குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 17 ம் திகதி வெள்ளிக் கிழமை .

29.01.2015- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

காங்., அரசின் கொள்கைகளை மோடி பின்பற்றுகிறார்: சசிதரூர்

புதுடில்லி: தனியார் டிவிக்கு பேட்டியளித்த முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர், பிரதமர் மோடி, முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் கொள்கைகளை தான் பின்பற்றுகிறார். முந்தைய அரசின் கொள்கைகளே, பா.ஜ., அரசின் கொள்கைகளாக உள்ளது. போட்டோக்களுக்கு போஸ் கொடுப்பதால், எந்த பலனும் கிடைக்காது. போட்டோ அரசியலில் எனக்கு நம்பிக்கையில்லை என கூறினார்.

 

லாரி விபத்து:சாலையில் ஆறாக ஓடிய ஆயில்
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் எண்ணெய் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் சாலையில் பாமாயில் எண்ணெய் கொட்டியது.சென்னையில் இருந்து திருச்சி நோக்கி எண்ணெய் ஏற்றிக்கொண்டு சென்ற லாரி, பெரம்பலூர் மாவட்டம் துறைமங்கலம் அருகே மூன்று சாலை சந்திக்கும் இடம் அருகே வந்து கொண்டிருந்த போது லாரியின் டயர் வெடித்ததால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சலையில் கவிழ்ந்தது. அதில் இருந்த எண்ணெய் சாலையில் ஆறாக ஓடியது.இதனை பார்த்து பொதுமக்கள் பிளாஸ்டிக் குடங்கள் உள்ளிட்டவைகளை எடுத்து வந்து அள்ளிச்சென்றனர். இதானல் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
2 எம்.எல்.ஏ.க்கள் பதவி பறிக்க லோக்ஆயுக்தா உத்தரவு
லக்னோ: உத்திரபிரதேச மாநிலத்தில் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த உமாசங்கர் சிங் , மற்றும் பா.ஜ.வைச் சேர்ந்த பஜ்ரங்க் பகதூர் ஆகிய இரு எம்.எல்.ஏ.க்கள் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதையடுத்து அவர்களை பதவியை பறிக்க லோக் ஆயுக்தா கோர்ட் பரிந்துரை செய்துள்ளது. இத்தகவலை உ.பி.மாநில கவர்னர் மாளிகை அலுவலகம் வெளியிட்டுள்ளது.
கருணாநிதிக்கு ஏமாற்றம்: நெப்போலியன் பேட்டி
சென்னை: பா.ஜ.வைச் சேர்ந்த நடிகர் நெப்போலியன்சென்னையில் அளித்த பேட்டியில், ' ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் பா.ஜ.விற்க பா.ம.க. ஆதரவு அளிக்காதது, பா.ஜ.விற்கு பாதிப்பை ஏற்படுத்தாது. கருணாநிதி கோரிக்கை விடுத்தும் பிற கட்சிகள் ஆதரவு அளிக்காததற்கு தி.மு.க.விற்கு ஏமாற்றம் தான்,' என்றார்.
டில்லி தேர்தல்: ஜன.31-முதல் மோடி பிரசாரம்
புதுடில்லி: டில்லி சட்டசபைக்கு பிப். 7-ம் தேதி தேர்தல் நடக்கிறது. பா.ஜ., காங்., ஆம் ஆத்மி என மும்முனை போட்டி நிலவுகிறது. இந்நிலையில் பா.ஜ. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அமித்ஷா தலைமையில் இன்று கூடியது. இதில் ஜன.31-ம் தேதி முதல் பிரதமர் மோடி தலைமையில் 4 மெகா பேரணி நடத்திடவும்,பா.ஜ.,வின் 120 எம்.பி.க்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் அறிக்கை வெளியிடப்படவில்லை.
