குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, புரட்டாசி(கன்னி) 13 ம் திகதி வெள்ளிக் கிழமை .

22.02.2015- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

வேலூர் பெண்கள் சிறையில் நளினி - முருகன் சந்திப்பு

வேலூர்:ராஜிவ் கொலை வழக்கு குற்றவாளிகள் நளினி - முருகன் சந்திப்பு, சிறையில் நேற்று நடந்தது.முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட முருகன், வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதே வழக்கில், ஆயுள் தண்டனை பெற்ற அவரது மனைவி நளினி, வேலூர் பெண்கள் சிறையில், தண்டனை அனுபவித்து வருகிறார். இவர்கள் கணவன், மனைவி என்பதால், 15 நாட்களுக்கு ஒருமுறை சந்தித்துப் பேசிக் கொள்ள, நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, அவர்கள் சந்திப்பு நேற்று நடந்தது. இதற்காக, ராணிப்பேட்டை டி.எஸ்.பி., நாகராஜன், காலை, 7.45 மணிக்கு, வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் இருந்து, பலத்த பாதுகாப்புடன் முருகனை, பெண்கள் சிறைக்கு அழைத்துச் சென்றார்.அங்கு சிறை அதிகாரிகள் முன்னிலையில், நளினி -முருகன் சந்திப்பு, 30 நிமிடம் நடந்தது. மீண்டும் முருகனை ஆண்கள் சிறையில் அடைத்தனர். சந்திப்பின்போது, லண்டனில் டாக்டருக்கு படித்து வரும் நளினி - முருகன் மகளை சந்திக்க ஏற்பாடு செய்யும்படி, சிறைத்துறை நிர்வாகத்திற்கு மனு கொடுப்பது குறித்து, இவர்கள் பேசிக்கொண்டதாக, சிறைத்துறையினர் கூறினர்.

 

விவசாயிகள் பேரணி நடத்த முடிவு

புதுடில்லி: மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்ட மசோதாவை திரம்ப பெறக் கோரி, கிஷான் மகாசபை சார்பாக 5 ஆயிரம் விவசாயிகள் டில்லியில் வரும் 25ம் தேதி பார்லிமென்ட் நோக்கி பேரணி நடத்த திட்டமிட்டுள்ளதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

 

மம்தாவின் கூட்டாளி கைது

கோல்கட்டா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிககு நெருக்கமானவரும், தொழிலதிபருமான சைபாஜி பஞ்சா சமீபத்தில் மம்தாவுடன் வங்கதேசம் சென்றிருந்தார். இன்று மம்தா பானர்ஜியுடன் பாஞ்சா நாடு திரும்பினார்.பாஞ்சா கோல்கட்டா விமான நிலையத்தில் வந்து இறங்கியதும், சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கு காரணமாக போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

 

எதிர்க்கட்சிகளுக்கு மோடி உறுதி

புதுடில்லி: பார்லிமென்ட் நாளை துவங்க உள்ள நிலையில், எதிர்கட்சிகள் பல்வேறு விஷயங்களை எழுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், எதிர்கட்சிகள் எழுப்பும் அனைத்து பிரச்னைகள் மீதும் விவாதம் நடத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் நரேந்திரமோடி உறுதி அளித்துள்ளார்.

 

கிராமத்தை பயமுறுத்தும் மலைப்பாம்புகள்

கொட்டாம்பட்டி: மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே சிவக்களம் பகுதியில் ஊருக்குள் 2 மலைப்பாம்புகள் வந்தன. இதனை தீயணைப்பு படையினர் பிடித்து வனப்பகுதிக்குள் அனுப்பி வைத்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக 3 மலைப்பாம்புகள் பிடிபட்டுள்ள நிலையில் இன்றும் 2 பாம்புகள் சிக்கி உள்ளன.

