குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 7 ம் திகதி செவ்வாய் கிழமை .

சிவராத்திரியும்-திருக்கேதீசுவரமும்-பூநகரியும்-சங்குப்பிட்டி,கேரதீவுப்பாதைப்பயணமும்-பாலாவியும்.

17.02.2015-05.02.2046-இலங்கையின் வடபகுதியெங் கும் ஒரு ஆன்மீக எழுச்சி நாள் இந்த சிவராத்திரி நாள் என்றால் அது மிகையாகாது.சிறிய கொட்டில் கோவில்கள் முதல் ஏன் மரதத்திற்கு கீழே  கல்லை வைத்து வழிபடும் பாமர  மக்களிடமிருந்து  பெரிய கோவில்கள் வரை என கிரமம் நகரம் எங்கும் சிறியவர் பெரியவர்  முதியவர் வேறு பாடு இன்றி இறைவனோடு பத்திநிலையில் தொடர்பு கொள் ளும் நிகழ்வுகள் காட்சிகள்.

பிற்காலத்தில் திரைப்படகாட்சிகள்தொலைக்காட்சிப் பெட்டிகள் மூலம் பக்கதிப்படங்கள் என அதுவும் பத்தி மயமாகியது. அதற்கு முன் நாடகங்கள் பட்டிமன்றங்கள் கலையரங்கங்கள் கவிதைகள் வில்லுப்பாட்டுகள் சிறுவர்நிகழ்ச்சிகள் என கிராமம் நகரம் என  கடவுள் சிந்தையுடன் செயற்பாடுகள்.

திருக்கேதீசுவரம் சென்றவர்களும் நடுஇரவுவேளையிலும் அதிகாலையிலும்  வேட்டிகட்டியவாறு மேலாடைகளின்றி ஒரு குடம் அல்லது செம்பு கையில்  ஏந்தியவாறு வேறு சிந்தனை இன்றி சிவனை எண்ணியவாறு சிவ சிவ சிவாயநம ஓம் என்று சத்தமாக சொல்லிக்கொண்டு கோவிலிருந்து பாலாவி தீத்தக்கரைக்குச் சென்று நீராடி அப்படியே ஈரஉடையுடன் அந்தகுடத்தில் அல்லது செம்பில் பாலாவிதீர்த்தத்தை எடுத்து ஏந்திவந்து   அகழ்வாராட்சியின் போது  எடுத்த அந்த பெரிய அளவிலான சிவலிங்கம் திருக்கேதீசுவரத்தின் மேற்கு வீதியில் உள்ளது அந்த சிவலிங்கத்தின் மேல் பாலாவிதீர்த்தத்தை  இட்டு திருமுழுக்கு செய்து சிவனை வழிபடும் பாக்கியம் எனக்கு ஒருமுறையிருந்தது  அது எனக்கு  மகத்தான  ஆன்மீக அனுபவத்தை தந்தது  இதுவே பலருக்கும் உரியது.

எனவே சைவ சமயத்தவர்களின் சிறப்பு வழிபாட்டு நாள்  சிவராத்திரி என்பதற்கு இது நல்ல ஆதாரம்.

இந்த நாளை அன்று என் சிறுவயதில் பூநகரி கிராமம் எப்படியிரந்தது என்பதை  மீட்டுப்பார்ப்பதே என் நினனைவு  வரிகளின் சிவராத்திரிகள்.

பூநகரி  ஞானிமடத்திலிருந்து   என்தாயாரின் மாமனாரான அமரர்  சிவபக்தர் நாகலிங்கம் அவர்கள் திருக்கேதீசுவரத் தில் ஒரு மடம் கட்டி நடத்தி வந்தார். அதற்கு  நாகலிங்கம் மடமென பெயர்வழங்கினாலும் பூநகரி மடம் என்ற  ஒரு அறிமுகம்  இருந்தது.

இரண்டு காரணங்களால்  திருக்கேதீசுவரத்துடன் சிவராத்திரியுடன்  பூநகரி மக்களின் ஈடுபாடு இரட்டிப்பாக  அதிகமாக இருந்தது.