மோடி அரசு மீது ஹசாரே அதிருப்தி
புதுடில்லி: லோக்பால் மசோதாவை வலியுறுத்தி சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே மீண்டும்போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், தற்போதைய மோடி அரசு ஜன் லோக்பால் குறித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது. ஊழலை ஒழிக்க இந்த அரசு எதுவும் செய்யவில்லை. அரசியலில் குதித்தது குறித்து கிரண்பேடி என்னிடம் பேசவில்லை என்றார்.
பா.ஜ. நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை
புதுடில்லி: டில்லி சட்டசபைக்கு தேர்தல் நடக்கவிருப்பதையொட்டி, பா.ஜ.தேசிய தலைவர் அமித்ஷா தலைமையில் மூத்த நிர்வாகிகள் பங்கேற்ற உயர்மட்ட குழு கூட்டம் பா.ஜ. தலைமை அலுவலகத்தில் இன்று நடந்தது. இதில் 19 மத்திய அமைச்சர்கள், 7 டில்லி எம்.பி.க்கள் கலந்து கொண்டனர். தேர்தலில் பா.ஜ.சார்பில் முதல்வர் வேட்பாளராக கிரண்பேடி நிறுத்தப்பட்டுள்ளார். வெற்றி வியூகம் குறித்து விரிவான ஆலோசனை நடந்து வருகிறது.
அரசின் நோக்கங்களுக்கு முன்னுரிமை: ஜெய்சங்கர்
புதுடில்லி: மத்திய வெளியுறவு துறை செயலராக இருந்த சுஜாதாசிங் திடீரென நீக்கப்பட்டு , எஸ்.ஜெய்சங்கர் புதிய வெளியுறவு துறை செயலராக நியமிக்கப்பட்டார். டில்லி சவுத் பிளக் அலுவலகத்தில் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் 1977-ம் ஆண்டு ஐ.எப்.எஸ். கேடர் ஆவார். அவர் கூறுகையில் அரசின் நோக்கங்களுக்கு முன்னுரிமை அளிப்பேன் என்றார்.
சென்னை மாமன்ற கூட்டம்: தி.மு.க. புறக்கணிப்பு- கொசுத்தொல்ல தாங்கல எனபுகார்
சென்னை: சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் நடந்தது. இதில் சென்னை நகர் முழுவதும் கொசுகள் அதிகம் உள்ளன. கொசுத்தொல்லையை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வில்லை என தி.மு.க. உறுப்பினர்கள் புகார் கூறினர். இதற்கு மேயர் அளித்த பதிலில், கொசுக்கள் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார். பின்னர் விவாதத்திற்கு பின்னர் எதிர்க்கட்சி தலைவர் தலைமையில் தி.மு.க. உறுப்பினர்கள் கூட்டத்தை புறக்கணித்தனர்.
எரிவாயு குழாய் திட்டம்: இடைக்கால மனு தாக்கல்
புதுடில்லி: தமிழகத்தில் சேலம்,கோவை, திருப்பூர், தஞ்சை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கெயில் நிறுவனம் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.விளை நிலங்கள் பாதிக்கும் என விவசாயிகள் பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு சார்பில் தாக்கலான இடைக்கால மனுவில், எரிவாயு குழாய் பதிக்கும் பாதையில் உள்ள மரங்களை வெட்ட அனுமதியளிக்குமாறு கூறியுள்ளது.
வருமானவரி செலுத்துவோருக்கு காஸ் மானியம் கட் ? : மத்திய அரசு புது திட்டம்
புதுடில்லி: நுகர்வோர்களுக்கு வழங்கப்படும் காஸ் மானியத்தை வங்கிகள் மூலம் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு செயலபடுத்தி துவங்கியுள்ளது. இந்நிலையில், வருமானவரி செலுத்துவோருக்கு காஸ் மானியத்தை ரத்து செய்யலாமா என மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் ஒரு கோடிக்கும் மேலானோர் பாதிப்படைவர் எனவும் கூறப்படுகிறது.
