குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 1 ம் திகதி புதன் கிழமை .

24.02.2015- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

ஜெ.,க்கு பிரதமர் மோடி வாழ்த்து

புதுடில்லி: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு பிரதமர் நரேந்திரமோடி பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் தனது வாழ்த்துச் செய்தியில், 'நீண்ட வாழ்வும், நல்ல உடல் நலமும் பெற்று நீடூழி வாழ வாழ்த்துகிறேன்,' என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜெ., வழக்கு: நீதிபதி கண்டிப்பு
பெங்களூரு: ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில், இன்று கம்பெனிகள் சார்பிலான வாதம் முடிவடைந்தது. இதையடுத்து நீதிபதி குமாரசாமி, ஜெ., வக்கீல் குமாரை அழைத்து, 'ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு எவ்வளவு, அது எப்படி வந்தது ஆகியவை குறித்த வரவு,செலவு கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதை அடிப்படையாக வைத்து, ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் தாக்கல் செய்த கணக்கில் உள்ள வித்தியாசத்தை அறிய முடியும். அவ்வாறு வரவு செலவு கணக்கை தாக்கல் செய்யாவிட்டால், நானே ஜெயலலிதாவின் சொத்து மதிப்பை கணக்கிட்டு, தீர்ப்பு சொல்ல நேரிடும்,' என்றார். அரசு வக்கீல் பவானிசிங்கிடம், 'வழக்கில் கூறப்பட்டுள்ள 66.65 கோடி ரூபாய்க்கான கணக்கை காட்ட வேண்டும்,' என்றார். அதற்கு, தேவையான ஆவணங்கள்ல ஆதாரங்கள் ஏற்கனவே கொடுக்கப்பட்டுவிட்டன என, பவானிசிங் பதில் அளித்தார். ஆனால், 'எனக்கு ஆதரங்களை காட்ட தேவையில்லை. ஒவ்வொரு பைசாவிற்கும் இன்று மதியத்திற்குள் கணக்கை கூறுங்கள்,' என்றார்.
அன்னா டீமீல் அரவிந்த்
புதுடில்லி: சமூக சேவகர் அன்னா ஹசாரேவின் இயக்கத்தில் மிகத் தீவிரமாக பங்கேற்று, பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்தியவர் அரவிந்த் கெஜ்ரிவால். ஒரு கட்டத்தில், அரசியலில் நுழைய விரும்பி, அன்னாவின் பாசறையைவிட்டு வௌியேறி, ஆம் ஆத்மியை ஆரம்பித்தார். இதனால், அன்னா ஹசாரேவுக்கும், கெஜ்ரிவாலுக்கும் இடையில் விரிசல் ஏற்பட்டது. சில நேரங்களில், கெஜ்ரிவால் குறித்து கடுமையான விமர்சனங்களை அன்னா முன் வைத்தார். பல நேரங்களில் கெஜ்ரிவால் குறித்த கேள்விகளுக்கு அமைதி காத்தார். இதற்கிடையில், டில்லி முதல்வராக கெஜ்ரிவால் மீண்டும் பதவி ஏற்றுள்ளார். இந்த நேரத்தில், நிலம் கையகப்படுத்தும் சட்டம் குறித்த மசோதாவை கண்டித்து, அன்னா டில்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் துவக்கினார். இதில், அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டார். அப்போது அன்னாவை சந்தித்து, அவரிடம் ஆசீர்வாதமும் பெற்றுக் கொண்டார்.
மாநகராட்சி கூட்டத்தில் எம்.எல்.ஏ., மயக்கம்
மதுரை ; மதுரை மாநகராட்சி கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் பங்கேற்பதற்காக எம்.எல்.ஏ., சுந்தர்ராஜன் வந்தார். கூட்ட அரங்கிற்குள் வந்த சுந்தர் ராஜன், கூட்டம் துவங்குவதற்கு முன் மயக்கமடைந்தார். இதனால், கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி: பத்திர எழுத்தர் படுகொலை
தூத்துக்குடி: தூத்துக்குடியில், பத்திர எழுத்தரான சிவபெருமாள் என்பவர், மனைவியுடன் தனது அலுவலகத்தில் இருந்தபோது, மர்ம கும்பல் ஒன்று வெட்டிக் கொலை செய்தது. மனைவியின் கண்முன்னே நடந்த இந்த சம்பவத்தால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன் ஐயப்பன் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் தொடர்ச்சியாக இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.