 

நிலகையகப்படுத்தும் மசோதா: ஆம் ஆத்மி

புதுடில்லி: மத்திய அரசு கொண்டு வந்துள்ள நிலம் கையகப்படுத்தும் மசோதா குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆம் ஆத்மியின் தலைவர்களில் ஒருவரான அசுதோஷ், 'நிலம் கையகப்படுத்தும் சட்டம் குறித்த மசோதா விவசாயிகளுக்கு எதிரானது. ஏழை மக்களுக்கு எதிரானது என்று கூறி உள்ளார்.

 

நிதிஷ் பதவி ஏற்பில் பிரபலங்கள்

பாட்னா: பீகார் முதல்வராக நிதிஷ்குமார் இன்று பதவி ஏற்கிறார். பதவி ஏற்பு விழாவில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, உ.பி., முதல்வர் அகிலேஷ் யாதவ், அபய் சவுதாலா, துஷ்யந்த் சவுதாலா, ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

 

மோடி இன்று ரேடியோ உரை

புதுடில்லி: பிரதமர் நரேந்திரமோடி, மான்கி பாத் என்ற நிகழ்ச்சி மூலம் மக்களுடன் ரேடியோவில் உரையாடுகிறார். இன்று இரவு 8 மணிக்கு இந்த நிகழ்ச்சி நடக்க உள்ளது.

 

மார்ச் 7ல் ஆந்திரா,தெலுங்கானா பட்ஜெட்

தராநபாத் : ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களின் பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 7ம் தேதி துவங்க உள்ளது. முதலில் ஆந்திர சட்டசபையில் உரை நிகழ்த்திய பிறகு, ராஜ்பவனுக்கு திரும்பும் கவர்னர் நரசிம்மன் பின்னர் தெலுங்கானா சட்டசபையில் உரையாற்ற உள்ளார். தெலுங்கானா மாநிலத்திற்கான பட்ஜெட் மார்ச் 11ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. மார்ச் 27 வரை இந்த கூட்டத்தொடர் நடைபெறும் என கூறப்படுகிறது.

 

நாமக்கல்: தாய்,மகன்கள் கொலை

நாமக்கல் : நாமக்கல் மாவட்டம் புதுசத்திரத்தை அடுத்த ஓலப்பாளையம் பகுதியில் தாயும், அவரது இரண்டு மகன்களும் மர்மமான முறையில் இறந்து கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. செட்டியம்மாள்(65) மற்றும் அவரது மூத்த மகன் காளியண்ணன்(37) இருவரும் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்துள்ளனர். அருகில் செட்டியம்மாளின் மற்றொரு மகனான பழனிவேல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் கிடந்துள்ளனர். இது குறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

விமான பயணிகளிடம் 4.8 கிலோ தங்கம் பறிமுதல்

சென்னை: துபாயிலிருந்து சென்னை வந்த விமானத்தில் பயணித்த இருவரிடமிருந்து 4.8கிலோ தங்க கட்டிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். விசாரணையில், முகமது ரபீக், முகம்மது அன்சாரி இருவரும் ரூ.1.50 கோடி மதிப்பிலான 4.8 தங்க கட்டிகளை மறைத்து கடத்தபட இருந்தது தெரியவந்தது.மேலும் இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

 

டெக்சாஸ்:சிறையிலிருந்து 2,800 கைதிகள் மாற்றம்

ரேமாண்ட்வில்லி:அமெரிக்காவின் டெக்சாஸ் தெற்கு மாகாணத்தில் உள்ள சிறையிலிருந்து 2,800 கைதிகளை வேறு சிறைக்கு மாற்றம் செய்ய உள்ளதாக அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.இது குறித்து சிறைத்துறை செய்தி தொடர்பாளர் எட் ரோஸ், கூறுகையில், சிறையில் இருக்கக்கூடிய அடிப்படை வசதியே இல்லாததாலும், கட்டிட சேதங்களாலும் கைதிகளை வேறு சிறைக்கு மாற்ற இருக்கிறோம் என்றார்.

