குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, புரட்டாசி(கன்னி) 13 ம் திகதி வெள்ளிக் கிழமை .

21.02.2015- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

மார்ச் 13 மோடி இலங்கை பயணம்

புதுடில்லி : 3 நாள் பயணமாக பிரதமர் மோடி மார்ச் 13ம் தேதி இலங்கை செல்ல உள்ளார். இந்த பயணத்தின் போது கொழும்பு திரிகோணமலை ஆகிய பகுதிகளுக்கும் அவர் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் பல அதிகாரிகள் மீது சந்தேகம்?
புதுடில்லி : பட்ஜெட் தொடர்பான ஆவணங்கள் வெளியான விவகாரம் தொடர்பாக பிரதமர் அலுவலகத்தில் உள்ள இணைச் செயலாளர் தரத்தில் உள்ள சுமார் 15 அதிகாரிகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மோடி கருத்து: ஒபாமா வரவேற்பு
வாஷிங்டன் : சமீபத்தில் விழா ஒன்றில் பேசிய இந்திய பிரதமர் மோடி, எந்த ஒரு மதத்தினருக்கும் எதிரான வன்முறையை தனது அரசு பொறுத்துக் கொள்ளாது எனவும், அனைத்து மதத்தினருக்கும் சமமான மரியாதை வழங்கப்படும் எனவும் பேசி இருந்தார். மோடியின் இந்த கருத்தை அமெரிக்க அதிபர் ஒபாமா வரவேற்றுள்ளார்.
மஞ்ஜி மீது சபாநாயகர் பாய்ச்சல்
பாட்னா : பீகாரில் முதல்வர் பதவியில் இருந்து விலகிய ஜிதன்ராம் மஞ்ஜி, சபாநாயகர் ஒருதலை பட்சமாக செயல்படுவதாக கூறிய குற்றச்சாட்டுக்களை திட்டவட்டமாக மறுத்துள்ள பீகார் சட்டசபை சபாநாயகர் உதய் நரேன் சவுத்ரி, அவரின் குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றது என தெரிவித்துள்ளார். மேலும், என்னால் பதவி விலகுவதாக மஞ்ஜி கூறியதற்கு நன்றி. ஏனெனில் இப்போது, டாக்டர்கள் கைகளை வெட்டி விடுவேன் என்பது போன்ற இவரது வார்த்தைகளை மக்கள் கேட்க முடியாதே எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மோடி வந்தால் சீனாவுக்கு என்ன?:ரிஜிஜூ
புதுடில்லி : பிரதமர் மோடி 3 நாள் பயணமாக அருணாச்சல பிரதேசம் சென்றுள்ளார். இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய இணை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, நாட்டின் எந்த பகுதிக்கும் பிரதமர் செல்வதற்கு உரிமை உண்டு. அவர் வருவதால் சீனாவிற்கு என்ன பிரச்னை?அவர் மீண்டும் அருணாச்சலுக்கு செல்வார். ஒன்று முதல் இரண்டு மீட்டர் தூரமுடைய எல்லை அல்ல நிலத்தை வைத்து அவர்களால் விவாதம் செய்ய முடியும். ஆனால் ஒட்டுமொத்த அருணாச்சல பிரதேசத்தையும் பிரச்னைக்குரிய பகுதியாக கருதி அவர்கள் விவாதம் செய்ய முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
ஹசாரே ஆரம்பித்தார் அடுத்த அஸ்திரம்
ரோத்கர்: அரியானா மாநிலம் ரோத்கரில் இருந்து டில்லலி நோக்கி புறப்பட்ட விவசாய பேரணியை அன்னா ஹசாரே துவக்கி வைத்தார். நில கையகப்படுத்துதலில் விவசாயிகளுக்கு நன்மை தரும் சரத்துக்கள் சேர்க்கப்பட வேண்டும் என வலியுறுத்தி இந்த பேரணி நடக்கிறது. வரும் 24ம் தேதி டில்லி ஜந்தர் மந்தரில் ஹசாரே தலைமையில் தர்ணா போராட்டம் நடக்கிறது .
பட்நாயக்கிற்கு இசட் பிளஸ்
புவனேஸ்வர் : ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் கார் மீது மர்ம நபர்கள் சீபத்தில் முட்டை வீசி தாக்குதல் நடத்தினர். இதன் காரணமாக அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் வழக்கமாக அவருடன் பாதுகாப்பிற்காக செல்லும் 7 போலீஸ் வாகனங்கள் மற்றும் ஒரு ஆம்புலன்சுடன் கூடுதலாக 2 போலீஸ் வேன்களும் செல்ல உள்ளன.