ஹசாரே போராட்டத்தில் வைகோ
புதுடில்லி: நிலம் கையகப்படுத்தும் மத்திய அரசின் சட்டத்தை எதிர்த்து டில்லி,. ஜந்தர்மந்தரில் போராட்டம் நடத்தி வருகிறார். இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ, போராட்டத்தில் இன்று கலந்து கொண்டார்.
புதுடில்லி: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு பிரதமர் நரேந்திரமோடி பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் தனது வாழ்த்துச் செய்தியில், 'நீண்ட வாழ்வும், நல்ல உடல் நலமும் பெற்று நீடூழி வாழ வாழ்த்துகிறேன்,' என்று குறிப்பிட்டுள்ளார்.
திருநெல்வேலி: நெல்லை, மேலப்பாளையத்தில் உள்ள முஸ்லிம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தேர்வு மையமாக செயல்பட்டு வந்தது. இங்கு, பல்வேறு பள்ளி மாணவர்களின் விடைத்தாள்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், இங்கு நடந்த தீ விபத்தில் 1200க்கும் மேற்பட்ட விடைத்தாள்கள் எரிந்து, நாசமாயின. இந்த சம்பவத்தை தொடர்ந்து, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக இருந்த கஸ்தூரி அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். இவருக்கு பதில், சுவாமிநாதன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
வாயை திறக்கமாட்டேன்: சோனியா
புதுடில்லி: காங்., துணைத் தலைவர் ராகுல், ஒரு சில வாரங்கள் விடுப்பில் செல்ல உள்ளதாகவும், அதற்கு தான் அனுமதி வழங்கி உள்ளதாகவும் காங்., தலைவர் சோனியா கூறி உள்ளார். இது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், ராகுல் குறித்து சோனியாவிடம் செய்தியாளர்கள் தொடர்ந்து கேள்விகளை எழுப்பினர். இதற்கு பதில் அளித்த சோனியா, ராகுல் விஷயம் குறித்து நான் வாயை திறக்கமாட்டேன். எந்த கருத்தையும் கூற மாட்டேன் என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.
ராஜ்யசபாவில் எதிர்கட்சிகள் அமளி
புதுடில்லி: நிலம் கையகப்படுத்தும் சட்ட மசோதா குறித்த விவகாரத்தை ராஜ்யசபாவில் இன்று கையிலெடுத்த எதிர்கட்சிகள், அந்த மசோதாவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால், ராஜ்யசபாவில் கடும் அமளி நிலவியது.
மார்ச் 1ல் காஷ்மீரில் பதவி ஏற்பு?
ஸ்ரீநகர்: காஷ்மீரில் தேர்தல் நடந்து முடிந்து விட்ட நிலையிலும், ஆட்சி அமைக்க யாருக்கும் பெரும்பான்மை இல்லததால் அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், அதிகமான இடங்களை பெற்றுள்ள மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் பா.ஜ., ஆகியவை இணைந்து ஆட்சி அமைக்க முடிவு செய்தன. ஆனால், பல்வேறு விஷயங்களில் இரு கட்சிகளுக்கும் இடையில் கருத்து வேறுபாடு இருந்ததால், முடிவுக்கு வராமல் இழுபறி நீடித்தது. இந்நிலையில், இரு தரப்பு தலைவர்களும் நடத்திய தொடர் பேச்சுவார்த்தையை தொடர்ந்து, காஷ்மீரில் பி.டி.பி., பா.ஜ., கூட்டணி ஆட்சி அமைப்பது குறித்து உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இதையடுத்து, மார்ச் ஒன்றாம் தேதியன்று, காஷ்மீரில் கூட்டணி ஆட்சி பொறுப்பேற்கும் என்று தகவல்கள் வௌியாகி உள்ளன.