ஒன்று பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் பூநகரி ஊடாகப்பயணிக்கும் காட்சி சங்குப்பிட்டி-கேரதீவு படகுச் சேவையையும்,பாதைச் சேவையையும்  பூநகரி பல நோக்குக்கூட்டுறவுச்சங்கம்  மிகவும் சிறப்பாக நடத்தும் அத்துடன் சங்குப்பிட்டியில் தண்ணீர்பந்தல் அமைத்து மோர்த்தண்ணி-சக்கரைத்தண்ணி-குடிநீர் என தாகசாந்தி வழங்கி சிவனடியார்களுக்கு உதவும் உயர்பண்பினை அது கொண்டிருந்தது. இதனை இன்று மகாதேவச்சிறுவரில்லம் நடத்தும் மதிப்பிற்குரிய இராசநாயகம் அண்ணை அவர்கள் பூ.ப.நோ.கூ சங்கத்தலைவராக இருந்துவழி நடத்திய காலத்தை உணரமுடிந்தது.

அடுத்தது திருக்கேதீசுவரத்தில்  பூநகரி நபர் ஒருவரால் அமைக்கப்பட்டிருந்த மடம் ஒன்றும் இந்த சிவராத்திரி காலத்தில்  பூநகரி மக்களை திருக்கேதீசுவரத்துடன்  அதிக ஈடுபாட்டினை ஏற்படுத்தியது என்றும் கருதலாம்.

இந்த  பொருளுடைய சம்பவங்களும்  நிகழ்வுகளும் ஒரு புறமிருக்க  பூநகரிப் பகதியில் இருக்கும் அனைத்த கோவில்களிலும் தத்தமது இயல்புநிலைகளுக்கு தக்க  வழிபாடுகளை  நிகழ்தினர் என்பது மறக்க மடியாத நினைவுகள்.

சிறப்பு திருமுழுக்கு வழிபாடுகள், 10 கொத்து 25 கொத்து அரிசியில் மோதகம் பிடிக்கும்  நேர்த்திகள் இப்படிப்பலவிதம் நிகழும்.

என் வீட்டிற்க அருகில் இருந்த முருகன் கோவிலில் நான் இளைஞானக இருந்த காலத்தில் ஆசிரியராக  அரசில் பணியாற்ற முன்னரே க.பொ.த. உயர்தரத்தில் யாழ் இந்தவில் சித்தியடைந்திருந்த காலத்தில்  எனது வீட்டிற்கு அயலிருந்த  பிள்ளைகளுக்கு  ஏறுமயில் ஏறுவிளையாடு முகமொன்றே ....திருப்புகழ்பாடலுக்கு  ஆறு  முருகனுக்கான குழந்தைகளையும் ஆறுமுகமான பொருள் நீ அருளவேண்டும்  என்ற  சிவன் உமைக் கான  குழந்தைகளையும் தெரிவு செய்து அவர்களுக்கு குறுகிய காலத்தில் பயிற்றுவித்து  ஒரு சிவராத்திகலைரராத்திரியாக மாறியது.

சிறுவர்கள் அந்த திருப்புகழ் பாடல்வரிகளை  விளங்கிக் கொண்டமை எனக்கு வாழ்வில் சிவனை  உமையைக்கண்ட  மகிழ்ச்சியை தந்தது.  அதுதான் எனக்கு சிறவர்களுடாக மகிழவைப் பெறும் உள்ளுணர்வைத்தந்த  முதல் நிகழ்வு என்றும் நினைவிருக்கின்றது.

இதில் ஒண்டவிட்ட சகோதரியின் மகள் யனனி கனடாவில் வாழ்கின்றார் அவர் சிவன். ஒண்டவிட்ட சின்னம்மா மகள் கீதா இங்கிலாந்தில் வாழ்கின்றார்.

அதே போன்று ஆறு அழகான முருகனுக்கான குழந்தைகள் மிக அழகாக நடனமிட்டார்கள்.முருகபத்தர்களாகவும் சிறுவர்கள் நடனமிட்டார்கள்.

