குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 27 ம் திகதி சனிக் கிழமை .

கிளிநொச்சி மக்கள் மகிந்த கட்சியை ஏற்கவேண்டும் பீரிசின்பிதட்டல்தொழிற்சாலைகளையார் அழித்தது.

  06 .07.2011-த.ஆ.2042--  அரசியலுக்காகவும் தேர்தலுக்காவும் தமது கட்சி வளர்சிக்காகவும் போரால் பாதிக்கப்பட்ட மக்களைப் பயன் படுத்துவதும் அச்சுறுத்துவதும் ஆதாரங்களுடன் பதிவாகிவருகிறது. இதற்கே உள்ஊர் ஆட்சி சபைத் தேர்தலைச் சர்வதேசம் பயன்படுத்தும். விடுதலைப் புலிகளைப் போல் அரசும் மக்களையும்கேடயமாகப் பயன் படுத்துகிறது. கூட்டமைப்பின் பேச்சுவார்த்தை வெல்லுமென்று இந்தியா புலுடாவிடுகிறது. இதுசர்வதச தலையீட்டை தடுப்பதாகும். இந்தியா தட்டிச் சொன்ன காலாம் போய்விட்டது. இனிக் குட்டிச் சொல்ல வேண்டியது தானே! நிருபராவின் கண்துடைப்பு கவலைதருகிறது. பொருளாதார மற்றும் சமூக ரீதியான அபிவிருத்தியை எட்டுவதற்கு ..போர் நிறைவினால் ஏற்பட்டுள்ள நிலைமைகளை கிளிநொச்சி மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என வெளிவிவகார அமைச்சர் யீ.எல்.பீரிசு தெரிவித்துள்ளார்.
 
பல தசாப்த காலமாக மறுக்கப்பட்டு வந்த பல வாய்ப்புக்கள் தற்போது கிளிநொச்சி மக்களுக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் கிளிநொச்சியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அலுவலக ஆரம்ப நிகழ்வுகளில் கலந்து கொண்ட போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
 
பொருளாதார மற்றும் சமூக ரீதியான அபிவிருத்தியை எட்டுவதற்கு சந்தர்ப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டதன் பின்னர் பிரதேசத்தில் பாரியளவு அபிவிருத்தி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தைகள் வெற்றியடையும் என இந்தியா நம்பிக்கை :
06 .07. 2011  தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான அரசாங்கத்தின் பேச்சுவார்த்தைகள் வெற்றியடையும் என இந்தியா நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
 
இரு தரப்பினரும் புரிந்துணர்வுடன் காத்திரமான தீர்வு நோக்கி நகர்வார்கள் என இந்திய வெளிவிவகார செயலாளர் நிரூபமா ராவ் எதிர்ப்பார்ப்பை வெளியிட்டுள்ளார். நாட்டின் ஐக்கியத்தை கட்டிக்காக்கும் வகையிலான தீர்வுத் திட்டமொன்று எட்டப்பட வேண்டுமென இந்திய வெளிவிவகார செயலாளர் நிரூபமா ராவ் குறிப்பிட்டுள்ளார்.
 
நட்பு நாடு என்ற ரீதியில் இலங்கையில் நிரந்தர சமாதானத்தை நிலைநாட்டுவதற்கு சகல வழிகளும் முயற்சி மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
 
அதிகாரப் பகிர்வு மற்றும் 13ம் திருத்தச் சட்ட மூல அமுலாக்கம் n;தாடர்பில் அரசாங்கமே தீர்மானம் எடுக்க வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழக மக்களின் கருத்துக்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும் - நிரூபமா ராவ்
06 .07. 2011 
தமிழக மக்களின் கருத்துக்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டுமென இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் நிரூபமா ராவ் தெரிவித்துள்ளார்.