 

பள்ளித் தேர்வு முறைகேட்டில் பிடிபட்ட உ.பி. அமைச்சர் மகள்

சந்த் கபீர் நகர்:உத்தரப் பிரதேச மாநிலம், சந்த் கபீர் நகரில் அமைச்சரின் மகள் பள்ளித் தேர்வில் காப்பி அடித்து, பறக்கும் படையினரிடம் பிடிபட்டார்.இதுகுறித்து பள்ளி கல்வித் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:சந்த் சபீர் நகரில் உள்ள நாத்நகர் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் அமைச்சரின் மகள் படித்து வந்தார். அவருக்கு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு சுந்தர்தேவி கல்லூரியில் நேற்று முன்தினம் நடந்தது. அவர் தேர்வு எழுதிக் கொண்டிருந்தபோது பறக்கும் படையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, காப்பி அடித்து எழுதி வந்த அந்த மாணவி, பறக்கும் படையினரிடம் பிடிபட்டார். அவருடன் சேர்ந்து 2 பேர் பிடிபட்டதாக அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

டி.ஆர்.எஸ். கட்சியில் 50 லட்சம் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு

ஐதராபாத்:டி.ஆர்.எஸ்., கட்சியில் 50 லட்சம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவரும், தெலங்கானா மாநில முதல்வருமான சந்திரசேகர ராவ் தெரிவித்தார்.இதுகுறித்து அவர், ஐதராபாதில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:டி.ஆர்.எஸ். கட்சியில் 30 லட்சம் உறுப்பினர்களைச் சேர்க்க இலக்கு நிர்ணயித்தோம். ஆனால், அதற்கும் மேலாக 50 லட்சம் உறுப்பினர்கள் கட்சியில் இணைந்துள்ளனர். உறுப்பினர்கள் அனைவருக்கும், கட்சியின் சார்பில் காப்பீடு வழங்கப்படும். டி.ஆர்.எஸ். கட்சியின் கிராமக் கிளைகள் தொடங்கி அனைத்துப் பதவிகளுக்கும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் தேர்தல் நடைபெறவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

 

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: தலைமை ஆசிரியரை ரவுண்டு கட்டிய பெற்றோர்

போபால்: மத்திய பிரதேசத்தில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமையாசிரியரை பெற்றோர் அடித்துஉதைத்தனர்.

மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டம் காககஞ்ச் நகரில் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி உள்ளது. 10-ம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் கௌரிசங்கர் துபே , இவர் மாணவிகளுக்கு உடல் ரீதியாக பாலியல் தொல்லை கொடுத்துவந்துள்ளார். மேலும் அவர்களை ஆபாச வார்த்தைகளால் திட்டியும்,ஆபாச சைகை காண்பித்தும் தொல்லை கொடுத்து வுந்துள்ளார். சில நாட்களாக பொறுத்து பார்த்த மாணவிகள் சிலர் இது குறித்து பெற்றோரிடம் கூறினர். ஆத்திரமடைந்த பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு தலைமை ஆசிரியரை சரமாரியாக ரவுண்டுகட்டி தாக்கினர். இதில் அவர் காயமடைந்தார்.இது குறித்து தலைமை ஆசிரியர் கௌரிசங்கர் மீது மோதிநகர் போலீசில் புகார்கூறப்பட்டது. தலைமை ஆசிரியர் மீது பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 

அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் திடீர் ஆப்கன் பயணம்

காபூல்:அமெரிக்காவின் புதிய பாதுகாப்புத் துறை அமைச்சரான ஆஷ்டன் கார்ட்டர், திடீர் பயணமாக நேற்று ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் சென்றார்.ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படையினரைத் திரும்பப் பெறுவது குறித்து விவாதிப்பதற்காக அவர் அந்த நாட்டுக்கு சென்றதாக கூறப்படுகிறது.