அமைச்சர்களுடன் அமித்ஷா சந்திப்பு
புதுடில்லி : மத்திய பட்ஜெட் கூட்டத் தொடர் துவங்க உள்ளதால் அது குறித்து மத்திய அமைச்சர்கள் மற்றும் கட்சியின் செய்தி தொடர்பாளர்களை சந்தித்து, பா.ஜ.,வின் தேசிய தலைவர் அமித்ஷா முக்கிய ஆலோசனை நடத்தி வருகிறார்.
பிரதமர் பதவி விலகுவாரா?: இளங்கோவன்
சென்னை : பட்ஜெட் குறித்த ஆவணங்கள் மாயமான விவகாரம் தொடர்பாக பேசிய காங்., தலைவர் இளங்கோவன், பட்ஜெட் ஆவணங்களைக் கூட பத்திரமாக வைத்துக் கொள்ள முடியாத நிலையில் மத்திய அரசு உள்ளது. ஆவணங்கள் மாயமானது தொடர்பாக பிரதமர் மோடி உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும். இதற்கு பொறுப்பேற்று பிரதமர் மோடி பதவி விலகுவாரா? என தெரிவித்துள்ளார்.
வருமானவரி தேவைதானா?:சாமி
புதுடில்லி : பா.ஜ., தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியசாமி தனது டுவிட்டர் பதிவில் வெளியிட்டுள்ள கருத்தில், நிலக்கரி சுரங்கங்களை ஓரளவு ஏலம் விட்டதிலேயே, 80 ஆயிரம் கோடி ரூபாய் கிடைத்துள்ளது. இன்னும் 2 ஜி ஏலம் பாக்கி உள்ளது. அப்படி இருக்கையில், வருமான வரி என்று ஒன்று தேவைதானா? என கேள்வி எழுப்பி உள்ளார்.
மக்கள் கூர்ந்து கவனிக்கிறார்கள்:வாசன்
கோவை : தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை முகாமை துவக்கி வைப்பதற்காக கோவை வந்திருந்த அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், தமிழகம் முழுவதும் 50 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். இதுவரை 40 லட்சம் உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர். மேலும் 10 லட்சம் உறுப்பினர்களை சேர்ப்பதற்கான முகாம் நடைபெற்று வருகிறது என தெரிவித்தார். மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னே ஆவணங்கள் மாயமானது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த வாசன், மக்கள் மத்திய அரசை கூர்ந்து கவனித்து வருகின்றனர். அதனால் மத்திய அரசு மக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும் என தெரிவித்துள்ளார்.
பல்கலை., தேர்வு விடைத்தாள்கள் மாயம்?
சிதம்பரம் : சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் மாணவர்கள் எழுதிய தேர்வின் விடைத்தாள்கள் மாயமாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விடைத்தாள்கள் வேறு கட்டுடன் மாற்றிக் கட்டப்பட்டுள்ளனவா என அதிகாரிகள் தேடி வருகின்றனர்.
காஷ்மீரில் பாக்., பயங்கரவாதிகள் பதுங்கல்
ஜம்மு : வடக்கு காஷ்மீரின் சோபூர் பகுதியில் வீடு ஒன்றில் பாகிஸ்தான் பயங்கறவாதிகள் 2 பேர் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து பாதுகாப்பு படையினர் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். துப்பாக்கிச்சூடு ஏதும் இதுவரை நடைபெறவில்லை என கூறப்படுகிறது.