கிரானைட் கற்கள் அரசுடமை வழக்கு : பிப்.17ம் தேதி ஒத்திவைப்பு
மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பி.ஆர்.பி. உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் அனுமதியின்றி அடுக்கி வைத்துள்ள கிரானைட் கற்களை அரசுடமையாக்க கோரி தொடரப்பட்ட வழக்குகளில் இரண்டு வழக்குகள் இன்று மேலூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தன. வழக்கை பிப். 17-ம் தேதி ஒத்திவைத்தார் நீதிபதி மகேந்திர பூபதி.தவிர மேலும் 116 வழக்குகளின் விசாரணை வரும் மார்ச். 6-ம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
காங்.,மீது சாமி பாய்ச்சல்
புதுடில்லி: வௌியுறவுத்துறை செயலாளரை மாற்றிய விஷயத்தில் குற்றம் கூற காங்கிரசுக்கு உரிமை இல்லை என பா.ஜ., தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியசாமி கூறி உள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், 'ராஜிவ் பிரதமராக இருந்தபோது, வௌியுறவுத்துறை செயலாளரை மாற்றினார் என்று தெரிவித்துள்ளார்.
காங். மீது வெங்கையா நாயுடு குற்றச்சாட்டு
சென்னை: சென்னை விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு அளித்த பேட்டியில், 'காங். கட்சி மட்டுமே மத்திய அரசை குறை கூறி வருகிறது. மதச்சார்பின்மை மற்றும் சமத்துவத்தை பா.ஜ. முழுமையாக கடைபிடித்து வருகிறது. மதச்சார்பின்மை என்பது இந்தியர்களின் ரத்தத்தில் ஊறியது,' என்றார்.
பங்குசந்தைகள் சரிவுடன் துவங்கின
மும்பை : கடந்த சில நாட்களாக புதிய உச்சத்தை தொட்ட இந்திய பங்குசந்தைகள் இன்று(ஜன. 29ம் தேதி) சரிவுடன் துவங்கின. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குசந்தையின் குறியீட்டு எண் 152.74 புள்ளிகள் சரிந்து 29,406.44-ஆகவும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 52.80 புள்ளிகள் சரிந்து 8,861.50-ஆகவும் இருந்தன.
கடந்த சில நாட்களாக பங்குசந்தைகளில் காணப்பட்ட ஏற்றத்தால் முதலீட்டாளர்கள் லாபநோக்கோடு பங்குகளை விற்க தொடங்கினர். இதனால் இன்றைய வர்த்தகம் சரிவுடன் துவங்கியுள்ளன. மேலும் உலகளவில் பங்குசந்தைகளில் காணப்படும் சுணக்கத்தாலும் இந்திய பங்குசந்தைகள் சரிவுடன் காணப்படுவதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
சுஜாதாசிங்கை நீக்க அதிகாரம் உண்டு: பா.ஜ., பதிலடி
புதுடில்லி: வெளியுறவுத்துறை செயலராக இருந்த சுஜாதாசிங் திடீரென நீக்கப்பட்டு, ஜெய்சங்கர் புதிய வெளியுறவு செயலராக நியமிக்கப்பட்டார். இந்த நீக்கம் குறித்து காங். கேள்வியெழுப்பியுள்ளது. வெளியுறவுத்துறை செயலரை மாற்ற எங்களுக்கு உரிமையும், அதிகாரமும் உண்டு என பா.ஜ., பதிலடி கொடுத்துள்ளது.
தவறி விழுந்ததில் காயம்: பேரறிவாளன் மருத்துவனைமயில் அனுமதி
வேலூர்: முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் ஆயுள் தண்டனை பெற்ற குற்றவாளிகளில் ஒருவரான பேரறிவாளன், இவர் நேற்று இரவு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சிறை அறையில் தவறி கீழே விழுந்ததில் கால், கண், நெற்றியில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து வேலூர் அரசு மருத்துவமனையில் பேரறிவாளன் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் அவருக்க சிகிச்சை அளித்து வருகின்றனர்.