மோடியை சந்திக்கிறார் முப்தி
புதுடில்லி: காஷ்மீரில் கூட்டணி ஆட்சி அமைப்பது குறித்து முப்தி முகம்மது சையதுவின் மகளான மெகபூபா முப்தி, இன்று மாலை பா.ஜ., தலைவர் அமித்ஷாவை சந்திக்கிறார். இதனைத் தொடர்ந்து, நாளை, பிரதமர் நரேந்திரமோடியை, மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் முப்தி முகம்மது சையது சந்தித்து பேச உள்ளார். மேலும், அமித்ஷாவையும் அவர் சந்திக்க உள்ளதாக டில்லி தகவல்கள் தெரிவித்துள்ளன.
பா.ஜ., மன்னிப்பு கேட்கணும்: காங்.,
புதுடில்லி: அன்னை தெரசா குறித்த ஆர்.எஸ்.எஸ்., கருத்துக்கு பா.ஜ., பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், தெரசா போன்றவர்களை இவ்வளவு மோசமாக விமர்சனம் செய்யக்கூடாது என்றும் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராஜிவ் சுக்லா கூறி உள்ளார்.
ஆவணங்கள் லீக்: 14 கறுப்பு ஆடுகள் கைது
புதுடில்லி: பெட்ரோலிய துறை அமைச்சகத்தில் இருந்து அரசின் கொள்கை ஆவணங்களை திருடி, தனியார் எண்ணை நிறுவனங்களுக்கு விற்ற வழக்கில், இதுவரை 14 பேரை டில்லி போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
பார்லி.,யை தாக்குமா தெரசா புயல்
புதுடில்லி: அன்னை தெரசா குறித்து, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன்பகவத் தெரிவித்துள்ள கருத்து, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த பிரச்னையை பார்லிமென்ட்டில் இன்று எழுப்பப் போவதாக சமாஜ்வாடி கட்சி அறிவித்துள்ளது.
சோலார் பவர்ல ஓடப்போகுது ரயிலு
புதுடில்லி: வரும் 26ம் தேதி, லோக்சபாவில் ரயில்வே பட்ஜெட் தாக்கலாக உள்ளது. இதில், ரயில்களை இயக்க சூரியஔி மின்சாரத்தை அதிக அளவில் பயன்படுத்துவதற்கான திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தண்ணீர் மறுசுழற்சி சுத்திகரிப்பு மையங்கள் ஏற்படுத்த நிதி ஒதுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
அமித்ஷா- மெகபூபா சந்திப்பு
புதுடில்லி: காஷ்மீரில் கூட்டணி ஆட்சி அமைப்பது குறித்து பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷாவும், மெகபூபா முப்தியும் இன்று மாலை சந்தித்து பேசுகின்றனர். இந்த பேச்சுவார்த்தைக்கு பின், கூட்டணி ஆட்சி குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வௌியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பார்லி., கூட்டம்: கூடிப் பேசுது பா.ஜ.,
புதுடில்லி: பார்லிமென்ட்டில் அவசர சட்ட மசோதாக்களை நிறைவேற்றுவது குறித்து எதிர்கட்சிகளின் எதிர்ப்பை சமாளிப்பது குறித்து பா.ஜ., பார்லிமென்ட்டரி குழு இன்று கூடி ஆலோசனை நடத்தியது.
ராகுல் ஓய்வு: திக் விஜய் விளக்கம்
புதுடில்லி: ராகுல் ஓய்வெடுக்க விரும்பினால் அதை ஏன் விமர்சிக்கிறீர்கள்? ஒவ்வொருவருக்கும் அமைதி தேவை. காலம்தான் அந்த அமைதியை அளிக்கும் என்று டுவிட்டரில் காங்கிரஸ் தலைவர் திக் விஜய் சிங் தெரிவித்துள்ளார்.