 இலங்கை விவகாரம் தொடர்பில் தமிழக அரசாங்கமும் மக்களும் கொண்டுள்ள நிலைப்பாடுகள் குறித்து, மத்திய அரசாங்கம் தொடர்ந்தும் கவனம் செலுத்தாமல் இருக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக மாநிலமானது இந்தியாவின் ஓர் பகுதி என்பதனை மறந்து விடக் கூடாது என அவர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார். இந்தியாவின் புதுடில்லிக்கு இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளிலிருந்து பயணம் செய்துள்ள பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் உயர் ஊடகவியலாளர்கள் மத்தியில் நேற்று உரையாற்றிய போதே இந்தியாவின் வெளிவிவகாரச் செயலாளர் நிருபமா ராவ் இதனைத் தெரிவித்துள்ளார்.

  இலங்கையுடனான உறவுகள் குறித்து தமிழக மாநில அரசாங்கத்திற்கு சகல தகவல்களும் வழங்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்ததெந்த வழிகளில் ஒத்துழைப்பு வழங்க முடியும் என்பதனை ஆராய்ந்து உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

 இலங்கை அரசாங்கமும் தமிழ் அரசியல் கட்சிகளும் அரசியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைப்பதற்கான முனைப்புக்களில் ஈடுபட்டுள்ளதாகவும் இது தொடர்பில் தமிழக மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியது மத்திய அரசாங்கத்தின் கடமையாகும் னஎ அவர் குறிப்பிட்டுள்ளார்.

 
தமிழ் பேசும் மக்கள் என்ற ரீதியில்சனநாயக உரிமைகளுக்கு அமைவாக தமிழக மக்களும் அரசியல் கட்சிகளும் தங்களது கருத்துகளை முன்வைப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

 தமிழக மக்கள் தங்களது நிலைப்பாட்டை சுதந்திரமாக வெளியிடுவதாகவும் இந்தக் கருத்துக்களும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 ஐ.நா. நிபுணர் குழுவால் வெளியிடப்பட்டுள்ள போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக தமது நிலைப்பாடு என்ன என்பதை இலங்கை அரசே சர்வதேசத்துக்குத் தெளிவுபடுத்த வேண்டும் எனத் தெரிவித்திருக்கும் இந்தியா, 13 ஆவது திருத்தம் தொடர்பாகவும் இலங்கை  இறுதி முடிவை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

 இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான அறிக்கை எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் நடை பெறவிருக்கும் ஐ.நா. பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டால் இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஏதாவது எடுக்கப்படும் பட்சத்தில் இலங்கையைப் பாதுகாக்க இந்தியா முன்வருமா என இலங்கைப் பத்திரிகையாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே நிருபமாராவ் இதனை கூறியுள்ளார்.

 பதுடில்லியில், சவுத் புளொக் எனப்படும் வெளிவிவகார அமைச்சு அலுவலகத்தில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் இலங்கை மற்றும் மாலைதீவுடனான இந்தியாவின் உறவுகள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.இதில் இந்திய வெளிவிவகார அமைச்சின் இணைச்செயலாளர் விஷ்ணுபிரசாத் மற்றும் ஹர்ஷ் சிறிங்லா ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.

 இந்தியாவைப் பொறுத்த வரையில் அதன் அண்டை நாடுகளான மாலைதீவு மற்றும் இலங்கையுடனான உறவுகள் முக்கியமானவை. அவற்றுடனான பொருளாதார மற்றும் அரசியல் உறவுகளை வலுப்படுத்து வதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக நிருபமாராவ் தெரிவித்தார்.

 மறைமுக வேலைத்திட்டம் எதனையும் அடிப்படையாகக் கொண்டு இதற்கான செயற்பாடு களை இந்தியா மேற்கொள்ளவில்லை. இலங்கையின் நலன் விரும்பியாகவே இந்தியா இருக்கின்றது என்றும் நிருபமாராவ் மேலும் தெரிவித்தார். போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வீடமைப்பு மற்றும் வடபகுதியில் இந்தியா மேற் கொள்ளும் திட்டங்களையும் அவர் விளக்கியுள்ளார். இருக்கும் இடருக்கு இந்தப் பெண்ணின் கண்துடைப்பு துன்பத்தைத்தருகிறது.


 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.