குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 17 ம் திகதி வெள்ளிக் கிழமை .

31.01.2015- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

அக்னி 5 சோதனை: மோடி வாழ்த்து

புதுடில்லி : அக்னி 5 அதிநவீன ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்ததற்காக இந்திய விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த சோதனை நமது நாட்டின் ஆற்றலை மேலும் அதிகப்படுத்துவதற்கான பரிசு என மோடி தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

பாக்.,க்கு ஐ.நா., வலியுறுத்தல்

ஐ.நா., : பாகிஸ்தானில் மசூதி ஒன்றில் நேற்று நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவத்திற்கு ஐ.நா., பொதுச் செயலாளர் பான் கி மூன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மக்களை பாதுகாக்கவும், பயங்கரவாதத்தை ஒதுக்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாகிஸ்தான் அரசை அவர் வலியுறுத்தி உள்ளார்.

 

மாஜி மத்திய அமைச்சரிடம் சிபிஐ விசாரணை

புதுடில்லி : சாரதா சிட்பண்ட் ஊழல் தொடர்பான வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் மதங் சிங்கிடம் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

 

மம்தாவுடன் முகுல்ராய் சந்திப்பு

கோல்கட்டா : சாரதா சிட் பண்ட் ஊழல் விவகாரம் தொடர்பான வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் முகுல் ராயிடம் சிபிஐ நேற்று விசாரணை நடத்திய நிலையில், இன்று அவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும் மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜியை அவரது இல்லத்தில் சென்று சந்தித்துள்ளார்.

 

சல்மான்கான் வழக்கு பிப்.,12க்கு ஒத்திவைப்பு

புதுடில்லி : பாலிவுட் நடிகர் சல்மான் கான், குடிபோதையில் காரை ஓட்டு, ஒருவரை கொலை செய்த வழக்கில் நடைபெற்று வரும் சாட்சி மீதான குறுக்கு விசாரணை பிப்ரவரி 12ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

பா.ஜ,விற்கு எதிராக காங்., போராட்டம்

பெங்களூரு : சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவின் படத்திற்கு மாலை அணிவித்திருப்பது போன்று விளம்பரம் வெளியிட்ட பா.ஜ.,விற்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூருவில் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

தேர்தல் அதிகாரிகளை சந்திக்கிறது பா.ஜ., குழு

புதுடில்லி : பா.ஜ., நிர்வாகிகள் குழு இன்று பகல் 2 மணியளவில் தேர்தல் கமிஷன் அதிகாரிகளை சந்திக்க உள்ளது. இந்த குழுவிற்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தலைமை ஏற்க உள்ளார்.

 

பவானிசிங்கிடம் நீதிபதி கேள்வி

பெங்களூரு : ஜெ., சொத்துகுவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையின் போது வழக்கறிஞர் பவானி சிங்கிடம், ஜெ., சொத்துகுவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு விசாரணையில் ஆஜரானது எப்படி? கிரிமினல் வழக்குகளில் போதிய உத்தரவு இல்லாமல் ஆஜராக கூடாது. தீர்ப்பு வழங்கப்பட்ட பிறகு போதிய அவகாசம் இருந்தும் ஏன் தெளிவுபடுத்திக் கொள்ளவில்லை? தீர்ப்பு வழங்கப்பட்டு இவ்வளவு நாள் ஆகியும் ஏன் நிறுவனங்களின் சொத்துக்களை முடக்கவில்லை? என்பது உள்ளிட்ட பல கேள்விகளை நீதிபதி குமாரசாமி கேட்டுள்ளார்.

