குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 7 ம் திகதி செவ்வாய் கிழமை .

கண்டி மன்னன்சிறிவிக்கிரம ராயசிங்கன் முக்கிய குறிப்புக்கள்

20.02.2015-கண்டி மன்னன் சிறி விக்கிரம ராயசிங்கன் கண்டிப் போரில் 1815 ஆம் ஆண்டு பிரித்தானியரால் தோற்கடிக்கப்பட்டு சிறை பிடிக்கப்பட்டாா்.

சிறி விக்கிரம ராயசிங்கன் சிறைபிடிக்கப்பட்டு 2015 இவ்வருடத்தோடு 200 ஆண்டுகள் பூா்த்தியாகின்றன.

1815 இல் ஆங்கிலேயரிடம் கண்டி இராச்சியம் வீழ்ச்சியடைந்த பின் கண்டி மன்னர் ராயசிங்கன் கைது செய்யப்பட்டார். பின்னர் சிறிவிக்கிரம ராயசிங்கன் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டு இன்றைய சிலிங்கோ கட்டிடத்திற்கு அருகில் இருந்த ஒரு கட்டடத்தில் அவர் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்.

அங்கே சில மாதங்கள் கழிந்த பின் 1816ஆம் ஆண்டு சனவரி 24ஆம் திகதி மன்னரும் அவரின் துணைவியார்கள் நான்கு பேரும் கொழும்பு கோல்பேசிலிருந்து ‘கோர்ஸ்வலிஸ்’ என்ற கப்பல் மூலமாக சென்னைக்கு அழைத்து செல்லப்பட்டிருக்கிறார்கள். சென்னையிலிருந்து 138 கி.மீற்றா் தூரத்திலுள்ள வேலூா் கோட்டையில் அவா் குடும்ப சகிதம் சிறை வைக்கப்பட்டுள்ளாா்.

அப்போது அந்தக்கப்பலில் மன்னருடன் ஒரு ஆங்கில அதிகாரியும் உடன் சென்றிருக்கிறார். அவர் பெயர் ‘வில்லியம் கிரண்வில்’ இவர் மன்னருடன் கப்பலில் சென்ற அனுபவங்களை ஒரு புத்தகமாகவும் எழுதியிருக்கிறார்.

சிறிவிக்கிரம ராயசிங்கன் 832 ஆம் ஆண்டுசனவரி 30 ஆம் திகதி 52 ஆவது வயதில் வேலூரில் இறந்தாா். சிறி விக்கிரம ராயசிங்கன் நினைவாக கொழும்பு கோட்டையில் மன்னன் ஆங்கிலேயரால் சிறை வைக்கப்பட்ட இடத்தில் நினைவுத் தூபி ஒன்று கட்டப்பட்டு உள்ளது.

அண்மையில் இந்தியா வேலூா் சென்றிருந்த போது சிறி ிக்கிரம ராயசிங்கனின் கல்லறையைப் பாா்க்கும் சந்தா்ப்பம் கிடைத்தது. மன்னனுக்கும் அவரது குடும்பத்தினரக்காகவும் கலைஞா் கருணாநிதியின் காலத்தில் கட்டப்பட்ட முத்துமண்டபத்தினுள் கல்லறைகள் இருக்கினறன.