குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 17 ம் திகதி வெள்ளிக் கிழமை .

01.02.2015- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

சர்க்கரை நோயாளிகளுக்கு இனிப்பான செய்தி

கோல்கட்டா: மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சுந்தர்பன் காடுகளில் உள்ள ஒரு வகையான சதுப்பு நில மரத்தில் இருந்து நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் மருந்து ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.

 

 

சுந்தரி என்ற மரத்தில் இருந்து எடுக்கப்படும் ஒருவித மருத்துவ குணம் கொண்ட பொருள், சர்க்கரையை கட்டுப்படுத்துவதாக, ஆர்.ஜி.கார் மருத்துவ கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கடந்த ஐந்து ஆண்டுகளாக இதற்கான சோதனை நடந்துள்ளதாகவும், இதில் திருப்திகரமான முடிவு கிடைத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

விமான எரிபொருள் விலை சரிவு
புதுடில்லி: சர்வதேச எண்ணை நிறுவனங்கள், விமான எரிபொருள் விலையை குறைத்துள்ளன. இந்த வகையில், 11.3 சதவீதம் என்ற அளவில் விலை குறைந்துள்ளது. இதன் மூலம், டீசல் விலையை காட்டிலும், விமான எரிபொருள் விலை குறைவாகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த விலை குறைப்பால் பெட்ரோல், டீசல் விலையும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இனி ராஜினாமா இல்லை-கெஜ்ரிவால்
புதுடில்லி: இனி ஒருமுறை டில்லி முதல்வர் பதவியை ராஜினாமா செய்யமாட்டேன் என அரவிந்த் கெஜ்ரிவால் கூறி உள்ளார். தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய அவர், 'டில்லி முதல்வர் பதவியை நான் ராஜினாமா செய்தது தவறு தான். அதற்கு கடந்த ஆண்டு மே மாதமே மன்னிப்பு கேட்டுவிட்டேன். ராஜினாமா என்ற தவறை மீண்டும் செய்ய மாட்டேன். எங்களுடைய ராஜினாமா முடிவால் பலர் அதிருப்தியடைந்துள்ளனர் என்பதை இப்போது உணர்ந்து கொண்டுள்ளோம்,' என்றார்.
குறுந்தொழில் அமைப்புக்கள் கோரிக்கை
கோவை: கோவைக்கு வந்திருந்த அமைச்சர் வேலுமணியை சந்தித்த குறுந்தொழில் அமைப்புக்கள், மின் கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து முறையிட முதல்வர் பன்னீர்செல்வத்தை சந்திக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தன. முன்னதாக, மின் கட்டண உயர்வு உள்ளிட்ட விஷயங்களை முன் வைத்து பல்வேறு போராட்டங்களை குறுந்தொழில் அமைப்புக்கள் நடத்தி வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
விசாரணை அவசியம்-ஜெயந்தி நடராஜன்
புதுடில்லி: சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து ராஜினாமா செய்த முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது, 'நீங்கள் மத்திய அமைச்சராக இருந்தபோது, சுற்றுச்சூழல் குறித்து அனுமதி கொடுத்த விஷயங்கள் சம்பந்தமாக விசாரணை நடத்த மத்திய அரசு ஆலோசனை செய்து வருகிறதே' என்று கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த ஜெயந்தி நடராஜன், 'அவசியம் விசாரணை நடக்க வேண்டும். அதைத் தான் நானும் விரும்புகிறேன். அப்போது தான் இதுவரை மறைந்துள்ள பல விஷயங்கள் வௌியுலகத்திற்கு தெரிய வரும்,' என்றார்.
பிரதமர் மோடி சீனா செல்கிறார்
பீஜிங்: சீன சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வௌியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அங்கு நடந்த ஒரு கூட்டத்தில் பேசுகையில், 'சீன உறவை மேம்படுத்தும் வகையில் என்னை தொடர்ந்து பிரதமர் நரேந்திரமோடியும் வரும் மே மாதத்தில் சீன பயணம் மேற்கொள்ள இருக்கிறார் என தெரிவித்துள்ளார்.
கச்சத்தீவை மீட்க வேண்டும்-ம.தி.மு.க.,