 

பா.ஜ., பேச்சு: ஆம்ஆத்மி கிண்டல்

புதுடில்லி : ஆம்ஆத்மி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை தொடர்பாக பா.ஜ., தலைவர்கள் வெளியிட்டுள்ள கருத்து தொடர்பாக பேசிய உள்ள ஆம்ஆத்மியின் யோகேந்திர யாதவ், எங்களின் தேர்தல் அறிக்கையை பா.ஜ.,வினர் இவ்வளவு வேகமாக வாசித்தால், வேகமாக வாசிப்பவர்களின் முந்தைய கின்னஸ் சாதனையை பா.ஜ.,வினர் முறியடித்து விடுவர் என தெரிவித்துள்ளார்.

 

பிரதமர்- அருணாச்சல் முதல்வர் சந்திப்பு

புதுடில்லி : பிரதமர் மோடியை, அருணாச்சல பிரதேச முதல்வர் விர்பத்ர சிங் சந்தித்து பேசி உள்ளார். இது மரியாதை பிமித்தமான சந்திப்பு என பிரதமர் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

விஞ்ஞானிகளுக்கு ஜனாதிபதி வாழ்த்து

புதுடில்லி : அக்னி 5 ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தி முடித்ததற்காக மத்திய பாதுகாப்புத்துறையின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி கழக விஞ்ஞானிகளுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

பவானி சிங்கிற்கு ஐகோர்ட் நோட்டீஸ்

பெங்களூரு : ஜெ., சொத்து குவிப்பு வழக்கில் பவானி சிங்கை நீக்க வேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய பவானி சிங்கிற்கு கர்நாடக ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

 

எங்கள் அறிக்கை கீதை போன்றது:கெஜ்ரி

புதுடில்லி : ஆம்ஆத்மியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பிறகு பேசிய கெஜ்ரிவால், எங்களின் தேர்தல் அறிக்கை கீதை போல, பைப்பிள் போல, குரான் போல புனிதமானது. பெண்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். சுயராஜ்ய மசோதா நிறைவேற்றப்படும். ஊழல் தடுப்பு உதவி எண்கள் மீண்டும் துவக்கப்படும். ஊழல் இல்லாத மாநிலமாக டில்லியை மாற்றுவோம். வலுவான லோக்சபால் மசோதா கொண்டு வரப்படும். மின் கட்டணம் 50 சதவீதம் குறைக்கப்படும். ஓய்வு பெறும் வயது 60 ஆக்கப்படும். பணவீக்கத்தை குறைப்போம். மூத்த குடிமக்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

 

தேர்தல் அறிக்கை:கெஜ்ரிக்கு அமித்ஷா பதிலடி

புதுடில்லி : டில்லி தேர்தல் தொடர்பான தேர்தல் அறிக்கையை வெளியிட பா.ஜ., தயங்கி வருவதாக ஆம்ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று தனியார் டிவி.,ஒன்றிற்கு பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா அளித்த பேட்டியில், தேர்தல் அறிக்கைக்கு பதிலாக நாங்கள் செய்ய போகும் தொலை நோக்கு திட்டங்கள் குறித்த அறிக்கை இன்னும் 2 நாட்களில் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.

 

ஜெ., வழக்கு:மேற்முறையீட்டு மனுக்கள் விசாரணை

பெங்களூரு : ஜெ., சொத்து வழக்கில் தொடர்புடைய நிறுவனங்களின் மேல்முறையீட்டு மீதான விசாரணை கர்நாடக ஐகோர்ட் சிறப்பு பெஞ்ச் முன்னிலையில் நடைபெற்று வருகிறது. ஜெ., சொத்து குவிப்பு வழக்கில் தொடர்புடைய நிறுவனங்களின் சொத்துக்களை முடக்க நீதிபதி குன்ஹா உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து நிறுவனங்கள் மேல்முறையீடு செய்தன. தற்போது நிறுவனங்களின் தரப்பில் ஆஜராகி உள்ள வக்கீல் பட்டேலின் வாதம் நடைபெற்று வருகிறது.