அதே போன்று அதற்கு முதலாண்டிலோ அடுத்தஆண்டிலோ  நல்லதொரு தலைப்பில் பட்டிமன்றம் அதே முருகன் கோவில் வாசலில் நடத்தினோம்.

மெஞ்ஞானமா- விஞ்ஞானமா  மனிதனுக்கு சிறப்பான வாழ்வைத் தரும் என்ற  தலைப்பினை தேர்வு செய்தோம். சகோதர் சிறிகந்தராசா அவர்கள்  பட்டிமன்ற நடுவராகக் கடைமையாற்றினார்.இது எமக்கு அருகில் இருந்த கோவில்களில் நடந்தவை.

கள்ளியங்காடு, நாயன்மார்கட்டு நீராவியடி  இப்படிப்பல இடங்களில் சிவராத்திரி நிகழ்வுகளில் பட்டிமன்றம் கவியரங்கம், நாடகம் என்று இயங்கியமைகள்  என்வாழ்வில் நண்பர்களுக்கும் எனக்கும் மறக்க முடியாதவை.

இப்படியே பலருக்கும் சிவராத்திரி நினைவுகளிருக்கும்.  அந்தவயதில் எந்த தீயவர்களிடமும் நாம் சிக்கிகொள்ளாத கடவுள் நிலையில் இருந்தோம் என்பதும்  மறுக்க முடியாத உண்மைகள்.

அந்த அழுக்கற்ற உண்மை மனநிலைக்கு இந்த வயதிலும் திரும்ப இந்த சிவராத்திரகாலத்தில்  அந்த நினைவுகள் எமக்கு உதவும் என்பது நம்பிக்கை.

கொட்டாவடிப்பிள்ளையார் கோவில்  சிவன்ராத்திரி மோதக  பூசை வழிபாடுகள் அப்படியே ஞானிமடம் கொட்டிலுப் பிள்ளையார் கோவில்  மோதக பூசை வழிபாடுகள். கரிக் கோட்டுக்குள கதிர்காம முருகன் சிவராத்திரி கலைநிகழ்ச்சி நினைவுகள் என பல நினைவுகள் வருகின்றன.

இதைவிடவும் மிகச்சிறிய கோவில்களை நடத்தும்  முதியவர்களின்  பக்திவழிபாடுகள். பயனை நிகழ்வுகள் நினைவுகளுக்கு வருகின்றன.  இது பூநகரி மக்களின் சிவவழிபாட்டு நிலையினை எடுத்தியம்புவதாக இருக்கின்றது.

சிவராத்திரிகாலத்தில் எமது ஊர் ஊடாகவே அதிகமான யாழ்ப்பாணப்பத்தர்கள் செல்லவதால் பலவாகனங்கள் இரண்டு மூன்று நாட்களுக்கு  மிக நெரிசலாகப் பயணிப் பதைக்காணலாம்.

இன்று சங்குப்பிட்டி- கேரதீவுப்பாலம்  அமைக்கப்பட்டு பயணம் மிகவும் இலகு படுத்தப்பட்டிருப்பதுடன் நேரச்சுருக்கம் என்பன ஏற்ப்டிருப்பதை கற்பனை செய்துபார்க்க முடிகிறது.

அன்று எமது ஊர்களிலிருந்து உழவு இயந்திரப் பெட்டிகளுக்கு கூடாரம் கட்டி அதில் எமது ஊர்மக்கள் பயணிக்கும் காட்சியும் நினைவுக்கு வருகிறது.

எனது சிறுவயதுக்கால நண்பர் தற்போது அமரர் அவர்  திருக்கேதீசுவரத்தில் செலவு செய்வதற்காகவே பணம் சேமிப்பார்.

பாசுகரலிங்கம் அவரின் அம்மாவின் தந்தையாரே  நாகலிகம் அவர்கள் அவரின் மடத்தில் மூன்று நான்குநாட்கள் அவர்தங்கி நின்று வருவார். அந்த அனுபவங்களை எங்கள் வகுப்பில் ஆசரியர் வராத பாடவேளைகளில்  சுவார்சியமாகப்பகிர்ந்து கொள்வார்.