ஜெ.,பிறந்தநாள்; அமைச்சர் தலைமையில் பாதயாத்திரை
சாத்தூர்: ஜெயலலிதா பிறந்தநாளை ஒட்டி, சாத்தூரிலிருந்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் ஆயிரக்ககணக்கான அ.திமு.க.,வினர் இருக்கங்குடி மாரியம்மன் கோயிலுக்கு பாதயாத்திரை சென்றனர். அங்கு பொதுமக்களுக்கு சேலை, வேட்டி, அன்னதானம் வழங்கப்பட்டது.
அன்னை தெரசாவை விமர்சிக்க வேண்டாம்: கெஜ்ரிவால்
புதுடில்லி: அன்னை தெரசாவுடன் நான் கோல்கட்டா ஆஸ்ரமத்தில் பணியாற்றி இருக்கிறேன். அவர் மிக உயர்ந்தவர். அவரை விமர்சிக்க வேண்டாம் என்று டுவிட்டரில் டில்லி முதல்வர் கெஜ்ரிவால் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
ஷீலா தீட்சித் வசித்த மாளிகை மணீஷ் சிசோடியாவுக்கு ஒதுக்கீடு
புது டில்லி:டில்லி முதல்வராக ஷீலா தீட்சித் இருந்தபோது, அவர் தங்கியிருந்த மதுரா சாலையில் உள்ள அரசு மாளிகை தற்போதைய டில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.இதற்கான உத்தரவை மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சகம் நேற்று பிறப்பித்துள்ளது. பிரகதி மைதானத்துக்கு எதிரே உள்ள மதுரா சாலை, எபி-17 பங்களாவில் முதல்வர் ஷீலா தீட்சித் சுமார் ஓராண்டு காலம் வசித்துள்ளார். அதன்பின்னர் மோத்திலால் நேரு சாலையில் உள்ள பெரிய மாளிகைக்கு மாறினார்.மதுரா சாலையில் உள்ள மாளிகையில், கடைசியாக மத்திய முன்னாள் அமைச்சர் பல்ராம் நாயக் வசித்து வந்தார். தற்போது இந்த பங்களா துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
தேர்வு எழுதிய மாணவிக்கு மகா., முதல்வர் பாராட்டு
மும்பை:வாஷிமில் உள்ள விவேகானந்தா ஜூனியர் கல்லூரி மாணவி உஜ்வாலா. நேற்று தனது 12-வது வகுப்பு தேர்வு எழுத தயாராகி கொண்டு இருந்தார். தேர்வு எழுத செல்லும் 1 மணி நேரத்திற்கு முன்பு அவரது தந்தை திடீர் மரணம் அடைந்தார். இதனால் துயரமுற்ற மாணவி, சோர்ந்து போய்விடாமல், மனதைரியத்துடன் தேர்வு மையத்துக்கு சென்று தேர்வு எழுதினார். துக்கத்தை ஓரம்கட்டி வைத்துவிட்டு தேர்வு எழுத சென்ற அந்த மாணவியை பாராட்டி, முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கடிதம் அனுப்பி உள்ளார்.
ஜனாதிபதி உரையில் புதியது எதுவுமில்லை: சோனியா
புதுடில்லி: ஜனாதிபதி உரை குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா கூறுகையில்,ஜனாதிபதி உரையில் புதியது எதுவுமில்லை; குறிப்பிட்டுச் சொல்லும்படியான விஷயங்களும் இல்லை. ஐ.மு., கூட்டணி ஆட்சியில், ஏற்கனவே அறிவித்த சில கொள்கைகளுக்கு, புதிய வடிவம் கொடுத்து, ஜனாதிபதி உரையில் இடம்பெறச் செய்துள்ளனர் என கூறினார்.
ஆறு அவசர சட்டங்கள் லோக்சபாவில் தாக்கல்
புதுடில்லி: ஜனாதிபதி உரை முடிந்ததும், பார்லி., விவகாரத் துறை இணை அமைச்சர் ராஜிவ் பிரதாப் ரூடி, சமீபத்தில், மத்திய அரசால் பிறப்பிக்கப்பட்ட ஆறு அவசர சட்டங்களின் நகல்களை, லோக்சபாவில் தாக்கல் செய்தார். அப்போது, எதிர்க்கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள், அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். நிலம் கையகப்படுத்துதல், காப்பீட்டு துறையின் நேரடி அன்னிய முதலீட்டுக்கு அனுமதி அளித்தல் உட்பட, ஆறு அவசர சட்டங்களில் நகல்கள் தாக்கல் செய்யப்பட்டன.
