்ளியில் படிப்பதாகவும், பள்ளிக்கு சென்ற தன்னை, மர்ம நபர்கள் நால்வர் மிரட்டி, கடத்திச்சென்று, மொட்டையடித்து விட்டதாகவும் தெரிவித்தார். இதைக்கேட்ட போலீசார், கடும் அதிர்ச்சி அடைந்தனர்.மாணவியை கடத்தி சென்றவர்கள் யார், எதற்காக கடத்தி சென்று மொட்டையடித்தனர் என்பது குறித்து, டி.எஸ்.பி., கிருஷ்ணசாமி, இன்ஸ்பெக்டர் குமார் விசாரித்தனர். சம்பவம் பற்றி, போத்தனுார் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் விசாரணை தீவிரமாகியுள்ளது.தன்னை கடத்திய கும்பலில் இருந்த நால்வரும், ஹெல்மெட் அணிந்திருந்ததாக மாணவி தெரிவித்துள்ளார். வாகனப்போக்குவரத்து மிகுந்த சாலையில் மாணவியை கடத்தியது எப்படி, எந்நேரமும், ஆள் நடமாட்டம் இருக்கும் பேரூர் படித்துறையில், மாணவிக்கு மொட்டையடிக்கப்பட்டது எப்படி, என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

 

தலைமைச்செயலகம் வர வேண்டும் என்ற கெஜ்ரிவாலின் கோரிக்கையை ஏற்றார் ஹசாரே

புதுடில்லி: டில்லி தலைமைச்செயலகம் வந்து எம்.எல்.ஏ.,க்கள் மத்தியில் பேச வேண்டும் என சமூக சேவகர் அன்னா ஹசாரேவுக்கு அழைப்பு விடுத்தார். இதனை ஹசாரே ஏற்றுக்கொண்டார். இது குறித்து ஹசாரேவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகையில், கெஜ்ரிவாலின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஹசாரே, நாளை காலை 11 மணியளவில் டில்லி தலைமைச்செயலகம், முதல்வர் அலுவலகம் மற்றும் மற்ற அமைச்சகங்களுக்கும் செல்வார் என தெரிவித்தன.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.