தூத்துக்குடி: ம.தி.மு.க.,வின் பொதுக்குழு கூட்டம் தூத்துக்குடியில் துவங்கியது. கூட்டத்திற்கு கட்சியின் அவைத் தலைவர் திருப்பூர் துரைராஜ் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் வைகோ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கச்சத்தீவை மீட்க வேண்டும்; பால், மின்சார கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்;நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை வாபஸ் பெற வேண்டும்; நியூட்ரினோ ஆய்வு மைய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்; கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 3,4 திட்டங்களை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கடலூர் மாவட்டத்திற்கு விடுமுறை
கடலூர்: வடலூர், வள்ளளார் தை பூச வழிபாட்டை முன்னிட்டு, வரும் பிப்.3ம் தேதி கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு
கோவை: கோவை, நேரு ஸ்டேடியத்தில் இந்திய ராணுவத்திற்கு ஆள் எடுக்கும் பணி நடந்து வருகிறது. இதில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
டில்லி தேர்தல்; கிரண்பேடி தீவிர பிரசாரம்
புதுடில்லி: டில்லி சட்டசபைக்கான தேர்தல் வரும் 7ம் தேதி நடக்க உள்ளது. அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. பா.ஜ., சார்பில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கிரண்பேடி, இன்று கிருஷ்ணாநகர் பகுதியில் பிரசாரம் செய்து வருகிறார். அவருடன் மத்திய அமைச்சர் ஹர்ஷவர்த்தன் பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.
சுற்றுலா பயணிகளை கவர திட்டம்
ஸ்ரீநகர்: ஐரோப்பிய மற்றும் தெற்காசிய சுற்றுப் பயணிகளை கவரும் வகையிலான திட்டங்களை செயல்படுத்த ஜம்மு காஷ்மீர் மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, மோட்டார் பைக்கிங்ல, ராப்டிங், பாராகிளைடிங் ஆகிய சாகச விளையாட்டுக்களை அறிமுகப்படுத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
கோவையில் அடுத்தடுத்து திருட்டு
கோவை: கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள கடைகளில் நேற்று இரவு புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த ரொக்கத்தை எடுத்து சென்றுள்ளனர். அடுத்தடுத்து மூன்று கடைகளில் நடந்துள்ள இந்த கொள்ளை சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிங்காநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மறு விசாரணை: காங்., நெருக்கடி
புதுடில்லி: கடந்த 1984ம் ஆண்டு, அக்டோபர் 31ம் தேதி, அப்போதைய பிரதமராக இருந்த இந்திரா, சீக்கிய பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து டில்லியில் பயங்கர கலவரம் ஏற்பட்டது. இதில் பலியான 3,325 பேர்களில், 2,733 பேர் டில்லியைச் சேர்ந்தவர்கள். இந்த கலவரம் குறித்து விசாரணை நடந்து வந்தது. இந்நிலையில், இந்த கலவரம் சம்பந்தமாக ஜி.பி.மாத்தூர் கமிட்டி அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தது. இதையடுத்து, 1984ம் ஆண்டு கலவரம் குறித்து முழுமையான அளவில் மறுவிசாரணை நடத்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் சிபாரிசு செய்துள்ளார். டில்லி தேர்தல் முடிந்ததும் இந்த விசாரணை துவங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிரியா செல்ல சென்னை நபர்கள் முயற்சி
பெங்களூரு: சிரிய நாட்டிற்கு செல்ல முயன்ற சென்னையைச் சேர்ந்த 7 பேர் மடக்கப்பட்டு, இந்தியாவிற்கு திரும்ப அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பெங்களூரு வந்திறங்கிய அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. சிரியாவில் செயல்படும் ஐ.எஸ். அமைப்பிற்கு உதவுவதற்காக அவர்கள் சென்றிருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளதால், விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கர்நாடகா, தெலுங்கானாவைச் சேர்ந்த இருவரிடமும் விசாரணை நடக்கிறது.
'வேக்கம் டாய்லட்' அறிவிப்பு வௌியாகும்?