இதற்கு முந்திய காலங்களில் மாட்டுவண்டியில் செல்வதாகவும் கூறியுள்ளார்கள். இன்று பலர் பல விதமான வாகனங்களை வைத்திருக்கின்றார்கள்  மூன்று சக்கரவாகனங்கள் ,உந்துருளிகள் மகிழுந்துகள் என அவற்றில் சென்று திரும்புவார்கள்  எனஎண்ணுகின்றேன்.

போருக்குப்பின் திருக்கேதீசுவரம் மீள்நிலை பெற்றபோது  பூநகரி மடமான நாகலிங்கம்மடமும் நடராயர் மடம் என்று புதுப்பொலிவு பெற்றுத்திகழ்வதாக அறிந்து மகிழ்கின்றேன்.

எமது ஊர்மக்கள் தாம் தங்கிவர  அங்கு எம்மவரின் மடம் ஒன்று உள்ளது என்ற ஒரு உணர்வுடம் திருக்கேதீசுவர சிவராத்திரி வழிபாடு ஈடுபாட்டை அதிகரித்திருக்கிறது. எமது ஊர்ஊடாக  யாழ்ப்பாண ஊர்மக்கள் பயணிக்கும் செயற்பாடும் எமது  பூநகரி ஊார்மக்களை திருக்கேதீசுவர சிவராத்திர வழிபாட்டுடன் ஐக்கியமாக்கியது என்பது உண்மை.

அந்தக்காலத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து இரண்டு விதமாகத்  திருக்கேதீசுவரத்திற்கு பயணிப்பார்கள்.பூநகரி சங்குப்பிட்டி கேரதீவுப்பாதை வழியாக.

மற்றது ஆனையிறவைத் தாண்டி பரந்தன் சென்றடைந்து பரந்தனிலிருந்து மேற்குத்திசையாக   பூநகரிக்குவந்து அங்கு ஒல்லாந்தர் கோட்டை இருந்த வாடியடிச்சந்தி என்ற  பூநகரியின் சந்தியில் நின்று ஆலமரங்கள் மூன்றினையும் நிழல்வாடி மரம் வேம்பு தந்த நிழல் அந்த வெக்கை காலத்தில் குளரூட்டியின் பயனைத்தந்தது என்பது மிகையாகாது.

இதனை இன்று உசனைச் சேர்ந்த நண்பர்  சிவசங்கர்  கூறு வார்.  அந்த சந்தியில்  உணவகங்களை வைத்திருந்தவர்கள் இக்காலத்தில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்குவதை நான் அவதானத்திருக்கின்றேன். அரியண்ணை கடையின் உழுந்துவடை , பால் தேநீர், அப்பம் ,வாய்ப்பன் இவற்றை இன்றும் மறக்க முடியாது.

அதே போன்று சிங்கம்கடை,பாபு கடை, இராசேந்திரம்கடை இன்னும்  பலருடைய கடைகள்.

இங்கு ஆறி மக்கள் வாகனங்களை இயக்கிக் கொண்டு நாலாம் கட்டை வழியாக செம்பன் குண்டு திக்குவில் மண்டக்கலாறு ஊடாக நாச்சிக்குடாச்சந்தி. பல்லவராயன் கட்டு,  முழங்காவில் பிள்ளளையார் கோவிலடியில் மீண்டும் ஒரு தரிப்பு அங்கும் ஆறி மீண்டும் திருக்கேதீசுவரம் பயணமாவார்கள்.

பூநகரியில் அந்த  ஆலமரம் பல கிளைகளை இழந்தது போரால். அதனால் பல விழுதுகள் பட்டுவிட்டன. அந்தநிணல் சுகம் இன்னும்  பூநகரிக்கு கிடைக்கவில்லை. உலகெங்கும் வாழ்ந்து சிவனை எண்ணி  இன்று வழிபடும் நாளில் எமது மண்ணில் வழிபட்டகடவுள்களையும் எமது ஊரின் இன்றைய அன்றைய காட்சிகளையும் மனதில்பதிப்போமாக.

பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள் ஆசிரியர்-சுவிற்சர்லாந்து.