ஆம்ஆத்மி எம்.எல்.ஏ., மீது வழக்கு
புதுடில்லி : ஆம்ஆத்மி எம்.எல்.ஏ., புராரி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். போலீஸ் ஸ்டேஷனில் கலாட்டா செய்ததற்காக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அமர்தியா சென் பெயரில் மீண்டும் விருது
புதுடில்லி : நாளந்தா பல்கலைக்கழக வேந்தர் பதவியில் தான் தொடர்வதை மத்திய அரசு விரும்பாததால், பல்கலைகழக நிர்வாகத்தின் பரிந்துரையை ஏற்கவில்லை என பொருளாதார மேதையான அமர்தியா சென் மத்திய அரசு மீது குற்றம்சாட்டி உள்ளார். இதனால் அவர் தனது வேந்தர் பதவியை ராஜினாமா செய்யவும் முடிவு செய்துள்ளார். இந்நிலையில் அமர்தியா சென் பெயரால் வழங்கப்பட்டு வந்த விருதை மீண்டும் தொடர மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. சமூக அறிவியல் ஆய்வில் சிறப்பாக பணியாற்றுபவர்களை தேர்வு செய்து இந்த விருது வழங்கப்பட்டு வந்தது. இருப்பினும் 2013ம் ஆண்டிற்கு பிறகு இந்த விருதுக்காக இந்திய சமூக அறிவியல் ஆய்வு கவுன்சில் எவர் பெயரையும் அறிவிக்கவில்லை. தற்போது அமர்தியா சென் விருதுக்கான தேர்வு நடத்தப்பட்டு வருவதாகவும், இன்னும் ஒரு மாதத்தில் தேர்வு முடிந்து முடிவு அறிவிக்கப்படும் என இந்திய சமூக அறிவியல் ஆய்வு கவுன்சில் அறிவித்துள்ளது.
துபாய்:அடுக்குமாடி கட்டிடத்தில் தீ விபத்து
துபாய்:துபாயின் மேரினா மாவட்டத்தில் உள்ள ஓர் அடுடுக்குமாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.இப்பகுதி குடியிருப்பு பகுதி நிறைந்த இடமாகும்.79 அடுக்குமாடி கொண்ட இக்கட்டிடத்தில் 50 வது தளத்தில் தான் தீ பற்றி கொண்டது.தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்து அவர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் தீ விபத்திற்கான காரணம் என்ன, பாதிப்பு குறித்து முதற்கட்ட தகவலில் தெரியவரவில்லை.
ரஷ்யா:எதிர்கட்சி தலைவருக்கு சிறை
மாஸ்கோ:ரஷ்யாவில் அதிபர் புதினுக்கு எதிராக போராட்ட அறிவிப்பு வெளியிட்ட எதிர்க்கட்சி தலைவர் சிறையில் அடைக்கப்பட்டார்.ரஷிய தலைநகர் மாஸ்கோவில், கடந்த 2011-12 ஆண்டுகளில், அதிபர் விளாடிமிர் புதினுக்கு எதிராக பெருமளவில் போராட்டங்களை நடத்திக் காட்டி, பிரபலமானவர் எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி. இவர் ஊழலுக்கு எதிரானவரும் ஆவார். இப்போது புதினுக்கு எதிராக மீண்டும் போர்க்கொடி உயர்த்தி உள்ளார். அடுத்த மாதம் 1-ந் தேதி அவர், மாஸ்கோவில் 1 லட்சம் பேரை திரட்டி மாபெரும் பேரணி நடத்த திட்டமிட்டார்.இது குறித்து தனது 'டுவிட்டர்' இணையதள பக்கத்தில் அறிவிப்பு வெளியிட்ட அவர், 'நாடடில் நிலவும் அரசியல், பொருளாதார நெருக்கடியை சமாளிக்க, அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். எனவே நெருக்கடிக்கு எதிராக பேரணி நடத்தப்படும்' என்று கூறி இருந்தார்.இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு, மாஸ்கோ மாவட்ட கோர்ட்டில் நேற்று முன்தினம் ஆஜர்படுத்தப்பட்டார்.
திருப்பதியில் ஆந்திர முதல்வர் தரிசனம்
திருப்பதி:திருமலை திருப்பதியில் ஏழுமலையானை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தரிசனம் செய்தார்.வியாழக்கிழமை இரவு திருமலைக்கு வந்த அவரை, தேவஸ்தான அதிகாரிகள் பத்மாவதி விருந்தினர் மாளிகையில் மலர்ச்செண்டு அளித்து வரவேற்றனர். அன்று இரவு திருமலையில் தங்கிய அவர், வெள்ளிக்கிழமை காலை வைகுண்டம் காத்திருப்பு அறை வழியாகச் சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு விரைவில் நியமிக்கப்பட்டு, தேவஸ்தானத்தில் உள்ள அனைத்துப் பிரச்னைகளும் தீர்க்கப்படும் என்றார்.
எம்.எல்.ஏ.,க்கள் நீக்கம் :நடைமுறை என்ன?