 

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா இன்று சீனா பயணம்

புதுடில்லி : மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், 4 நாள் பயணமாக இன்று சீனா செல்ல உள்ளார். அவருடன் புதிய வெளியுறவுத்துறை செயலர் ஜெய்ஷங்கரும் சீனா செல்ல உள்ளார். இந்த பயணத்தின் போது ரஷ்யா-இந்தியா-சீனா நாடுகளிடையேயான முத்தரப்பு பேச்சுவார்த்தையிலும் சுஷ்மா கலந்து கொள்ள உள்ளார்.

 

ராமர் கோயில் உறுதி : வி.ஹச்.பி.,

சாத்தூர் : சாத்தூர் வந்திருந்த விஷ்வ இந்து பரிஷித் அமைப்பின் தலைவர் பிரவீன் தொக்காடியா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அயோத்தியில் உறுதியாக ராமர் கோயில் கட்டப்படும். இந்துக்கள் தொழில், வர்த்தகம், விவசாயம் ஆகியவற்றில் பின்தங்கி உள்ளனர். அவர்களை ஒற்றுமைப்படுத்தி வலிமையானவர்களாக ஆக்க உள்ளோம். இது தான் விஷ்வ இந்த பரிஷித்தின் நோக்கம். மத்தியில் ஆளும் பா.ஜ., ஆட்சி பற்றி கருத்து ஏதும் கூறுவதற்கில்லை. இருப்பினும் இந்துக்களுக்கு எதிராக பா.ஜ., செயல்பட்டால் அவர்களை எதிர்த்து போராடுவோம் என தெரிவித்துள்ளார்.

 

இன்று பிரசாரத்தை துவக்குகிறார் மோடி

புதுடில்லி : டில்லி சட்டசபை தேர்தலுக்கான பிரசாத்தை பிரதமர் மோடி இன்று துவக்குகிறார். இன்று முதல் பிப்ரவரி 3ம் தேதி வரை அவர் 4 இடங்களில் பிரசாரம் செய்ய உள்ளார். டில்லியின் கார்கர்தூமா பகுதியில் மோடி இன்று உரையாற்ற உள்ளார்.

 

ரஷ்யா மீது புதிய பொருளாதார தடை இல்லை; ஐரோப்பிய நாடுகள் முடிவு

பிரஸ்சல்ஸ்:பிரஸ்சல்சில் நேற்று நடந்த ஐரோப்பிய நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் கூட்டத்தில், ரஷ்யா மீது புதிய பொருளாதார தடை விதிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

 

மகாராஷ்டிாவில் கைதிகள் நடத்தும் ரேடியோ ஸ்டேஷன்

நாசிக்:மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் சிறையில் கைதிகளுக்காக கைதிகளே நடத்தும் "சுதார்வாணி' என்ற ரேடியோ ஸ்டேஷன் நேற்று தொடங்கப்பட்டது.இந்த நிலையத்தை மகாராஷ்டிர உள்துறை இணையமைச்சர் ராம் ஷிண்டே தொடங்கிவைத்துப்பேசியதாவது:கைதிகள் இந்த வானொலியில் வரும் நிகழ்ச்சிகளைக் கேட்பதன் மூலம் நல்ல விஷயங்களைக் கற்றுக்கொண்டு, சிறையிலிருந்து விடுதலையாகும்போது நல்ல குடிமகன்களாக மாறமுடியும் என்றார்.இந்த ஸ்டேஷனில் தினசரி காலை 10.30 மணியிலிருந்து மதியம் 1.30 மணி வரை கவிதைகள், பாடல்கள், பலகுரல் திறன், பஜனைப் பாடல்கள் போன்ற நிகழ்ச்சிகள், கைதிகள் பங்குபெற்று கைதிகளாலேயே தயாரித்து வழங்கப்படும்.