புதுடில்லி: சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், தண்ணீரை சேமிக்கவும் உதவும் 'வேக்கம் டாய்லெட்' திட்டத்தை ரயில் பெட்டிகளில் அறிமுகப்படுத்த ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளதாகவும், அதற்கான அறிவி்ப்பு வரும் ரயில்வே பட்ஜெட்டில் வௌியாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, படிப்படியாக தற்போதுள்ள பாரம்பரியமான கழிப்பறைகள் பெட்டிகளில் இருந்து அகற்றப்படும் என்று கூறப்படுகிறது.
சீன உறவு மேம்பட 6 அம்ச திட்டம்
பீஜிங்: சீனாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள வௌியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், இந்திய-சீன மீடியாக்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறுகையில், 'இரு நாட்டு உறவுகளும் மேம்பட, ஆறு அம்சங்களை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். செயல்பாடுடன் கூடிய அணுகுமுறை, வௌிப்படையான பேச்சுவார்த்தை,. பொதுத்தன்மை, மண்டல ரீதியான வளர்ச்சி திட்டங்களில் உடன்பாடு, தகவல் தொடர்பு விரிவாக்கம். ஏசியான் நாடுகளின் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்தல் போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும். இதற்கான ஏற்பாடுகளில் இந்தியா ஏற்கனவே இறங்கிவிட்டது,' என்றார்.
1984 கலவர வழக்கு மீண்டும் விசாரணை
புதுடில்லி : 1984ம் ஆண்டு நடைபெற்ற சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் தொடர்பான 237 வழக்குகளையும் மீண்டும் விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஜி.பி.மாத்தூர் தலைமையிலான குழு தீர்மானித்துள்ளது. இந்த கலவரம் தொடர்பான பல முக்கிய வழக்குகள் சிதைக்கப்பட்டு விட்டதாகவும் அக்குழு கருத்து தெரிவித்துள்ளது. 1984ம் ஆண்டு முன்னாள் பிரதமர் இந்திரா படுகொலை செய்யப்பட்டதன் எதிரொலியாக சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
பிரசாரத்தை நீட்டிக்க மோடி திட்டம்
புதுடில்லி : டில்லி சட்டசபை தேர்தலுக்காக ஜனவரி 31ம் தேதி முதல் பிப்ரவரி 3ம் தேதி வரை 4 இடங்களில் பிரதமர் மோடி பிரசாரம் செய்வார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், திட்டமிட்டதை விட மேலும் பல இடங்களில் பிரசாரம் செய்ய பிரதமர் மோடி நினைத்திருப்பதாக கூறப்படுகிறது.
ஜப்பானியர் கொலை: ஒபாமா கண்டனம்
வாஷிங்டன் : ஐ.எஸ்., பயங்கரவாதிகள் பிடியில் இருந்த 2 ஜப்பான் நாட்டு பத்திரிக்கையாளர்களை கொன்று விட்டதாக ஐ.எஸ்.ஐ.எஸ்., வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கொடூர சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் ஒபாமா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜப்பானிய மக்களின் இந்த துயரத்தில் அமெரிக்கா தோள்கொடுத்து நிற்கும் என தனது இரங்கலையும் அவர் தெரிவித்துள்ளார்.
தூர்தர்ஷன் அதிகாரி இடமாற்றம்
புதுடில்லி:பிரதமர் நரேந்திர மோடியும் அவரது மனைவி யசோதாபென்னும் நீண்ட காலமாக பிரிந்து வாழ்கிறார்கள். இந்த நிலையில் தனக்கு அளிக்கப்பட்டுள்ள போலீஸ் பாதுகாப்பு குறித்து விளக்கம் கேட்டு, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் யசோதபென் மனுதாக்கல் செய்து இருந்தார். இதுபற்றிய செய்தியை கிர்னாரில் உள்ள தூர்தர்ஷனின் குஜராத்தி மொழி சேனல் கடந்த ஜனவரி 1-ந் தேதி ஒளிபரப்பியது. இதைத்தொடர்ந்து, அவர் பணியில் இருந்து ஓய்வு பெற சுமார் 2 ஆண்டுகளே உள்ள நிலையில் ஆமதாபாத்தில் உள்ள வனோல் அந்தமானில் உள்ள போர்ட்பிளேருக்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். இதற்கிடையே, வனோலின் இடமாற்றத்துக்கும் குறிப்பிட்ட சம்பவத்துக்கும் தொடர்பு இல்லை என்றும், செய்திப்பிரிவு மற்றும் நிர்வாக முடிவின் அடிப்படையில் அவர் இடமாற்றம் செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்தோ திபெதியன் எல்லை பாதுகாப்புபடை இயக்குநர் ஜெனரலாக கிருஷ்ணா சவுத்ரி நியமனம்