ஆஸ்திரேலியர்களுக்கு தண்டனை உறுதி : இந்தோனேஷியா
சிட்னி: போதைபொருள் கடத்தி வழக்கி்ல் ஆஸ்திரேலியாவின் கோரிக்கையை நிராகரித்தது இந்தோனேஷியா. கடந்த 2005-ம் ஆண்டு இந்தோனேஷியாவில் இருந்து ஆஸ்திரேலியாவிற்கு 8 கிலோ எடையுள்ள கஞ்சா பொருட்களை கடத்தியதாக இரண்டு ஆஸ்திரேலியர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டுமென ஆஸ்திரேலியா கோரிக்கை விடுத்தது. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள இந்தோனேஷிய அதிபர் ஜோகோ விடோடோ போதை பொருள் காரணமாக இந்தோனேஷியாவில் ஆண்டு தோறும் சுமார் 18 ஆயிரம் பேர் பலியாகி வருகின்றனர். எனவே போதைபொருள் கடத்தல்காரர்களுக்கு பொது மன்னிப்பு என்பது கிடையாது அவர்களுக்கான தண்டனை நிச்சயம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
உண்மை மீது எனக்கு நம்பிக்கை உள்ளது: சுனந்தா கொலை குறித்து சசிதரூர் பதில்
புதுடில்லி: தனியார் டிவிக்கு பேட்டியளித்த முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர், சுனந்தா கொலை விவகாரத்தில், உண்மை மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. போலீஸ் விசாரணைக்கு நான் முழு ஒத்துழைப்பு வழங்கினேன். போலீஸ் விசாரணை முடிவடையும் வரை எதையும் கூற முடியாது. நான் போலீஸ் விசாரணைக்கு மட்டும் தான் பதில் கூற முடியும். மீடியா நீதிபதிகள், வழக்கறிஞர்களுக்கு பதிலளிக்கவில்லை. நான் இழப்புக்கு ஆளான கணவன்.ஆனால் எனது துக்கத்தை வெளிக்காட்ட என்னை அனுமதிக்கவில்லை. நான் மீடியாக்களின் குழந்தையாக உள்ளேன் எனது தந்தை பல பத்திரிகைககளில் பணியாற்றியுள்ளார். நான் ஐ.நா.,வில் பணிபுரிந்த போது, பத்திரிகை சுதந்திரத்திற்காக குரல் கொடுத்துள்ளேன் என கூறினார்.
ஒபாமா மனைவி மிச்செல் பயணம்: சவுதி விளக்கம்
ரியாத்: அமெரிக்க அதிபர் ஒபாமா மனைவி மிச்செல் உருவத்தை மங்கலாக்கி ஒளிபரப்ப செய்யவில்லை என சவுதி அரசு கூறியுள்ளது. சவுதி அரேபியா புதிய மன்னரை அமெரிக்க அதிபர் ஒபாமா, அவரது மனைவி மிச்செல் செவ்வாயன்று, அந்நாட்டு புதிய மன்னரை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். இந்த சந்திப்பு நடந்தது தொடர்பாக செய்தி வெளியிட்ட அந்நாட்டு அரசின் டிவி, வீடியா பதிவில் மிச்செல் ஒபாமாவின் உருவத்தை மட்டும் மங்கலாக்கி ஒளிபரப்பு செய்ததாககுற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக ட்வீட்டரிலும் செய்தி பரவியது. இந்நிலையில், இது தொடர்பாக சவுதி அரேபிய தூதரக தகவல் தொடர்பு இயக்குநர் டிவிக்கு அளித்த பேட்டியில், அமெரிக்க அதிபர் ஒபாமா, அவரது மனைவி மிச்செல் ஆகியோர் சவுதிக்கு வந்தது முதல், மன்னர் சல்மானை சந்தித்தது வரை அனைத்தையும் டிவியில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதில் மிச்செல் உருவம் மங்கலாக்கப்படவில்லை. அவரை மன்னர் கைகுலுக்கி வரவேற்றது முதல் எந்த ஒரு காட்சியும் மங்கலாக்கப்படவில்லை என கூறியுள்ளார்.
 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.