 

காணமால் போன விமானத்தை கண்டுபிடித்தே தீருவோம்:மலேசிய பிரதமர் பேச்சு

கோலாலம்பூர்:கடந்த ஆண்டு மார்ச் 8-ஆம் தேதி சென்ற மலேசிய ஏர்லைன்ஸýக்குச் சொந்தமான எம்.ஹெச்.370 விமானம் நடுவானில் மாயமானது. சர்வதேச நாடுகளின் தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகும், அந்த விமானம் குறித்து கண்டறிய முடியவில்லை.விமானத்த கண்டுபிடிக்கும் முயற்சி தொடரும் என, அந்த விமானத்திலிருந்தவர்களின் உறவினர்களிடம் மலேசியப் பிரதமர் நஜீப் ரஸாக் வெள்ளிக்கிழமை உறுதியளித்தார்.

 

கோவையில் இளங்கோவன் கார் முற்றுகையிட்ட சிதம்பரம் ஆதரவாளர்கள்

கோவை: கோவையில் நடந்த காந்தி நினைவு நாளில் பங்கேற்றுவிட்டு திரும்பிய தமிழக காங்கிரஸ் தலைவர் இ.வி.கே.எஸ். இளங்கோவன், காரை சிதம்பரம் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். சிதம்பரத்தை அவதூறு பேசியதாக கூறி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போலீசார் தலையிட்டு அவர்களை கலைந்துபோக செய்தனர்.

 

எந்த ஊழலிலும் ஈடுபட்டதில்லை: ஜெயந்தி

புதுடில்லி: தனியார் டிவிக்கு பேட்டியளித்த முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன், காங்கிரஸ் கொள்கையை தான் பின்பற்றினேன். நான் செய்த பணிகளுக்காக பிரதமர் என்னை பாராட்டினார். நான் எந்தவித ஊழல் முறைகேட்டிலும் ஈடுபட்டதில்லை. எனது பணியில் ஏற்பட்ட குறிக்கீடு பற்றி நான் பேசவில்லை. நான் ராஜினாமா செய்த பின்னர் சோனியாவை சந்தித்த போது, ஏன் என்னை நீக்கினீர்கள் என கேட்டேன். கட்சி பணி தருவதாக சோனியா கூறினார். வேதனையான நாளாக அது அமைந்தது. எந்த கட்சியிலும் சேரும் எண்ணம் ஏதுமில்லை. என் மீதான குற்றச்சாட்டுக்களை நிருபித்தால், அதற்கு நான் பதில் கூறுவேன். காங்கிரசிலிருந்து விலகியுள்ளதால், ராகுல் பற்றி பேச விரும்பவில்லை. எனக்கு நெருக்கடி ஏதுமில்லை என கூறினார்.

 

எனது நற்பெயர் கெடுக்கப்பட்டுவிட்டது: சுஜாதா சிங் கருத்து

புதுடில்லி: தனது நற்பெயர் கெடுக்கப்பட்டுவிட்டதாகவும், தனது சாதனைகள் குப்பையில் போடப்பட்டுள்ளதாகவும், முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் சுஜாதா சிங் கூறியுள்ளார். வெளியுறவுத்துறை செயலாளராக இருந்த சுஜாதா சிங், புதன் நள்ளிரவு அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.அவருக்கு பதில் அமெரிக்காவுக்கான இந்திய தூதராக இருந்த ஜெய்சங்கர் புதிய வெளியுறவுத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் தனியார் டிவிக்கு பேட்டியளித்த சுஜாதா சிங், ஒபாமா பயணத்தின் போது, அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது உள்ளிட்ட பல்வேறு வெளியுறவு கொள்கைகளில் சிறப்பாக செயல்படுத்தியதற்கானபல பெருமை தன்னை சாரும். கடந்த 8 மாதங்களில் அரசு பல வெளியுறவு கொள்கைகளை முன்னெடுத்து சென்றுள்ளது. இதில் பிரதமர் மோடியும், வெளியுறவு அமைச்சர் சுஷ்மாவும் பங்கெடுத்ததில்லை என கூறியுள்ளார்.

 

 

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.