 

அமைதி ஒப்பந்தத்தை மதிக்கபோப் வலியுறுத்தல்

வாடிகன்;உக்ரைன் அமைதி ஒப்பந்தத்தை இரு தரப்பினரும் மதித்து செயல்பட வேண்டும் என்று போப் பிரான்சிஸ் கருத்து தெரிவித்தார்.வாடிகனுக்கு வருகை தந்துள்ள உக்ரைனைச் சேர்ந்த பேராயர்களிடம் பேசியபோது அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:கிழக்கு உக்ரைனில் அமைதி நிலவ வேண்டும் என்பதற்காகவே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. அதனை இரு தரப்பினரும் மதித்து செயல்பட வேண்டும். சர்வதேச சட்டங்கள் மதிக்கப்பட வேண்டும்.அமைதி உடன்படிக்கை முற்றிலுமாக நடைமுறைப்படுத்தப்படும் என நான் நம்புகிறேன். புதிதாக எந்த வித வன்முறையும் நடைபெறாது என்று சம்பந்தப்பட்டவர்கள் உறுதியேற்றுச் செயல்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

 

மோடி 'டீ' வியாபாரிதானா? : ஆர்.டி.ஐ. தகவல்

டில்லி: காங்.கட்சியைச் சேர்ந்தவரும் சமூக ஆர்வலருமான தெக்ஷின் பூனவாலா, இவர் ரயில்வே வாரியத்திற்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு செய்தார், அதில் பிரதமர் நரேந்திர மோடி சிறு வயதில் குஜராத்தில் ரயில்வே பிளாட்பாரங்களில் 'டீ' விற்பனை செய்தார் என்பதற்கான ஆதாரங்கள் மற்றும் ஆவணங்கள் எதுவும்உள்ளதா என தெரிவிக்கும் படி கூறியிருந்தார்.அதற்கு ரயில்வே அமைச்சகத்திடமிருந்து அவருக்கு அளிக்கப்பட்ட பதிலில் மோடி ரயில்வே பிளாட்பாரங்களில் டீ விற்பனை செய்ததாக எந்த ரயில்வே நிலைய அலுவலகங்களில் பதிவாகவில்லை. ரயில்வே வாரியத்தின் சுற்றுலா மற்றும் கேட்டரிங் இயக்குனரகத்திடமும் அப்படி ஒரு தகவல் இல்லை .இவ்வாறு அந்த பதிலில் கூறப்பட்டுள்ளது.

 

காங்.மூத்த தலைவர்களுடன் சோனியா ஆலோசனை

புதுடில்லி: பார்லி.பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்.23-ம் தேதி கூடுகிறது. அவரச சட்டங்களை நிறைவேற்றிட பா.ஜ. முனைப்பு காட்டி வருகிறது. இந்நிலையில் காங். தலைவர் சோனியா ,மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். பட்ஜெட் கூட்டத்தொடரில் எம்.பி.க்கள் கேட்க வேண்டிய கேள்விகள் மற்றும் விவாதம் குறித்து இந்த ஆலோசனை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படஉள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

ராகுல் செருப்பையும், கெஜ்ரிவால் மப்ளரையும் ஏலமிடலாம்: சிவசேனா கிண்டல்

மும்பை: பிரதமர் மோடி அணிந்திருந்த கோட்-சூட் ரூ. 4.31 கோடிக்கு ஏலம் போனது. காங். கட்சி இதனை கடுமையாக விமர்சித்தது. இது குறித்து சிவசேனா ,தனது பத்திரிகையான சாம்னாவில் கூறியிருப்பதாவது, மோடியின் கோட்-சூட் ஏலம் போனது குறித்து காங். விமர்சிப்பதற்கு பதிலாக , ராகுல் பயன்படுத்தும் அலமாரி, அவரது செருப்பு ஆகியவற்றை அவர் ஏலமிடலாம், ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவால் தனது மஃப்லரை ஏலம் விடலாம். மோடியின் கோட் -சூட் ஏலத்தில் கிடைத்த தொகை, கங்கை நதியை சுத்தப்படுத்துதல், பெண் குழந்தைகள் கல்வி ஆகிய திட்டத்திற்கு தான் செலவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதை உணர வேண்டும் .இவ்வாறு அந்த பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.