பார்லியில் முலாயமை சுற்றி எம்.பி.,க்கள் கூட்டம்
புதுடில்லி: நேற்று, பார்லிமென்ட் கூட்டு கூட்டத்தில், சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங் இருந்த இடத்தில், அதிக கூட்டம் காணப்பட்டது.
*முலாயமின் பேரனுக்கும், லாலு பிரசாத்தின் மகளுக்கும் விரைவில் திருமணம் நடக்க உள்ளதை அடுத்து, அதற்கு வாழ்த்து சொல்வதற்காக, முலாயம் சிங் முன், ஏராளமான எம்.பி.,க்கள் வரிசை கட்டி நின்றனர்.
*பிரதமரின் ஜன்தன் யோஜனா, தூய்மை இந்தியா திட்டங்கள் குறித்து, ஜனாதிபதி குறிப்பிட்ட போது, பா.ஜ., - எம்.பி.,க்கள், மேஜையை தட்டி மகிழ்ச்சி தெரிவித்தனர்.
*பெண் குழந்தைகளுக்கான வங்கிக் கணக்கு திட்டம் குறித்து, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி குறிப்பிட்ட போது, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, மேஜையை பலமாக தட்டினார்.
*பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, முன்னாள் பிரதமர்கள் மன்மோகன் சிங், தேவகவுடா ஆகியோருக்கு அருகே, காங்., தலைவர் சோனியா அமர்ந்திருந்தார்.
*ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, சபைக்கு நுழைந்து சிறிது நேரம் கழித்து, காங்கிரசைச் சேர்ந்த அபிஷேக் சிங்வி, பா.ஜ.,வைச் சேர்ந்த வருண் ஆகியோரும், சில அ.தி.மு.க., - எம்.பி.,க்களும் வந்தனர். இவர்களுக்கு, கடைசி வரிசையில் இருக்கை ஏற்பாடு செய்யப்பட்டது.
*ஜனாதிபதி, தன் உரையை ஆங்கிலத்தில் பேசி முடித்ததும், துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, அந்த உரையின் முதல் பகுதியையும், கடைசி பகுதியையும் மட்டும், இந்தியில் படித்தார்.
ராகுல் மீண்டு(ம்) வருவார்!: காங்.,
புதுடில்லி: காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறுகையில்,ராகுல் தற்காலிக விடுப்பில் தான் செல்கிறார். ஓய்வுக்குப் பின், மீண்டும் அவர் சுறுசுறுப்புடன் செயல்படுவார். இதில் எள்ளளவும் சந்தேகம் கிடையாது. ராகுலின் விடுப்பை யாரும் பெரிதுபடுத்த வேண்டாம் என்றார்.
ராகுலுக்கு மக்கள் மீது அக்கறை அதிகம்! பா.ஜ., கிண்டல்
புதுடில்லி: மத்திய அமைச்சர் ராஜிவ் பிரதாப் ரூடி கூறுகையில், மக்கள் பிரச்னைகள் குறித்து கேள்வி எழுப்ப வேண்டிய நேரத்தில், ஓய்வெடுக்கச் செல்லும் காங்., துணைத் தலைவர் ராகுல், மக்கள் மீது எவ்வளவு அக்கறை வைத்துள்ளார் என்பது தெரியவந்து உள்ளது என்றார்.
காங்கிரசுக்கு நீண்ட விடுப்பு அளிக்க மக்கள் விருப்பம்!
புதுடில்லி: பார்லிமென்டில் ராகுல் கலந்து கொள்ள மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கூறுகையில், பட்ஜெட் கூட்டத் தொடரில் பங்கேற்காமல் விடுப்பு எடுப்பது அவரவர் விருப்பம். ஆனால், ஏற்கனவே காங்கிரஸ் கட்சிக்கு நீண்ட விடுப்பு அளித்து, மக்கள் தங்கள் விருப்பத்தை பதிவு செய்துவிட்டனர் என்றார்.
தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்கு, தண்டனை என்ன?
சென்னை: சட்டசபையில், போலீஸ் உதவி ஆய்வாளரை தாக்கியதாக, தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள், மூன்று பேர் மீது, மூன்று சட்டப் பிரிவுகளின் கீழ், முதல் தகவல் அறிக்கை - எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், அவர்களை கைது செய்ய, போலீசார் தேடி வருகின்றனர். மூன்று எம்.எல்.ஏ.,க்கள் மீதும், இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் குறித்த விவரம்:
*சட்டப்பிரிவு, 353: -அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல். இதற்கு, இரண்டு ஆண்டு சிறைதண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும். தேவைப்பட்டால், தண்டனை மற்றும் அபராதம் சேர்த்து விதிக்கப்படலாம்.
* சட்டப்பிரிவு, 341: -சட்டத்திற்கு விரோதமாக தடுத்தல். இதற்கு, ஒரு மாதம் சிறை தண்டனை அல்லது 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். தேவைப்பட்டால், தண்டனை மற்றும் அபராதம் சேர்த்து விதிக்கப்படலாம்.
*சட்டப்பிரிவு, 323-: சிறு காயம் ஏற்படுத்துதல். இதற்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை அல்லது 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். தேவைப்பட்டால், இரண்டும் சேர்த்து விதிக்கப்படலாம்.
இப்பிரிவுகளின் கீழ் பதிவான வழக்குகள், ஜாமினில் வெளியே வர வாய்ப்பு உள்ளவை.
முன்ஜாமின் கோரி தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள் மனு
சென்னை: தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள் சந்திரகுமார், தினகரன், சேகர் ஆகியோர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:கடந்த 19ம் தேதி, சட்டசபையில் நடந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக, எங்கள் மீது, தலைமைச் செயலக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சிறப்பு உதவி ஆய்வாளரை தாக்கியதாகவும், மிரட்டியதாகவும், புகார் கூறப்பட்டு உள்ளது.ஆளுங்கட்சி உறுப்பினர், எதிர்க்கட்சி தலைவர்களை மோசமாக விமர்சித்தார். எதிர்க்கட்சி தலைவரான, எங்கள் கட்சி தலைவரையும் விமர்சித்தார். அவரது வார்த்தைகளை, சபைக் குறிப்பில் இருந்து நீக்கும்படி, தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள் கோரினர்.எங்களை வெளியேற்றும்படி, சபாநாயகர் உத்தரவிட்டார்; சபைக் காவலர்கள், தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்களை வலுக்கட்டாயமாக இழுத்தனர்; சபாநாயகர் மற்றும் ஆளுங்கட்சி உறுப்பினர்களின் நடவடிக்கையை கண்டித்து, சபைக்குள் அமர்ந்து தர்ணா போராட்டம் செய்தோம்.தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்களை துன்புறுத்தவும், செல்வாக்கை குலைக்கவும், எங்களுக்கு எதிராக, பொய்யான புகாரை கொடுக்கும்படி செய்துள்ளனர்; நாங்கள் எந்த குற்றமும் புரியவில்லை.எனவே, எங்களுக்கு முன்ஜாமின் வழங்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டு உள்ளது.இம்மனு, இன்று விசாரணைக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன், எம்.எல்.ஏ., மோகன்ராஜ் சார்பிலும், நேற்று மாலை, முன்ஜாமின் கேட்டு, மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்த மனு, எப்போது விசாரணைக்கு வரும் என்பது தெரியவில்லை.
அன்னாவுடன் கெஜ்ரிவால் சந்திப்பு
புதுடில்லி: நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் சமூக சேவகர் அன்னா ஹசாரேவை, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்து பேசினார். அவருடன் துணை முதல்வர் மணிஸ் சிசோடியாவும் உடன் சென்றார்.
 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.