சட்டசபை கூட்டத்தொடர் நடைமுறை குறித்து, தமிழக மூத்த எம்.எல்.ஏ., ஒருவர் கூறியதாவது:ஒவ்வொரு ஆண்டின் துவக்கத்திலும், சட்டசபை கூட்டத்தொடர், கவர்னர் உரையுடன் துவங்கும். அன்றைய தினம், சட்டசபை அலுவல் ஆய்வுக் குழு கூடி, கூட்டத்தை, எத்தனை நாள் நடத்தலாம் என, முடிவு செய்து அறிவிக்கும்.அதன்படி, அக்கூட்டம் நடக்கும். கவர்னர் உரை துவங்கியதும், அதன்மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானம், முதலில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படும். இதற்கான அலுவல் நேரமே, முதலில் முடிவு செய்யப்படும். அதன்படி, நடப்பு கூட்டத்தொடரில், வரும் 23ம் தேதி வரை, சட்டசபை நடக்க, அலுவல் ஆய்வுக் குழு முடிவு செய்துள்ளது.இதன்பின், மறுதேதி குறிப்பிடாமல், சட்டசபையை சபாநாயகர் ஒத்தி வைப்பார். அடுத்து, பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான தேதியும், அதற்காக, சட்டசபை நடக்கும் நாட்களும், பின் முடிவு செய்யப்படும். இந்நிலையில், கவர்னர் உரையுடன் துவங்கிய சட்டசபைக் கூட்டம், முடிப்பது குறித்து, கவர்னர் தான் அறிவிப்பு வெளியிடுவார். அந்த அறிவிப்பு, தற்போது நடக்கும் கூட்டத்தோடு முடிவடைந்தால், அது ஒரு கூட்டத்தொடராக கருதப்படும்.அப்படியில்லாமல், பட்ஜெட் தாக்கல் செய்து, அதற்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட பின், கூட்டம் முடிவதாக கவர்னர் அறிவித்தால், அதுவரை கூட்டத்தொடர் நீடிக்கும்.எனவே, நடப்புக் கூட்டத்தொடர் என்பது, கவர்னரின் அறிவிப்பை அடிப்படையாகக் கொண்டது. அந்த அறிவிப்பு வெளியாகும் வரை, தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள், சட்டசபைக்கு வரமுடியாது.இவ்வாறு, அவர் கூறினார்.
மோடியின் உருவம் போல் உள்ள பொம்மையுடன் படம் எடுக்க ரூ.10ஆயிரம்
புதுடில்லி:பிரதமர் மோடி அணிந்த உடை ரூ.4.31 கோடிக்கு ஏலம் போனது. இந்நிலையில், ஏலம் துவங்கிய நாளில், இந்த கோட் - சூட் ஆடைக்கு, பா.ஜ., - எம்.எல்.ஏ., ஒருவர், 51 லட்ச ரூபாய் கொடுக்க முன்வந்தார். அதை அறிந்த பிற எம்.எல்.ஏ.,க்கள் தனித்தனியாகவும், மொத்தமாகவும் சேர்ந்து, ஏலத் தொகையை படிப்படியாக உயர்த்தினர்.தொழிலதிபர் கோமல்காந்த் சர்மா என்பவர், 1.41 கோடி ரூபாய் கொடுக்க தயாரானார். அது போல, ராஜேஷ் மகேஸ்வரி என்ற தனியார் பள்ளி ஆசிரியர், 1.25 கோடி ரூபாய் கொடுக்க முன்வந்தார்.சக ஆசிரியர்கள், 250 பேரை சேர்த்து, அவர்களிடம் தலா, 50 ஆயிரம் ரூபாய் வாங்கி, கோட் - சூட்டை ஏலத்தில் எடுக்க முன்வந்தார். எனினும், தொகை உயர்ந்து கொண்டே போனதால், அந்தஆசிரியரால் ஏலம் எடுக்க முடியவில்லை.'இந்த ஆடை, 10 கோடி ரூபாய் பெறும். மோடியின் உருவம் போல உள்ள பொம்மைக்கு இந்த ஆடையை அணிவித்துள்ளோம். அதன் முன் நின்று, 'செல்பி' படம் எடுக்க, தலா, 10 ஆயிரம் ரூபாய் வசூலித்து, கிடைக்கும் பணத்தை, பெண் குழந்தைகள் மேம்பாட்டிற்கு பயன்படுத்துவோம்' என்றார், மற்றொருவர்.
 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.