புதுடில்லி: இந்தோ திபெத்தியன் எல்லை பாதுகாப்பு படையின் புதிய தலைவராக மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரி கிருஷ்ணா சவுத்ரி நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 1979ம் பேட்ஸ் பீகார் கேடரை சேர்ந்த அதிகாரியான இவர், தற்போது ரயில்வேபாதுகாப்பு படை டைரக்டர் ஜெனரலாக உள்ளார். பிரதமர் மோடி தலைமையில் நடந்த நியமன குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதியுடன் இந்த படை தலைவராக பணியாற்றிய சுபாஸ் கோஸ்வாமி ஓய்வு பெற்றதை தொடர்ந்து, இந்த பணியிடம் காலியாக உள்ளது. சி.ஆர்.பி.எப்., டி.ஜி., பிரகாஷ் மிஸ்ரா கூடுதலாக இந்த பதவியை கூடுதலாக கவனித்து வந்தார். கிருஷ்ணா சவுத்ரி 2017ம் ஆண்டு ஜூன் வரை பதவியில் நீடிப்பார்.
மத்திய அரசின் செயலாளர்கள் மாற்றம்
புதுடில்லி: மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் சுஜாதா சிங் நீக்கப்பட்டதை தொடர்ந்து, மத்திய அமைச்சரவை செயலாளர்கள் சிலர் மாற்றப்பட்டுள்ளனர். மதுசூதன் மிஸ்திரி ஊரக வளர்ச்சி துறை செயலாளராகவும், தினேஷ் குமார்- நேரடி மானிய திட்டத்தின் தலைவராகவும், பானு பிரதாப் சர்மா சுகாதாரத்துறை செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருமலையில் இடைத்தரகர் கைது
திருப்பதி:திருமலையில், லட்டு டோக்கன் விற்க முயன்ற, இடைத்தரகரை போலீசார், கைது செய்தனர்.இதுகுறித்து, போலீசார் கூறியதாவது:நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர் அன்புவேலன், 39. இவர், திருமலையில் உள்ள வைகுண்டம் காத்திருப்பு அறை முன், திரிந்தபடி இருந்தார். அவரை, விஜிலென்ஸ் அதிகாரிகள் சோதனை செய்தனர்.அவரிடம், போலி லட்டு டோக்கன் மற்றும், 22 ஆயிரத்து 600 ரூபாய் பணம் இருந்தது.அதிகாரிகள், அவரை, திருமலை காவல் நிலையத்தில், ஒப்படைத்தனர். போலீசார், அவர் மேல் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.
தமிழர்களுக்கு நிலம் வழங்கப்படும்: இலங்கை அமைச்சர் பேட்டி
சென்னை : ''இலங்கையில் நடந்த போர் குற்றங்கள் குறித்து, உள்ளூர் மட்ட அளவில் விசாரணை நடத்த வாய்ப்பு உள்ளது,'' என, இலங்கை தோட்டக் கலை மற்றும் கைத்தொழில் துறை அமைச்சர் வேலாயுதம் தெரிவித்துள்ளார்.இலங்கையில் இருந்து, மதியம், 1:15 மணிக்கு சென்னை வந்த அவர், விமான நிலையத்தில் அளித்த பேட்டி:இலங்கையில், 20 ஆண்டுகளுக்குப் பின், சமத்துவம் மலர்ந்துள்ளது. கடந்த ஆட்சியில் தமிழ் மக்கள் புறக்கணிக்கப்பட்டனர். தற்போது சிங்களர், தமிழர்கள் சகோதரத்துவத்துடன் பழகி வருகின்றனர்.இந்தியா, இலங்கை அரசுகள் நட்புறவுடன் இணைந்து செயலாற்றி வருகின்றன. இந்திய அரசு, இலங்கையின் கல்வி, சமுதாயம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்காக தாராள நிதியுதவி வழங்கி வருகிறது.கொழும்பு அருகே, மண்சரிவு ஏற்பட்டு வீடு இழந்தவர்களுக்கு புதிய வீடுகள் கட்ட, இந்திய அரசு நிதியுதவி அளித்துள்ளது. இந்த புதிய வீடுகளை திறந்து வைக்க, சிறப்பு விருந்தினராக வருமாறு, பிரதமர் நரேந்திர மோடிக்கு, இலங்கை அரசு அழைப்பு விடுத்துள்ளது.புதிய அதிபர் சிறிசேன, மார்ச் மாதத்தில் இந்தியா வர உள்ளார்.முன்னாள் அதிபர் ராஜபக் ஷே ஆட்சியில், பல்வேறு ஊழல் முறைகேடுகள் நடந்துள்ளன. இலங்கையின் முக்கிய எதிர்க்கட்சியான மக்கள் விடுதலை முன்னணி, ராஜபக் ஷே ஆட்சியில் பெருமளவு முறைகேடுகள் செய்தனர் என்று, குற்றம் சாட்டியுள்ளது.இந்த முறைகேடுகளை விசாரிக்க, இலங்கை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் குழு ஒன்றை அமைத்துள்ளனர்.இலங்கையில் நடந்த போர் குற்றங்கள் குறித்து, உள்ளூர் மட்ட அளவில் விசாரணை நடத்த வாய்ப்பு உள்ளது.இலங்கையில், ஏராளமான நிலங்கள் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. ராணுவத்திற்கு தேவையான நிலங்களை விடுத்து, மற்ற நிலங்களை அங்குள்ள மக்களுக்கு பகிர்ந்தளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, புனர்வாழ்வு நலம் மற்றும் நில அமைச்சக அதிகாரிகள், நில அளவையில் ஈடுபட்டுள்ளனர்.இவ்வாறு, அவர் பேசினார்.
 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.